Tuesday, February 28, 2017
bill on to Re Call
Srilanka
இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க
Monday, February 27, 2017
ஈழத்தமிழர்கள்.
தென் தமிழக மாவட்டங்களின் உரிமைக் குரல்:
Sunday, February 26, 2017
ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோகார்பன் மீத்தேன் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். பெயரே சொல்வது போல ஹைட்ரஜனும் கார்பனும் சேர்வது ஹைட்ரோ கார்பன். அது ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுவும் சேர்ந்த மீத்தேனாகவும் (CH4) இருக்கலாம் அல்லது ஈத்தேனாகவோ புரேப்பேனாகவோ கூட இருக்கலாம். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெயரும் பயன்பாடும் மாறுகிறது.
குமரி மாவட்டம் நெய்யாறு நீர் பங்கீடு
Saturday, February 25, 2017
பொது வாழ்வு.
தொலைக்காட்சிதொடர்கள்
Friday, February 24, 2017
விவசாயிகள் தற்கொலைகள்
ஆளுநர் சீசரின் மனைவிக்கு ஒப்ப நடந்துகொள்ள வேண்டும்
13/2/2017 ல் எழுதப்பட்டது ...
ஆளுநர் சீசரின் மனைவிக்கு ஒப்ப நடந்துகொள்ள வேண்டும்
வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
----------------------------------------------
ஜெயலலிதா மறைவிற்கு பின் அ.தி.மு.க. பிளவுப்பட்டு இரண்டுமுகாம்களாக பிரிந்து சட்ட மன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்களும் இரண்டு அணிக்கும் ஆதரவுதெரிவித்துள்ளனர். ஒரு அணி தன்னுடைய ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்களை 120 பேருக்கு மேல் கூவத்தூரில் உள்ளவிடுதியில் தங்க வைத்துள்ளனர். இம்மாதிரி நடவடிக்கைகள்இந்தியாவில் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது.
ஆந்திரத்தில் 1984-ல் அன்றைய முதல்வர் என்.டி. ராமாராவ்அரசு கலைக்கப்பட்டு அன்றைய மத்திய இந்திராகாந்தி அரசுபாஸ்கர் ராவை முதலமைச்சராக்கியதை கண்டித்துஎன்.டி.ஆரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மைசூரில்மறைமுகமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் 1988-ல் அ.தி.மு.க. ஜா, ஜெ அணி என்றுபிளவுப்பட்ட பொழுது ஜெ அணி எம்.எல்.ஏக்கள் நட்சத்திரஹோட்டலில் ஊர் சுற்றினர்.
ஆந்திரத்தில் திரும்பவும் என்.டி. மறைவிற்கு பின் 1995-ல்சந்திரபாபு நாயுடு என்.டி.ராவின் துணைவியார் லெட்சுமிசிவபாரதிக்கு பிரச்னை ஏற்பட்டும் ஐதராபாத்தில் நட்சத்திரஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
குஜராத்தில் 1995-ல் சங்கர்சிங் வேகளா கேசுபாய் படேலுக்குஏற்பட்ட பிரச்னையில் 48 சட்டமன்ற உறுப்பினர்களை வேகளாசுற்றுலாவிற்கு அழைத்து சென்று பாதுகாத்தார்.
கோவாவில் 2005-ல் பி.ஜே.பி. ஆதரவு 12 சட்டமன்றஉறுப்பினர்களை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று காவல்காத்தனர்.
ஜார்கண்டில் 2006-ல் அர்ஜணமுண்டா 40 பா.ஜ.க. ஆதரவுஎம்.எல்.ஏக்களை இராஜாஸ்தானுக்கு அழைத்துச் சென்றார்.
2007-ல் அருணாச்சல பிரதேசத்தில் 20 சட்டமன்றஉறுப்பினர்கள் கடத்தப்பட்டனர்.
