#மும்பை_சமாச்சார் :
———————————-
மும்பை சமாச்சார் ஒரு முக்கியமான பத்திரிகை. அந்தக் காலத்தில் பம்பாயிலிருந்து வந்தது. இது 200 ஆண்டு நிறைவடைகின்றது. இதனுடைய பத்திரிகை அலுவலகம் பம்பாயினுடைய ஒரு அடையாளமாக சிவப்புக் கட்டிடமாக இன்றைக்கும்இருக்கின்றது.
ஆசியாவில் முதல் செய்தித்தாளான ஹிக்கிஸ் பெங்கால்-பெங்கால் கெஸ்ட் 1780-ல் துவங்கப்பட்டது. பிறகு அந்தப் பத்திரிகையும் மூடப்பட்டது. சமாச்சார் என்ற இதழ்தான் ஆங்கிலம் அல்லாத இந்திய மொழியில் வந்த முதல் இதழ். இந்த இதழ் 1818-ல் தொடங்கப்பட்டது.
இதற்கு அடுத்து வெளிவந்தது தான் மும்பை சமாச்சார்.1822-ல் ஜூலை 1 அன்று மும்பையில், வர்தூன் ஜி, மர்சாக்கான்என்றபார்சியால்தொடங்கப்பட்டதுதான் பாம்பேசமாச்சார்.
பின்னர் மும்பை சமாச்சாராக மாற்றப்பட்டது. மும்பை நகரில் ஆங்கிலேயர்களின் காலத்தில் குஜராத்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பிறகு பம்பாய் மாநிலம் பிரிந்து குஜராத் தனியாகவும் மகாராஷ்டிரா தனியாகவும் பிரிந்த காலத்திலிருந்தே இந்தப் பத்திரிகை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
1930-களில் இந்த இதழ் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் இதற்கு கை கொடுக்க பல நண்பர்களும் வந்தார்கள். இந்தப் பத்திரிகைக்கு, பொருட்கள் வழங்கிய கா.மா.நாட்டான் என்ற ஆங்கில கம்பெனி இதன் மீது வழக்குத் தொடுத்தது. இப்படியான சிக்கலில் தள்ளாடியபோது திரும்பவும் உயிர் பெற்று மும்பை சமாச்சார், மறுபடியும் வெளி வந்தது.
மும்பை சமாச்சார் பத்திரிகையாளர்கள் அலுவலகம் போர்ட் பகுதியில் உள்ள ஹர்மனி மண் என்ற இடத்தில் இன்றைக்கும் பழமையான கட்டிடமாக இருப்பதை பலமுறை பார்ப்பது உண்டு.
அண்ணல் காந்தி, பண்டிதர் நேரு, கிருபாளினி, ஜெயபிரகாஷ் நாராயணன், எஸ்.கே.பாட்டில் என பல தலைவர்கள் இந்தப் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து சென்றதெல்லாம் உண்டு. 15000 பிரதிகள் விற்ற மும்பை சமாச்சார் தற்பொழுது கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் லட்சம் பிரதிகள் விற்பனையை எட்டிவிட்டது.
கடந்த1990 வரை மும்பையின் ஒரே குஜராத் நாளேடான இந்த மும்பை சமாச்சார் தற்போது மும்பையைத் தவிர நான்கு இடங்களில் அந்த இதழ்கள் வெளியாகின்றன. கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு மேல் அந்த இதழில் பணியாற்றுகின்றனர்.
இந்திய வரலாற்றில் மும்பை சமாச்சார் என்பது ஒரு முக்கியமான அடையாளமாகவும் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்பதை மறுக்கமுடியாது.
குஜராத் மகாராஷ்டிராவின் உடைய கலாச்சாரத்தையும், அன்றாட நடப்புகளையும் செய்திகளாக மட்டுமில்லாமல் அதை குறித்தான விமர்சனங்களும் தலையங்கங்களும் எழுதி அந்த இரண்டு மாநில மக்களின் அபிமானத்தைப் பெற்றதுதான் மும்பை சமாச்சார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPost
18-7-2021.
No comments:
Post a Comment