Saturday, July 31, 2021

#தமிழக_மேலவை_குறிப்பு-1; 2000ல் எனது வழக்கும்

#தமிழக_மேலவை_குறிப்பு:
2000ல் எனது வழக்கும்
——————————————————-
மேலவை குறித்தான விவாதங்கள் நடக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் 1989-லிருந்து மூன்று முறை தமிழகத்தில் மேலவை அமையவேண்டும் என்று, மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் நாடாளுமன்ற இரு அவையில் ஒப்புதல் பெறாமலேயே அந்த மூன்று தீர்மானங்களையும் அ.தி.மு.க அரசு, ஆட்சிக்கு வந்த பின் மூன்று முறையும் திரும்ப பெற்றன. இது ஒரு வேதனையான விடயம்.



1996-ல் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் கலைஞர் அவர்கள் இரண்டாவது முறையாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலுக்கு அனுப்பினார். இந்த காலக்கட்டத்தில் என்னை அழைத்து மேலவை அமையவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்ய என்னை கேட்டுக் கொண்டார். (அன்று மதிமுக செய்திதொடர்பாளர். திமுகவில்
இல்லை. தோழமை கட்சி) பல பொதுநல
வழக்குகள தாக்கல் செய்ய நீ மேலவை
குறித்த தமிழக சட்ட மன்ற தீர்மானம்
நடைமுறைக்கு வர வழக்கை தாக்கல்
செய் என கோபாலபுரம் இல்லத்திற்க்கு
அழைத்து கலைஞர் கூறினார்.

முதல்வர் கலைஞர் அறிவுறுத்தலின் பேரில் 06.03.2000-ல் தமிழகத்தில் மேலவை அமைய வேண்டும் என்று வழக்கும் தொடுத்தேன். அந்த வழக்கு எண்: WP No: 4399 of 2000. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும் சட்ட மேலவை அமையவேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தவும் செய்தது.
இந்த வழக்கில் எனக்காக ஆஜரான என் நண்பர்கள், வழக்கறிஞர்கள் என்.பால்வசந்தகுமார், டி.எஸ்.சிவஞானம் இருவரும் பத்தாண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்.பால்.வசந்தகுமார் காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகி ஓய்வும் பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை
எடுத்துக்கொண்டு டில்லி சென்று இந்திய உள்த்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, சட்ட அமைச்சர் ஜெட்லேயை அன்றைய மத்திய ராஜங்க
அமைச்சர் செஞ்சி இராமசந்திரனுடன்
(மதிமுக) சந்தித்தோம் பின் நாடாளுமன்றஇரு அவைகள் இதை விவாத்து ஒப்புதல் பெற பணிகள் நடந்தன. அன்று திமுக,மதிமுகபாஜக ஆட்சியில் இடம் பெற்றன. கடந்த 2001 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் 
விவாதிக்க வேண்டிய நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்ட மன்ற
தேர்தல் அறிவிப்பு என ஆகிவிட்டது.
உழைப்பு எல்லாம் வீன் ஆகிவிட்டது. என்ன செய்ய….

ஆனால் இன்று வரை 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழகத்தில் மேலவை அமைய முடியாமல் ஆகிவிட்டது. மேற்கு வங்கத்தில் மேலவை அமைய, மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை குறித்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்தித்து மேலவை அங்கு அமையவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் மேலவை உறுப்பினர்கள் 78 பேர். உள்ளாட்சி அமைப்பில் இருந்து பிரதிநிதியாக இந்த அவைக்கு மூன்றில் ஒரு பங்கும், பட்டதாரி தொகுதியில் இருந்து 12 பேரும், ஆசிரியர் தொகுதியில் இருந்து 12 பேரும் மாநில ஆளுநர் நியமனத்தின் படி 6 பேரும் மீதியுள்ள இடங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

கடந்த 1989 கலைஞர் ஆட்சியில் மேலவை அமைய தீர்மானம் சட்டமன்றத்தில் 20.02.1989-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 169 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 

இரண்டாவது முறையாக 1999-ல் கலைஞர் ஆட்சியில் திரும்பவும் 199 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சட்ட மேலவை அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. 

இறுதியாக, மறுபடியும் கலைஞர் முதல்வராக இருந்த போது 12.04.2010, அன்று 155 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மூன்றாவது முறையாகவும் சட்ட மேலவை அமைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மூன்று முறையும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக திரும்ப பெற்றார். அதில் காழ்புணர்ச்சியும் இருந்தது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் கலைஞர் 1989-ல் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் மேல்சபையை அமைத்தார். அதே ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசு ஒப்புதலுக்கு சென்றது. ஆனாலும் ராஜ்யசபாவில் நிறைவேறிய தீர்மானம் லோக்சபாவில் நிறைவேறவில்லை. 1991-ல் தி.மு.க அரசு கலைக்கப்பட்டதால் முயற்சி வெற்றி பெறவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மேல்சபைக்கான தீர்மானத்தை ரத்து செய்தார். மறுபடியும் 1996-ல் தி.மு.க வெற்றி பெற்றப்பின் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டும் அது தோல்வியில் முடிவடைந்தது.
இதன் பின் 2006-ல் கலைஞர் ஆட்சி அமைந்ததும் 2010-ல் மீண்டும் மேல்சபைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அந்த தீர்மானம் சட்டமாக பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதற்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆதரவே காரணம்.

இந்த காலகட்டத்தில் ஒரு நாள் மாலை பொழுதில் தலைவர் கலைஞர் என்னை அழைத்து மேலவை அமையபோகின்றது. மேலவை உறுப்பினராக நீ போட்டி போடவேண்டும். பட்டதாரி தொகுதியில் போட்டி போட உனக்கு சரியாக இருக்குமா அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் உன்னை தேர்ந்தெடுப்பது தான் சரியா என்று நீயே யோசித்து சொல் என்றார். நான் சரி என்று சொல்லிவிட்டு கோபாலபுரத்தில் உள்ள தலைவர் கலைஞர் அவர்களின் வீட்டின் கீழ் வந்து அமர்ந்தேன்.
அதே நாள்  சகோதரி  ராமநாதபுரம் பவானி ராஜேந்திரனை அழைத்து இந்த தேர்தலில் போட்டி இட வேண்டும் என்று கேட்டு கொண்டதையும் நான் அறிவேன். மேலவை உறுப்பினராக்கவேண்டிய பட்டியலில் முன்னால் அமைச்சர் பொன்.முத்துராமன் மற்றும் நாகநாதன்  பெயரும் இருந்தது என் நினைவு. ஆனால் கலைஞரின் விருப்பத்தின் படி அது நிறைவேரவில்லை என்பது வருத்தமான செய்தி ஆகும்.
2010-ல் மேலவை தேர்தலுக்கான பணிகளும் ஆரம்பம் ஆகிவிட்டது. ஆனால் தி.மு.க வின் ஆட்சிகாலம் 2011-ல் முடிந்து. ஜனநாயகத்திற்க்கு விரோதமான காரியங்கள் செயக்கூடிய ஜெயலலிதா ஆட்சி வந்தபின் என்ன செய்ய முடியும். அதோடு மேலவை நம்பிக்கையான பேச்சு கூட மறைந்து விட்டது.

அப்போது மேல்சபை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கினாலும் 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசால் அந்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
தற்போது நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா உத்திர பிரதேச மாநிலங்களில் மட்டுமே மேல் அவைகள் உள்ளன.

தமிழக மேலவை குறித்து அன்றைய
முதல்வர் கலைஞர் அணிந்துரையுடன்
2010 இல் நான் எழுதிய நூல் வெளியானது. இதன் மறுபதிப்பு அடையாளம் திரு சாதிக் விரைவில் வெளியிடயுள்ளர்.

மேலவை குறித்து தினமணியில் கடந்த 20.09.2012-ல் வெளிவந்த எனது கட்டுரை வருமாறு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
29-7-2021.

https://www.dinamani.com/editorial-articles/2010/apr/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-170251.html

Friday, July 30, 2021

சிறுகதையில் - எத்தனை உத்திகள், மண்ணின் மணங்கள்

1."தி.ஜானகிராமன் தஞ்சாவூர்த் தமிழ், லா.ச. ராமாமிருதம் அகவய (Introvert) உலகு காட்டும் மொழி, திருநெல்வேலி
அழகு சொல்லும் கு.அழகிரிசாமி, தாவரங்களின் மொழி பேசும் 'பாரவி', கன்னியாகுமரித் தமிழை விட்டுவிட்ட
சுந்தர ராமசாமி, சேரித்தமிழ் கொஞ்சும் ஜெயகாந்தன், புதுவைத்தமிழ் பாரதிதாசன், பிரஞ்சுத்தமிழ் சொல்லும் ஆனந்தரங்கம் பிள்ளை என்று மொழியில், கலையில், சிறுகதையில் - எத்தனை உத்திகள், மண்ணின்
 மணங்கள்?"

2."நான்றாந்தர மலினமான நாவல்கள் எம்விவி பெயரில் வெளியாயின. இத்தொடர்பில் அவருடனான. 'கண்ணதாசன்' இதழ் செவ்வியில் தஞ்சைப்ரகாஷ், "நீங்கள் எப்படி இந்த இலக்கிய மாரீசத்திற்கு



உடன்பட்டீர்கள்?" எனக்கேட்டார். அதற்கவர் இப்படிப் பதிலறைந்தார்:

"தமிழ் வாசகனைப் பழிவாங்கியதில் ஒரு குரூரதிருப்தி!"

3."மௌனி எழுதிய கதைகள் ஒரு இருண்ட உலகைச்
சார்ந்தவை. குபரா கதைகள் பெண்களின் அந்தரங்கங்களையே பேசுபவை. பிச்சமூர்த்தி கதைகள் அகஉலகை எதார்த்த உலகாக்குபவை.
சி.சு.செல்லப்பாவின் கதைகள் சூழ்நிலைச் சித்திரிப்பில் நிஜத்தை நிறுவுகின்றவை.இப்படி ஒரு சிறுகதை
ஆசிரியன் அவனுக்கென்று தனிஉலகத்தைத் தனது கதைகளில் ஒரு சார்பான வெளியீட்டு உலகத்தை
வாசகனுக்கு இலக்கியமாகத் தருகிறான்.

ஆனால் புதுமைப்பித்தன் என்ற மணிக்கொடிக் கலைஞன் இப்படி ஒரு சார்பான. ஓர் உலகை- அல்லாது பல
உலகங்களையே படைத்திருக்கிறார்."

 "சரித்திரம்,புராணம், இதிகாசம், விஞ்ஞானம், கர்ணபரம்பரைப் பழங்கதை,  வழிவழிச்செய்தி, அதீதக்
கற்பனை, கனவு என்ற விதமாய் எண்ணிலடங்காத சப்ஜக்ட்டுகளில், புதுமைப்பித்தன் வாரியிறைத்ததைப்
போலவே எம்.வி.வெங்கட்ராம் அவர்களும் பல்வேறு உலகங்களைச் செதுக்கித் தள்ளியிருக்கிறார்."-

- #தஞ்சைப்ரகாஷ்
கிராவின் கரிசக்காட்டு மொழியும் பேசும், நாட்டு புற தமிழ்……முக்கியமானது.

#ksrpost
30-7-2021.

#தமிழகத்தில்_சிறுதுறைமுகங்கள்

#தமிழகத்தில்_சிறுதுறைமுகங்கள்
——————————————————-
குளச்சல், கன்னியாகுமரி, கூடங்குளம், மணப்பாடு, புன்னைக்காயல், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், ராமேஸ்வரம், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி பல துறைமுகங்களாகும்.

இந்த சிறு துறைமுகங்களை மீன்பிடி துறைமுகங்களாகவும், பெரிய துறைமுகங்களாகவும் மாற்ற வேண்டும் என்ற திட்டம் 1999-லிருந்து நடைமுறைக்கு வர கொள்கை திட்டங்களை மத்திய அரசு வகுத்தது.

இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் தற்போது உள்ளன. அவை, தூத்துக்குடி, சென்னை,  எண்ணூர், விசாகப்பட்டினம், பாரா தீப், கொல்கத்தா, கொச்சி, மங்களுர், மார்மகோன், மும்பை, கண்டிலா ஆகும். தீபகற்ப இந்தியாவில் தான் இந்த துறைமுகங்கள் அமைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது.




எண்ணூர் துறைமுகம் பெரும் துறைமுகங்கள் என்ற நிலையில் Major Port Trusts Act என்ற சட்டத்தில் 1963-ன் படி நிர்வாகிக்கப்படுகிறது.

தீபகற்ப இந்தியாவில் 200 துறைமுகங்கள்அடையாளப்படுத்தப்பட்டாலும் 66 துறைமுகங்கள் தான் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், இன்றைக்கு உள்ளன. சிறு துறைமுகங்கள் வளர்ச்சி பெறவும், மீனவர்களுக்காக மீன்பிடி துறைமுகங்களைச் சீர்திருத்தவும் திட்டங்கள் நிலுவையில் இருந்தாலும் அதை விரைவுபடுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
29-7-2021.

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை.
இந்த நில புலன்கள் மத்தியில் கிராம
வாழ்க்கை நிம்மதி… நல்ல புத்தக வாசிப்பு, பழைய பாடல்கள், கிராம சமையல், இயற்கை காற்று, நல்ல சுவை நீர்….

