Friday, July 23, 2021

#தமிழ்நாடு_என்று_முதன்_முதலாக_உச்சரித்து_தினசரி_ஏட்டை_துவக்கிய_சேலம்_வரதராஜ_நாயுடு_அவர்களின் #64வதுநினைவு_நாள்_இன்று.

#தமிழ்நாடு_என்று_முதன்_முதலாக_உச்சரித்து_தினசரி_ஏட்டை_துவக்கிய_சேலம்_வரதராஜ_நாயுடு_அவர்களின்
#64வதுநினைவு_நாள்_இன்று.
———————————————————
தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக தினசரியை நடத்தியவரைப் பற்றி யாரும் அறிவதில்லை இவர்தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழை முதன் முதலாக தொடங்கியவர். அதன் பின் ஆங்கில ஏடு கைமாரியது. தமிழ்நாடு தினசரியும் கருமுத்து தியாகராஜசெட்டியாருக்கு வழங்கப்பட்டு தமிழ்நாடு ஏடு மதுரையில் இருந்து தமிழ் வளர்ச்சி என்ற நோக்கத்தில் சிறப்பாக 1960 வரையில் வெளிவந்தது. இதில் ஆரம்பக்கட்டத்தில் கருமுத்து தியாகராஜ செட்டியார் விருப்பத்தின் கீழ் பழ.நெடுமாறன் ஆசிரியர் குழுவில்

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வேண்டும் என்று சங்கரலிங்கனார் விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார். அந்தத் தியாக விருப்பத்தை பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். 

சேலம் வரதராஜ நாயுடுவின் இந்தியன் எக்ஸ்பிரஸை ராம் நாத் கோயாங்காவிற்கு  சதானந்தம் மூலம் வழங்கிவிட்டார். 

வைக்கம் போராட்டத்திலும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்திலும் அதை முன்னெடுத்த இவரை யாரும் நினைப்பதும் இல்லை. பேசுவதும் இல்லை. அதற்குக் காரணகர்த்தா சேலம் வரதராஜன் நாயுடு தான். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். இவரின் கீழ் அன்றைக்கு தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் சேலத்தில் இவருடைய வீட்டில் இயங்கியது. 
உத்தமர் காந்தி, “தமிழ்நாட்டில் போர்க்களம் யாரிடம் இருக்கிறது?” என்றபோது இவரையும், பெரியாரையும்ஈ திரு.வி.க.வையும் தான் சொன்னது உண்டு, அப்படிப்பட்ட ஒரு தியாக சீலர் சேலம் வரதராஜுலு நாயுடு. 
வசதியான குடும்பம் அப்பொழுதே ஏழு பேருந்துகள் வைத்திருந்தார். ஆங்கில அரசுக்கு வரி கட்டாமல்  மறுத்து அந்தப் பேருந்துகளையும், இவரது நிலங்களையும் ஆங்கில அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டது. ஆங்கில அரசாங்கத்தைப் பார்த்து “உனக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். 

“இலங்கையில் தமிழர்கள் எப்படி இருக்கின்றனர். காந்தியும் நேருவும் இலங்கைக்குச் செல்ல வேண்டும். இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து வாருங்கள்” என்று பணித்து காந்தி அங்கே வரதராஜன் நாயுடுவை அனுப்பினார். 

இலங்கை சென்று பார்த்துவிட்டு அங்குள்ள தமிழர்கள் இலங்கை தமிழர்கள், பூர்வீக தமிழர்கள் வடக்கே-கிழக்கே இருக்கின்றார்கள். இந்தியாவில்  இருந்து சென்ற தோட்ட தொழிலாளர்கள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே தங்களது உரிமைகளை இழந்து வேதனைப்படுகிறார்கள் என்று முதன்முதலில் அங்கு சென்றுவிட்டு கருத்தைத் தமிழகத்திற்கு சொன்னவர் வரதராஜன் நாயுடு தான். இது எத்தனை பேருக்கு தெரியும். 

இன்றைக்கு தான் வரலாறு சொன்னாலே அது கடந்த காலம் விட்டுவிடுங்கள் என்று சொல்லுகிறார்கள். அது குப்பை என்கிறார்கள். என்ன சொல்ல முடியும், இந்தக் காலத்து மனிதர்களிடம். இது எல்லாம் நடந்தது உண்மை. 
தமிழ்நாடு என்று முதன்முதலாக உச்சரித்தது அவர்தான். அதுமட்டுமல்ல கடைசி கட்டத்தில், தான் இவ்வளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனக்கு அன்றாட உணவுக்குக் கூட திண்டாடினார். 
பெரியாரையோ, வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கோ இவர் செய்த உதவிகள், காமராஜரும் சி. சுப்பிரமணியம் தமிழக முதல்வராக போட்டியிடும் பொழுது, காமராஜரை முதலமைச்சராக ஆக்கியதன் பெரும்பங்கு சேலம் வரதராஜ நாயுடுவுக்கு உண்டு. அன்றைக்கு அதற்க்கு தேர்தல் அதிகாரி அவர்தான்.

இப்படிப்பட்ட ஒரு ஆளுமையை ஒரு சிலருக்கு தான் தெரிந்திருக்கிறதே தவிர, இன்றைக்கு அவர் யாரென்று யாரிடமும் கேட்டால், அவரை தெரியாதென்றுதான் சொல்லுவார்கள். அப்படியான நிலைமை. தமிழ்நாடு என்ற எப்படி வந்தது என்றால், சேலம் வரதராஜ நாயுடு தான் முதன் முதலாக உச்சரித்தார் என்பது வரலாறு. அந்த வரலாறு பதிவு செய்யவேண்டும் என்ற கட்டத்தில் தான் இதை சொல்லுகின்றேன். 
----------------

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
23-7-2021.


No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...