———————————————————-
#இந்தியாவின்_உண்மையான_வரலாறுவேண்டும். வரலாறு தெற்கே (தமிழகம்) இருந்து துவங்கியது……. தென்புலத்திலிருந்து உண்மையான வரலாற்றை எழுதுங்கள்..
இதை வாசித்தால் தெரியும்(மதுரையில் பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியின் அவைக்கு வடபுலத்தில் இருந்து வந்த பாணன் கன்னங்கரிய உடலும், வெண்ணிறமான பற்களும் வெள்ளை விழிகளும் கொண்டிருந்தான். தன் பெயர் சீர்ஷன் என்று அவன் சொன்னான். அவனை அவைக்காவலர் அறிவித்தபோது தன் புலவரவையில் அமர்ந்திருந்த பாண்டியன் “அழைத்து வருக!” என்று ஆணையிட்டான்.
அவன் அவைக்கு ஒவ்வொருநாளும் வடபுலத்திலிருந்து பாணரும் புலவரும் வந்துகொண்டிருந்தனர். ஆகவே மெல்லிய ஆவலே அவனிடமிருந்தது. ஆனால் வந்த பாணனின் தோற்றம் அவனை வியப்படையச் செய்தது. “வருக, பாணரே” என்று அவன் வரவேற்றான். அவைப்பீடம் அளித்து “உங்கள் வருகையால் முத்துக்களின் நிலம் மகிழ்கிறது” என்று முகமன் உரைத்தான். “அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான என் பெயர் சீர்ஷன். நான் தொல்குடிப் பாணன். வடக்கே இமைக்கணக்காடு என் குருநிலை” என்றான்.
…..பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் குருபூர்ணிமை நிறைநாள். அன்று தொல்மலைகள் எட்டிலும் சென்று அழியாப் பெருங்காவியத்தை முற்றோதுவது எங்கள் வழக்கம்.
“அதன்படி நான் தென்திசைக்கு வந்துள்ளேன். மாகேந்திரமலையின் உச்சிக்குச் சென்று அங்கே அதை ஓத எண்ணியுள்ளேன்” என்று சீர்ஷன் சொன்னான். பெருஞ்சாத்தனார் “அந்நிலம் கடல்கொண்டது என்றும் அந்த மலை நீருள் உள்ளது என்றும் நீர்தான் சொன்னீர்” என்றார். “ஆம், ஆனால் இன்னும் நான்கு நாளில் குருபூர்ணிமையில் என் ஆசிரியனின் சொல் கேட்க அந்த மலை கடலுக்குள் இருந்து எழும்” என்றான் சீர்ஷன். “நீர் ஏதோ கதைகளை நம்பி வந்துள்ளீர்” என்றார் பெருஞ்சாத்தன்.
அறுதியாக அவர் வந்து சேர்ந்த இடம் மூன்று கடல்களின் அலைகளும் இணைந்து நுரைத்த குமரிமுனை. இங்கே அவர் வந்தபோது கடல் பின்வாங்கி பாறைகளை மேலே நீட்டி அவருக்கு வழியமைத்தது. கடலுக்குள் இருந்து மாகேந்திர மலையின் உச்சி மேலெழுந்து வந்தது. அங்கே நெடுந்தவக் குமரியன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் அலைகளை நோக்கி அமர்ந்திருந்தபோது அவர் தன்னுள் மோதும் மூன்று கடல்களை கண்டுகொண்டார். நூறுநூறாயிரம் சொற்களுக்கு அப்பாலும் அவருடலில் எஞ்சியிருந்த மீன்மணம் கண்டு கீழே நீல நீரலைகளில் மீன்கணங்கள் விழித்த கண்களுடன் வந்து நின்று அலைமோதின…..
என் ஆசிரியர்கள் வந்துள்ளனர். நான் அதன்பொருட்டு பணிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இங்கிருந்து தோணியும் துழைவோரும் அளிக்கப்படவேண்டும். இல்லையேல் நானே செம்படவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு கடல்புகுவேன்” என்று சீர்ஷன் சொன்னான். “என் கடமை அது, என் சொல் என்னை வழிநடத்தும்.”