உத்திரகாண்டில் 2016-ல் 27 எம்.எல்.ஏ. சட்டமன்றஉறுப்பினர்களை பி.ஜே.பி. ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றது.
கர்நாடகத்தில் 2014-ல் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பம்பாயிக்குஅழைத்துச் செல்லப்பட்டனர்.
இப்படியாக ஒரு கட்சி பிளவுப்பட்டால் ஆட்சி அமைக்கவிரும்புவர்கள் தங்களுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை கண்தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்வது இந்தியாவில்வாடிக்கையாகி விட்டது.
இதற்கு காரணம் என்ன?
கவர்னர் என்ன முடிவு எடுக்க போகிறாரோ... சட்டமன்றத்தில்தன்னுடைய பலத்தைக் காட்டும் வரை தன்னுடையஆதரவாளர்களை ஒருமுகமாக பாதுகாக்க வேண்டியநெருக்கடி இருப்பதால் இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர்களைதன்னுடைய கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துக்கொள்வது என்ற நிலை. இது எப்படி சரியா? தவறா? என்பதுவிவாதத்திற்கு உரிய விடையம்.
தமிழகத்தில் பொறுத்தவரை இன்றைக்கு ராஜ்பவனை நோக்கிதமிழக ஆளுநர் என்ன செய்ய போகிறார்? என்றுதான்அனைவருடைய எதிர்ப்பார்ப்பும் இருக்கிறது.
தமிழக கவர்னர் வாய்மூடி மௌனியாக இருக்கிறாரே... தாமதபடுத்துகிறாரே... என்ற விமர்சனமும் எழுந்து உள்ளது.
இன்றைக்கு ஆளுநர் செய்ய வேண்டிய அரசியல் சாசனகடமைகள் என்று எடுத்துக்கொண்டால்
ஆளுநர் முடிவுகள் ......
சசிகலாவைத் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்து, பெரும்பான்மையை சட்டமன்றத்தில நிரூபிக்கக் காலக்கெடுவழங்கலாம்.
அல்லது
ராஜினாமா செய்த பன்னீரை பதவியில் நீடிக்க செய்து முதல்வர்என்ற வகையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவகாசம்கொடுக்கலாம்
அல்லது
சசிகலாவுக்குப் பதவிப் ஏற்பதில் சிக்கல்கள் இருந்தால் வேறுஒருவரை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஆளுங்கட்சிக்குஅறிவுறுத்தலாம்.
அல்லது
எதிர்க்கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது.
அல்லது
குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில்சட்டமன்றத்தை முடக்க தமிழக ஆளுநர் பரிந்துரைசெய்யலாம்.
அதற்கு நாடாளுமன்ற இரு அவைகளும் 60 நாட்களுக்குள்ஒப்புதலும் பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள சூழலில்ஆளுநர் பிரிவு 164 (1)-ன் படி பன்னீர்செல்வம் முதல்வர்பதவியிலிருந்து விளகிய பின் சசிகலாவை அழைக்கலாம். முதல்வரை நியமிக்கும் அதிகாரம், ஆளுநர் விருப்பம், திருப்தியை பொறுத்ததாகும்.
கபூர் வழக்கு - ஜெயலலிதாவின் வழக்கின் தீர்ப்பின் படிசசிகலா பொறுப்பு எடுத்து தன்னுடைய வழக்கில் குற்றவாளிஎன்று தீர்ப்பு கிடைத்தால் அவர் பதவி விலகியாக வேண்டும்.
பன்னீர் விருப்பம் இல்லாமல் நெருக்கடியில் ராஜினாமா கடிதம்வாங்கினர் என்று கூறிகிறார் அவரே இடைக்கால அரசின்முதல்வர். அவரும் முதல்வராக நீடிக்க விரும்புகிறார்இடைக்கால அரசாங்கமும் நீண்ட நாள் நீடிக்க முடியாதுஎன்று என்.டி.ஆர் வழக்கில் தீர்ப்பு உள்ளது.
