அழகர் அணைத்திட்டம் பற்றிய நூல்:
-----------------------------------
விருதுநகர் மாவட்டம் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் , ராஜபாளையம், சிவகாசி , சாத்தூர் , வட்டாரங்களுக்கு பாசனதிற்க்கும் குடிநீருக்கும் பயன்படும் அழகர் அணைத்திட்டம் 1960லிருந்து திட்டமிட்டு நிலுவையிலேஉள்ளது .
அத்தோடு திட்டக்குறிப்பில் இருந்த ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலை 1969 லில் அமைத்து,தற்போது செயல்பாட்டில் உள்ளது. அழகர் அணை திட்டம் 57 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது . அழகர் அணை குறித்தான என்னுடைய நூல்,கலைஞன் பதிப்பகம் உரிமையாளர் நந்தா 110 பக்கம் கொண்ட நூலாக வெளியிட்டுள்ளார் . இந்த நூலில் அழகர்அணை திட்டம் குறித்து முழுமையான விவரங்களும் , இந்த அணையிலிலிருந்து வெளியேறும் நீர் எந்தெந்த கிராம குளங்களை வந்து சேரும் என்ற குறிப்புகளோடு வெளியிடபட்டுள்ளன . விருதுநகர் மாவட்ட நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் , சாத்தூரிலாவது வைத்து அவசியம் இந்த நூலை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர் . ஆனால் நான் இதைகுறித்து யோசித்துக்கொண்டு இருக்கிறேன் .
#அழகர்அணைத்திட்டம்
#KSRadhakirushnanpost #Ksrposting
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1/2/2017
No comments:
Post a Comment