Thursday, February 16, 2017

சட்டதின் ஆட்சி;ஜனநாயகத்தின் மாட்சியும்

இன்று ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில்  ஆளுனர் முன்பாக தண்டனைப் பெற்ற குற்றவாளிகளின் பெயரை சொல்லி வாழ்க என கோஷமிட்டது நீதிதேவதையின் கண்களை கட்டிவிட்டு  கேலி செய்த செயல்.கோஷம் போடுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா..?

ஒருவர் எத்தகைய பதவி வகித்திருந்தாலும்  அல்லது பதவி வகித்தாலும்  நீதிமன்ற தண்டனைக்குட்பட்ட குற்றாவாளிக தீர்ப்பு வழங்கப்பட்ட பின் அவருக்கு அரசு சார்பில் நினைவகம் அமைக்கவோ,  உருவச்சிலை வைப்பதோ, படங்களை பயன்படுத்துவதோ கூடாது என்பது மரபு .  

அமைச்சரவையில் உள்ளவர்கள் குற்றவாளிகளை சிறையில் சென்று சந்திக்க கூடாது என்பதும்  மரபு.
கடந்த காலத்தில் தனது இரத்த உறவான பாரபட்டி சுரேஷை , முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் சிறைச்சாலையில் சந்தித்த போது அதனை கண்டித்து அறிக்கை அளித்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. 

குற்றவாளிகளுக்கு சலுகையோ, எந்தவித முக்கித்துவமோ தரக்கூடாது. சட்டத்தின் முன் யாவரும் சமம்.. இதுவே சட்டதின் ஆட்சி;ஜனநாயகத்தின் மாட்சியும் ஆகும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...