Thursday, September 19, 2024

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்..

 

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்..

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் 

••••

"உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் உங்களது ஆழ்மன அடுக்குகளில் உங்களையும் அறியாமல் பதிந்து கொள்ளும். நீங்கள் எதைச் செய்தாலும், 

அந்த நனவிலி மனத்தின் அடுக்குகளில் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சொற்கள்தான் 

உங்களை வழி நடத்தும்" 

- ஃபிராய்டு.











சத்தமில்லாமலே காயம் கொள்வதில்

மெளனம் உலகில் மிக அழகான

மொழிகளுள் ஒன்று...!!!


ஏறியவன் எங்கோ மேலேயிருக்க..

ஏற்றிவிட்ட ஏணி மட்டும்

அதேயிடத்தில் அடுத்தவனை ஏற்றிவிட காத்திருக்கிறது! இது அரசியல் களத்தில் நான் கவனித்தது ….. ஆசிரியர்கள் வாழ்வை போல…


விழிக்கும் போதே அன்றைய

நாளை திட்டமிட வேண்டும்.

நம்மை நல்ல மனநிலையில்

வைத்துக் கொள்ளவும்

நம்மை சுற்றி இருப்பவர்களை

மகிழ்விக்கவும் உதவும்.


 அனுபவத்தில் பாடம் கற்றுக் கொள்பவன் சாதாரண மனிதன்

அடுத்தவனின் அனுபவத்தை

பாடமாக எடுத்து தன்னை நெறிப்படுத்திக் கொள்பவன் தான்  வெற்றியாளர்.


ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள். நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் உங்களால் நீங்கள் இழந்த அனைத்தையும் அடைய முடியும்.


நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற முடியும். கவனத்துடனும் நிதானத்துடனும் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.

 

ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் செய்யும்பொழுது எப்பொழுதும் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.


முயற்சி செய்து முடியாவிட்டால் சோர்ந்து விடாதீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி என்றும் வீணாகாது.

நிச்சயம் ஒரு நாள் பல மடங்கு பலன்களை தரும்.


சிலரை மறந்து விடுங்கள்!

சிலரை மன்னித்து விடுங்கள்!

சிலரை கடந்து விடுங்கள்! சிலரை வெறுத்து விடுங்கள்! எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் உங்கள் வாழ்க்கை சுமையாகி விடும்!


இதை உங்களிடம் இருந்தால் நீங்கள் தைரியமாக இருங்கள்.

ஒரு நாள் நீ வாழ்ந்த வாழ்க்கை உன் கண் முன் தெரியும்

அதை ரசிக்கும் படியாக வைத்து

கொள்...!!!


#வாழ்வியல்


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

5-9-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...