#ksrpost
29-7-2021.


வருகிறார்கள்; நம்மிடம் எல்லாம் அறிகிறார்கள்; சொல்லாமல் கூட புறப்படுகிறார்கள்……

வருகிறார்கள்;
நம்மிடம் எல்லாம் அறிகிறார்கள்;
சொல்லாமல் கூட புறப்படுகிறார்கள்……


தூத்துக்குடியில் 42 ஆண்டுகளுக்கு முன்

தூத்துக்குடியில் 42 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் மாலை 1979 ஜீலை மாதம் 29 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை 
தூத்துக்குடி சாமுவேல்புரம்' அருகே லூர்தம்மாள் புரம்...
லெட்சுமி டூரிங் டாக்கீஸ்...

சிவாஜிகணேசன் நடித்த  
பாவமன்னிப்பு திரைப்படம் 
மாட்னி ஷோ மாலை 4.30 மணிக்குஓடிக்கொண்டிருக்கிறது.‌ ஞாயிற்றுக்  கிழமையானதால் தியேட்டரில் பெரும கூட்டம்



இடைவேளைக்கு பின் தியேட்டரில் 
தீடிரென தீபற்றி தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியிருக்கிறது.... .




பகல் காட்சி என்பதால்தார்ப்பாய் அடைத்து கம்பி சுற்றியிருக்கிறார்கள்.
தீபரவி எரியத் ஆண்கள்பெண்கள் ஓடினர்.
115 பேர் இறந்ததாக தகவல். பலர் கருகி, இன்னும் இருகின்றனர்

மறுநாள்  அன்றையமுதல்வர் எம்.ஜி.ஆர் தூத்துக்குடி வந்து தியேட்டரையும் பார்வையிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்...
கவர்னர் பட்வாரி,அன்றைய பிரதமர் சரண்சிங் அவர்கள் வருத்தங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்...

42 ஆண்டுகள் கடந்து விட்டது.
அதன் திரைஅரங்கங்கள் பாதுகாப்பை சீர் படத்த சில கட்டுப்பாடுகளை அன்றைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்
அறிவித்தார்.

#ksrpost
29-7-2021.

வாய்க்காலையும்_வயற்காற்றையும்_படைத்தாள்_எனக்கென_கிராம_தேவதை!

#வாய்க்காலையும்_வயற்காற்றையும்_படைத்தாள்_எனக்கென_கிராம_தேவதை!
தெம்மாங்கையும் தெருகூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழும் நாள்வரை!
குழந்தைகள் கூட குமரியும் ஆடமன்த மாருதம் வீசுது மலையமிருதம் பாடுது!






#ksrpost
30-7-2021.


#காலங்களுக்கு_ஏற்றவாறு_நியாங்கள்

#காலங்களுக்கு_ஏற்றவாறு_நியாங்கள்
———————————————————
இங்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவரவர் போக்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். வெறுப்பதற்கு அதிகமான விஷயம் எதுவும் வேண்டியதில்லை. எதாவது ஒரு சிறு காரணம் போதும். அவர்கள் நம்மிடமிருந்து பெற்ற பெரிய உதவிகள், அன்றைய அவர்களின் தேவைக்கு நமது கையை பிடித்து கெஞ்சி நம்மை இந்திரன் சந்திரன் என பேசியது…
அவர்களின் தேவை முடிந்த பின் நம்மை
பார்த்தும் காணாமல் மாதிரி செல்வது…
நன்றியா? அதன் அர்த்தம் என்ன?….இது இயல்பு இன்று ஆகி விட்டது.தங்களின் வசதிக்கு ஏற்றவாறு 



நியாங்களை  வைத்துக்கொண்டு பிடிவாதமாக காலங்களுக்கு ஏற்ற வாறு மாற்றி மாற்றி பேசுவது….
மௌனங்களில் 
தொங்கிக் கொண்டிருக்கிறது
இன்னும் சொல்லில் அடங்கா
ஒரு ஊமைக்கதை

இதை நினைத்தால்
 ஒரு பெரும் அமைதி நிலவிக் கொண்டிருக்கின்றது.

இதுதான் உலகம் என கடக்க வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
29-7-2021.

Wednesday, July 28, 2021

#*பாரதி போற்றிய செங்கோட்டை ஆவுடையக்கா*

#*பாரதி போற்றிய செங்கோட்டை ஆவுடையக்கா*
————————————
பத்தமடையில் பிறந்து சுவாமி சிவானந்தர் ஆற்றிய அருந்தொண்டுகளுள், அதிகம் தெரியாத ஞானி,அவர் தன் எழுத்துகளின் மூலம் அறிமுகமாகிய பெயர் பெண் கவி ஆவு
டையக்கா. 

ஏறக்குறைய இரு நூறாண்டுகளுக்கு முன், கன்னி கழியாமலேயே, கணவனை இழந்து, பால்ய விதவையாகி, பல பாடல்களை இயற்றி, உலகோர் ஏத்தி வணங்கும் உன்னத நிலை பெற்றவர் ஆவுடையக்கா என்றழைக்கப்பட்ட ஆவிடை அம்மாள்.

1894-லிருந்து 1910-க்குள் அச்சிட்டு வெளியான நூல்கள், பக்கங்களை புரட்டினாலே கிழிந்துவிடக்கூடிய நிலையில் அவை இருந்தன. அவற்றை மிகுந்த ஜாக்கிரதையுடன் படித்த போது, பெருவியப்படைந்தேன்.

தென்காசிக்கடுத்த செங்கோட்டையில் சைவ பெற்றோர்களுக்கு ஏறத்தாழ 1810ஆம் ஆண்டு மகளாக பிறந்தாள் ஆவிடை. இளமையிலேயே திருமணம் நடந்தது. முதலிரவில் அவள் கையை தீண்டும் முன் கணவன் இறந்து விட்டான். அக்கால வழக்கப்படி தலை மொட்டை அடிக்கப்பட்டு, அணிகலன்களை இழந்து, அறைக்குள் அடைபட்டு கிடந்தாள் ஆவிடை பால்ய விதவையாக. ஆனால் அவளுடைய மனத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. கைம்பெண்களுக்கு விதிக்கப்பட்ட விரதங்களையும் அனுஷ்டானங்களையும் தவறாது செய்தாள். அவற்றுள் ஒன்று பிறர் எழுந்திருக்கும் முன் எழுந்து, ஆற்றில் சென்று நீராடிவிட்டு வருவது. ஒரு நாள் அதிகாலையில் குளிக்கச் சென்ற அவள் கீழே கிடந்த மாவிலையொன்றை எடுத்து பற்களைத் துலக்கத் தொடங்கினாள். உடனேயே அறிவுக்கப்பாற்பட்ட ஓர் உள்ளுணர்வின் பரவசம் அவளை ஆட்கொண்டது. நடந்தது என்னவெனில் சதாசிவப் பிரம்மேந்திரரின் உருவான அய்யாவாள் தன் பற்ககளைச் சுத்தம் செய்த மாவிலையை அங்கே எறிந்துவிட்டு ஒரு மரத்தடியில் தியானத்தில் இருந்தார்.
அன்றிலிருந்து வேதாந்தப் பாடல்கள் வெள்ளமென ஆவிடையிடமிருந்து பொங்கி வழிந்தன. மக்கள் அவளது பெருமையை உணர்ந்துகொண்டனர். ஆவிடை ஒரு முறை திருவனந்தபுரம் சென்றிருந்தார். அவரை பற்றிகேட்டிருந்த திருவாங்கூர் மகாராஜா அவரது பூஜைக்காகத் தங்கத்தாலான வில்வ இலைகளை அனுப்பி வைத்தார். வழிபாடு முடிந்ததும், தங்க இலைகளையும் சேர்த்து, பூஜை செய்த மலர்களை வழக்கமாக எறிவது போல, ஆவிடை குளத்தில் எறிந்து விட்டார். ஓட்டையும் பொன்னையும் ஒக்க நோக்கும் அவரது பற்றின்மையை அறிந்து அரசர் பெருவியப்படைந்தார். மற்றொரு சமயம் பல்வேறு மதத் தலைவர்களின் கூட்டத்திற்க்கு அவர் சென்றிருந்தார். அப்போது பலரும் அவளது இளம்வயதையும், கைம்மை நிலைமையையும் கண்டு, அவரைக் கேவலமாகப் பேசி, மொட்டையென்று அழைத்தனர். உடனேயே ஆவிடை, யார் மொட்டை? என் உடலா, மனமா, மூச்சா, என் ஆத்மாவா? என்று அவர்களிடம் கேட்க, அவர்கள் வெட்கித் தலைகுனிந்து தங்கள் தவறையும், ஆவுடையின் பெருமையையும் உணர்ந்து, அவரது அடி பணிந்தனர்.
பின்னர் ஆவிடை, அய்யாவாளை மீண்டும் சந்தித்து அவரது சீடர்கள் குழுவில் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் அச்சீடர்களோ அவளை மதிக்காது மிக கேவலமாக நடத்தினர். அதையும் ஆவிடை சட்டை செய்யவில்லை. ஒரு நாள் அனைவரும் காவிரியாற்றின் நடுவில் இருந்த மணற்திட்டுக்களில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த போது, திடீரென வெள்ளம் பெருகி வந்தது. அதை கண்டு பிறசீடரனைவரும் பயந்து கரைக்கு ஓட, ஆவிடை மட்டும் அதையரியாது கண்மூடி தியானத்தில் நிலைத்திருந்தார். ஆற்றுவெள்ளம் அவரிருந்த மணற்த்திட்டை மட்டும் தொடாது, இரு கூறாகப் பிரிந்து ஓடியது. அதைக் கண்ட சீடர்களும், பிறரும் ஆவிடையின் மகிமையை உணர்ந்து போற்றினர்.
ஆவிடை அம்மாளின் பாடல்கள் பிரம்ம ஞானம் என்ற ஆத்மானு பூதியையும், அமைதியடையும் சாதனங்களையும் கூறும் பாடல்கள் ஆகும்.

அக்காலத்து மக்களிடையே வழங்கி வந்த எளிய சந்தங்களிலும், பாடல் வகைகளிலும் அவர் பாடியிருக்கிறார். பள்ளு, அம்மானை, சோபனம், கும்மி, சிந்து, பந்து, வண்டு, கப்பல் அனைத்திலும் அவர் பாடியிருக்கிறார். அவர் காலத்தில் திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி மிகப் பிரசித்தமாகி இருந்தது. திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப் பட்டும், தெருக்களில் நடிக்கப்பட்டும் வந்தது. எனவே அக்குறவஞ்சி வகையிலும் ஆவிடை வேதாந்தக் குறவஞ்சி நாடகம் ஒன்று இயற்றினார்.
குறவஞ்சி என்பது குறத்திப் பட்டு. இதில் தலைவன் பவனி, அவனது அழகில் கதாநாயகி மயங்கி மையல் கொள்ளுதல், நிலா மன்மதனைப் பழித்தல், குறத்தி வருதல், குறத்தி – நாயகி சம்வாதம் குறவஞ்சியிலும் இவை அத்தனையும் உள்ளன. நாடகத்தின் விஷயம் என்ன என்று நூலின் முகவுரையில் கூறப்பட்டது, “பரமாத்மா ஜீவாத்மாக்கள் அந்தக்கரணங்கள், காமாதிகள், விவேகாதிகள், ஜாக்ராதிகள், மூன்றவஸ்தைகள் முதலியவற்றையே நிடர்களாகவும் உருவகப்படுத்தியோர் குறவஞ்சி நாடகமாக கூறியுள்ளது”.
குறத்தியின் மலைவள, நாட்டுவள வர்ணனைகள் மிகச் சிறப்பாகத் துள்ளும் நடையில் அமைந்திருக்கின்றன.
இதோ நாட்டு வளம் கூறுகிறாள் குறத்தி :
காலமூன்றும் கடிந்திடுநாடு
கர்ம பந்தம் ஒழிந்திடுநாடு
கோலவெல்லை யில்லாத தொருநாடு
குறிக்கும் ஞானம் கொடுத்திடுநாடு
பாலசூரியப் பிரகாசமா நாடு
பாபம் தீர்த்திடும் நாடெங்கள்நாடே
அண்ட பிண்டம் அவருண்டநாடு
அசங்கமான தற் கப்புறநாடு
பண்டையுண்டான பாங்குள்ள நாடு
ப்ரளய காலத்தும் பேராத நாடு
அண்டர் லோகத்துக் கப்புறநாடு
அனந்தயோகியர் தேடிடும் நாடு
கண்டு மாதவன் தூணிலுதித்துக்
களித்திருந்திடும் நாடெங்கள் நாடே.
 
இந்த குறவஞ்சியில் பரமாத்மாவே நாயகனாகவும், குறத்தியாகவும், குருவாகவும் வந்து அருள் பாலிக்கிறார். குறத்தியின் இருதி உபதேசமும் அதை பெறும் ஜீவாத்மா, நாயகியின் பேரனுபவமும் மிகச் சிறந்த பாடல்களாக அமைந்துள்ளன.
 
