Thursday, September 19, 2024

இன்று (2.9.24)புளியறையில் பிடிபட்ட கனிமவள வாகனம் 10 டன் அதிகமாக ஏற்றி

 இன்று (2.9.24)புளியறையில் பிடிபட்ட கனிமவள வாகனம் 10 டன் அதிகமாக ஏற்றி செல்வது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது வரவேற்கத்தக்க விடயம்.



அதே சமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே எடைநிலையத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எடை போட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டன அப்பொழுது இதேபோன்று போலியாக இதே எடைநிலையத்தில் எடை போட்டு போலி சீட்டுகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது...?


மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை ,ஆலங்குளம் உள்ளிட்ட பகுதி குவாரிகளில் கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்வதற்கு வழங்கப்படும் நடை சீட்டுகளில் ஹாலோகிராம்கள்(அரசு முத்திரை)ஒட்டப்பட்டதில் போலியான ஹாலோகிராம்கள் ஒட்டப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன . இதை சிவகாசியில் அச்சடித்து இவர்கள் பயன்படுத்தவதாகவும் தகவல்கள் வருகின்றன


புளியரை காவல்துறை சோதனை சாவடியில் கனிம வளம்  ஏற்றிச்செல்லும்  நடை சீட்டு நகல்கள் இருப்பதில் ஹலகிராம்களை(அரசு முத்திரை)சோதனை செய்வது மிக மிக அவசியம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்


தென்காசி மாவட்டத்தின் கனிம வளங்கள் சில சுயநலவாதிகள் வளமாக வாழ்வதற்கு அழிக்கப்படுவது அதிர்ச்சி அளித்துள்ளது.


இவர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...