#ராம்விலாஸ்_பாஸ்வான்_சில_நினைவுகள்…
—————————————-
மத்திய முன்னாள் அமைச்சர் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானுடன் தொடர்பு 1970களில் இருந்தே எனக்கு உண்டு.
ராம்விலாஸ் பாஸ்வான் பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினராக 1969ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்,நாடாளுமன்றத்துக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977 ல் ஹஜ்பூர் தொகுதியில் இந்தியாவிலேயே அதிகமான வாக்குகள் பெற்று நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை மாநிலங்களவைக்குத்தேர்ந் தெடுக்கப்
பட்டார்.
ஜனதா,லோக்தல், ஜனதா தள், லோக் ஜனசக்தி என்ற கட்சிகளில் இருந்தார். லோக்தல் கட்சிகளின் தலைவராக இருந்தார்.
இவருடைய சகோதரர் பசுபதி குமார் பரசும் எனக்கு அறிமுகமானவர்.
இவருடைய இளைய சகோதரர், இன்றைக்கு லோக்தல் கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஹஜ்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழு முறை பீகார் சட்டமன்ற உறுப்பினர்,
அல்லலூ தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குதேர்ந்தெடுக்கப்பட்
டார். முன்னாள் அமைச்சர் பீகார் மாநிலத்தில்.அங்கு பாஸ்வானுடைய பணிகளை இவரே எடுத்து செய்தார். அவருடைய புதல்வர் சிராக் பஸ்வான் அரசியலுக்கு வரும்வரை இவர்தான் உடன்பிறந்த சகோதரர்பாஸ்வானுக்காக அரசியல் களத்தில் நின்னவர்.
பாஸ்வானின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர். இவரும் மறைந்து விட்டார்.
சிராக் பாஸ்வானின் இரண்டாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு.
சிராக் பாஸ்வான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் லோக்தளம் தலைவராக பஸ்வான் காலத்தில் இருந்தார்.
மறைந்த ராமச்சந்திர பாஸ்வானுடைய மகன் பிரின்ஸ் ராஜ் சமஸ்டிபூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கும் சிராக் பாஸ்வானுக்கும் சரியான உறவுகள் இல்லை.
பாஸ்வானுடைய மூத்தமனைவி புதல்வி ராஜகுமாரி தேவியுனுடைய மகள் உஷா தேவி கணவர் மிர்னால் பாஸ்வான் லோக்தள் கட்சியின் சார்பில் பாஸ்வானுடைய ஆதரவில் பிகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியைக் கண்டார். பாஸ்வானுடைய முதல் மனைவியின் மற்றொரு புதல்வி ஆஷா தேவி பாஸ்வானுக்கு எதிராக போர் தொடுத்தவர். ஏனெனில்அவருடைய கணவர் அனில் குமார் சாதுவுக்கு ராம் விலாஸ் பாஸ்வான் சட்டமன்றத் தேர்தலில் 2015-ல் போட்டியிட வாய்ப்பு தராததால் பஸ்வானுக்கு எதிராகவே காய்களை நகட்டினார்.
இப்படியாக,பாஸ்வான் குடும்பத்தில் அவர் மறைந்த பின் தேவையில்லாத சிக்கல்கள் வந்துள்ளதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. சிராக் திரைப்படங்களில் நடிக்க விரும்பி திரைப்படத்தில் நடித்ததாகவும் எனக்கு ஒரு நினைவு.
சிவகாசியிலிருந்து பட்டாசுகளும், கோவில்பட்டியிலிருந்து கடலை மிட்டாய்களும் வாங்கி அனுப்பியதெல்லாம் அப்போதுஉண்டு. சிராக் பஸ்வான் இளம்வயதில் அதை விரும்பி உண்டதும் உண்டு. அவருடைய பள்ளிப் பருவத்தில் உரையாடியதும் உண்டு. ஒரு முறை சிராக் பாஸ்வான் பட்டாசு வெடிக்கும்போது அவருடைய தங்கை தீபுவின் கண்களில் பட்டு பாதிக்கப்பட்டிருந்தார். பாஸ்வனின்
தேர்தல் சுவரொட்டிகள் சிவகாசியில்
அச்சடடித்து பல சமயங்களில் அனுப்பியதுண்டு. தொலைபேசியில்
என்னிடம் ராம் விலாஸ் பேசுகிறேன் என்பார்.
இவையெல்லாம் கடந்த கால நினைவுகள். இன்றைக்கு பாஸ்வான் இல்லை.. சிராக் வழக்கும் தனது சிறிய தகப்பனார் மற்றும் மக்கள் அவை தலைவர் மீதும் தொடர்நதுள்ளார். அவருடைய குடும்பத்தில் நடக்கின்ற சம்பங்கள் வேதனை தருகின்றது. பாஸ்வானின் இரண்டாம் திருமணம் நடந்த காட்சிகளெல்லாம் இன்னும் நினைவில் இருக்கின்றது. இரண்டாவது மனைவி பஞ்சாப்பை சேர்ந்தவர். அவர் விமானபணிப்பெண்ணாகபணியாற்றியதும் உண்டு.காஞ்சிபுரம் பட்டு புடவையை
திருமணத்துக்கு என்னை வாங்கி வர
சொன்னார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPostings
11-7-2021.
No comments:
Post a Comment