Friday, July 16, 2021

#அருணா_ஆசப்_அலி (#Aruna_Asaf_Ali)

#அருணா_ஆசப்_அலி
(#Aruna_Asaf_Ali) 
———————————————————
Tributes to  #Aruna_Asaf_Ali  on her birth anniversary. She was popularly known as the Heroine of the 1942 Movement, for her brave act in the face of police repression.

அருணா ஆசப் அலி (Aruna Asaf Ali, சூலை 16, 1909 — சூலை 29, 1996) ஓர் இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர். 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை ஏற்றியவர்.

அருணாவின் இயற்பெயர் அருணா கங்குலி. பிரித்தானிய பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். லாகூர் மற்றும் நைனிடாலில் படித்தவர். பட்டம் பெற்ற பின்னர் கொல்கத்தாவின் கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரசுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசப் அலியை அலகாபாத்தில் சந்தித்தப்பிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் 
உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை விடுவிக்காததால் மக்கள் போராட்ட நடந்தது. அதன்பின்னரே விடுவிக்கப்பட்டார். 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் பங்காற்றி உள்ளார். 1958ஆம் ஆண்டு டில்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். 1964ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இருப்பினும் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை.அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Freedom fighter Aruna Asaf Ali was the bold face of the Quit India Movement during the British Raj. The first mayor of Delhi, she also hoisted the flag of the Indian National Congress at the Gowalia Tank Maidan in Mumbai.
#aruna_asaf_ali
#ksrpost
16-7-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...