1."தி.ஜானகிராமன் தஞ்சாவூர்த் தமிழ், லா.ச. ராமாமிருதம் அகவய (Introvert) உலகு காட்டும் மொழி, திருநெல்வேலி
அழகு சொல்லும் கு.அழகிரிசாமி, தாவரங்களின் மொழி பேசும் 'பாரவி', கன்னியாகுமரித் தமிழை விட்டுவிட்ட
சுந்தர ராமசாமி, சேரித்தமிழ் கொஞ்சும் ஜெயகாந்தன், புதுவைத்தமிழ் பாரதிதாசன், பிரஞ்சுத்தமிழ் சொல்லும் ஆனந்தரங்கம் பிள்ளை என்று மொழியில், கலையில், சிறுகதையில் - எத்தனை உத்திகள், மண்ணின்
மணங்கள்?"
2."நான்றாந்தர மலினமான நாவல்கள் எம்விவி பெயரில் வெளியாயின. இத்தொடர்பில் அவருடனான. 'கண்ணதாசன்' இதழ் செவ்வியில் தஞ்சைப்ரகாஷ், "நீங்கள் எப்படி இந்த இலக்கிய மாரீசத்திற்கு
உடன்பட்டீர்கள்?" எனக்கேட்டார். அதற்கவர் இப்படிப் பதிலறைந்தார்:
"தமிழ் வாசகனைப் பழிவாங்கியதில் ஒரு குரூரதிருப்தி!"
3."மௌனி எழுதிய கதைகள் ஒரு இருண்ட உலகைச்
சார்ந்தவை. குபரா கதைகள் பெண்களின் அந்தரங்கங்களையே பேசுபவை. பிச்சமூர்த்தி கதைகள் அகஉலகை எதார்த்த உலகாக்குபவை.
சி.சு.செல்லப்பாவின் கதைகள் சூழ்நிலைச் சித்திரிப்பில் நிஜத்தை நிறுவுகின்றவை.இப்படி ஒரு சிறுகதை
ஆசிரியன் அவனுக்கென்று தனிஉலகத்தைத் தனது கதைகளில் ஒரு சார்பான வெளியீட்டு உலகத்தை
வாசகனுக்கு இலக்கியமாகத் தருகிறான்.
ஆனால் புதுமைப்பித்தன் என்ற மணிக்கொடிக் கலைஞன் இப்படி ஒரு சார்பான. ஓர் உலகை- அல்லாது பல
உலகங்களையே படைத்திருக்கிறார்."
"சரித்திரம்,புராணம், இதிகாசம், விஞ்ஞானம், கர்ணபரம்பரைப் பழங்கதை, வழிவழிச்செய்தி, அதீதக்
கற்பனை, கனவு என்ற விதமாய் எண்ணிலடங்காத சப்ஜக்ட்டுகளில், புதுமைப்பித்தன் வாரியிறைத்ததைப்
போலவே எம்.வி.வெங்கட்ராம் அவர்களும் பல்வேறு உலகங்களைச் செதுக்கித் தள்ளியிருக்கிறார்."-
- #தஞ்சைப்ரகாஷ்
கிராவின் கரிசக்காட்டு மொழியும் பேசும், நாட்டு புற தமிழ்……முக்கியமானது.
#ksrpost
30-7-2021.
No comments:
Post a Comment