Thursday, September 19, 2024

சோம்பலில் இரு வெளிப்பாடுகள், ஒன்று திடீரென்று வரும் அதி உற்சாகம்.

 சோம்பலில் இரு வெளிப்பாடுகள், ஒன்று திடீரென்று வரும் அதி உற்சாகம். சட்டென்று  உற்சாகமடைந்து ஏகப்பட்ட திட்டங்கள் போடுவது. பரபரப்படைவது. அது அப்படியே நுரை போல அடங்கிப் போகும். இன்னொரு வெளிப்பாடு அவ்வப்போது வரும் தன்னிரக்கம். 


தன்னிரக்கம் விசித்திரமான ஒரு மனநிலை. அதைப் போல இனிய துக்கம் வேறில்லை. பலவீனங்கள், பிழைகள், செயலின்மை அனைத்தையும் அங்கே இனிமையாக ஆக்கிக் கொள்ள முடியும். அனுபவிக்க அனுபவிக்க தன்னிரக்கம் பெருகும். அதனுடன் கொஞ்சம் கவிதை  கொஞ்சம்  இசை, கொஞ்சம் இயற்கை சேர்த்துக் கொண்டால் கவித்துவமான மனநிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளவும் முடியும்.


இளைஞர்களே இந்த melancholic idleness  ன் வெறுமையில் திளைக்க காலம் இருக்கிறது... ஒரு ஐம்பது வருடம். ஆகவே செயல் புரிக

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...