உடுமலை ப. நாராயணன்
கொங்குநாட்டில் திமு கழகம் வளர்த்த செயல்வீரர் "உடுமலை தேசிங்கு" எனப் போற்றப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர். சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் போன்ற,மிகப்பெரிய ஜாம்பவான்கள், பணம்,பதவி, ஆட்சி, அதிகாரம், சாதி பலத்துடன் அரசியல் செய்த காலத்தில், மிக,மிக,மிக,மிக சாதாரண குடும்ப, பொருளாதாரப் பின்னணியோடு கழகத்தை வெற்றிப்பாதையில் வழி நடத்தியவர். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ரஜபுதன சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னிலை வகித்த போராளி.
1967 தேர்தலில் மத்திய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களை பொள்ளாச்சித் தொகுதியில் தோற்கடிப்பேன் என்றபோது, "அதற்கு உடுமலை நாராயணன் அல்ல, வைகுந்த நாராயணனாலும் முடியாது " என்று சி.சுப்பிரமணியம் கூறினார். ஆனால் அவர் நிலைமையை உணர்ந்து, பொள்ளாச்சியை விட்டு கோபி தொகுதியில் போட்டியிட்டு, புஞ்சைபுளியம்பட்டி சாமிநாதனிடம் தோல்வியைத் தழுவினார்.
1967, 71 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஆனால் விரைவில் இயற்கை எய்தினார். தொடர்ந்து இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, வெற்றிவிழாவில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரத்தாலான யானை சிலை பரிசளிக்கப்பட்டது. அப்போது தலைவர், "சிங்கத்தைப் பறிகொடுத்து யானையைப் பெற்றுச் செல்கிறேன்" என்றார். இவரின் நினைவு நாள் (27-7-1971)
புதியவர்களுக்கு சிறுகுழப்பம். உடுமலை நாராயணனும், பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவியும் ஒருவரா? என்பது. இருவரும் ஒருவரல்ல, வேறுவேறு மனிதர்கள்
No comments:
Post a Comment