 அயமாத்மா பிரம்மமென்னும் ஆரண வாக்யார்த்தம்
அறிந்து பார்த்ததுவே நீ யாவாயென்றுரைத்தாள்
உபதேசம் பெற்றவுடன் ஓவியம்போல் நின்று
உள்ள தன்னறிவாலே உணர்ந்து அகமகிழ்ந்தாள்
தளராத நிலைதன்னில் தங்கினாள் மனத்தால்
தானே யெல்லாமாகத் தரிசனம் கண்டாள்.
 
”வேதாந்த வித்யா சோபனக்கும்மி” என்ற நூலில் சார்வகர், பௌத்தர், தர்க்கர், சாங்கியர் என்ற பிற தத்துவவாதிகளைச் சாடி வேதாந்தத்தின் பெருமையை நிலைநாட்டுகிறார்.

மாகவி பாரதிக்கு கவி ஞானம் அளித்த
ஆவுடையக்கா…

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
28-7-2021.


Tuesday, July 27, 2021

உடுமலை ப. நாராயணன் கொங்குநாட்டில் திமு கழகம் வளர்த்த செயல்வீரர் "உடுமலை தேசிங்கு" எனப் போற்றப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்.

உடுமலை ப. நாராயணன்
கொங்குநாட்டில் திமு கழகம் வளர்த்த செயல்வீரர் "உடுமலை தேசிங்கு" எனப் போற்றப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர். சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் போன்ற,மிகப்பெரிய ஜாம்பவான்கள், பணம்,பதவி, ஆட்சி, அதிகாரம், சாதி பலத்துடன் அரசியல் செய்த காலத்தில், மிக,மிக,மிக,மிக சாதாரண குடும்ப, பொருளாதாரப் பின்னணியோடு கழகத்தை வெற்றிப்பாதையில் வழி நடத்தியவர். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ரஜபுதன சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னிலை வகித்த போராளி.
 1967 தேர்தலில் மத்திய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களை பொள்ளாச்சித் தொகுதியில் தோற்கடிப்பேன் என்றபோது, "அதற்கு உடுமலை நாராயணன் அல்ல, வைகுந்த நாராயணனாலும் முடியாது " என்று சி.சுப்பிரமணியம் கூறினார். ஆனால் அவர் நிலைமையை உணர்ந்து, பொள்ளாச்சியை விட்டு கோபி தொகுதியில் போட்டியிட்டு, புஞ்சைபுளியம்பட்டி சாமிநாதனிடம் தோல்வியைத் தழுவினார்.
1967, 71 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஆனால் விரைவில் இயற்கை எய்தினார். தொடர்ந்து இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, வெற்றிவிழாவில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரத்தாலான யானை சிலை பரிசளிக்கப்பட்டது. அப்போது தலைவர், "சிங்கத்தைப் பறிகொடுத்து யானையைப் பெற்றுச் செல்கிறேன்" என்றார். இவரின் நினைவு நாள் (27-7-1971)

புதியவர்களுக்கு சிறுகுழப்பம். உடுமலை நாராயணனும், பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவியும் ஒருவரா? என்பது. இருவரும் ஒருவரல்ல, வேறுவேறு மனிதர்கள்


#இந்தியன்_எக்ஸ்பிரஸ் #The_Indian_Express

#இந்தியன்_எக்ஸ்பிரஸ் 
#The_Indian_Express 
———————————————————-
இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களான முல்காவ்ங்கர், குல்தீப் நய்யார், அஜித் பட்டாசார்ஜி, பிரபாஷ் ஜோஷி (1980-க்குப் பிறகு அருண் ஷோரி) குழுவினர், அமர்ந்து நாட்டு நடப்புகளை அலசுவார்கள். டெல்லி அரசியல் அக்கப்போர் முழுவதும் அங்கு அத்துப்படியாகும். எந்த நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, என்ன தலையங்கம் எழுதுவது என்பது பற்றியெல்லாம் பேசுவார்கள்.அன்றைய
இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தியா எங்கும்கிடைத்து.அருமையான நடு பக்க கட்டுரைகள், தலையங்கள் படிக்க திருப்தியாக இருக்கும். கடந்த 20 வருடங்கள் மேலாக தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கனா, ஆந்திரா, ஓடிசா மாநிலத்தில் The New Indian Express துவங்கியால் The Indian Express இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்குலேஷனில்இல்லை. The Indian Expressயை சேலம்வரதராஜ் நாயுடு துவங்கிசதானந்தன் மூலம் ராம்நாத்



கோயங்கவாங்கினார். தமிழ் நாடு தினசரியும் சேலம்  வரதராஜ் நாயுடு நடத்தினார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
27-7-2021.


சிலரால் ஞாயங்களும், வரலாறுகளும் திரிக்கப் படுகிறது.

சிலர் உரிமைகளை உரக்க சொன்னால் ஆதிக்கம் என்கிறார்கள். அதே உரிமைக்களுக்காக சிலர் கடும் சத்தத்தோடு குரல் கொடுத்தால் உரிமை என்கிறார்கள். நேரத்திற்கேற்றவாறு சிலரால் ஞாயங்களும், வரலாறுகளும் திரிக்கப் படுகிறது.

#ksrpost
27-7-2021.


இப்படி நாயக வழிபாடு மூலம் அறிஞர், தியாகி, விஞ்ஞானி இன்னும்….. பல என மிகை உணர்ச்சியில் ஜாக்கி போட்டு நிறுத்துவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

கடந்த காலத்தில் சினிமாவில் ஜாதியோ மதப்பற்றோ அடையளங்கள் இல்லாமல் இருந்தது. சிவாஜிகணேசன் இஸ்லாமியராக பாவமன்னிப்பிலும் ,
கிருஸ்த்துவராக ஞானஒலி திரைப்படத்திலும், வேறு ஒரு படத்தில் பாதிரியாராகவும், திருமால் பெருமையில் ஆழ்வார்களாகவும், திருவிளையாடலில் சிவனாகவும் நடித்துள்ளார். அது போலவே எம்.ஜி.ஆரும் சிரித்துவாழ வேண்டும் என்ற படத்தில் மேரேனாம் அப்துல் ரகுமான் என்ற பாடலை பாடியும் வேறொரு படத்தில் கிருஸ்த்துவராகவும், முருகராகவும் வந்து திரைபடங்களில் காட்சிதந்ததுண்டு. இதெல்லாம் அந்த காலவரலாறு இன்றைக்கு தான் சார்ந்த தகுதி, தரமற்ற அடையாளங்களை ஜாக்கி வைத்து தூக்குவதில் தான் அரசியல், திரைத்துறை போன்றவை ஆக்கப்பூர்வம் இல்லாமல்  எவ்வித தொய்வின்றி தங்கள் விருப்பங்களை கடமைகளாக ஆற்றிவருகின்றனர்.

 இப்படி நாயக வழிபாடு மூலம் அறிஞர், தியாகி, விஞ்ஞானி இன்னும்…..
பல என மிகை உணர்ச்சியில் ஜாக்கி போட்டு நிறுத்துவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

#ksrpost
27-7-2021.


#தமிழக_அகழ்வாராய்ச்சி_குறித்து….

#தமிழக_அகழ்வாராய்ச்சி_குறித்து தகவல் உரிமைச் சட்டத்தில்  நான் கேட்ட தகவல்கள் குறித்தான இன்றைய தேதியிட்ட என் மனு வருமாரு.

To​​​​​​​​​​​   
The Public Information Officer, 
RTI Office,
Department of Archaeology, 
Tamil Valarchi Valaagam,
Thamizh Salai, 
Egmore,
Chennai – 600 008
 
Sub: Request to furnish information under section 6(1) of the Right to Information Act, 2005 on the   following questions/points.
 
Sir/Madam,
You are requested to furnish following information: -
 
1. தமிழ்நாடு அரசு தொல்லியல் அகழாய்வுகள் & பிறர் முகாமை  என 2 பெரும் பிரிவுகள் அறிவிக்கப்பட்டதன் நிலை என்ன?
 
2. 2021 தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி இடங்கள்..
கீழடி (சிவகங்கை)
ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி)
சிவகளை (தூத்துக்குடி)
கொற்கை (தூத்துக்குடி)
கொடுமணல் (ஈரோடு)
மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி மாவட்டம்)
கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
மாளிகை மேடு (அரியலூர்)
இங்கு மேற்கொண்ட பணிகளின் முடிவுகள் என்ன?
 
3. கீழடி உட்பிரிவில் மணலூர், கொந்தகை அகரம் என மேலும்  அகழாய்வு தளங்கள் என அறிவிப்புகள் வெளி வந்தன. சுமார்  11 தளங்களில் ஆய்வு எனப்பட்ட அவற்றின் தற்போதைய நிலை என்ன?
 
4. கீழ் குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு நடத்திய விவரங்கள் என்ன? ஆய்வு தகவல்கள், அறிக்கைகள் வெளிவந்துள்ளனவா?
 
(i) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள்
1. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்,  (ஆண்டு1876)
2. ஆனைமலை, (கோயமுத்தூர் மாவட்டம், 1969)
3. கோவலன் பொட்டல், (மதுரை மாவட்டம் ,1980)
4. திருத்தங்கல், (விருதுநகர் மாவட்டம், 1994 – 1995)
5. தேரிருவேலி, (இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000)
6. கொடுமணல் தொல்லியற் களம்,  (ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998)
7. மாங்குடி,  (திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002)
 
(ii) ஆரம்பகால தொல்லியல் களங்கள்
1. வசவசமுத்திரம் தொல்லியல் களம், (காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970)
2. கரூர்,  (கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995)
3. அழகன்குளம் தொல்லியல் களம், (இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998)
4. அழகன்குளம் தொல்லியல் களம், (இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998)
5. கொற்கை அகழாய்வுகள், (தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969)
6. தொண்டி, (இராமநாதபுரம் மாவட்டம், 1980)
7. பல்லவமேடு தொல்லியல் களம், (காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971)
8. போளுவம்பட்டி தொல்லியல் களம், கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981)
9. பனையகுளம், (தர்மபுரி மாவட்டம், 1979 – 1980)
10. பூம்புகார், (நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998)
11. திருக்கோவிலூர், (விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993)
12. மாளிகைமேடு,  (கடலூர் மாவட்டம், 1999 – 2000)
13. பேரூர்,  (கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002)
 
 
 
(iii) மத்தியக்கால தொல்லியல் களங்கள்
1. குரும்பன்மேடு, (தஞ்சாவூர் மாவட்டம்,  1984)
2. கங்கைகொண்ட சோழபுரம், (அரியலூர் மாவட்டம், 1980-1981 & 1986-1987)
3. கண்ணனுர், துறையூர் ஊராட்சி ஒன்றியம், (திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983)
4. பழையாறை, (தஞ்சாவூர் மாவட்டம், 1984)
5. பாஞ்சாலங்குறிச்சி, (தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969)
6. சேந்தமங்கலம்,  (விழுப்புரம் மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995)
7. படவேடு,  (திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993)
(iv) அண்மைய கால அகழ்வாய்வுகள்
1. ஆண்டிப்பட்டி,  (திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005)
2. மோதூர்,  (தர்மபுரி மாவட்டம், 2005)
3. மரக்காணம், (விழுப்புரம் மாவட்டம், 2005-2006)
4. பரிகுளம்,  (திருவள்ளூர் மாவட்டம், 2005-2006)
5. நெடுங்கூர்,  (கரூர் மாவட்டம், 2006-2007)
6. மாங்குளம்,  (மதுரை மாவட்டம், 2006-2007)
7. செம்பிகண்டியூர், (நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008)
8. தரங்கம்பாடி,  (நாகப்பட்டினம் மாவட்டம்)
9. கீழடி அகழாய்வு மையம், (சிவகங்கை மாவட்டம் 2015 – 2019)
10. பட்டரை பெரும்புதூர் (திருவள்ளூர் மாவட்டம்) 
 
 
5. இது தவிர (மேற்கண்டப் பட்டியலில்) தமிழகத்தில் வேறு இடங்களில் ஆகழாய்வு செய்யப்பட்டுள்ளனவா?
 
6. பொது மக்கள் கவனம் தொல்லியலின்பால் எப்படி இருக்கிறது?
 
7. தொல்லியல் அதிகாரிகள் ஈடுபாடு, நிலைபாடு எத்தகையது?
 
8. கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள் தொய்வு கண்ட நிலையின் தற்போதைய துரிதம் எத்தகையது?
 
 
9. இந்த ஆய்வுகள் குறித்தான அரசு அறிக்கைகள் வெளிவந்துள்ளனவா?
 
10. அகழ்வாழ்வு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?
 
If the information is not available in your office, kindly forward to the concerned public authority as per section 6(3) of the RTI Act,2005.
 
I am a citizen of India and address is given below. Requisite RTI application fee for Rs.20/- is being remitted vide Indian Postal Order No. 18G891897 dated 27.07.2021 is enclosed.
 
Yours sincerely,
 
( K.S.Radhakrishnan )

27.07.2021

#ksrpost


Monday, July 26, 2021

#Jai_Kisan



#ksrpost
26-7-2021.

மதுரை….