இப்படியான நிலையில் ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தைஅரசியல் அமைப்பு சட்டத்திற்குள் தான் அணுக வேண்டும். காலமும் தாழ்த்தக்கூடாது. எஸ்.ஆர். பொம்மை வழக்கில்தெளிவாக ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும், குடியரசுதலைவருக்கும் நெறிமுறைகளை வைத்து தந்துள்ளது.
ராஜ்பவன் என்று கருதாமல் நேர்மையாக, நடக்க வேண்டும்என்று அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக கவர்னர் செயல்பட வேண்டிய நேரம். மௌனம்காக்காமல் உரிய நடவடிக்கைகளை ராஜ்பவன் இறங்கவேண்டும்.
இரு மாநிலத்திற்கும் ஒரு கவர்னர் என, விமான பயனத்தில்வந்து சேர்கிற தொலைவில் இருந்தும், வரமுடியாமலும் , வந்தபிறகும் தெளிவு இல்லாதநிலைமை.உஸ்மானியபல்கலைகழத்தில் சட்டம் பயின்றவரானவித்யாசாகர்ராவ்;
இதுவரை அட்டானி ஜெனரலிடம் கருத்தும்கேட்கவில்லையாம்.
சட்டத்தில் பி. எச்டி பெற்றவர் முன்னாள் குடியரசு தலைவர்டாக்டர் சங்கர் தயாள்சர்மா1996ல் குழப்பத்தில்இரண்டுவாரங்களில். இரண்டு பிரதமருக்கு பதவிபிரமானம்செய்து வைத்தார்.
இப்படியெல்லாம் இருக்கின்ற நிலையில் கடந்த காலங்களில்இவ்வாறான பிரச்னை எப்படி கையாளப்பட்டது என்பது சிலநிகழ்வுகளை இங்கு சொல்ல வேண்டிய அவசியமும் உள்ளது.
நாட்டின் விடுலைக்கு பின்,சென்னை இராஜதானியில 1952ஆம்ஆண்டுகுமாரசாமி ராஜா தலைமையில் இருந்த 5பேர்அமைச்சரவை கவிழ்க்கப்பட்டது.மாநிலங்களில் ஆட்சிஅமைப்பது தொடர்பாக இதே போன்று முதன் முதலில்அரசியல் குழப்பங்கள் சென்னை மாகாணத்தில் நிகழ்ந்தது.
1952 ஆம் ஆண்டு தமிழகத்தை உள்ளடக்கிய அப்போதையசென்னை மாகாணத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில்மொத்தமுள்ள 375 தொகுதிகளில் 152 ல் மட்டுமே ஆளும்காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது, கம்யூனிஸ்ட்கள்பிற கட்சிகளுடனும், சுயேச்சைகளுடனும் இணைந்து ஆட்சிஅமைக்க அழைக்க வேண்டுமென்று ஆளுநர் பிரகாசத்தைநிர்பந்தம் செய்தனர்.
யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற குழப்பம்ஆளுநருக்கு ஏற்பட்டது.
எவரும் எதிர்பாராத நிலையில் நிலையான ஆட்சியை வழங்கராஜாஜி ஒருவரால் தான் முடியும் என்று நம்பிய ஆளுநர்ராஜாஜியை ஆட்சியமைக்க அழைத்தார்.
அப்போது தான் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்துபின்னர் உள்துறை அமைச்சர் என்கிற பெரும் பொறுப்பையும்ராஜாஜி வகித்து முடித்திருந்தார்.
இதனால் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்கராஜாஜி தயங்கினார். தேர்தலில் நின்று வெற்றி பெறாத ஒருவரை எப்படி பதவி ஏற்க அழைக்கலாம் என்கிற கேள்விகள்எழுந்தன. இலக்கிய கர்த்தா நிலையில் ராஜாஜியை ஆளுநர்மேலவை உறுப்பினராக நியமித்து முதல்வரனார்.
