Sunday, February 26, 2017

ஹைட்ரோகார்பன்

ஹைட்ரோ கார்பன் பெயரில் ஷேல் கேஸ் திட்டம்: (பாதிக்கும் திட்டம்  பற்றிய குறிப்புகள்)
-------------------------------------
விவசாயம்,நீர் வளம் பாதிக்கும்
திட்டமான ஹைட்ரோகார்பன் ; வடக்கே புதுச்சேரி, தெற்கே ராமநாதபுரம், மேற்கே தஞ்சாவூர், கிழக்கே காரைக்காலை எல்லையாக கொண்டு ள்ள சுமார் 27,850 கிலோமீட்டர் பரப்பளவில் ஏராளமான ஹைட் ரோ கார்பன் இருக்கிறது அதனால் தான் தென்னிந்தியாவை   ஹோம் ஆஃப் ஹைட்ரோ கார்பன் என்று சொல்கிறார்கள்.
இதற்காகத்தான் அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லி யன் டன் எண்ணெய் 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயு வைத் தோண்டியெடுக்கும் ஒப்பந்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது அதனால் தான்  கேஸ் மற்றும் எண்ணை எடுக்க மத்திய அரசு விரைவாக தனியார் நிறுவனங்கள் மூலமாக முனைந்துள்ளது.இதில் ஒன்று நெடுவயல் ஹைட்ரோ கார்பன் திட்டம்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது.இதற்காக இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிப்படுகையில் 11 இடங்களும், ராஜ ஸ்தானில் கோமதி நதிப்படுகையில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி ப்படுகையில் 4 இடங்களிலும் குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிப்படுகையில்  5 இடங்கள்  மற்றும் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிப்படுகையில் 4 இட ங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில்உள்ளது.

ஹைட்ரோகார்பன் மீத்தேன் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். பெயரே சொல்வது போல ஹைட்ரஜனும் கார்பனும் சேர்வது ஹைட்ரோ கார்பன். அது ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுவும் சேர்ந்த மீத்தேனாகவும் (CH4) இருக்கலாம் அல்லது ஈத்தேனாகவோ புரேப்பேனாகவோ கூட இருக்கலாம். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெயரும் பயன்பாடும் மாறுகிறது.


ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது.

ஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி.வழங்கப்பட்ட
தொடங்கப்படலாம்.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பனைத் தோண்டியெடுக்க அனுமதியைப் பெற்றிருக்கும் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனமானது கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த ஜி.மல்லிகார்ஜூனப்பா
வுடையது. கர்நாடகாவில் பெரிய தொழிலதிபர்.ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்து பிறகு பாஜகவின் சார்பில் மக்களவை உறுப்பினர் ஆனார். மல்லிகார்ஜுனப்பாவின் மகன் ஜி.எம்.சித்தேஸ்வரா 2016 ஆம் ஆண்டு வரைக்கும் மோடியின் மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்துறை இணையமைச்சராக இருந்தார். இவரது சகோதரர்கள்தான் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல.கணேசன் நெடுவாசல்காரர்களைப் பார்த்து ‘தியாகம் செய்’ என்று சொல்வதை இதனோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்.
#ஹைட்ரோகார்பன்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...