Thursday, September 19, 2024

நம்மை மகிழ்விக்க எத்தனையோ இவ்வுலகில் இருக்க அழ வைக்கும் ஒரு சிலரை ஏன் மனதில் சுமக்கிறீர்கள்...

 நம்மை மகிழ்விக்க எத்தனையோ இவ்வுலகில் இருக்க அழ வைக்கும் ஒரு சிலரை ஏன் மனதில் சுமக்கிறீர்கள்...


இறக்கிவிடுங்கள்..தொலையட்டும்.


மகிழ்ந்திருங்கள் இவற்றோடு. 


ஒரு பூஞ்சோலை, அதன் மணம்..!! 


ஒரு பறவை, அதன் இசை...!! 


ஒரு அருவி, அதன் ஓசை...!!


ஒரு தென்றல் ,அதன் ஸ்பரிசம்...!! 


ஒரு மரம், அதன் நிழல்..!! 


ஒரு வானவில், அதன் நிறம்..!! 


ஒரு வண்ணத்துப் பூச்சி, அதன் வண்ணங்கள்..!! 


ஒரு புல், அதன் பனி துளி..!! 


ஒரு மழை, அதன் மண் வாசனை..!! 


ஒரு புல்வெளி, அதன் பசுமை...!! 


ஒரு கடல், அதன் அலைகள்..!! 


ஒரு மலை, அதன் குளிர்..!! 


ஒரு பயணம், அதன் அனுபவம்..!! 


ஒரு இசை, அதன் ரம்மியம்..!! 


ஒரு நிலவு, அதன் வெண் ஒளி..!! 


ஒரு நட்சத்திரம், அதன் பன்மை..!! 


ஒரு சிவந்த வானம், அதன் மேகங்கள்..!! 


ஒரு கடற்கரை, அதன் ஈரக் காற்று..!! 


ஒரு குழந்தை, அதன் சிரிப்பு..!! 


ஒரு கோப்பை தேநீர், அதன் இளஞ்சூடு..!! 


ஒரு சினேகம், அதன் மடியில்..!! 


போதுமே...!! வாழ்வோம் மகிழ்வோடு.. !! 


ஏன் மாற்ற வேண்டும்? ஏன் மாற வேண்டும்? 


நாம் என்றும் இயங்குவோம் இயல்பாய்.. 


சிலருக்கு நம்மை பிடிக்கும்.. பலருக்கு பிடிக்காது.. 


ஸோ வாட்?? 



எல்லோருக்கும் பிடிக்க நாம் பொம்மைகள் இல்லையே..?? நம்மை அவர்கள் ஆட்டுவிக்க.. 


 கூர்மையான அணுகுமுறையும் அகண்ட அறிவும் ஆழ்ந்த பார்வையும் நெடிய அனுபவமும்

நம்மிடம் உள்ளது என்றால் பெருமை. பக்குவம் என்பது யாதெனில், அடுத்தவர் கூறுவது பொய் என்று தெரிந்தும், அப்படியா என்று ஏதும் தெரியாதது போல் நடிப்பதாகும்…

No comments:

Post a Comment

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...