Thursday, September 19, 2024

#வாழ்க்கை_ஒருஇயக்கம்

 #வாழ்க்கை_ஒருஇயக்கம் 

—————————————

வாழ்க்கையை உள்ளே, வெளியே என்று கருதாமல், ஒரே இயக்கமாக, பிரிக்கப்படாத இயக்கமாக பார்க்க வேண்டும். அப்படி செய்தால், "செயல்" என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கும்.


மனிதன் இவ் சமூகத்தில் வாழ்வதற்கு, 

இயற்கை வேண்டும், மழை, விவசாயம், உணவு, குடிநீர் அத்தியாவசியம்..

வளரும் போது படிப்பு, 

வளர்ந்த பின் வேலை, பொருளீட்ட, பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை, 

பின், மனைவி, குழந்தைகள் இன்புற்று வாழ..


வாழ்வில் அவன் மன அமைதியில்லாமல் போகும்போது, அவன் மன அமைதிக்கு வடிகால் என்ன!?


அறிவு, தெளிவு, நேர்மையான நல்ல சிந்தனை..


நன்மை என்பது தீமைக்கு எதிரான நிலை அல்ல. நன்மையை தேட முடியது. துன்பம் இல்லாதபோதுதான் நன்மை மலரும். 


இதைப் பற்றிய புரிதல்தான் நுண்ணறிவு. இந்த நுண்ணறிவுதான் தான் துக்கம், வன்முறை மற்றும் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் நீக்குகிறது. 


ஒரு ஆபத்தைக் கண்டு அதிலிருந்து உடனடியாக வெளியேறுவது போன்றது இது.


சிந்தனை என்பது நுண்ணறிவு அல்ல. நுண்ணறிவு சிந்தனையைப் பயன்படுத்தக் கூடும்; ஆனால் சிந்தனை, இந்த நுண்ணறிவை தனது சுயநலத் தேவைகளுக்காக கைப்பற்றி கட்டுப்படுத்த திட்டமிடும் போது, ​​அது தந்திரமாகவும் அழிவுகரமானதாகவும் மாறும்.


இந்த நுண்ணறிவு உங்களுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல. 


இது அரசியல்வாதிக்கோ, ஆசிரியருக்கோ, மீட்பருக்கோ சொந்தமானது அல்ல. 


இந்த நுண்ணறிவு அளவிட முடியாதது. 


இது உண்மையில் ஒன்றுமில்லாத நிலையாகும். 


எதைக்கண்டும் பிரமிப்பு அடையாமல் இருத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது  நமக்கு நல்லது.


மிகுந்த திருப்தியைப் பெறுவது என்பது இன்பத்தைத் தருகிறது; அனுபவம் எவ்வளவு ஆழமானதோ, எவ்வளவு விரிவானதோ, அவ்வளவு இன்பகரமான உள்ளது. 


எனவே, நாம் கோரும் அனுபவத்தின் வடிவத்தை இன்பமே ஆணையிடுகிறது; இன்பம்தான்  அனுபவத்தை அளவிடும் அளவுகோலாக உள்ளது.


அளவிடக்கூடிய எதுவும் சிந்தனையின் எல்லைக்குள் உள்ளது;  மேலும் மாயையை உருவாக்குவதற்கு ஏற்றது.


எல்லா  வேஷங்களும் கரைந்து நிற்குமொரு நாளில்

தொடங்கியே விடுகிறது

விதைத்த வினையின் 

விளையாடல். எரிகின்ற நெருப்பு கூட காற்றுடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறது அது போல தான், இங்கு போராட்டங்கள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை போராடவில்லை என்றால் வாழ்க்கையே இல்லை.... இதுதான்உண்மை.எல்லோராலும்ஒதுக்கப்பட்டது தான்

அரளிச்செடி..ஆனாலும் அது பூக்கத்தான் செய்கிறது.


எனவே, உண்மை எது என்ற தேடலில் இன்பம் என்பது அளவுகோலாக இருந்தால், அந்த அனுபவம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முன்பே கணித்துவிட்டீர்கள். 


எனவே அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.


சதா சர்வ காலமும் கீழ்மக்களுடன் கருத்துப் போர் நடத்தும் கடைந்தெடுத்த முட்டாள்களே!.. நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீண் வம்பர்களுடன் வீணடித்து வருவதை உணர்ந்து கொள்ளுங்கள்!.  


ஒரு அறிஞனிடன் வாதித்தால் அவனது அறிவை நீ பெறலாம்!.. 

ஒரு கலைஞனிடம் வாதித்தால் அவனது கலையை நீ கற்கலாம்!

ஒரு மருத்துவனிடம் வாதிக்கும்போது உன் உடல்நலம் காக்கப்படலாம்!

ஒரு விஞ்ஞானியிடம் உனது உரையாடல் நிகழ்ந்தால் அறிவியல் புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்! ஒரு பன்மொழி வித்தகனிடம் உனக்கு நட்பு கிடைத்தால் மொழிப்புலமையைப் பெறலாம்! -அதே போல தொல்லியல் - கல்வெட்டியல்- நாணயவியல் -ஆவணங்களில்  நல்ல தேர்ச்சி பெற்ற சிறந்த வரலாற்றியலாளரிடம் அதற்குத் தக்க அடிப்படை அறிவு கொண்டு நீ வாதிக்கும் போது நீயும் அவற்றில் கொஞ்சம் தேர்ச்சியைப் பெறலாம்!. 


இந்த வாய்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு, வெட்டிப் பயலுகளுடனும், வெந்து வேகாத அரைவேக்காடுக

ளோடும், சொந்த சாதியின் அறிவை அழிவுக்குள்ளாக்கி, நித்தமும் புளுகித் தள்ளும் கூமுட்டை வெறியர்களோடும் தினமும் கட்டிப்பிடித்துப் புரண்டுச் சாக்கடையில் புரளுகிறாய்!.  


 எந்தத் துறையிலும் அ,னா, ஆ, வன்னா எனும் அரிச்சுவடி கூடத் தெரியாத மண்டுகளுடன் வாதிடுகிறேன் பேர்வழி என்று மாட்டிக் கொண்டு அவனுடன் நீயும் கட்டிப்பிடித்து மக்கி மண்ணாகிப் போகிறாய்!.  


வராத வரலாறை வா! வா! - என்று அழைத்து வாய்க்கு வந்ததைப் பேசும் வன்மம் பிடித்த வாயன்களோடு நிற்காமல் வார்த்தைப் போர் நிகழ்த்துகிறாய்!.  


 போதும்டா  ! போதும் !.    - உடனே இதையெல்லாம் நிறுத்திக் கொண்டு உனக்கு இருக்கும் மிகவும் சிறிய ஆயுள் காலத்தைக் கணக்குப் போட்டு செலவழித்துக் கொள்!..  உன் மனதையும் உன் சுற்றத்தையும் ஆரோக்கியமாக வைத்திரு!.  இனி வரும் ஒவ்வொரு வினாடியும் உனது   நிறைவுக்கு மட்டுமே செலவழியட்டும்!.  வளமான வருங்காலத்தை சில மாதங்களில் நிச்சயிக்க முயற்சியைச் செய்!. உனது ஆளுமையை ஆயுளுக்கும் நிலைநிறுத்து!.


ஞாபகம் இல்லையே என்று மெய்யற்று சொன்னவர்களும், 1/2

நம்மை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு வாழ வேண்டும்.


இனி தினமும் முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் - இயற்கைஅருள் புரியட்டும்…!    2/2


#வாழ்க_வளத்துடன்.


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

1-9-2024

No comments:

Post a Comment

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது த...