#காவேரி_நீர்…? #குறுவை_சாகுபடிடெல்டா_மாவட்டங்கள்.
———————————————————-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு கீழாக குறைந்துவிட்டது. தற்போது அங்கு 35 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 4000 கன அடி மட்டுமே. நீர் திறப்பு 12,000 கன அடி. இதே அளவில் நீர் திறக்கப்பட்டாலும் இன்னும் 20 - 25 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்க இயலும். ஆனால் குறுவை சாகுபடிக்கு இன்னும் 100 நாட்களுக்கு தண்ணீர் தேவை.கடை மடை பகுதி வரை நீர் செல்லவும் வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி கடந்த 2 மாதங்களில் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 35 டி.எம்.சி தண்ணீரை திறந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு டி.எம்.சி தண்ணீரைக்கூட கர்நாடகம் திறக்கவில்லை. தற்போது கர்நாடக அணைகளில் 65 டி.எம்.சி அளவிற்கான காவிரி நீர் கையிருப்பில் உள்ளது.
மேட்டூர் அணை மூடப்பட்டாலும் நிலத்தடி நீரைக்கொண்டு ஓரளவு குறுவை சாகுபடியை காப்பாற்ற இயலும். ஆனால் அதற்கு தேவை தடையில்லா மும்முனை மின்சாரம். விவசாயத்திற்கான மின்சாரமும் தற்போது முக்கியம்.
இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி….?காவேரி நீர்…?
#காவேரி #குறுவை_சகுபடி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPostings
11-7-2021.
No comments:
Post a Comment