Thursday, September 19, 2024

#தாதாபாய்நௌரோஜி

 #தாதாபாய்நௌரோஜி 

————————————-


1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4 தாதா பாய் நெளரோஜி அவர்களின் பிறந்தநாள்….. இன்று. 



பெருந்தலைவர்களாகப் போற்றப்பட்ட பால கங்காதர திலகர், பால், லால்,காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக தாதாபாய் நௌரோஜியை குறிப்பிட்டுள்ளனர். 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4 தாதா பாய் நெளரோஜி அவர்கள் பிறந்தநாள் மகிழ்ந்து போற்றுவோம்.பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி போன்ற எண்ணற்ற  முன்னணி தலைவர்கள் தாதா பாய் நெளரோஜியின் சீடர்கள்.இந்திய விடுதலைக்காக பாடுபட்ட  மூத்த பெருந்தலைவர்  (The Grand old man of India) என்று பெருமையோடு அழைக்கப்பட்டவர் நெளரோஜி.பம்பாயில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை நிறுவினார்.இந்திய விடுதலைக்கும் பெண்கள் கல்விக்கும் ,கைம்பெண்களின் மறுவாழ்விற்கும் புதிய  எழுச்சியை  உருவாக்கினார்.பல சுதந்திர போராட்ட தலைவர்கள்  உருவாவதற்கு வித்தாக இருந்தவர் . பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய ஆசிரியர்.


 தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும். இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு, இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரித்தானிய ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் பால கங்காதர திலகர், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று.

#தாதாபாய்நௌரோஜி


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

4-9-2024.


No comments:

Post a Comment

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது த...