#*ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை விடயத்தில் சரியான புரிதல் இங்கு சிலருக்கு இல்லை….*
————————————
ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பதற்கான கோரிக்கை எழும்பியுள்ளது. மகிழ்ச்சிதான். தமிழகத்தில் கிட்டதட்ட 82-லிருந்து ஈழத்திலிருந்து அகதிகளாக, தொப்புள்கொடி உறவுகள் வந்துள்ளனர்.
ஆனால்இன்றைக்குஇரட்டைக்குடியுரிமை பிரச்சனையைச் சற்று கவனமாக நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். இங்கேயே நிரந்தரமாக தங்கியிருக்கும் ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் திருமணம் செய்தவர்களுக்கு தொழில் வியாபாரம், மற்றவைகளில் நிரந்தரமாக இங்கே இருப்பவர்களுக்கும் இரட்டை குடியுரிமை கொடுப்பது மாற்றுக்கருத்து இல்லை.
இலங்கைக்குச் சொல்லலாம், அங்கே சென்று வாழலாம். இந்தியா கொடுத்த உதவிகளை வைத்து கொண்டு இலங்கையிலே வாழலாம் என்று இருக்கின்ற அகதிகள் அங்கே செல்வதுதான் நல்லது.
ஏனென்றால் அங்கு இலங்கையில் என்ன கேட்கின்றோம், வடக்கு கிழக்கு மாநிலங்கள் எங்களுடைய பிரதான ஈழ மண், எங்களுடைய பூமி, தமிழர்கள் ஆண்ட பூமி. அது traditional Homeland என்ற உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
இந்த நிலையில் இருக்கும் பொழுது
ஈழ அகதிகளாக அங்கே இலங்கைக்கு திரும்ப விரும்புபவர்களை, எந்தவிதமான ‘staying charg’e என்று மத்திய அரசு விதித்துள்ள, அந்த வரியை நீக்கிவிட்டு அவர்களை வழி செலவு இல்லாமல இலவசமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தால் நல்லது.
இங்கேயே தங்கி விட்டால், அங்குள்ள ஈழ தமிழ் மக்கள் தொகை குறைந்துவிடும். நோக்கம் இதுவரை போராடிய ஈழம், தமிழர்களுக்கு சம உரிமை என்பது அதற்கான கோரிக்கைகளுக்கு வலுவில்லாமல் போய்விடும்.
இரட்டை குடியுரிமை கொடுக்கவேண்டும் என்பதை யாரும் தவறு என்று நினைக்கவில்லை, அதேபோல அங்குள்ள மக்கள் அங்கே சென்றால்தான் மேலும் அழுத்தமாகவும், தீர்க்கமாக மக்கள் தொகை எண்ணிக்கையில் அதிகமாக, அந்தக் ஈழம் மற்ற கோரிக்கைகள் வலுப்பெறவும், அந்தக் கோரிக்கையை மேலும் எடுத்துச் செல்லவும் நல்லதாக இருக்கும் என்பதை தமிழகத்தில்பலரும் உணரத்தவறி விட்டார்கள்.
இவற்றில் சில நுணுக்கமான (micro…) காரணங்களும் இதில் இருக்கின்றது என்பதை உணர வேண்டும். அங்கு போராட்டங்களை யார் பார்ப்பது, அங்குள்ள மக்கள் தொகை என்ன ஆவது என்பதை கவனிக்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்து என்பது கிடையாது. அதனால் இரட்டை குடியுரிமை கொடுக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக, அவை சிந்தித்து, அங்கே செல்ல வேண்டிய மக்கள், செல்ல வேண்டும் என்று விரும்பிய மக்களை இலவசமாக அனுப்பிவைத்து, அவர்களுக்கு வேண்டிய வீடுகள் அங்கே கொடுத்து, அங்கேயே வாழ வைக்கும், ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால் தான் இதுவரைக்கும் போராடியாதற்கான அர்த்தம் இருக்கும்.
அவர்கள் எல்லாம் இங்கேயே தங்கி விட்டால், அப்பொழுது அங்கே இருக்கின்ற சிங்களர்களும் மற்ற தரப்பினர்களின் எண்ணிக்கை தான் கூடுமே தவிர, தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக இலங்கையில் குறைந்து விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.07.2021.
#ksrposts
No comments:
Post a Comment