Thursday, September 19, 2024

கொல்கத்தா வன்புணர்வு குறித்து நாம் பேச துவங்கிய சில தினங்களில் தமிழகத்தில்…….

 கொல்கத்தா வன்புணர்வு குறித்து நாம் பேச துவங்கிய சில தினங்களில் தமிழகத்தில்…….


 சென்னையில் பணி செய்துக்கொண்டிருந்த 23 வயதுடைய பெண் ஒருவர் ஒரத்தநாடு பகுதியில் கல்லூரிச் சான்றை பெறுவதற்காக சென்ற நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள், 2 சிறுவர்களை காவலுக்கு வைத்து, அப்பெண்ணை பகல் நேரத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அந்த பெண்ணை சரக்கு பாட்டில் கொண்டு தாக்கியும் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் உறவினர்கள் மூலம் பாப்பநாடு காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க, அதை ஏற்கவே காவல்துறைக்கு 15 மணி நேரம் தேவைப்பட்டு இருக்கிறது. புகார் கொடுக்க வந்த பெண்ணை மருத்துவமனையில் சீட்டு வாங்கி வாருங்கள் என்று அனுப்பி, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை பயணிக்க வைத்திருக்கிறது இந்த அரசு. அப்புறம் என்னதுக்குங்க அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கு? திமுக ஆட்சியில் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு இருக்கிறது? பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழித்து இருக்கிறார்கள் காவலர்கள். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்? தனக்கு கீழ் உள்ள துறையில் என்ன நடக்கிறது, காவலர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைக் கூட அறிந்துக்கொள்ள முடியாமல் ஒரு முதல்வர் இருக்கிறார்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...