Wednesday, February 1, 2017

தமிழக கேரள நதிநீர் பிரச்னைகள் பேச்சுவார்த்தை

தமிழக கேரள நதிநீர் பிரச்னைகள் பேச்சுவார்த்தை
-------------------------------------

கடந்த 28 .01.2017  அன்று , திருவனந்தபுரத்தில்  தமிழக - கேரளா  அரசுகள்  நதி நீர் பங்கீடை   குறித்து பேச்சுவார்த்தை நடக்க  இருக்கின்றது என்ற  செய்தியை முகநூலில் பதிவு செய்தி ருந்தேன் . இரண்டு அரசுகளின் பிரதிநிதிகள்  சந்தித்து ஆலோசனைகள் நடத்தினர் .

ஆழியாறு - பரம்பிக்குளம் , சிறுவாணி ,  1973 ஒப்பந்தத்தை மட்டும் பேசிவிட்டு , பிரச்சனைகள் தீர்ந்தது என்று கூட்டத்தை முடித்து விட்டனர் . எப்போதும் போல கூடி கலைந்த கையாகி விட்டது .கிட்டத்தட்ட 50 முறை இரு மாநில அரசுகளும் இதுவரை கூடி பேசியுள்ளன. பி.ஏ.பி  யில் இருந்து தண்ணீரை கேரளத்திற்கு கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு செவி சாய்த்து விட்டதாகவும் தெரிகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் ஆக்க  பூர்வமான முடிவுகள் எதுவும்  எட்டப்படவில்லை என்று தான் தெரிகிறது. தமிழக அரசு பிரதிநிதிகள்   .     நீண்டகாலமாக இருக்கும் பிரச்சனைகளை பேசாமல் தவிர்த்து வேதனை தருகிறது. தமிழக மக்களுக்கு என்ன தெரிய போகிறது என்று , சென்றோம் வந்தோம் என்று தமிழக அரசு பிரதிநிதிகள் திரும்பியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு கால்வாய் கேரள அரசால் மூடப்பட்டு 9 ஆண்டுகள் ஆகின்றன . நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு , உள்ளாறு , செண்பகவல்லி அணை உடைப்பு , ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகர் அணைத்திட்டம்;ஏற்கனவே அனைவரும் அறிந்த முல்லை பெரியாறு பிரச்சினை, கொங்குமண்டலத்தில் சிறுவாணி ,பாம்பாறு ,பவானி ,சோழையாறு,ஆழியாறு-பரம்பிக்குளம்,அமராவதி பிரச்சினை, பாண்டியாறு -புன்னம்புழா அத்தோடு கேரளாவில் உள்ள நீர் படிக்கைகளான அச்சன்கோவில்-பம்பை , தமிழகத்தில் உள்ள  சாத்தூர் அருகே உள்ள வைப்பாறு உடன் இணைக்கவேண்டும் போன்ற பிரச்சனைகள் பிரதானமானது .

தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள சித்திர புழா திட்டத்திற்கு  பாலக்காடு , திருச்சூர் மாவட்ட குடிநீர் மற்றும் பாசனங்களுக்காக வழங்கப்படுகிறது .  சோழையாறு அணை மூலம் மணக்கடவு தடுப்பணை மூலம் 7.25   கன அடி தண்ணீரை கேரளாவுக்கு  தமிழகம் எந்த தொய்வில்லாமல் வழங்குகிறது  .  தமிழகத்தில் இருந்து  அரிசி , பருப்பு , காய்கறிகள் , பால் என அனைத்து தேவைகளையும் கேரள மக்களுக்கு அனுப்பி  வருகின்றோம் . ஆனால் தமிழக நதிகளின் நீர் ஆதிபத்தியங்களுக்கு மட்டும்கேரளாசண்டிதனம்செய்கின்றது .
கேரளா அரசு 35 ஆண்டுகளாக பி.ஏ.பி யோடும் , இடைமலையாறு அணையை காட்டாமல் தள்ளிப்போடுகிறது. இதனால் தண்ணீரை தடுத்து ஆனைமலை யாறு , நீராறு என்று இரண்டு ஆறுகளில் இருந்து 4 .25  டி.எம்.சி தண்ணீர் 35  ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமை மறுக்கப்படுகிறது. 

பாம்பாற்றிலிருந்து அப்பர்,லோயர் என்ற இரண்டு அணைகளை கேரளா அரசு கட்டுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீரும் தடுக்கப்படுகிறது. இந்த பிரச்சனைகளோடு பவானி நதி பிரச்சனையும்  பேசாமல் இந்த கூட்டம் நடந்தது என்று நினைக்கும்போது மனம் ரணமாகிறது. 

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்  1958 ல் தொடங்கி 1962 ல் நிறைவடைந்தது. திட்டஒப்பந்தத்தின்படி50டி.எம்.சிதண்ணீரில் 30 .5  தமிழகத்திற்கும், 19 .5 டி.எம்.சி தண்ணீர் கேரளத்திற்கு பகிர்ந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. 

இதனால் 4 .25  லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கும் 3  மாவட்ட குடிநீருக்கும் பயன் பெறுகின்றது. கேரளாவில் 25 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு பாசனத்திற்காக பயன் பெறுகிறது. பி.ஏ.பி திட்டத்தில் மொத்தம் 10 அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால்  மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு , இணைக்கடவு , பரம்பிக்குளம் , பெரும்பள்ளம் , ஆழியாறு , மேல் ஆழியாறு, திருமூர்த்தி அணை, என 9 அணைகள் கட்டப்பட்டன. 

இவ்வாறான நிலையில் ஒப்பந்தப்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீரில் நாம் கட்ட வேண்டிய தடுப்பணைகளும் கட்டாமல், கேரளாவும் கட்ட வேண்டிய அணைகளை கட்டாமல் தமிழகத்திற்கு நீர் வரத்து வரும் ஆறுகளில் அணைகளை  கட்டி விட்டது. 

இது குறித்து கூட விலாவரியாக இருமாநில அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசவில்லை என்று தெரிய வருகிறது. குமரிமாவட்டம் நெய்யாறுலிருந்து நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா வரை கேரளாவோடு நதிநீர் சிக்கல்கள் எப்போது  முடிவு வருமோ என்பது இயற்க்கைக்கே வெளிச்சம் .

#தமிழ்நாடு #கேரளா  #நதிநீர்பிரச்சினைகள்  #பவானி #சிறுவாணி #நெய்யாறு #முல்லைபெறியாறு #சாலியாறு #ஆழியாறு #பாண்டியாறு #புன்னம்புழா
#KSRadhakirushnanpost #Ksrposting 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
1/2/2018

Times of india 29/1/17

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...