இன்று பறிபோகும் உரிமை பிரச்சினைகளை பார்க்காமல் சசிகலா-பன்னீர் என்று கவனிக்கும் தமிழகம்
-------------------------------------
வீர பூமியான தமிழகத்தில் தான் சுதந்திரப் போரின் முதல் குரல் கேட்டது. அப்படிப்பட்ட உயிரோட்டமான மண்ணில் இப்போது ஜனநாயகம் கேள்வி குறி ஆகி விட்ட்து இதற்கு யார் காரணம்...
கடந்து 4 நாட்களாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ள தமிழக முக்கிய
பிரச்சினைகள்;அவை எதுவும் செய்திகளாகயும் வரவில்லை. அதை குறித்துயாரும்அக்கறைப்படவும்மில்லை. அவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.
1. வரலாறு காணாத வறட்சி. தற்கொலையாலும் மனவேதனையாலும் 200 விவசாயிகளுக்கு மேல் மரணம்.
2. பாம்பாற்றின் துணை நதியான செங்கலாற்றில் கேரளா தடுப்பணை கட்டுகிறது. இதனால் அமராவதி பாசன விவசாயிகள்பெரும்பாதிப்புக்குள்ளாவார்கள்.
3. பவானி ஆற்றில் மேலும் ஆறு தடுப்பணைகள் கட்டவும் கேரள அரசு முயன்று வருகிறது.
4. ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கையில் இறங்கி விட்டது.
5. ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கண்டலேறு அணையில் இருந்து வர வேண்டிய கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்து; ராப்பூர், வெங்கடகிரி, காளகஸ்தி போன்ற ஆந்திர பகுதிகள் தான் பயன் பெறுகின்றன.
6. தமிழகத்திற்கு மின்சார விநியோகத்திற்காக பவர் கீரிட் மூலமாக மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் ரய்ச்சூர் வரை அமைக்கப்பட்ட மின் கடத்தி கம்பங்கள் கேரள எல்லையில் நிறுவ முடியாமல் கேரளா தடுக்கின்றது. கடந்த 05.02.2017 கேரள அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
7. பன்னாட்டு அளவில் டீகோ கார்சியா தீவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா இராணுவ தளத்தை அமைப்பதற்கு அந்த தீவில் வசித்த 2000க்கும் மேற்பட்ட மோரீஸ் நாட்டினரை வெளியேற்றியது. இது இந்து மகா சமுத்திரத்தில் அமெடிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மோரீஸ் குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது பிரிட்டன் 2036 வரை அமெரிக்காவுடன் குத்தகையை புதுப்பித்துள்ளது. இது நேரடியாக இந்தியாவின் தென் எல்லையிலுள்ள தீவாகும். ஏற்கனவே இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974 கால கட்டங்களில் இந்த தீவில் அமெரிக்கா தளம் அமைத்தால் இந்தியாவுக்கு நேரடியாக ஆபத்திருக்குமென்று போராடி அமெரிக்க இராணுவ தளம் அப்போது அப்புறப்படுத்தப்பட்டது. இப்படியான சிக்கலில் ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகை வரை உள்ள கடற்கரைப்பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும்.
எண்ணூரில் கடலில் கலந்த கச்சா எண்ணெய் பிரச்சனையை மறந்து விட்டார்கள்.
இப்படியானமுக்கியபிரச்சினைகள்.
கடந்த ஒரு வாரமாக நடக்கின்றது. தமிழகம் நேரடியாக பாதிக்கப்படும்.இது போன்ற பிரச்சினைகள் குறித்து யாருக்கும் அக்கறையில்லை. சசிகலா பன்னீர் என்று ஊடகங்களும், மக்களும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சசிகலாவும் பன்னீருமே நாட்டை பிடுங்கி இரட்சிக்கட்டும்.
தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையை பேசாமல் பதவி சுகத்தை நாடுபவர்களைப் பற்றி கவனித்தால் நாடு சீரழிந்து தான் போகும். இப்படியான நிலையில்தான் நியாயமாக நினைப்பவர் கூடநக்சலைட்டாகவும்மாவோயிஸ்டுகளாகவும் மாறிவிடுகின்றனர்.
”போங்கடா போக்கத்த பசங்களா” என்ற வரிதான் நினைவுக்கு வருகின்றது.
#தமிழக_அரசியல்
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
10.02.2017
No comments:
Post a Comment