கேரளாவில் இது போல 1950ல், பட்டம் தாணு பிள்ளையும் 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்டு ஆட்சி அமைத்தார்.
ராஜாஜி முதல்வரான விதம் அன்று பிரதமராக இருந்த நேருஉட்பட எல்லோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மூதறிஞர் ஆட்சியில்சில கடுமையான முடிவுகளை எடுத்தார். அவர் கொண்டுவந்தகுலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார். (உரிமைக்குகுரல் கொடுப்போம்) 1995ல் வெளியான என் நூலில் பதிவு.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் 1987-ல் வி.என். ஜானகிமுதல்வராக பணியேற்க தமிழக அன்றைய ஆளுநர் குரானாஅழைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை கொண்டு தான்முதல்வரை நியமிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லைஎன்பதற்கு இதுவே சான்றாகும்.
மேலும் 1967 இராஜாஸ்தானில் 183 இடங்களில் காங்கிரஸ் 88-ம் எதிர்க்கட்சி 93-ம் வெற்றிப் பெற்றனர். ஆனால் ஆளுநர்காங்கிரஸ் தலைவர் எம்.எல். சுகாடியாவை முதல்வராகபதவியேற்க அழைத்தார்.
1973-ல் ஒடிசாவில் அன்றைய முதல்வர் நந்தினி சத்பதிராஜினாமாவை ஒட்டி பிஜு பட்நாயக் தலைமையில் இருந்தபிரகதி முன்னனி 72 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் அன்றைய ஒடிசா ஆளுநர் பிஜுவை நியமிக்கவில்லை.
1982-ல் ஹரியானாவில் ப.ஜா.க. லோக்தள் கூட்டணி - 36, காங்கிரஸ் 35, மொத்த இடங்கள் 90 இருந்தும் ப.ஜா.க. லோக்தல் கூட்டணியை அழைத்து விட்டு பின்னால் அதையும்மறுத்துவிட்டார். அன்றைக்கு காங்கிரஸை திரும்பவும் அவர்அழைத்தார்.
1984-ல் ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியிலிருந்து 12 சட்டமன்ற உறுப்பினர்களை பிரிந்ததன் விளைவாக ஆளுநர்மத்திய அரசின் இந்திராகாந்தியின் சொல்லை கேட்டு ஜி.எம். சாவை கேட்டு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அது பெரிய தேசிய பிரச்னையாகி விட்டது.
அதைப்போலவே 1984-ல் ஆந்திராவில் என்.டி.ராமராவ்அமைச்சரவில் நிதியமைச்சராக இருந்த பாஸ்கர் ராவைஅழைத்து பிரிந்த எம்.எல்.ஏக்களோடு அன்று ஆளுநர் ராம்லால்முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை எதிர்த்துநாடு முழுவதும் கண்டன கூட்டங்கள் நடத்தி டெல்லிராஜாபாட்டையில் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களோடுராஷ்டரபதி பவனை நோக்கி சென்றதெல்லாம் வரலாறு.
திரும்பவும் 2002-ல் காஷ்மீரில் 87 உறுப்பினர்கள் கொண்டஅவையில் 28 இடங்கள் தேசிய மாநாடு கட்சிக்கு கிடைத்தது. காங்கிரஸுக்கு 21, மக்கள் ஜனநாக கட்சிக்கு 18 ஆனால்ஆளுநர் மக்கள் ஜனநாயக கட்சியை அமைக்க அழைத்தார். இப்படியெல்லாம் பல நிகழ்வுகள் நடந்தே உள்ளனர்.
ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுபிக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்வர் ஆற்ற வேண்டும்.
ஆளுநரின் விருப்பமும், திருப்தியும் அரசமைப்புச் சட்டத்தின்164 (1)ன் படி இடடிஞுஞூ டிணடிண்ணாஞுணூ டணிடூஞீண்ணிஞூஞூடிஞிஞு ஞீதணூடிணஞ் ணாடஞு ணீடூஞுச்ண்தணூஞுணிஞூ ணாடஞு எணிதிஞுணூணணிணூ. குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையில் ஆளுநருடைய கடமைகளை வினா எழுப்பமுடியாது என்றும், அவருடைய விருப்பத்தை பொறுத்துதான்இந்த பிரச்னை அமையும் என்று தீர்ப்புகள் சொல்லி உள்ளனர். குறிப்பாக கணூச்ணாச்ணீ குடிணஞ்ட கீச்ணிடீடிணூச்ணிகீச்ணஞு திண் எணிதிஞுணூணணிணூ ணிஞூ எணிச், கு. ஈடச்ணூட்ச்டூடிணஞ்ச்ட் ஙண் எணிதிஞுணூணணிணூ ணிஞூகூச்ட்டிடூ ச்ஞீத வழக்குகளில் முடிவாகியுள்ளனர். ஆனால்1998-ல் உத்திர பிரதேசம் முதல்வர் கல்யாண சிங்கைநீக்கிவிட்டு, ஜகதாம்பிகா பாலை முதல்வராக நியமித்ததுசெல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துகல்யாண சிங் திரும்பவும் முதல்வராக பொறுப்பேற்றார். இதோடு, மத்திய அரசு அமைக்கும் போது ஏற்பட்டபிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. நேருக்கு பிறகு சாஸ்திரி பதவி ஏற்ற போது,
2. மொராஜி தலைமையில் ஜனதா அரசு கவிழ்ந்து குடியரசுதலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி சரண் சிங் பிரதமராகபதவியேற்க அழைத்தபோது,
3. வி.பி.சிங் 1990-ல் பதவியேற்றபோது,
4. வாஜ்பாய், தேவகௌடா 1996-ல் பதவியேற்றபோது நடந்தசட்ட சிக்கல்கள் எல்லாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.
இப்படியான சூழலில் கவர்னர் ஒரு வாரத்திற்கு மேல்காலதாமதம் செய்யாமல் நியாயமாக அரசியல் சாசனத்தின் படிதன்னுடைய திருப்தியான கடமைகளை ஆற்ற வேண்டியதுஅடிப்படையாகும். இதில் தனிப்பட்ட அரசியலோ, குதிரைபேரத்தை உருவாக்கவோக் கூடாது.
ஆளுநர் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும், தமிழகத்தினுடைய நிர்வாகம் ஸ்தம்பித்து போகும்.
கடந்து 4 நாட்களாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ள தமிழக முக்கியபிரச்சினைகள்; அவை எதுவும் செய்திகளாகயும் வரவில்லை. அதை குறித்துயாரும் அக்கறைப்படவும்மில்லை. ஏனென்றால்தமிழக அரசு முடங்கி போய் உள்ளது. அவை உடனடியாககவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.
1. வரலாறு காணாத வறட்சி. தற்கொலையாலும்மனவேதனையாலும் 200 விவசாயிகளுக்கு மேல் மரணம்.
2. பாம்பாற்றின் துணை நதியான செங்கலாற்றில் கேரளாதடுப்பணை கட்டுகிறது. இதனால் அமராவதி பாசனவிவசாயிகள்பெரும்பாதிப்புக்குள்ளாவார்கள்.
3. பவானி ஆற்றில் மேலும் ஆறு தடுப்பணைகள் கட்டவும்கேரள அரசு முயன்று வருகிறது.
4. ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டநடவடிக்கையில் இறங்கி விட்டது.
5. ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கண்டலேறு அணையில்இருந்து வர வேண்டிய கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்து; ராப்பூர், வெங்கடகிரி, காளகஸ்தி போன்ற ஆந்திர பகுதிகள்தான் பயன் பெறுகின்றன.
