Saturday, February 25, 2017

தொலைக்காட்சிதொடர்கள்

மக்களை முட்டாள் ஆக்கும் தொலைக்காட்சிதொடர்களை பார்ப்பதற்கு அபத்தமாக இருக்கின்றது. அதுவும் சன் தொலைக்காட்சியில் இந்த தொடர்களில் எதார்த்தம் இல்லாமல் உள்ளது.
நேற்றைக்கு ஓய்வுப் பெற்ற உயர்நீதிபதி வீட்டிற்கு சென்றபோது,அவர் தலையில் அடித்துக் கொண்டு இப்படியும் தொலைக்காட்சியின் தொடர்களா..என வருத்தமாக சொன்னார்.வில்லன், வில்லிகள் தான் கதாநாயக பாத்திரத்தில் ஏற்று உள்ளது போல் நகர்வு உள்ளது.
பிள்ளையே அப்பனை கொல்வதுபோன்ற காட்சிகள்.கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கும் இத்தொடரகளில் முக்கியத்துவமே கிடையாது.
மெகா சீரியல் பார்க்கிற எல்லோருக்கும் தெரியும் ; வில்லனோ-வில்லியோதான் ஜெயிச்சுக்கிட்டே இருப்பார் ; இத்தொடர்கள் தினத்தந்தி சிந்துபாத் கதையைப் போல முடிவில்லாமல் உள்ளது.
தங்கள் வசதிக்கும், விளம்பரம் மூலம் பண கொழிக்க அபத்தமான நாடகங்கள் நாட்டுககு தேவையா? நல்ல, தரமான தொடர்களாக இல்லையே?
இதையும் தமிழகம் கொண்டாடுகிறது.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...