Wednesday, September 4, 2024

#நெல்லை_டே!! #Tirunelveli_day

#நெல்லை_டே!! 

#Tirunelveli_day 

என்னடே எல்லாவனும் ஊர்பெருமை பேசறியோ!

சென்னைடே, கோவைடேன்னு கொண்டாடுதியோ!!

எங்க திர்னேலி அல்வா ஏன் இம்புட்டு ருசியா இருக்கு தெரியுமா! சொல்லுதேன் பாருலே!

அல்வாக்கு ருசியே அதை நைசாட்டு கிண்டுத பதம்தான்.

பாலு, கோதும, சீனி நெய்யி இதையெல்லாம் ஒரு அண்டால தாமிரபரணி நீரை வச்சு எங்க ஊர் ரோட்ல ஆட்டோல ரெண்டு தடவை போனோம்னாய்க்கி  நெல்லையப்பர் கோவில் வாசலுக்கு போறதுக்குள்ள அண்டால அல்வா தானே கலந்துகிடும்டே!

இதாம்டே தொழில்  ரகசியம்!!

கோட்டிக்காரனாட்டு வெளியே சொல்லிடாதே. 

#ksrpos

31-8-2024



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்