6. தமிழகத்திற்கு மின்சார விநியோகத்திற்காக பவர் கீரிட்மூலமாக மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர், கர்நாடகமாநிலம் ரய்ச்சூர் வரை அமைக்கப்பட்ட மின் கடத்திகம்பங்கள் கேரள எல்லையில் நிறுவ முடியாமல் கேரளாதடுக்கின்றது. கடந்த 05.02.2017 கேரள அதிகாரிகளுடன்நடந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
7. பன்னாட்டு அளவில் டீகோ கார்சியா தீவில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா இராணுவ தளத்தைஅமைப்பதற்கு அந்த தீவில் வசித்த 2000க்கும் மேற்பட்டமோரீஸ் நாட்டினரை வெளியேற்றியது. இது இந்து மகாசமுத்திரத்தில் அமெடிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மோரீஸ்குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது பிரிட்டன் 2036 வரைஅமெரிக்காவுடன் குத்தகையை புதுப்பித்துள்ளது. இதுநேரடியாக இந்தியாவின் தென் எல்லையிலுள்ள தீவாகும். ஏற்கனவே இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974 கால கட்டங்களில் இந்த தீவில் அமெரிக்கா தளம் அமைத்தால்இந்தியாவுக்கு நேரடியாக ஆபத்திருக்குமென்று போராடிஅமெரிக்க இராணுவ தளம் அப்போது அப்புறப்படுத்தப்பட்டது. இப்படியான சிக்கலில் ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக குமரிமுனையிலிருந்து இராமேஸ்வரம் நாகை வரை உள்ளகடற்கரைப்பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம்ஏற்படும்.
எண்ணூரில் கடலில் கலந்த கச்சா எண்ணெய் பிரச்சனையைமறந்து விட்டார்கள்.
மேலும் காலதாமதம் செய்யாமல் சட்டபடியாக கவர்னரின்விருப்பப்படி தமிழகத்தில் அரசு அமைக்க கடமைகளைமேற்கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் 1977-ல் ராஜஸ்தான் மாநில அரசுகலைத்த போது நடந்த வழக்கின் தீர்ப்பு, எஸ்.ஆர். பொம்மைவழக்கு, இமாசல பிரதேசத்தில் ராம்ராவ் கவர்னராக அறிவித்தபோது உச்சநீதிமன்ற தீர்ப்பு, உத்தரகண்டு - அருணாச்சலப்பிரதேசம் போன்ற சமீபத்தில் வழங்கியதீர்ப்புகள் எல்லாம் மனதில் கொண்டு தமிழக கவர்னர்கடமையாற்ற வேண்டும்.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? அண்ணாகேட்டதைபோல, இன்றைக்கு நிலைமைகள் உள்ளன.
கவர்னர் தேவையில்லை. கவர்னருடைய தேவைகளும், அவருடைய பணிகளும் தேவையில்லை என்று இராஜமன்னார்கமிஷன் அறிக்கையும், கர்நாடக முதல்வராக இருந்தராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் குழு வெளியிட்டகவர்னர் குறித்து வெள்ளை அறிக்கை, பெங்களூரில் நடந்ததென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு, ஐதாராபாத்தில்என்.டி.ஆர். கூட்டிய காங்கிரஸ் அல்லா கட்சிகளின் மாநாடு, மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்த ஜோதிபாசு வெளியிட்டவெள்ளை அறிக்கை, ஸ்ரீநகரில் பாருக் அப்துல்லா கூட்டியமாநாடு பிரகடணம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
கவர்னர் மத்திய அரசின் ஏஜென்டு, பிரதிநிதியாக இருந்துகொண்டு கண்காணி வேலை பார்ப்பது கூடாது. கவர்னரைகொண்டு இதுவரை மத்திய அரசு 126 முறை பிரிவு 356 பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்து உள்ளது. முதன்முதலாக 1951-ல் கோபால் சன்ட் ஆட்சி முடக்கப்பட்டது. அதன் பின், கவிழ்ப்பு 1953-ல் பெப்சுலும், 1954-ல்ஆந்திராவிலும், காங்கிரஸ் அல்லாத கேரள நம்பூதிரிபாடுஆட்சியை 1959-லும் கலைக்கப்பட்டது.