திருமலை நாயாக்கர் காலத்தில், சித்திரம் வரைவோர் குடியிருக்கும் பகுதியை, ’சித்திரக்கார தெரு’ என்றும், எழுத்தாணி செய்வோர் வசிக்கும் பகுதியை, ’எழுத்தாணிக்கார தெரு’ என்றும் அழைக்கப்பட்டது. அந்த பெயர்கள், மதுரையில் இன்றும் நிலைத்திருக்கின்றன. இதே போல பல தெருக்களை, தமிழகம் எங்கும் காணலாம்

பன்மொழிப்_புலவர்_ஜகந்நாத_ராஜா

#பன்மொழிப்_புலவர்_ஜகந்நாத_ராஜா எங்கள் கரிசல் மண்ணில் மூத்த படைப்பாளி. பல கற்றும் எளிமையாக பழகுபவர், அவரை சந்திக்கும்போதெல்லாம் சமீபத்தில் வந்த நூல்கள் கி.ரா, திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழக செயல்பாடுகள் பற்றி பேசுவார். ஒரு முறை இவரோடு அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது உண்டு.

ராஜபாளையத்தில், 1933 ஜீலை 26ல் பிறந்தவர் மு.கு.ஜகந்நாத ராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு என, பல மொழிகளை கற்றறிந்தார்.
திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்தார். திருக்குறளை தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தை கன்னடம் மற்றும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார்.மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ’ஆமுக்த மால்யத’ என்ற காவியத்தை 1988ல் தமிழாக்கம் செய்தார். இந்நூலிக்கு, சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தமிழில் மொழிபெயர்ப்புக்கு கிடைத்த முதல் விருது இது தான்.
கவிதை, குறுங்காவியம், இலக்கியத் திறனாய்வு என 80க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 2008 டிசம்பர் 2ல் தன் 75வது வயதில் காலமானார். பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா பிறந்த தினம் இன்று.

#ksrpost
26-7-2021.



நம்முடைய "லட்சியம்" நமது "செயல்பாட்டை"

நம்முடைய 
"லட்சியம்" நமது
"செயல்பாட்டை" 
முந்தி சென்று விடும் போது
ஏற்படக்கூடிய 
இடைவெளிக்கு
"விரக்தி"….
அதே வேளையில் 
நமது செயல்பாடு,
நம்முடைய லட்சியத்தை  முந்தி 
விடுமானால் 
அதற்கு "வெற்றி"
என்று பெயர்.இதில் ஊழ் வகுத்த வழி..
அவ்வளதான்.
இதில் நேர்மைக்கு பணிக்கு தொடர்பு இல்லை.

தேவைக்கென பேசுபவர்கள்….

தேவைக்கென பேசுபவர்களை விட,
நாமே தேவை என எண்ணுபவர்களிடம் பேசுவது மிக முக்கியம்..........!!

1950s…



Sunday, July 25, 2021

Do what nature demands….

Do what nature demands. Get a move on — if you have it in you — and don’t worry whether anyone will give you credit for it. And don’t go expecting Plato’s Republic; be satisfied with even the smallest progress, and treat the outcome of it all as unimportant.

இயற்கை கோருவதைச் செய்யுங்கள். உங்களிடம் இருந்தால் - ஒரு நகர்வைப் பெறுங்கள் - அதற்காக யாராவது உங்களுக்கு கடன் வழங்குவார்களா என்று கவலைப்பட வேண்டாம். பிளேட்டோவின் குடியரசை எதிர்பார்க்க வேண்டாம்; மிகச்சிறிய முன்னேற்றத்தில் கூட திருப்தி அடைந்து, அதன் விளைவுகளை முக்கியமற்றதாகக் கருதுங்கள்.

சித்திரையில் அக்னி நட்சித்திரக்கடும் வெயிலில் குளிரையும் மழையையும் தேடுகின்றோம். மாதங்களில் மார்கழியின் கடும் குளிரில் வெயிலை தேடுகின்றோம்….

சித்திரையில் அக்னி நட்சித்திரக்கடும் வெயிலில் குளிரையும் மழையையும் தேடுகின்றோம். மாதங்களில் மார்கழியின் கடும் குளிரில் வெயிலை தேடுகின்றோம்….

#ksrpost
25-7-2021.


அழிந்து வரும் கரிசல் மண்ணின் பொக்கிஷங்கள்

அழிந்து வரும் கரிசல் மண்ணின் பொக்கிஷங்கள் மாட்டு வண்டி, மாட்டு வாக்கூடு (வாய்க் கூடு), கோழிபஞ்சாரம், தட்டை (பருத்தி மாரில் பிண்ணியது),கடகப் பெட்டி, விதைப் பெட்டி, கல்யாணப்பெட்டி, அகப்பை, ஆட்டுக்குட்டி குடில், வெலக்கு மார், ரேக்ளா வண்டி, தட்டு வண்டி











#தமிழகத்தில்_மதுவிலக்கு

#தமிழகத்தில்_மதுவிலக்கு
———————————————————-
நன்றாக நினைவிருக்கின்றது, 1970-71கால கட்டங்களில் கிராமங்களில் குளக்கரை ஓரம் சின்னப் பந்தல் போட்டு கள்ளுக்கடை சாராயக்கடை என்று சுண்ணாம்பால் தகரத்தில் எழுதிய பலகை உண்டு. இவை கலைஞர் ஆட்சி கால கட்டத்தில் திறக்கபட்டன.

மூதறிஞர் ராஜாஜி அன்றைக்கு கடும் மழையில் குடையை பிடித்து கொண்டு கோபாலபுரத்தில் உள்ள அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் வீட்டுக்கு வந்து மது விலக்கை பின்பற்றுங்கள். கள், சாராயக் கடைகள் வேண்டாம் என்று வலியுறுத்தினார். தலைவர் கலைஞர் அதை கேட்டுக் கொண்டு, மூதறிஞர் ராஜாஜியினுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு கவலை படுகிறேன் என்றார். காமராஜரும் அன்று மதுக்கடைகள கூடாது

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் பெருகியும், ஸ்பிரட்டை குடித்தும் பல உயிர்களை இழந்துள்ளோம் அதற்காக அதை ஒழுங்கு படுத்தும் வகையில் கள்- சராய கடைகள் திறக்கின்றோம் என்ற விளக்கத்தை கொடுத்தார். பல இளைஞர்கள் அன்றைக்கு கள்ளச் சாராயம் குடித்து மாண்டனர். மேலும் புதுச்சேரி சென்று மது பாட்டில்களை கடத்தியும் வந்தனர். காவல் துறைக்கும்
இதில் பெரும் பணியாக அன்று இருந்தது.

இப்படிதான் அன்றைக்கு கள்ளச் சாராய கடைகள் திறக்கப்பட்டன. நான் சொல்வது 1970,71 கால கட்டங்கள். கலைஞர் ஆட்சியில் முதறிஞர் ராஜாஜியின் விருப்பத்தின் படி மது விலக்கு கொண்டு வந்து கள்ளுச் சாராயக் கடைகளை மூடியது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருகின்றார் 1981ல் கள்ளுக் கடையும் 1983ல் இந்தியாவில் செய்த வெளிநாட்டு மதுவகைகளைIMFL டாஸ்மார்க் மூலமாக விற்பனைக்கு கொண்டுவந்தார். இதுதான் தமிழகத்தில் மதுவைக் கொண்டுவந்த கடந்த கால நிகழ்வுகள்.

எனக்குத் தெரிந்த மங்களான நினைவுகளில் 1950-60 கட்டங்களில் தீயிந்து போன பேட்டரி செல்கள், ஊமத்தங்காய், கருப்பட்டி போன்ற பொருள்களை கொண்டு கள்ளச் சாராயம் காய்ச்சி சட்டத்திற்கு விரோதமாக விற்றனர். இது குறித்து பல ஆயிரக்கணக்கான வழக்குகள் காவல் துறையினர் தொடுத்தனர். இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர்களுக்கு வரும் போது ரம் பாட்டில் என்ற மது வகைகளை கொண்டுவருவார்கள். அந்த பாட்டில்களை பெறுவதற்கு அந்த இராணுவ வீரர்களின் வீடுகளுக்கு நடையாக நடந்துசெல்வது கேளிக்கையாக இருந்தது.
ரம் பாட்டில்களை இளைஞர்கள் அதிகமாக் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுத்தும் வாங்குவதுண்டு. அதிகபட்சம் இரண்டு பத்துரூபாய் தாள்களாக இருவது ரூபாய் கொடுத்து வங்குவது பெரிய தொகையாக அன்று இருந்தது.அதை மில்லடரி குதிரை சரக்கு என கிராமத்தில் என கூறுவது உண்டு

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
25-7-2021.


#கச்சத்தீவைப்_பற்றி_வெளிவராத_செய்திகள் தலைவர் கலைஞர், அமிர்தலிங்கம், நல்லசிவம்,ஜனா கிருஷ்ணமூர்த்தி

#கச்சத்தீவைப்_பற்றி_வெளிவராத_செய்திகள்
தலைவர் கலைஞர், அமிர்தலிங்கம், நல்லசிவம்,ஜனா கிருஷ்ணமூர்த்தி
——————————————————-
இலங்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த  மறைந்த அண்ணன் அ.அமிர்தலிங்கம் அவர்கள் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வர 17.12.1974ல் திட்டமிட்டிருந்தார். அப்போது அவரை இந்தியாவுக்குச் செல்ல விடாமல் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா அரசு தடுத்து அவரது பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த நிலையில் அமிர்தலிங்கம் அவர்கள் நண்பர் இரா.ஜனார்த்தனத்தை (எம்.எல்.சி) கச்சதீவுக்கு வந்து தன்னை சந்திக்க வரும் படி கூறினார்.  கச்சதீவு அன்றைய இந்தியாவின் நிலபகுதியாக இருந்தது. அமிர்தலிங்கம் ரகசியமாக படகு மூலமாக கச்சதீவுக்கு திட்டமிட்டவாறு சென்றடைந்தார். அதே குறிபிட்ட நாளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஜனார்த்தனமும் கச்சதீவுக்கு சென்றடைந்து அமிரை சந்தித்தார். ஜனார்த்தனன் எம்.ஜி.ஆர்க்கு நெருக்கமான அ.தி.மு.க பிரமுகர்.

அமிர்தலிங்கம் தன்னோடு எடுத்துவந்த பல கடிதங்களை ஜனார்த்தனனிடம் ஒப்படைத்து விட்டு; இலங்கைத் தமிழர் பிரச்சனையை பற்றி தமிழக தலைவர்களுக்கு தனித் தனியாக கடிதம் இங்கே கொடுத்துள்ளேன். இந்த கடிதங்களை தி.மு.க தலைவர் முதல்வர் கலைஞர், பெருந்தலைவர் காமராஜர், மா.பொ.சி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் எம்.கல்யாணசுந்தரம்(சி.பி.ஐ), பி.ராமமூர்த்தி(சி.பி.எம்), அ.தி.மு.க பொதுச்செயளாலர் எம்.ஜி.ஆர், மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம், பார்வோர்டு பிளாக் தலைவர் மூக்கையாதேவர், முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது, ஜனசங்கத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி  போன்ற தமிழக தலைவர்களுக்கு முறையாக முகவரியிட்டு அந்த கடிதங்களை உடையவர்களுக்கு சேர்க்கும் படி சொல்லிவிட்டு அமிர்தலிங்கம் இலங்கையின்  அககரைக்கு சென்றார்.
 
அதன் பின்புதான் ஆயுதபோராட்டத்தை இலங்கையில் உள்ள இலைஞர்கள் (பிராபகரன்)முன்னெடுத்தனர். இது வட்டுகோட்டை தீர்மானத்தை ஒட்டிய காலம். 

ஜனார்த்தனன் சென்னை திரும்பி அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து அமிர்தலிங்கத்தின் கடிதங்ளை சொன்ன படி வழங்கினார். இந்த கடிதத்தில் இலங்கையில் தமிழர்கள் படும் பாட்டை அமிர்தலிங்கம் எழுதியது அந்த காலத்தில் முக்கியமான செய்தியாக இருந்தது. ஆனால் எப்படி இந்த கடிதங்கள் வந்து சேர்ந்தன என்பது குறித்தான நிகழ்வுகள் இது வரை வெளிவரவில்லை. 

அமிர்தலிங்கம் அவர்களை 1984 காலக்கட்டங்களில் அண்ணன் பழ நெடுமாறன் மதுரைக்கு அழைத்த ஒரு நிகழ்ச்சிக்கு வைகை எக்ஸ்பிரசில் அவரை நான அழைத்துக்கொண்டு சென்றபோது என்னிடம் கச்சதீவுக்கு வந்து சென்ற இந்த நிகழ்வுகளை எல்லம் குறிப்பிட்டார். 

இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா சமீபத்தில் அனுப்பி வைத்த கதிர் பாலசுந்தரம் எழுதிய அமிர்தலிங்கம் சகாப்தம் என்ற நூலினை வாசித்த போது (பக்கம்-130) அமிர்தலிங்கம் சொன்ன அந்த தகவல் நினைவில் எட்டியது.

கச்சதீவை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கக்கூடாது என்று தமிழகம் மட்டும் அல்ல ஈழத்தமிழகம் அதே கருத்தை தான் அப்போது தெரிவித்தார்கள். அமிர்தலிங்கமும் அதே கருத்தை அப்போது கொண்டிருந்தார். 

கச்சதீவை இலங்கைக்கு வழங்ககூடாது என்று கோட்டையில் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டங்களையும் தி.மு.க அன்று நடத்தியது உண்டு. 
Socialist Party சட்டமன்ற உறுப்பினர் நல்லசிவம் ராமேஸ்வரம் சென்று போராட்டம் நடத்தியது.ஜன சங்க கட்சி தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில்  தமிழ் படைப்பாளி நா.பார்த்தசாரதி மற்றும் என்னிடமும் கச்சத்தீவு குறித்தான தகவுகளை ஜனாப் தனது வழக்கு விஷயமாக பெற்றுக்கொண்டு சென்றதும் உண்டு. 

ஜனா கிருஷ்ணமூர்த்தி மதுரையில் வழக்கறிஞராக இருந்தவர். ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்திக்கும் போது கச்சத்தீவு மட்டும் அல்ல அமிர்தலிங்கம் அனுப்பிய கடிதத்தைப் பற்றியும் என்னிடம் பேசியதுண்டு. ஜனா ஒருமுறை என்னிடம் சொன்னார், தமிழகத்தில் ஜனசங்கத்தின் வழக்கறிஞர் டாக்டர் வி.கே.ஜான் முதன்முதலாக தலைவராக 03.10.1958ல் பொறுப்பேற்றார் என்றார். இவர் ஒரு கிருஸ்த்துவர் பாரிஸ்டர் தமிழக மேலவை உறுப்பினரும் கூட, ஜன சங்க நிறுவனர் சியாமாபிரசாத் முகர்ஜியின் நெருங்கிய நண்பர் என்று சொன்ன போது என்னால் நம்ப இயலவில்லை ஆனால் உண்மை அது தான்.   ஜனசங்கம்  Good Friday அன்று  தொடங்கப்பட்டது.தலைவராக பொறுப்பேற்ற ஜான் இலங்கைக்கு சென்றார். அங்கு தமிழர்களுடைய தலைவர் செல்வாவை சந்தித்தார். தமிழர்களுடைய நிலமைகள், சிக்கல்களை குறித்து சியாமாபிரசாத் முகர்ஜியிடம் கூறினார் என்று ஜனா கிருஷ்ணமூர்த்தி என்னிடம் குறிப்பிட்டார்.இவை கவனத்திற்க்கு வந்த செய்திகள்…..
அவ்வளதான்……

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
25-7-2021.


#ஸ்ரீவித்யா

மறைந்த #ஸ்ரீவித்யா
கர்நாடக இசையில் பேர்பெற்ற எம்.எல்.வசந்த குமாரியின்  மகளாக 1953ல் பிறந்தார். சிவாஜி நடித்த திருவருட்செல்வர் படத்தில் 1966ல் நடிக்க துவங்கினார். 

ஸ்ரீவித்யா தன்னுடைய வாழ்கையில் பாடுகளையும், ரணங்களையும் மட்டுமே கண்டவர்.நான்அவரின்வழக்கறிஞராக
வும் இருந்ததால் நன்கு அவரை பற்றி அறிவேன். இது குறித்து பல பதிவுகளிலும் குறிப்பிட்டு இருகின்றேன். வழக்கறிஞர்களுக்கு தரவேண்டியகட்டணதொகையை கேட்காமலேயே தன் விருப்பம் போல கூடுதலாக  அள்ளி கொடுப்பார்.

அரவிந்தரின் சாவித்திரியை படிப்பதில் ஆர்வம் உடையவர். ஜீலை 24 என்றால், ஸ்ரீவித்யாவினுடைய நினைவு, அவர் காட்டிய அன்பும், பாசமும்  நினைவிற்கு வருகின்றது. பலரும் அவரால் பயன் பெற்றுள்ளார்கள். 

எவ்வளவோ அவரின் சோக கதைகள்,  கடந்த 2006 அவரின் மறைவு வரை. இவருக்கு  மரணம் கூட நிம்மதியாக அமையவில்லை, அவ்வளவு வலிகள் அவருக்கு வந்தன.  எனினும்,நல்ல அற்புதமான மனசு அவருக்கு உண்டு.

#ksrpost
24-7-2021.


#ருசியும்_ரசைனை…..

#ருசியும்_ரசைனை…..
———————————————————
ருசியும் ரசைனையுமே உயிர்த்துடிப்புடன் கூடிய எல்லாவற்றின் சாரமாக இருக்கிறது. ரசனையின் பின்னால் எல்லாவற்றின் மீதன ஈர்ப்பும் அக்கரையும் இருக்கிறது என்றால் அதற்க்கும் அடியில் ஒளிந்திருப்பது ஆழ்ந்த சிந்தனையும் தேடலுமே. ராஜரத்தினம் பிள்ளையின் பெயரை நாம் அடிக்கடி கி.ரா.வின் வாயில் இருந்து கேட்கக் கிடைத்தது பெரிய பரிசு. கரிசல் பகுதியின் ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் சவுண்ட் சர்வீஸ்காரர் சுழலச் செய்யும் முதல் ஒலித்தட்டு அந்த நாதஸ்வரம்தான். விளாத்திக்குளம் சுவாமிகள், காருக்குருச்சி அருணாச்சலம் என்று விருயும் அவரது இசை இரசனை எல்லா ஞானங்களுக்கும் அப்பாற்பட்டது.

எங்கள் வெட்டவெளிக் கரிசலில் இசை பிரம்மாண்டமானதொரு மெளனமாக வேனலின் வெட்கையின் கானல்வரிகளாக ஆகாயம் முட்ட எங்கும் வியாகித்திருப்பது. எங்கள் வெம்பூர் மேளக்காரர் அழகிரியார் குடும்பத்தில் நாதஸ்வரம், வேலு அண்ணனின் பெரிய தவில், கண்ணப்பரின் உறுமிமேளம் கிருஷ்ணனின் இரட்டைச் சிறு மேளம், சிங்கி, ஊமை குழல் என்ற குழுவின் எல்லாருக்கும் சங்கித ஞானம் உண்டு. அழகிரி சகோதரர்களுக்கு அத்தனை ராகங்களும் அத்துபடி. திடிரென ஊருக்கு வருகை தந்த விளாத்திகுளம் சுவமிகள், ஒருவரும் இல்லாத ரெடியார் மடத்தில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாராம். நூற்றாண்டுகள் தாண்டிய வேப்ப மரத்தில் பால் சொட்டுவது வடியாமல் உறைந்து நின்றது என்றும் பட்சிகள் கூட்டம் அரவம் எழுப்பாமல் பாட்டுக் கேட்டு மயங்கி நின்றன என்றும் கூறினார்கள். பெரிய அழகிரியும் வேலுவும் மற்ற பிற ஆட்களும் ஓடிவந்து சுவாமிகளைச் சுற்றிலும் உட்கார்ந்து ஒரு பகல் முழுவதும் நாதஸ்வரமும் காளைமாட்டுத் தோள் இழுத்துக் கட்டிய பெரிய மேளமும் வெங்கல் சிங்கியும் ஊமைக் குழலும் வாசித்தார்கள்.




கம்மஞ்சோற்று உறுண்டைகளும் பசுந்தயிரும் கரிசலின் மிதுக்கம்பழ மோர் மிளகாய் வத்தல்களும் கோடங்கிபட்டி நார்த்தங்காய் ஊறுகாய்களும் பசியாற்றித் தொடர்ந்த இசை, மறுநாள் காலையில்தான் முடிந்த்தாம். எல்லாரும் அடுத்த ஒரு பகல் முழுவதும் மடத்திலேயே தூங்கிப் போனார்களாம். இதை நான் ஏன் இழுதுகிறேன் என்றால் இந்தப் பிரபஞ்சத்தின் மிகபெரிய ரசனை என்பது இசை ரசனை தான். ஏனெனில் அதற்கு எப்பொதுமே நிகழ்காலம் மட்டும்தான். அந்த ஒற்றைக் காலத்துக்குள் எல்லாகாலமும் அடுக்கடுக்காக புதைந்து இருக்கும் என்பதுதான் சீவளிகளில் புகுந்த எச்சிலில் எழுதப்பட்ட இரகசியம். ராக ஆலாபனைகளில் எண்ணற்று விரியும் கல்பனா ஸ்வரங்களின் நெஞ்சு குளிரும் ருசி.

அதுபோலத்தான் உணவுகள் மேல், உடைகளின் பால் கி.ரா. கொண்டிருந்த ரசனை. எந்தெந்தக் பழங்களை எப்படியப்படி உண்பது என்பது குறித்து நாட்கணக்காக கி.ரா.வால் பேச முடியும். கனிகளைப் பொறுத்தவரை நன்கு பழுத்து, அழுகும் நிலைக்கு முந்தைய நிலையில் சாப்பிட வேண்டும் என்பார். மலேசியாவின் துரியன் பழத்தின் நாற்றம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் கூறியவற்றை பெரிய கட்டுரையாக எழுத முடியும். பழங்கள் பற்றிய பேச்சு வரும் சமயங்களில் எல்லாம் தவறாமல் கி.ரா. குறிப்பிடும் ஒரு பெயர், ரசிகமணி  டி,கே.சிதம்பரநாத முதலியார். ரசிகமணியிடம் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து சாப்பிடச் செய்தால், திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், குற்றாலம் பகுதிகளில் எந்த ஊரில் எந்தத் தோப்பில் விளைந்த பழம் என்று கூறி விடுவாராம். ரசிக மணியின் மீது பெரும் பிரம்மையும் அன்பும் கொண்டிருந்த கி.ரா.வின் உடலில் ஒரு பக்கம் ரசிகமணியே குடியிருப்பது போலத் தோன்றும். ரசிகன் என்ற சொல் இன்று திரைப்பட ரசிகன் என்னும் அளவில் பல பரிமாணங்களை அடைந்துவிட்டது.

-சமயவேல்…

(தமிழ்வெளி)

அடையாள அரசியல்…..

அடையாள அரசியல்…..
நிரந்தர பொது செயலாளர் என….
போலி பாசங்கு அடிமை அரசியல்….
VS
பின்நவீனத்துவஅரசியல்…..
மக்கள் நல ஜனநாயக அரசியல்…..

#ksrpost
23-7-2021.


Friday, July 23, 2021

#கறுப்பு_ஜுலை_கலவரம்_1983.

#கறுப்பு_ஜுலை_கலவரம்_1983.
———————————————————
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

கறுப்பு ஜுலை கலவரம்  83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளதாக  கூறுவர்






கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் என அனைத்தையும் அழிக்கும் செயற்படாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு (ஜூலையில்)  நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு  கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

Black July - 38 years ago rampaging xenophobic Sinhala mobs burned, looted, gang raped and murdered over 3,000 innocent Tamils. This pogrom, part of Sri Lanka’s structural genocide against it’s Tamil nation internally displaced over 250,000 and Tamil fleeing the country. It was impulse that led to a surge in the growth of the Tamil diaspora across the world, now as large the number of Tamils in Sri Lanka.

சுப்பிரமணிய_சிவா

#சுப்பிரமணிய_சிவா
———————————
திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டுவில், 1884 அக்டோபர் 4ம் தேதி பிறந்தவர், சுப்பிரமணிய சிவா. அவரது குடும்பம், வருமையில் வாடியது. இலவச உணவு கிடைக்கும் என்பதால் திருவனந்தபுரம் சென்று படித்தார். சிவகாசியில் காவல் துறை எழுத்தராக சேர்ந்து, மறுநாளே விளகினார். 
தமிழ், ஆங்கிலத்தில் புலமைப் பெற்றவர். திருவந்தபுரத்தில் இளைஞர்களைத் திரட்டி ”தர்ம பரிபாலன சமாஜம்” என்ற அமைப்பை உருவக்கினார். சென்னை, கோல்கட்டா, தூத்துக்குடி, திருனல்வேலியில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
‘ஞானபானு, பிரபஞ்ச மித்திரன்’ போன்ற இதழ்களைத் துவக்கினார் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வ.உ.சிதம்பரம், பாரதியாருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். பலமுறை சிறைவாசம் அனுபவித்தார். தொழுநோயால் பதிக்கப்பட்டு, சிறையில் துயரம் சந்தித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், ‘பாரதபுரம்’ என்ற ஆசிரமம் நிறுவினார்.
பாரதமாதா கோவில் கட்ட, ஊர் ஊராக சென்று நிதி திரட்டினார். ஆனால் அவரின் கனவு நிறைவேறவில்லை. 1925 ஜீலை 23ம் தேதி தன் 41வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ’வீரமுரசு சுப்பிரமணிய சிவா’  நினைவு தினம் இன்று.


"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை " என முதன் முதலில் கர்ஜித்தவர் திலகர்.

"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை " என முதன் முதலில் கர்ஜித்தவர்  திலகர். 

ஒரு சிறுவன் ஆங்கில அரசுக்கு எதிராக முழங்குகிறான்.  அவனை பிடித்த அதிகாரி 'உன் பெயர் என்ன?'
என்று கேட்க

என் பெயர் சந்திர சேகர ஆஸாத். 

என சொன்ன சவுக்கடி தண்டனை பெற்ற போதும் நாட்டின் புகழை முழங்கிய ஆஸாத். 

இந்த  இருவரும் பிறந்த நாள் இன்று


#தமிழ்நாடு_என்று_முதன்_முதலாக_உச்சரித்து_தினசரி_ஏட்டை_துவக்கிய_சேலம்_வரதராஜ_நாயுடு_அவர்களின் #64வதுநினைவு_நாள்_இன்று.

#தமிழ்நாடு_என்று_முதன்_முதலாக_உச்சரித்து_தினசரி_ஏட்டை_துவக்கிய_சேலம்_வரதராஜ_நாயுடு_அவர்களின்
#64வதுநினைவு_நாள்_இன்று.
———————————————————
தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக தினசரியை நடத்தியவரைப் பற்றி யாரும் அறிவதில்லை இவர்தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழை முதன் முதலாக தொடங்கியவர். அதன் பின் ஆங்கில ஏடு கைமாரியது. தமிழ்நாடு தினசரியும் கருமுத்து தியாகராஜசெட்டியாருக்கு வழங்கப்பட்டு தமிழ்நாடு ஏடு மதுரையில் இருந்து தமிழ் வளர்ச்சி என்ற நோக்கத்தில் சிறப்பாக 1960 வரையில் வெளிவந்தது. இதில் ஆரம்பக்கட்டத்தில் கருமுத்து தியாகராஜ செட்டியார் விருப்பத்தின் கீழ் பழ.நெடுமாறன் ஆசிரியர் குழுவில்

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வேண்டும் என்று சங்கரலிங்கனார் விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார். அந்தத் தியாக விருப்பத்தை பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். 

சேலம் வரதராஜ நாயுடுவின் இந்தியன் எக்ஸ்பிரஸை ராம் நாத் கோயாங்காவிற்கு  சதானந்தம் மூலம் வழங்கிவிட்டார். 

வைக்கம் போராட்டத்திலும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்திலும் அதை முன்னெடுத்த இவரை யாரும் நினைப்பதும் இல்லை. பேசுவதும் இல்லை. அதற்குக் காரணகர்த்தா சேலம் வரதராஜன் நாயுடு தான். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். இவரின் கீழ் அன்றைக்கு தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் சேலத்தில் இவருடைய வீட்டில் இயங்கியது. 
உத்தமர் காந்தி, “தமிழ்நாட்டில் போர்க்களம் யாரிடம் இருக்கிறது?” என்றபோது இவரையும், பெரியாரையும்ஈ திரு.வி.க.வையும் தான் சொன்னது உண்டு, அப்படிப்பட்ட ஒரு தியாக சீலர் சேலம் வரதராஜுலு நாயுடு. 
வசதியான குடும்பம் அப்பொழுதே ஏழு பேருந்துகள் வைத்திருந்தார். ஆங்கில அரசுக்கு வரி கட்டாமல்  மறுத்து அந்தப் பேருந்துகளையும், இவரது நிலங்களையும் ஆங்கில அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டது. ஆங்கில அரசாங்கத்தைப் பார்த்து “உனக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். 

“இலங்கையில் தமிழர்கள் எப்படி இருக்கின்றனர். காந்தியும் நேருவும் இலங்கைக்குச் செல்ல வேண்டும். இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து வாருங்கள்” என்று பணித்து காந்தி அங்கே வரதராஜன் நாயுடுவை அனுப்பினார். 

இலங்கை சென்று பார்த்துவிட்டு அங்குள்ள தமிழர்கள் இலங்கை தமிழர்கள், பூர்வீக தமிழர்கள் வடக்கே-கிழக்கே இருக்கின்றார்கள். இந்தியாவில்  இருந்து சென்ற தோட்ட தொழிலாளர்கள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே தங்களது உரிமைகளை இழந்து வேதனைப்படுகிறார்கள் என்று முதன்முதலில் அங்கு சென்றுவிட்டு கருத்தைத் தமிழகத்திற்கு சொன்னவர் வரதராஜன் நாயுடு தான். இது எத்தனை பேருக்கு தெரியும். 

இன்றைக்கு தான் வரலாறு சொன்னாலே அது கடந்த காலம் விட்டுவிடுங்கள் என்று சொல்லுகிறார்கள். அது குப்பை என்கிறார்கள். என்ன சொல்ல முடியும், இந்தக் காலத்து மனிதர்களிடம். இது எல்லாம் நடந்தது உண்மை. 
தமிழ்நாடு என்று முதன்முதலாக உச்சரித்தது அவர்தான். அதுமட்டுமல்ல கடைசி கட்டத்தில், தான் இவ்வளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனக்கு அன்றாட உணவுக்குக் கூட திண்டாடினார். 
பெரியாரையோ, வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கோ இவர் செய்த உதவிகள், காமராஜரும் சி. சுப்பிரமணியம் தமிழக முதல்வராக போட்டியிடும் பொழுது, காமராஜரை முதலமைச்சராக ஆக்கியதன் பெரும்பங்கு சேலம் வரதராஜ நாயுடுவுக்கு உண்டு. அன்றைக்கு அதற்க்கு தேர்தல் அதிகாரி அவர்தான்.

இப்படிப்பட்ட ஒரு ஆளுமையை ஒரு சிலருக்கு தான் தெரிந்திருக்கிறதே தவிர, இன்றைக்கு அவர் யாரென்று யாரிடமும் கேட்டால், அவரை தெரியாதென்றுதான் சொல்லுவார்கள். அப்படியான நிலைமை. தமிழ்நாடு என்ற எப்படி வந்தது என்றால், சேலம் வரதராஜ நாயுடு தான் முதன் முதலாக உச்சரித்தார் என்பது வரலாறு. அந்த வரலாறு பதிவு செய்யவேண்டும் என்ற கட்டத்தில் தான் இதை சொல்லுகின்றேன். 
----------------

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
23-7-2021.


வாழைத்தார்கள்…



Thursday, July 22, 2021

ஜெயலலிதா (1970-80 களில்)

#ஜெயலலிதா (1970-80 களில்)
————————
இரண்டு நாட்களுக்கு முன் 1989-ல் திமுக ஆட்சி அமைந்தபோது, தலைவர் கலைஞர் முதலமைச்சராக, தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தபொழுது ஜெயலலிதா  தகராறு செய்தததை, நீண்ட பதிவாக செய்திருந்தேன். பலரும் அதை கவனித்தார்கள். என்னிடம்  சிலர் அது குறித்தும் கேட்டார்கள். 
அந்தக் கடிதம் குறித்து, போலீஸ் கமிஷனர் துரையை குறித்தும் நீங்கள் எழுதியுள்ளதை விவரமாக தெரிய வேண்டுமென்று சொன்னார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் அந்தக் கடிதத்தினுடைய, பின்னால் என்ன நடந்தது என்று நான் கேள்விப்பட்டதுதான். நான் நேராக பார்க்கவில்லை. என் காதுக்கு வந்த செய்தியை உங்களிடம்  (1)ல்பகிர்கின்றேன். 

மற்றொரு கட்டத்தில் 1983-84 கட்டத்தில் ஜெயலலிதாவைசந்திக்கக் கூடிய வாய்ப்புண்டு.அப்பொழது நான்



நெடுமாறனின் தமிழ்நாடு காங்கிரஸின்
பொதுச்செயலாளர், திமுகவில் இல்லை.
அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்ற நேரம், எம்ஜிஆர் விரும்பிய படி தம்பி, வேலு பிள்ளை பிரபாகரனை அழைத்துக் கெண்டு சந்தித்ததுண்டு. அப்பொழுது அவர் சொன்னது, அப்பொழதும் அதன் முன்பும் எப்படி பொழுது போக்குகின்றேன், இலக்கிய களத்திலும், பத்திரிகை துறையிலும் தான் என்ன எழுதுகின்றேன் என்று இரண்டாவது பதிவில் (2)நான் குறிப்பிட்டுள்ளேன். 
இதில் நான் ஜெயலலிதாவை பற்றிப் பார்த்ததும், அறிந்ததும் கடந்த கால நிகழ்வுகள்…நினைவுகள்….

அந்தக் கடிதத்தை பொறுத்தவரைக்கும் நான் கேள்விப்பட்டதை தான் நான் சொல்லுகின்றேன். நான் நேரில் கவனிக்கவில்லை.  அன்று பேசப்பட்டவகையில் (1) முதல் பதிவு….

ஜெயலலிதா அவர்கள் சொன்ன எழுத்து பணிகளைப் பற்றி, அவர் சொன்னதை அப்படியே( 2)இரண்டாவது பதிவில் கீழே கொடுத்துள்ளேன்.

(1)ஜெவின் ராஜினாமா கடிதத்தை அவரின் டிரைவர் பத்திரிகை அலுவலகத்திற்கு எடுத்து செல்வதை கேள்விப்பட்ட நடராஜன் அதை கேள்விப்பட்டு பாதி வழியில்  டிரைவரிடம் இருந்து பிடுங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார். அதை கேள்விப்பட்ட ஜெயா நடராஜனிடம்  சண்டைபோட்டார். அப்போது தான் நடராஜன் வீட்டில் கிடைத்து. முரசொலியில் வெளி வந்தது. சம்பவத்தின் பின்னணி இது தானே. சட்டசபையில்  ரகளையை ஏற்படுத்த வேண்டும் என்று ஜெயல்லிதா திட்டமிட்டார்

(2)கல்கியில் தொடராக வெளிவந்த நாவல்: உறவின் கைதிகள். துக்ளக்கில் ‘எண்ணங்கள் சில’ என்று தொடர். தாய் வார இதழில் ‘எனக்குப் பிடித்த ஊர்’, ‘எனக்குப் பிடித்த வாத்தியார்’, ‘எனக்குப் பிடித்த ஓவியர்’, ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’, ‘எனக்குப் பிடித்த நாவல்’, ‘எனக்குப் பிடித்த த்த்துவ ஞானிகள்’ என 45 கட்டுரைகள் எழுதி, அவைகள் ‘மனதைத் தொட்ட மலர்கள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது.1968ல் பொம்மை இதழுக்காக எம்.ஜி.ஆரிடம் நேர்காணல் எடுத்திருக்கிறார்.தன்னை
குறித்தான நினைவுகள் குமுதம் ஏட்டில்.
இந்த தொடர் இறுதி படுத்தாமல் நின்றது.

#ksrpost
22-7-2021.


#அரசியிலில்_ifs_and_buts_இன்றைக்கு_கிடையாது.

#அரசியிலில்_ifs_and_buts_இன்றைக்கு_கிடையாது.
——————————————————
அரசியல் என்பது எட்டு திசைகளுடன் தொடர்புடையது மட்டுமல்ல அது நாற்பது திசைகள். நானூறு திசைகளுடன் தொடர்புடையது. ஆனால் இன்றைய நிலையில் அது இங்கு உணமை இல்லை.பொது வாழ்வில் தற்போது ifs and buts என்ற விடயங்கள் எல்லாம் கிடையாது. இந்த தளத்தில் Life is a like a play(Shakespeare)

இது எதனால்? எப்படி? ஏன்? மாறியது என்பது யாருக்குமே தெரியாது.  காற்று அடிக்கும். சுவாசித்துக் கொள்ள முடியும்.  புழுக்கமாக இருக்கும். பொந்துக்குள் அமைதியாக இருக்க வேண்டும்.  இப்படித்தான் அரசியல் பயணம் இருக்கின்றது. இனி வரும் காலங்களில் கூட இப்படித்தான் இருக்கும். உழைப்பு,
களப்பணிகள்,புரிதல், நேர்மை எல்லாம்
கணக்கீடு கிடையாது. இது முக்கியமல்ல
இன்று. இங்கு தகுதியே தடை.போகிற போக்கில்  உறங்குவனுக்கு (யார் என்று தெரியா நபருக்கு) மகுடம் சூட்டும் காலம் இது.

இதையும் புறம் தள்ளி,இன்னும் எந்த எதிர்பார்ப்பும்இல்லாமல்அரசியல்களத்
தில் சிலர் உழைத்து கொண்டுள்ளனர்.

இப்படி ஏதாவது ஓர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.  பாறைகளைக்கூடச் சிறு உளி பிளக்க வாய்ப்புண்டு என்பதனை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.பலா பலனில் மீது பற்று வைக்காமல் கடமையைச் செய்தேன் என்ற நிலைப்பாட்டில் இருங்கள்,

வெற்று அரட்டைகளும், குப்பை ஆசைகளும் உங்களுக்குப் பெரிதாக தெரியும்.அதை ஆழமாக திடமாக சிந்தித்தால்  உங்களுக்கே வேடிக்கையாக படும். 
ஆனாலும்,நம்மை யாராவது தள்ளி விட்டாள்....!
நிதானமாக நிமிர்ந்து பாருங்கள்....!
ஒரு மாயை வெற்றி சிறப்பாக நம்மை வரவேற்கும் ....! கதவு திறக்கும். வழி தெரியும் என்ற நம்பிக்கையில் பயணம் 
அசதி இல்லாமல் தொடர வேண்டும்.

கைபேசி  பயன்படுத்தும்  கூட்டம் அரசியல் சக்தியைத் தீர்மானிக்கப் போகும் காலகட்டம் தான் இங்கே பெரிய பல மாறுதல்களை உருவாக்கப் போகின்றதா?

