ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் பழைய நினைவுகள்
-------------------------------------
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கெனும் தொடர்கதை முடிவுக்கு வந்ததை எண்ணி மகிழ்கின்றேன். காரணம் இந்த வழக்கின் போக்கினை மாற்றி பணியில் நானும் அணிலாக பணி புரிந்து இருக்கின்றேன். இதனை நான் இன்று தீர்ப்புக் கிடைத்து விட்ட பெருமையில் பங்கு பெறுவதற்காக எழுதவில்லை. ஏற்கனவே பலமுறை வலைதளத்தில் பதிவு செய்துள்ளேன். மேலும் இதுகுறித்த அண்ணன் முரசொலிமாறன் அவர்கள் என்னைப் பாராட்டிய செய்தி தினமலரில் வெளிவந்ததையும், வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய மனுவின் தீர்ப்பு நகலையும் இங்கு இணைத்துள்ளேன்.
28/2/2003 ஆம் ஆண்டு பேராசிரியர் அவர்களின் மனுவை தாக்கல் செய்ய அதில் வக்காலத்து attest செய்யும் விதமாக நானும் கையொப்பம் இட்டு இருக்கின்றேன்.
உச்ச நீதி மன்ற ஆவணத்தில்
இதை பாரத்தால் தெரியும்.
.....................
இறுதியாக கடந்த 29/12/2016அன்று எனது பதிவு :
கடந்த 2002 இல்,மத்திய அமைச்சராக இருந்த அண்ணன் திரு.முரசொலி மாறன் அவர்கள் , டெல்லி சம்பத்தையும் என்னையும் உடனே டெல்லிக்கு வரச்சொன்னார்.
இருவரும் அவரை சந்திக்க டெல்லி சென்றோம். அங்கு அண்ணன் மாறன் அவர்கள் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் நடப்பதால் நியாயமான தீர்ப்பு வராது, ஆதலால் வேறுமாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மோகனிடம் இதுக்குறித்து பேசி உள்ளேன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட வேண்டிய மனுவை தயாரிக்க வேண்டிய விவரங்களை கொடுத்து அதற்கான மனுவை தயாரியுங்கள் என்று எங்களிடம் கூறினார்.
இன்று அண்ணன் முரசொலி மாறனும் இல்லை. டெல்லி சம்பத்தும் இல்லை. அன்றைக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த திரு.ஆ.ராசா அவர்கள் அனுப்பிய கார் தான் நாங்கள் பயன்படுத்தினோம் . அவருக்கு செயலாளராக அகிலன் இராமாநாதன் அவர்கள் தான் எங்களுக்கு வேண்டிய உதவிகளை அப்போது செய்தார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்ற வேண்டிய அடிப்படை பணிகளை டெல்லி சம்பத்தும் நானும் செய்தோம் என்பதற்கு சாட்சி ஆ.ராசா வின் நேர்முக உதவியாளர் திரு.அகிலன் இராமநாதன்க்கும் ஆ.ராசா க்கும் தெரியும். இன்றைக்கு பிஜேபி உள்ள
ஆசிர்வாதம் அப்போது இருந்தார்.இதுக்குறித்து கழக பொதுக்குழுவில் என்னை பாராட்டி அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் பேசியது விரிவான செய்தியாக தினமலரில் வந்தது .14 ஆண்டுகள் கடந்துவிட்டது காலசக்கரங்கள் வேகமாக ஓடிக்கொண்டு இருகின்றது .
#ஜெயலலிதாசொத்துகுவிப்புவழக்கு
#முரசொலிமாறன்
#KSRPost
#KSRadhakirushnanpost
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment