#தூத்துக்குடி_மாவட்ட_திட்டங்கள்….
———————————————————-
1)தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம்
2)தூத்துக்குடி யில் புதிய சிப்காட் வளாகம்,
3)பல புதிய தொழிற்சாலைகள் புதிய ஃபர்னிச்சர் தொழிற்சாலை உட்பட….
4) உப்பு தொழில் பாதுகாப்பு
5) மீன் பிடி மற்றும் கருவாடு தொழில் வளர்ச்சி … மனப்பாடு, பெரிய காயல் போன்ற மீன் பிடி துறைமுக திட்டங்கள்.
6)தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு, மிளகாய், பருத்தி, வாழை, மீன், பனை சார்ந்த தொழில்களை உருவாக்க வேண்டும். கோவில்பட்டியில் எலுமிச்சை Controlled Atmosphere Storage அல்லது ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும் .இன்று கோவில்பட்டி வட்டாரத்தில் மட்டும் சுமார் 1400 ( வில்லி சேரியில் மட்டும் 600 ஏக்கர்) ஏக்கருக்கு மேல் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
7)ஆயத்த ஆடை தயாரிப்பில் புதியம்புத்தூர் சிறந்து விளங்குகிறது, அதனை மேம்படுத்த திட்டங்கள் 8)கோவில்பட்டி, கழகுமலை, எட்டையபரம் பகுதியில் தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு.
9)எட்டயபுரத்தில் நெசவு தொழில் பாதுகாப்பு கைத்தறி உடன்குடி, 10)வேம்பார் கருப்பட்டி உற்பத்தித் தொழில்
11)தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி வளர்ச்சி….
12)பகுதியில் சடையநேரி கால்வாய் திட்டம்,
13)வடபகுதியில் கடனா – கல்லாறு இணைப்புத் திட்டம்,
14)அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்புத் திட்டம்.
15) இருக்கன்குடி அணை கால்வாய்
பாசனம் விளாத்திகுளம் வரை நீர்வரத்து
வர திட்டங்கள்.
16) தாமிரபரணி நீர் வடக்கே முத்தலா
புரம் வரை வருவதை குறித்து…
17)தகவல் தொழில் வளர்ச்சி பூங்கா….
18) தேரிக்காட்டு வளர்ச்சி திட்டங்கள்.
18) முயல் தீவு (Hare island) சீர் படுத்தல்,
19) சேது சமுத்திர திட்டம்.
20) எட்டையபுரத்தில் நாட்புற கலைகள்
ஆய்வு மையம்
21) கழகுமலை வெட்டுவான் கோவிலை
மேலும் திருத்த திட்டங்கள்.
22) கோவில்பட்டி தலைமையிடமாக தனி புது மாவட்டம்.
23) குரசேகரபட்டணம் ராக்கெட் மையம்
விரைவில் செயல்பட….
24) கயத்தாரில் சிறு தொழில் பேட்டை.
25) கோவில்பட்டி,கயத்தார் விமான நிலையங்கள் குறித்த திட்டங்கள்.
26) கோவிலபட்டி இயங்கும் நெசவு ஆலைகளின் பிரச்சனைகள்..
27) உழவர் தலைவர் சி. நாரயணசாமி நாயுடு அவர் மறைந்த கோவில்பட்டியில் சிலை.
28) கோவில்பட்டியில் விவசாய கல்லூரி.
29) இளையரசனேந்தல் பிர்கா 12 வருவாய் கிராமங்கள் சிக்கல்.
அகழாய்வுகள்
என பல திட்டங்கள்……
ஸ்டெர்லைட்,டாக்,, ஜிர்கோனியன், விவி டைட்டானியம், சீ புட்ஸ், அனல் மின் நிலையங்கள் உட்பட பல்வேறு ஆபத்தான, தொழிற்சாலைகள் சுமார் இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கி வருகின்றன. புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், நீலக்கடல் தொழிற் திட்டமும் செயல்திட்டத்தில் உள்ளன.
தூத்துக்குடியில்,ஒரே மாதிரியான மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சிவப்பு, ஆரஞ்சு பட்டியலில்இருக்கும்தொழிற்சாலைகளை மேலும் அமைப்பதால் பெரும் பாதிப்புதான் ஏற்படும்.
( தூத்துக்குடி (Thoothukudi அல்லது Tuticorin) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில், பரதவர் இன மக்கள் மீன் பிடித்தும், அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர். இன்றளவும் இம்மக்கள், சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர்.இதை நாம், அகநானூறு 350 அதிகாரத்தில் காணலாம். இம்மாவட்டத்திற்கு 'முத்து நகர்' என்ற பெயரும் உண்டு. தூத்துக்குடியில், அனல் மின் நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் (Thoothukudi district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து அக்டோபர் 20, 1986 அன்று வ. உ. சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும், குடியிறுப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூரைத் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
Traditionally known as “Pearl City” on account of the prevailing Pearl fish in the past in the area, Thoothukudi has a fascinating History. Forming part of the Pandian kingdom between 7th and 9th Century A.D., Thoothukudi remained in the hands of the Cholas during the period between 9th and 12th century. Emergence of Thoothukudi as a maritime port attracted travelers, adventures, and eventually colonizers. The Portuguese were the first to arrive in Thoothukudi in 1532 A.D., followed by the Dutch in 1658 A.D. The English Captured Thoothukudi from the Dutch in 1782 and the East India Company established their control over Thoothukudi in the same year.)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPostings
12-7-2021.
No comments:
Post a Comment