Saturday, July 3, 2021

ஈழத்திலிருந்து_வந்த_செய்தி #புரிதலுக்கு…..

#ஈழத்திலிருந்து_வந்த_செய்தி
#புரிதலுக்கு…..
——————————————-
இந்திய அரசியலையோ  அல்லது தமிழ்நாட்டு அரசியலையோ விமர்சிக்கவேண்டிய நிலைப்பாடு இன்று மட்டுமல்ல எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு அவசியமோ அவசரமோ இல்லை என்பேன். 

ஈழத்தமிழர்களின் இலக்கு ஈழத்தமிழர்களுக்கான தீர்வு மட்டுமே. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக சமஷடி பற்றி சிங்கள அரசிடம் ஈழத்தமிழர்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் சிங்கள அரசின் தொடர்ச்சியான இனவழிப்பின் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான உரிமைகள் மறுதலிக்கப்பட்டு சிங்கள அரசின் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைக்குள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதே நிதர்சனம்.
ஈழத்தமிழர்களுக்கான  அறுதியும் இறுதியான தீர்வு சுதந்திரமான தமிழீழம் மட்டுமே  என்ற நிலைப்பாட்டில் ஈழத்தமிழர்கள் நிற்கின்றார்கள்.




அகிம்சையின் வடிவான மகாத்மா காந்தியின் முகத்தை கொண்டுள்ள இந்தியாவின் தலையீட்டினால் மட்டுமே தமிழீழம் சாத்தியம் ஆகும். ஈழத்தமிழர்கள் சனநாயக ரீதியான விடுதலையை மட்டுமே எதிர்பார்க்கின்றார்கள் இந்துசமுத்திர பிராந்தியத்தின் வல்லரசு நாடான இந்தியாவே தமிழீழத்தையும் சாத்தியப்படுத்தும் வல்லமை கொண்டது ஈழத்தமிழர்கள்  கடந்தகால அனுபவங்களின் ஊடாக தீர்க்கமான அரசியல் தெளிவினை பெற்றுக்கொண்டு ஜனநாயக விடிவொன்றை, சுதந்திர தமிழீழத்தை  இந்தியாவின் தலையீட்டினால்  அதன் உதவியால்பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்கள். தமிழக அரசியல்



தளம் என்பது எங்களின் ஆடு களம் இல்லை என தெளிவாக சொல்கிறேம்.

(முக்கிய குறிப்பு )
இன்றும் எதிர்காலத்திலும், இந்தியாவின் பாதுகாப்பின் அரணாக தமிழீழம் விளங்கும் என்பதை இந்திய வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்களுக்கு ஈழத்தமிழர்கள்  தீர்க்கமாகவும் தெளிவாகவும் கவனிக்க வேண்டும்.

#ksrpost
3-7-2021.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...