Thursday, September 19, 2024

Mr #சந்துரு,

 Mr #சந்துரு,

இங்குள்ள அமைச்சர் மற்ற பலர் வீடுகளில் இதே மாதிரி நடப்பது பற்றி சொல்லுங்க…..

உங்களுக்கு ஏன் இந்த இட மாறு காட்சிப் பிழை⁉️ Keep #Communalharmony not Secularism… Right vocabulary is  ‘Communal harmony ’மதச்சார்பின்மை அல்ல மத நல்லிணக்கம் (Religious harmony in India)


ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பொதுத் தளத்தில் வந்து ஏதோ புரட்சியாளர் மாதிரிப் பேசிக் கொண்டிருக்கிறார். அந்தப் பேச்சு ஏதோ உலகத்தில்  இவர் ஒருவர் தான் உத்தமர் என்பது போல இருக்கிறது. எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது! இவர் என்னவோ  உலகத்தைத் திருத்த வந்த மாமனிதர் போல தன்னை முன்னிலைப்

படுத்துகிறார்.


இவரைக் காட்டிலும் சமூக அக்கறையும் சுயமதிப்பும் தன்மானமும் மக்கள் நலத்தின் மீது கடமையாற்றக் கூடியவர்களும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.


இப்படி எல்லாம் புரட்சியாளரைப் போலப் பேசும் இவர் கம்யூனிஸ்ட் பாதையிலிருந்து ஏன் விலகினார் அல்லது விலக்கப்பட்டார்.


 அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தனக்குத்தானே புனித பிம்பம் ஏற்றுக் கொள்கிறாரா?

இல்லை பிறர் தன்னைப் புனிதமாக கருத வேண்டும் என்று நினைக்கிறாரா?


பொது வெளியில் அவரது பேச்சு அப்படித்தான் இருக்கிறது.

முதலில் தன்னைத்தான் அறிந்து கொள்ள வேண்டும்.  இவருக்கு மக்களை பற்றி புரிய வேண்டும். Don’t preach, your sermons….

#CommunalHarmony

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

4-9-2024.

No comments:

Post a Comment

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...