#தமிழகத்தில்_சிறுதுறைமுகங்கள்
——————————————————-
குளச்சல், கன்னியாகுமரி, கூடங்குளம், மணப்பாடு, புன்னைக்காயல், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், ராமேஸ்வரம், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி பல துறைமுகங்களாகும்.
இந்த சிறு துறைமுகங்களை மீன்பிடி துறைமுகங்களாகவும், பெரிய துறைமுகங்களாகவும் மாற்ற வேண்டும் என்ற திட்டம் 1999-லிருந்து நடைமுறைக்கு வர கொள்கை திட்டங்களை மத்திய அரசு வகுத்தது.
இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் தற்போது உள்ளன. அவை, தூத்துக்குடி, சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரா தீப், கொல்கத்தா, கொச்சி, மங்களுர், மார்மகோன், மும்பை, கண்டிலா ஆகும். தீபகற்ப இந்தியாவில் தான் இந்த துறைமுகங்கள் அமைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது.
எண்ணூர் துறைமுகம் பெரும் துறைமுகங்கள் என்ற நிலையில் Major Port Trusts Act என்ற சட்டத்தில் 1963-ன் படி நிர்வாகிக்கப்படுகிறது.
தீபகற்ப இந்தியாவில் 200 துறைமுகங்கள்அடையாளப்படுத்தப்பட்டாலும் 66 துறைமுகங்கள் தான் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், இன்றைக்கு உள்ளன. சிறு துறைமுகங்கள் வளர்ச்சி பெறவும், மீனவர்களுக்காக மீன்பிடி துறைமுகங்களைச் சீர்திருத்தவும் திட்டங்கள் நிலுவையில் இருந்தாலும் அதை விரைவுபடுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPost
29-7-2021.
No comments:
Post a Comment