அவர்களுக்குப் பழைய வரலாறு என்பது குப்பை.  தியாகம் என்பது  வெற்று வேலை. அவர்களுக்கு எளிதான சுகமாக வாழ்க்கை வேண்டும். அதனை யார் தருகின்றார்களே அவர்கள் பின்னால்அணிவகுப்பார்கள்.இப்படித்
தான் இனி வரும் காலம்.அதையும்
கடக்க வேண்டும்.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.  எந்தச் செயலும் மேலேறிக் கொண்டேயிருக்காது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஆதரித்தாலும், ஆதரிக்க மறுத்தாலும் இயற்கை சூட்சமத்தில் காலத்தை உங்களால் மாற்ற முடியாது. அது அதன் போக்கிலேயே அளவிட்டு நகர்ந்து கொண்டேயிருக்கும். கால தேச வர்தமானம்  என்று போக்குகள், நேர்மையின் நிலைப்பாடு, சூழ்நிலைக்கு ஏற்றநியாயங்கள்,அடையாளங்கள்,
முகங்கள் மாறும் என்பது ஊழ்,இயற்கையின் விதி. மாற்றம் என்பது மட்டுமே மாறாத விதி . எல்லாவற்றுக்கும் இறுதி என்று ஒன்று உண்டு.

‘Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.’
(Julius Caesar Act 2, Scene 2)

 ‘Full fathom five thy father‘If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?’
(The Merchant of Venice Act 3, Scene 1)

‘Beware the Ides of March.‘
(Julius Caesar Act 1, Scene 2)
-Shakespeare

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
22-7-2021.


Wednesday, July 21, 2021

இதுதான் இன்றைய மக்கள் நல அரசியல்.

எழுச்சி பேருரை…
உரை வீச்சு…என்ற பம்மாத்து-
போலி பாசாங்கு ;
இணையத்தில் அர்த்தமற்ற அரசியல்…..
ஊடக வெட்டிவிவாதங்கள்….
தகுதியற்றவர்களுக்கு ஊடக வெளிச்சம்..
இதுதான் இன்றைய  மக்கள் நல அரசியல்.
#ksrpost
21-7-2021.


Tuesday, July 20, 2021

#தோழர்_ஏ_நல்லசிவன்_அவர்கள்_

#தோழர்_ஏ_நல்லசிவன்_அவர்கள்_நினைவு_நாள்(20..07..2021)
———————————————————
“ உணர்ச்சிபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாக
மார்க்சீயத்தைப் புரிந்து கொண்டவன் நான்.அரசியல் களத்திலும் சமுதாயத்திலும் 
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே
சோசலிச மாற்றம் ஏற்படும் என்ற புரிதலுடன்தான் பொது வாழ்வைத் தொடங்கினேன் . இன்றைக்கு நம் மக்கள் அனுபவிக்க முடிகிற உரிமைகளும் முன்னேற்றங்களும் இதுவரை நடந்த போராட்டங்களின் விளைவுதான் “ 

 தோழர் நல்லசிவன் மனம்திறந்து சொன்ன வார்த்தைகள் இவை.



பகைவனையும் நண்பராக்கும் பணிவு நிரம்பியவராக தோழர் நல்லசிவன் விளங்கினார் .

1940 ஆம் ஆண்டு நாடு அடிமைப்பட்டிருந்த காலம் . கோரக்பூரில் ஜவஹர்லால்நேரு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்டம் அம்பையில் மாணவர்களின் கண்டன ஊர்வலம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டபோது நல்லசிவனுக்கு வயது 18. 

அப்போது அவருக்கிருந்த தேசப்பற்றும் , சமூக அக்கறையும் , அநீதியை எதிர்க்கும் ஆற்றலும் ,அவருடைய 75 ஆவது வயதிலும்  குன்றிமணி அளவும்குறையாது இருந்தது.

சந்தனவீரப்பன் வேட்டை என்ற பெயரில் வாச்சாத்தி மலைமங்கையரை காவல்துறை
சின்னாபின்னப்படுத்தியதை எதிர்த்து நீதி விசாரணை வேண்டி டில்லி உச்சநீதிமன்றம் வரை பிரச்சினையைக் கொண்டு சென்றபோதும், 

சிதம்பரம் அண்ணாமலைநகர்
காவல்நிலையத்தில் பத்மினி என்ற ஏழைப்பெண்மணி பாலியல் கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து அவர் நடத்திய
போராட்டத்திலும் ..18 வயதிலிருந்த அதே வேகத்தைக் காட்டியவர் தோழர் நல்லசிவன்.

ஆசிரியராக, அன்னைபூமியின் விடுதலை வீரராக  , தொழிலாளர்களின் அன்பிற்கினிய துணைவனாக , கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டனாக, தலைவனாக இருந்து புதிய தலைமுறைக்கு எளிய பாதையைக் காட்டியவர் நல்லசிவன் .

1946-47 இல் விக்கிரமசிங்கபுரம் கொலை வழக்கில் விசாரணைக்கைதி.

1949-52 இல் நெல்லை சதி வழக்கில் விசாரணைக் கைதி

1962-63இல் பாதுகாப்புக் கைதியாக மதுரை, மேலூர் சிறைச்சாலைகளில் .

1965-66இல் பாதுகாப்புக் கைதியாக கடலூர் சிறையில் .

1978-84இல் மேலவை உறுப்பினராக 

1989-95இல் மாநிலங்களவை உறுப்பினராக
டில்லி நாடாளுமன்றத்தில் .

சிறைச்சாலையானாலும் , கட்சிப் பொறுப்புகள் ஆனாலும் மக்கள்மன்றப் பதவிகளானாலும் எல்லாம் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கே என்ற ஈடுபாட்டோடு தொண்டால் பொழுதளந்தவர் தோழர் நல்லசிவன் .

தோழர் ஏ என் ஒரு நல்ல மேடைப் பேச்சாளர் அல்ல..! ஆனால் மூன்று முறை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 

அதற்குக் காரணம் ஓய்வற்ற அவரது உழைப்பும் ,ஒருங்கிணைக்கும் வலிமையும் நிர்வாக மேன்மையும்தான் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ தலைவர்களின் கருத்து. அவர் மாநிலச் செயலாளராக இருந்த காலத்தில்தான் தமிழகத்தில் 17  எம் எல் ஏக்களை சிபிஎம் பெற்றிருந்தது.

உடல் நலிவுற்று திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நல்லசிவனை 1996இல் பார்க்கச் சென்ற தோழர்களிடம் அவர் தெரிந்துகொள்ள விரும்பியதெல்லாம் தமிழகத்தில் கலவரத் தீ அணைந்துவிட்டதா என்பதைப் பற்றித்தான்.

“ தோழர், நீங்கள் அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் “ என்று வேண்டிய தோழர்களிடம் ,” நிலைமைகள் இப்படியிருந்தால் எப்படித் தோழர்களே தூக்கம் வரும்?” என்று கலங்கினாராம் தோழர் நல்லசிவன்.

என் மீது அன்பு கொண்டவர். எனது 
உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற
நூலுக்கு நல்ல அணிந்துரையும் 1994இல் ஏஎன்வழங்கினார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
19-7-2021.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகை, தொடர்ந்து செய்திகளாக வருகின்றன. அதில் ஒர் விடையம்; கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் கலைஞர் தலைமையில் ஆட்சிக்கு வந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகை,  தொடர்ந்து செய்திகளாக வருகின்றன.

அதில் ஒர் விடையம்;

கடந்த  1989 சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் கலைஞர் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. நான் அப்பொழுது வேட்பாளராக கோவில்பட்டி தொகுதியில் திமுக  போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய  நேரம். அது என்னுடைய அரசியலில் வாழ்வில் பெரிய அடி. அது வேற விஷயம்.

கழக ஆட்சி அப்போது அமைந்து 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அன்று பட்ஜெட் முதல் நிதி நிலை அறிக்கையை கலைஞர் அவர்கள் தாக்கல் செய்யும்பொழுது நான் சட்டமன்றத்தில் பார்வையாளர் மாடத்திலிருந்து கவனித்தேன். இத்தனைக்கும் மேலிருந்து கீழே  சட்டமன்ற நிகழ்வுகளை சரியாக  நன்றாக கவனிக்க முடியும். அன்று நடந்தது என்ன?

பட்ஜெட் தாக்கல் அன்று அ.தி.மு.க வினர் கூட்டம் கூட்டமாக கோட்டைக்கு வந்தனர். பல கார்கள் புடைசூழ, எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா கோட்டைக்கு 10.50. முன்னரே, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் வந்தார். சட்டசபையில் தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது மணி காலை 11 மணிக்கு சபை கூடியது. சபாநாயகர் தமிழ்குடிமகன், திருக்குறளை வாசித்தார். உடனே, சட்டசபை காங்கிரஸ் துணைத்தலைவர் குமரி அனந்தன் எழுந்து, ''ஜெயலலிதா கடிதம் விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் துரை, சபையின் உரிமையை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் கலைஞர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருகிறோம்' என்றார்.மூப்பனார்,எஸ்.அழகர் சாமி , (சிபிஐ) அவையில் இருந்தனர்

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா எழுந்து, ''முதல்வர் மீதும் போலீஸ் கமிஷனர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தை கொடுத்துள்ளேன். எனது டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறேன்'' என்று பேசினார். வழக்கத்துக்கு  மாறாக, சஃபாரி உடையில் வந்திருந்த முன்னாள் பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் பேசினார். அவர், 'தி.மு.க-வுக்கு ஆதரவாக பேசினார்' என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநயகர் தமிழ்குடிமகன், ' பி.எச். பாண்டியன் இருக்கையில் அமர வேண்டும்' என்று உத்தரவு போட்டுவிட்டு, 'இங்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்னை குறித்து அலசி ஆராய்ந்து வரும் திங்கள்கிழமை பதில் கூறுகிறேன். இப்போது பட்ஜெட் உரையை முதல்வர் வாசிக்கலாம்' என்று அறிவித்தார். கருணாநிதி பட்ஜெட் உரையை வாசிக்க எழுந்தார்.

அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் பட்ஜெட் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்க எழுந்தார். உடனே, ஜெயலலிதா குறுக்கிட்டு எழுந்து ஓர் அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். ''முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று அவர் சொன்னவுடன்,. அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர் முன்னேறி சென்று கலைஞர் கையில் இருந்த பட்ஜெட் உரையை கிழித்தனர். அப்போது  நடந்த தள்ளுமுள்ளுவில் கலைஞரின் மூக்குகண்ணாடி  நழவியது.செருப்புகள் வீசப்பட்டன. எழுந்தவுடனே “யூ கிரிமினல்”, எப்படி நீங்கள் சமர்ப்பிக்க முடியும் என்று ஜெயலலிதா வம்பு இழுத்தபொழுது, தலைவர் ஏன் என்று ஒரு கேள்வி கேட்டார். உடனே தலைவருடைய முகக் கண்ணாடியை நோக்கி, கையால் அடிக்கவும் பாய்ந்ததெல்லாம் உண்டு. அப்பொழுது அதை பாதுகாக்க வேண்டும் என்று இன்றைக்கு மு.கண்ணப்பன் இருக்கும் அன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் என்று நினைக்கின்றேன். உடனே பேராசிரியரை தாண்டி சாதிக் பாஷா நாஞ்சிலரைவை தாண்டி, அவர் முன்னிலையில் வந்தார். அதற்குப் பிறகு அடுத்துதான் துரைமுருகன் இருந்தார். 
அவரும் எழுந்து நின்றார். உடனே துரைமுருகன் ஜெயலலிதாவின் சேலையை இழுத்தார் என்று ஒரு கதையை கட்டினார்கள். 

துரைமுருகன், கலைஞர் தலைவர், பேராசிரியர், சாதிக் பாஷா, நாஞ்சில் மனோகரன் அதற்குப் பிறகு மு.கண்ணப்பன், இவர்களைத் தாண்டி அவர் இருந்தார். அதன்பிறகு கே.பி.கந்தசாமி அறநிலையத்துறை அமைச்சர் இருந்தார்.
அதற்குப் பின்தான் கோ.சி.மணி,  ஆற்காடு வீராசாமி,  பொன் முத்துராமலிங்கம், வீரபாண்டிய ஆறுமுகத்தைத் தாண்டி அந்த அமைச்சர்கள் வரிசையில் வடகோடியில்  துரைமுருகன் இருந்தார். 
உடனே துரைமுருகன் தான் எதிரிலிருந்து அந்தப் புடவையை இழுத்தார்  துச்சாதனனைப் போல செய்ததாக தப்பாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். 
அப்போது உடனே தலையை தன் கையால் கோதி முடியை கலைத்தார் புடவையை கசக்கி கொண்டார்.
ஜெயலலிதா. அன்றைக்கே கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, செங்கோட்டையன் போன்றவர்கள்எல்லாம்ஜெயலலிதாவைசுற்றி சட்டமன்றத்தில் நின்று ஜெயலலிதா ஆதரவாக திமுக ஆட்சிக்கு
எதிராகசத்தம் எழப்பினர்.இருந்து அன்றைக்கு செய்த பிரச்சாரம் எல்லாம் மறந்து விட முடியாது.

அ.தி.மு.க உறுப்பினர்கள், திருநாவுக்கரசர், செங்கோட்டையன், அண்ணாநம்பி முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.,
உடன் இருக்க சபையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ''துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்து கிழித்தார். அப்போது கீழே விழுந்ததில் எனது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலமைச்சர்  மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லித் திட்டினார்.  தி.மு.க-வினர் என்னுடைய தலையைக் குறிபார்த்து தாக்குதல் தொடுத்தனர். சட்டசபைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள். இந்த அரசு நீக்கப்படவேண்டும்'' என்று உண்மைக்கு புறம்பாக பேட்டி கொடுத்தார்.

