திருதராஷ்டர் ஆலிங்கணம்:
--------------------------
சற்று முன்பு,திரு. நல்லகண்ணுடன் தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை - மரணங்கள், மணல் கொள்ளை குறித்து கருத்தரங்கம் நடத்துவதும்; எனது அழகர் அணை திட்ட நூல் வெளியிட்டு விழா குறித்து பேசிக் கொண்டிருந்த போது, பேச்சு வாக்கில் திருதராஷ்டர் ஆலிங்கணம் என்று குறிப்பிட்டேன். உடனே நல்லகண்ணு அது என்ன திருதராஷ்டர் ஆலிங்கணம் என்று கேட்டார்.
அனைத்தலின் மூலம்
தங்களுடைய அன்பையும், காதலையும், ஆறுதலையும் வெளிப்படுத்துவார்கள். ஆனால்,திருதராஷ்டர் ஆலிங்கணம் என்றால், உதட்டளவில் பாராட்டி அனைத்து நன்றி மறந்து அழிப்பது தான் திருதராஷ்டர் ஆலிங்கணம்.
பாரதத்தில் இதுதான் நடந்தது.
பொது வாழ்வில்தகுதியானவர்களையும், தரமானவர்களையும், ஆளுமைகளின் உழைப்பை உறிஞ்சி, பாராட்டி அனைத்து நன்றி அற்ற முறையில் சம்மந்தப்பட்டவரை அழிப்பதுதான் திருதராஷ்டர் ஆலிங்கணம் என சொல்வது வாடிக்கை என்றேன்.
ஆளுமைகளை அழிப்பது மட்டுமல்லாமல், சம்மந்தப்பட்டவர்களின் உதவியாளர்களையும் உயர்த்திக் காட்டி ரனப்படுத்துவதும் சில கட்டங்களில் உண்டு. இதை இராஜாஜி கூறுவார் என்று நாடாளுமன்ற மக்களை முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ். மாரிசாமி என்னிடம் அடிக்கடி கூறுவது உண்டு.
#திருதராஷ்டர்ஆலிங்கணம்
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
21.02.2017
No comments:
Post a Comment