இது தொடர்க்கதையாக எஸ்.ஆர். பொம்மை வழக்கு வரைநடந்தேறியது.
இப்படியெல்லாம் நாட்டு நடப்புகள் நடந்தேறின. கவர்னர்தன்னுடைய அதிகாரங்களை வரம்புக்குள் வைத்து முடிவுஎடுப்பதுதான் இன்றைக்கு அவசரமும், அவசியமும் ஆகும். இதைவிட்டுவிட்டு வேறு கடமைகள் ஆற்றுவது ஜனநாயகத்தைமாசுப்படுத்துவதாகும்.
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தீர்க்கக்கூடிய அரசு அமைக்கவேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படை கூறாகும்.
ஏற்கெனவே தி.மு.க அரசை எந்தவிதமான முகாந்தாரம்இல்லாமல் பர்னலா கவர்னராக இருந்த போது, அதர்வைஸ்(ணிணாடஞுணூதீடிண்ஞு) என்று சொல்லி ஆளுநரின்பரிந்துரையே இல்லாமல் கலைக்கப்பட்டது. தமிழகத்தில்மூன்று கலைக்கப்பட்டதில் இரு முறை தி.மு.க. பழியாகியது.
ஆளுநர் தீண ஙிடிண்ஞீணிட் என்ற முறையில்அணூஞடிணாணூச்ணூதூ நேர்மையாக கண்ணியத்தோடு, ஆட்சிகள் அமைப்பதில் நடந்து கொள்ள வேண்டும் எனஉச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
ஆளுநரின் விருப்பம் என்பது வானலாவிய அதிகாரம்கிடையாது.
பி.கே. நேரு 1968-ல் அஸ்ஸாம், நாகலாந்து கவர்னராகஇருந்த பொழுது தன்னுடைய நினைவுகளில் கவர்னர்அதிகாரங்களும், நாடாளுமன்ற - சட்டமன்றஉறுப்பினர்களுடைய தனி சலுகைகள் என்பது புரியமுடியவில்லை என்றும், அதை ஏன் வரையறுக்கவில்லைஎன்றும் கேள்வி எளிப்பியுள்ளார். இன்றைய நிலையில்தமிழகத்தின் ஆட்சி ஸ்திரத்தன்மையும், ஆளுநரின்விருப்பமான போக்கையும் பற்றியான வினாக்கள் எழுந்தவண்ணம் இருந்தன. எல்லோரும் சட்டத்தின் ஆட்சிக்குகட்டுப்பட்டவர்கள் அதைவிட மேலான குறியீடு எதுவும்ஜனநாயகத்தில் கிடையாது.
இதை மனதில் கொண்டு, தமிழக ஆளுநர் தன்னடையபொறுப்பை கண்ணியத்தோடும், நேர்மையோடும், அரசியல்சாசனத்தில் வரையறுக்கப்பட்ட பிரிவுகள் 153லிருந்து 164 வரை அதிகாரத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வதுதான்ஆளுநரின் இலக்கணம்.
இதில் எல்லைதாண்டக் கூடாது. பிரிவு 356-லும்உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகளை ஏற்றவாறுதான் கவர்னர்கடமையாற்ற வேண்டும். உலகிலேயே எங்கும் நிலாதவகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் கவர்னராகநியமிக்கப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு அதிகாரங்கள்வழங்கப்பட்டது கவர்னருக்கு மட்டும்தான்.
கவர்னர் சீசரின் மனைவிக்கு ஒப்ப நடந்து கொள்வதுதான்நாட்டுக்கு நல்லது.
#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…
#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*… ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...