தலைவர் கலைஞருக்கு கண்ணில் சிறிய காயம் ஏற்பட்டு உடனே மருத்துவர் வந்து பேரவை தலைவர்  தமிழ்குடிமகன் அறையில் வைத்து  சிகிச்சை அளிக்கப்பட்டது.அமைச்சர்வீரபாண்டிஆறுமுகத்தை அரசு பொது மருத்துவ
மனைக்கு கொண்டு செல்லபட்டார். அன்றைக்கு நடந்தது. எல்லாருக்கும் தெரியும். 

அன்றைக்கு பத்திரிகையாளராக இருந்த பலபேரும் அன்றைக்கு இதையெல்லாம் கவனித்ததும் உண்டு.

ஆளுநர் மாளுகைக்கு விரைந்தார் ஜெயலலிதா... தனது ஆதரவாளர்கள் திருநாவுக்கரசர், செங்கோட்டையன், அண்ணாநம்பி முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன். மற்றும் சிலருடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனுக்கு திரும்பிய பிறகு.. செய்தியாளர்களிடம் ஜெ. ஒரு பெண்ணுக்கு சட்ட சபையிலேயே பாதுகாப்பு இல்லை என இட்டு கட்டி கூறினார்.

அன்றைக்கு இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள். அண்ணன் துரைமுருகன் அந்தப் பக்கத்திலேயே இல்லை. வடகோடியில்  இருந்தார், 6, 7 அமைச்சர்கள் தாண்டி இருந்தார். எப்படி கலைஞரும் நேரில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் இருக்கையில், எப்படி குறுக்கில் பெரிய மேஜை இருக்கும்பொழுது மேஜையில் ஆவணங்கள் இருக்கும் பொழுது, பத்து நபர்களை தாண்டி அவர் வந்து புடவையை இழுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் அன்றைக்கு தவறான மாதிரி பேசப்பட்டது.
ஜெயலலிதாவுடன் உடனிருந்தவர்கள் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  செங்கோட்டையன் போன்றவர்களெல்லாம் இருந்தார்கள். சொல்லவேண்டியதை சொல்லி தானே ஆக வேண்டும். வரலாறு அல்லவா. மறைக்க முடியாது அல்லவா.  
கிட்டத்தட்ட எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு ஆட்சி போய் மறுபடியும்1989 களில் ஆட்சிக்கு வந்து,   அந்த ஐந்து ஆண்டுகளில் கூட ஆள முடியாமல்  பிரதமர் சந்திரசேகர் காலத்தில் திமுக ஆட்சியைகலைத்தாரே அதற்கு யார் காரணம். 
நிதிநிலை அறிக்கையில் நியாயமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. அதை தேவையில்லாமல் சர்ச்சை பண்ணியது யார்? அதை எல்லாம் திருப்பி பார்க்க வேண்டும். இன்றைக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம். மக்களுக்கு தெரியாது. 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மக்களுக்கு மறதி அதிகம் என்று நினைத்துக் கொண்டு பலரும் பேசுகிறார்கள், தியாகவான்கள் மாதிரி. என்ன தியாகம் செய்துவிட்டார்கள். அவர்கள் பிழைத்தார்கள். அவர்கள் ஒரு ஊடக வெளிச்சத்திற்கு வந்தார்கள். அவர்கள் அந்தப் பதவியை வைத்துக் கொண்டு தங்களுக்கான சுய நலத்தை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவுதானே. நாட்டுக்கு என்ன பலன். 
வழக்குகள், தண்டனை பெற்றவர்களை எப்படி கொண்டாட முடியும். இதுதான் எதார்த்த நிலை. இது அன்றைக்கு நடந்த பொழுது நான் கண் முன்னாடி பார்த்தேன். அன்றைக்கு மாடத்தில் இருந்து கவனிக்கும்போது மேலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும். 
கண்ணப்பன் தான் குறுக்கில் வந்து பேராசிரியர், சாதிக் பாஷா, நாஞ்சிலரை தாண்டி கண்ணப்பன்தான் கலைஞரை பாதுகாக்க அதை தடுக்க வந்தார். துரைமுருகன் அதற்குப் பிறகு தான் வந்தார். அவர் சேலையைத் தொடவில்லை. அந்த பட்ஜெட் ஆவணங்கள் வீசப்பட்டன. பெரிய கட்டாக இருக்கும் ஆவணங்கள். இது எல்லாம் நடந்தது உண்மை. இதை எப்படி வேண்டுமானாலும் திருப்பி பேசலாம், மாற்றி பேசலாம், பொய்யாகப் பேசலாம். பட்ஜெட் உரை கிழிக்கப்பட்ட பிறகு இரு கட்சி உறுபினர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் ஜெவின் தோளில் குத்தி தள்ளியதாகவும். பிறகு துரைமுருகன் அவர்கள் ஜெவின் சேலையை பிடித்து உருவ முயன்றதாகவும். அவரிடம் இருந்து போராடி சேலையை மீட்டுக் கொண்டு ஜெ தப்பித்தார். ஜெவை குறிவைத்து அவமானப்படுத்த திமுகவினர் திருநாவுக்கரசு, அவரை அரண் போல காத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். இந்த சண்டையின் போது ஜெ தலையில் பலமா

ஆனால் நடந்தது இதுதான். எதார்த்தமாக பாருங்கள். நடுநிலையோடு பாருங்கள்.
இதுவும் பழைய செய்திதான். 32 ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. இன்றைக்கு பேசுகிறேன் என்றால், இதை சொல்ல வருவது ஏனென்றால் நேரடியாக பார்த்தவன் என்ற முறையில். சிலர் இது எதற்கு என்பார்கள். உண்மை இருக்க வேண்டும் அல்லவா. வரலாற்றில் உண்மையான சம்பவங்கள் நெறிப்படுத்த வேண்டும் அல்லவா அதற்குத்தான் இந்தச் செய்தி. 
**********
இந்த சம்பவங்கள் நடந்து இப்போது, 32ஆண்டுகள் ஆகிவிட்டன. 2003 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சியில் பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் அந்த பிரச்னை காரசார விவாதமானது. அப்போது பேசிய ஜெயலலிதா, ''இதே சட்டசபையில் எம்.ஜி.ஆர் தாக்கப்பட்டார்.  அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். என் சேலை கிழிந்துவிட்டது. அப்போது நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆளும்கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை'' என்றார்.
துரைமுருகன்: ''நீங்கள் கூறுவது தவறு. நான் உங்களைத் தாக்கவே இல்லை. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன்''.

(அன்றைக்கு,இன்றைய முதல்வர் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து போட்டியிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அன்றைய அவையின் கொறடாவாக கடைய நல்லூர் தொகுதி எம்எல்ஏவாக கா.மு.கதிரவன் இருந்தார். பேரவைத் தலைவர் முனைவர் தமிழ் குடிமகன் இருந்தார்.)இதே நிலைதான் எம்ஜிஆர் மறைவுக்கு பின்,சட்டமன்றத்தில் ஜா, ஜெ என பிரச்சனைநடந்த போது பெரும்
குழப்பம் ஏற்பட்டது. அன்று பேரவை தலைவர் பி. எச் .பாண்டியன் . ஜெ அணியினர் சட்ட மன்ற இருக்கைகளை உடைத்து மைக்களை பிடிங்கி  கையில் எடுத்துக் கொண்டு ஓடிய காட்சிகள் என நேரில்கண்ட இந்த சம்பவத்தையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

Tailpiece 

ஊழல் வழக்குகளில் சிக்கி, முறைப்படி தண்டிக்கப்பட்டு,  சிறை சென்றவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று பொதுவாழ்க்கையிலிருந்து விலகியே இருக்க வேண்டும். அவர்கள் குறித்த செய்திகள், அவர்களின் செவ்விகளை ஊடகங்கள்பரபரப்பாகவெளியிடக்
கூடாது. 
ஆனால் தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. தியாகம், வீரம், நட்பு போன்ற சிறந்த விழுமியங்களோடு இக்குற்றவாளிகளை இணைத்துப் பேசி, கோபுரங்களில் ஏற்றிவைத்துக் கொண்டாடுகிறோம். உருப்படும் வழிமுறையா இது?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்



#KSRPost
19-7-2021.


Monday, July 19, 2021

#தென்னாபிரிக்காவில்_கலவரம்; தமிழர் உட்பட இந்திய வம்சாவளி மீது கொலை தாக்குதல்.

#தென்னாபிரிக்காவில்_கலவரம்; தமிழர் உட்பட இந்திய வம்சாவளி மீது  கொலை
தாக்குதல்.
———————————————————-
தென்னாபிரிக்காவில் கலவரம்-தமிழர் உட்பட இந்திய வம்சாவளி தென்னாபிரிக்கருக்கு சொந்தமான சொத்துகள் சூறையாடல்-200க்கு மேற்பட்டோர் கொலை-பல பில்லியன் சொத்துகள் நாசம்-முன்னாள் அதிபர் ஜேகப் சுபாவுக்கு நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை, காரணமாக கொண்டு, வறுமை, கோவிட் காரணமான பொருளாதார நெருக்கடி, வேலையில்லாமை எல்லாமாக சேர்ந்து கலவரம்- 1983 கருப்பு ஜூலை இலங்கையை போன்று போலிஸ், இராணுவம் உள்ளிட்ட  ராமபோசா அரசை கலவரத்தை நடக்க விட்டு இப்போது மெல்ல எழுந்து, இலங்கை ஜேஆர் ஜயவர்தன மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்….

The Indians are the most richest people in places like Durban . Such activities will make SA doomed . Sad story.
#ksrpost
19-7-2021.


There are risks and costs to action. But they are far less than the long range risks of comfortable inaction.

There are risks and costs to action. But they are far less than the long range risks of comfortable inaction.

I’ve learned that people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel.


Jacqueline Kennedy

Former First Lady Jacqueline Kennedy is married to Greek magnate Aristotle Onassis, 1968… That marriage was not
acceptable by world community.

And America has never forgotten nor forgiven….
#ksrpost
19-7-2021.


#The_Road_Not_Taken -#ROBERT_FROST ——————————————————— (Read by the poet Robert Frost at President Ken

#The_Road_Not_Taken 
-#ROBERT_FROST
———————————————————
(Read by the poet Robert Frost at President Kennedy's inauguration on 21-1-1961@ White House )

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.

••••••••••••••

This is one of my most famous poems . It is a poem that describes the dilemma of a person standing at a road with diversion. Robert Frost writes about the common, ordinary experiences in a simple but insightful way. The poet stands in the woods, considering a fork in the road. Both ways are equally worn and equally overlaid with un-trodden leaves. The speaker chooses one, telling himself that he will take the other another day. Yet he knows it is unlikely that he will have the opportunity to do so. And he admits that someday in the future he will recreate the scene with a slight twist: He will claim that he took the less-traveled road. This diversion symbolizes real-life situations. Sometimes, in life too there come times when we have to take tough decisions. We could not decide what is right or wrong for us. The  poem also seems more concerned with the question of how the concrete present --yellow woods, grassy roads covered in fallen leaves, will look from a future vantage point.
****
“Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.”
**********************
One of my friends gifted me a coffee mug written with this quote when I was in college. After few years I came to know that this is the most misunderstood quote…... These lines are not about the support or regret for not choosing the other. These lines are not about the road which Frost or any other person took, made him or them famous. From the first and second stanza, we know that both roads are the same. When there is a choice, chose with courage and not with cowardice. When life is difficult, our determination matters not the decision. Once the decision is made destination is not far. Because for the brave.. path doesn't matter, it's the purpose.
Then what exactly do they mean?
Here ‘difference’ is the keyword. The difference is one’s prank and the other’s passion. The difference is choosing with courage or with confusion. Sometimes when jokes are taken seriously, the ‘difference’ they make is both encouraging and devastating. For courageous dream, devotion, a determination is the staple food. Chaotic ones eat doubt for breakfast, distrust for lunch, and dispassion for dinner. Philip Edward Thomas, for whom this poem was meant, moved from confusion to courage, enlisting himself for Artists-Rifles, despite being married. He was killed in action soon after he arrived in France. His decision was brave despite depression, marital discontent, and failed suicide attempts. His decision made all the difference! From indecision to the champion.
*********************

Everyone has to follow its own path. Yet, there is also an irony into this: by choosing a path you automatically miss on what the other one might have reserved for you.

This poem makes you reflect on the fact that each day of our life is made of choices and decisions.

——————————————————————

Stopping by Woods on a Snowy Evening
-Robert Frost
—————————
Whose woods these are I think I know.   
His house is in the village though;   
He will not see me stopping here   
To watch his woods fill up with snow.   
My little horse must think it queer   
To stop without a farmhouse near   
Between the woods and frozen lake   
The darkest evening of the year.   
He gives his harness bells a shake   
To ask if there is some mistake.   
The only other sound’s the sweep   
Of easy wind and downy flake.   
The woods are lovely, dark and deep,   
But I have promises to keep,   
And miles to go before I sleep,   
And miles to go before I sleep.



#ksrpost
19-7-2021.

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...