முரண்பாடுகளின்முகாம்கள்;அதிமுகவின் இரு கூடாரங்கள்
-------------------------------------
ஜெயலலிதாவை தலைவியாக ஏற்ற பன்னீர்செல்வமும், தீபாவும் ஜெயலலிதா ஏதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு கொளுத்தியும், பட்டாடைகள் போர்த்தியும் கொண்டாடி மகிழ்கின்றனர். இவர்களை தமிழகம் எவ்வாறு புரிந்துக் கொள்ளும்?
ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தீபாவை, அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கே பன்னீர்செல்வம் வரவழைத்து ஆரத்தி எடுத்து வரவேற்றதை அவர்கள் நம்பும் ஆன்மா பார்த்து புன்னகைக்குமா?
ஜெயலலிதா ஒதுக்க நினைத்து ஓரம்கட்டப்பட்ட தினகரனும், வெங்கடேசும் ஜெயலலிதாவின் மறு அவதாரம் சசிகலா கட்சியில் இணைத்து , அடுத்த சில நிமிடங்களிலேயே உறவுகளுக்கு உயர் பதவி அளித்ததை அவர்கள் நம்பும் அவரின் அக்காவின் ஆன்மா பொறுத்துக் கொள்ளாது என புரியாதா?
ஜெயலலிதாவின் முன் பராரியாக காட்சியளித்த சசிகலா இன்று பவுடர் பங்கஜமானதை அவர்கள் நம்பும்ஆன்மா ஜெயலலிதாவின் அப்ரூவ் அளித்ததா?
ஜெயலலிதா இருந்தவரை அவருடைய படத்தை சட்டைப்பையில் வைத்திருந்தவர்கள் , அவருடைய மறைவுக்கு பின்னர் சசிகலாவின் படத்தை அதே பாக்கெட்டில் வைத்து சசிகலாவிடம் காட்டி மகிழ்ந்ததும் அந்த ஆன்மாவின் ஆசி தானா?
போயஸ் கார்டனில் இருந்து " போடாப் போ" என விரட்டப்பட்ட நத்தம் விஸ்வநாதன் போன்றோர்கள் பன்னீர்செல்வத்துடன் இணந்து தைரியமாக முழக்கமிடுவது ஜெயலலிதா இருந்தால் சாத்தியமா? சத்தியமாக சொல் இவர்கள் மனிதர் தானா?
அம்மாவின் மறு உருவம் சசிகலாவை சின்னம்மாவை பொ.செயலாளர் பதவிக்கும், முதலமைச்சர் பதவிக்கும் முன்மொழிந்து விட்டு பின்னர் அவரது புதைகுழியை வள்ளலார் நினைவிடமாக கருதி தியானம் இருந்து அருள்வாக்கு பெற்றது போல் அணி அமைப்பதை அவர்கள் நம்பும் ஆன்மா பொறுத்துக் கொள்ளுமா?
இன்று நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பன்னீர்செல்வம் அன்று ஜெயலலிதா சிறை சென்ற போது பெரியகுளம் பன்னீர்செல்வம் தன் கண்களை குளமாக்கி வந்த வஞ்சக காட்சியென்ன? முதலமைச்சர் இருக்கையில் அமரமால், ஜெயலலிதா அலுவலகத்தை பயன்படுத்தாமல் காட்டிய விசுவாசமென்ன? கட்டிய வேசமென்ன? அடடே! அமைதிப்படை அமாவாசை படத்தில் பார்த்திருக்கின்றேன். அரசியலில் அமாவாசையை காண்கின்றேன்.
தேவைக்கேற்பப் வேஷம் கட்டும் கூத்தாடிகள் எங்கிருந்து வந்தார்கள்? தாயைப் போல தானே பிள்ளைகள் இருக்கும். அம்மாவின் பிள்ளைகளும் அவரைப் போல நடிகர்கள் தான். கற்பித்தவர் ஜெயலலிதா, கற்றவர்கள் இவர்கள்.
Jayalalithaa's legacy will remain tarnished, as she goes down in history as a corrupt Chief Minister.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு , எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆள்வதற்கு தகுதியற்றவர் என கடிதம் எழுதியவர் தானே இந்த ஜெயலலிதா?
எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாள் தன் கனவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார் என அவர் கையால் உண்ட சோற்றுக்கு நன்றியின்றி குற்றம் சுமத்தியவர் தானே ஜெயலலிதா?
அன்றைய ஆளுனரை சென்னா ரெட்டி கையை பிடித்து இழுத்தார் என அருவருப்பான குற்றச்சாட்டை பொய்யாக வைத்தவர் தானே ஜெயலலிதா?
அவர் மறைந்து விட்டார் என்பதற்க்காக
அவர் செய்த வரலாற்று பிழைகளை மறைத்து அவரை அளவுக்கு அதிகமாக புகழ்வதை நிறுத்தி கொள்ளுங்கள் !
ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு பெண் இந்த அளவிற்கு வந்தது , சாதித்தது!
ஆண்கள் அவரிடம் அடிமை போல் குனிந்தது!
பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் விலை ஏற்றியது முதல்
தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்தது வரை !
அதை மூட வேண்டும் என்று போராடிய பெண்களை அடித்தது வரை !
சந்திரலேகா ஆசிட் வீச்சு வரை !
மூன்று விவசாய கல்லூரி மாணவிகள் சொந்த கட்சிக்காரர் களால் பஸ்ஸில் வைத்து எரித்தது வரை !
அவர் எதற்கும் கவலை பட்டதும் இல்லை
அவருடைய நிர்வாகத்திறமைக்கு எடுத்து காட்டாக
தமிழகம் இன்று தொழில் துறையில் கடை கொடியில் இருப்பதுவே சாட்சி !
2015 டிசம்பர் ஏற்பட்ட வெள்ளமும், அதற்கு ஒட்டிய ஸ்டிக்கருமே சாட்சி !
ஒரே நாளில் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் வேலையை விட்டு தூக்கியதும்! மோனோ ரயில், மெட்ரோ ரயில் என்று மாறி மாறி உளறியதும் !
ஒரே வருடத்தில் 20 முறை அமைச்சரவையை மாற்றியதும் !
தொழில் தொடங்க இன்று எந்த முதலாளியும் தமிழக நோக்கி வரமுடியாத அளவு commisson, corruption என்று இருப்பதும் !
இன்னும் பல,
Chief election commissioner சேஷன் முதல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்
வக்கீல்கள் விஜயன்-சண்முகசுந்தரம்,
தராசு ஷியாம்,நக்கீரன் கோபால் என்று AIDMK வால் தாக்ககாத ஆட்களே இல்லை என்னும் அளவிற்கு சாதனை.
இட ஒதுக்கீடு, காவேரி, இலங்கை பிரபாகரன் தொடங்கி......
யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற அறிய தத்துவம் சொன்னது !
முரண்பாடுகளின் மொத்த உருவம் ! தான் இந்த so called இரும்பு மனுஷி !
வாழ்ந்தார். மறைந்தார் ...... அவ்வளவுதான்.
இவரின் பக்த கோடிகள் எப்படி இருப்பார்கள்?;
தான் கற்றதை யாரிடம் காட்டி மகிழ்வார்கள்.
தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை
நாயைப் போல குட்டிகள்.
No comments:
Post a Comment