Wednesday, February 1, 2017

திருக்குறள் மீள்பதிப்பு

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அரிய பணி;
திருக்குறள் மீள்பதிப்பு
-----------------------------------
செவ்வியல் இலக்கியங்களில் முதலில் அச்சேறியது திருக்குறளே. 1812இல் வெளிவந்த இப்பதிப்பு, புள்ளியில்லா மெய்யெழுத்துகளுடன் அச்சிடப்பட்டது. திருக்குறள் முதற்பதிப்பு நூல், உலகலவில் இன்று  ஐந்து பிரதிகளுக்குக் குறைவாகவே உள்ளன. அரிதான இந்நூலை மீள்பதிப்பு செய்வதன் மூலம் இந்நூல் அனைவரிடத்திலும் சென்றடையும். வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடக குழுமத்தால் 27 நவம்பர் 2016 ஆன்று நடத்தப்படும் நாட்டுக்குறள் இசை அரங்கேற்றம், பாடல் ஓவிய நூல் வெளியீட்டு விழாவில் இந்த மீள்பதிப்பை வெளியிடுவது மிக பொருத்தமாக  இருக்கும்.திருக்குறள் நூலின் முதல் பதிப்புப் பிரதியை எண்ணிமப்படுத்தி எந்த திருத்தமும் செய்யாமல் அப்படியே பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

இம்மீள்பதிப்பு சேகரிப்பாளர் பிரதியாக (collectors’ edition) அச்சிடப்பட்டுள்ளது.
#ரோஜாமுத்தையாஆராய்ச்சிநூலகம் 
#திருக்குறள்
#KSRadhakirushnanpost #Ksrposting 

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31/1/2017




No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…