மேலும் பெருஞ்சாத்தனார் பேசுவதற்குள் பாண்டியன் கையமர்த்தி “அவர் விழைவதை அளிப்போம். அவர் சொல்லுக்கு மாமலை நீருள் இருந்து எழுமென்றால் அவர் தன் சொல்லை அதற்கு உரைக்கட்டும்” என்றான். “இம்முறை நானும் வருகிறேன். நம் அவையோரில் விரும்பியவர் உடன்வருக! தென்கடலுள் உறையும் இந்நிலத்தின் மூதாதை வடிவை காணும் பேறு எனக்கிருக்குமென்றால் அவ்வாறே ஆகுக!”-ஜெயமோகன், வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-) இப்படி தமிழக வரலாற்று பதிவுகள்., மனுடம்,வரலாறுஆதியில் தழைத்த இடம்.
இந்திய மன்னர்களின் ஆட்சியில்….
1.மெளரியர்கள்
2.சாதவாகனர்கள்
3.குப்தர்கள்
4.பாண்டியர்கள்
5.சோழரகள்
6.சேரர்கள்
7.பல்லவர்கள்
8.விஜயநகர மன்னர்கள்
9.சாளுக்கியர்கள்
10.ஆஹோம்கள்
11.முகலாய மன்னர்களின் பெயர்கள் மட்டும் வரிசையாக உள்ளன.
இதில் முகலாய மன்னர்களின் ஆட்சியை தவிர்த்து , வரிசையாக மற்ற மன்னரிகளின் சரியான பெயர்கள் மற்றும் இந்த ராஜ்யங்களின் தலைநகரத்தை பெயரிட முடியுமா? அவர்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்காள் என்று நினைக்கிறீர்கள்? அவர்களது பேரரசுகள் எவ்வளவு பரந்த அளவில் இருந்தன என்பதை பற்றியோ, ஏன் குறைந்தபட்சம் இப் பெயர்களையாவாது நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?
கடந்த 250 ஆண்டுகளுக்கு உட்பட்ட முகலாய மன்னர்களின் பெயர்களை சொல்ல. முடியும்.
மீரட் கலவரத்துக்கு முன்பே வேலூர் புரட்சி ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்தது.
இம் மன்னர்களின் காலகட்டங்களில் தான் இந்தியா உலகின் வளமான நாடாக திகழ்ந்தது. உதாரணமாக,
1.மெளரியர்கள் (550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)
2.சாதவாஹனர்கள் (500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)
3.குப்தர்கள் (400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)
4.பாண்டியர்கள் (800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)
5.சோழர்கள் (1000 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)மற்றும் சேர மன்னர்கள் ஆட்சி
6.பல்லவர்கள் (600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)
7. 7.விஜயநகர நாயக்கர் காலம்
(14 -18ம் நூற்றாண்டுவரையான காலம்)
8.சாளுக்கியர்கள் (600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)
9.வடகிழக்கை சேர்ந்த்த ஆஹோம் வம்சத்தினர் (650 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்)
பெரும்பாலனவர்களால் மேற்குறிப்பிட்ட ராஜ்யங்களிலிருந்து ஒரு மாமன்னரின் பெயரை கூட சொல்ல தெரியாது.,
நம் மன்னர்களின் பெயர்களை கால வரிசைப்படி இங்கு மறந்தே விட்டார்கள்.
ஏறக்குறைய இந்தியர்கள் அனைவருக்கும் தவறான தகவல்களே இதுவரை கற்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சாதி முறையை இந்துக்கள் தான் உருவாக்கியதாக ஒருவர் கூறுகிறார்.பிரிட்டிஷார்களின் வருகையால் தான் நமக்கு நாகரிகம், தொழில் வளர்ச்சி மற்றும் நம்மிடையே ஒற்றுமை உண்டானது என ஒருவர் கூறுகிறார். ஒருவர் இந்தியாவில் அறிவுசார் சிந்தனையே இல்லையென கூறுகிறார். இன்னும் சிலர் இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வளமான நாடாக இருந்திருக்கலாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ஏழ்மையான நாடு என கூறுகின்றார்.
மேலும்,இந்தியாவை பற்றி சிறிது கூட புரிந்து கொள்ளாமல் இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க விரும்புவது எத்தகைய விந்தையானது?
எனவே,இந்தியாவின் உண்மையான வரலாறு வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPost
18-7-2021.
No comments:
Post a Comment