Monday, July 5, 2021

#வாழ்க்கையில்_பதவிக்காக_எந்த_திட்டமிடுதலும்_கிடையாது. ஆனால் இலக்கு உண்டு.எல்லாம் தன்னிச்சையாக நடந்ததுதான்.

#வாழ்க்கையில்_பதவிக்காக_எந்த_திட்டமிடுதலும்_கிடையாது. ஆனால் இலக்கு உண்டு.எல்லாம் தன்னிச்சையாக நடந்ததுதான்.பெரிய எதிர்ப்பார்ப்புகள் எதுவும் கிடையாது. கிடைத்தால் சந்தோஷம் ! இல்லையென்றால் அதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. ஆசைகள்  மிகவும்  குறைவு. ஆனாலும்,பொது வாழ்வு பணிகள் தொடர்கிறது …. பெற்றது ஒன்றும் இல்லை,இழந்தது அதிகம்.தனிப்பட்ட சௌகரியங்கள் பற்றியும் ரொம்பக் கவலைப்படுவதில்லை. எளிமையே, மிகவும் சுதந்திரமாக தன்மானத்தோடு வாழ்க்கை பயணதை மகிழ்ச்சியாக முன் எடுக்க முடிகிறது.  இழப்புகள், துரோகங்களைபற்றி அக்கறை இல்லை. பணத்தாசை  கிடையாது.
இந்த அளவுக்கு  கிடைத்ததே அதிகம் என்ற மனநிறைவு….

வலிகள் தாங்கிட
வலிமை கேள்
வளையா இரும்பு போல!

முன்னாள் அமைச்சர்களின் பெயர் சொன்னால் பலருக்கு இன்று தெரிவது இல்லை.பொது வெளியில்கூட முன்னாள் இந்த நபர்கள் கண்டுகொள்வதும் இல்லை. விமான நிலையம், ரயிலடியில் நம்மை கடந்து செல்வர்கள் நமக்கு அறிமுகம்இல்லை என்றாலும் அன்பாக நலம் விசாரிகின்றனர்.  இதுதான் உண்மையான அங்கிகாரம்.இது போதும். இதுவே மகிழ்ச்சி….

விசாரணை முடித்து முன்னாள் அமைச்சர் அழைத்துக் கொண்டு சென்னை புறப்பட்டது காவல துறையின தனிப்படை என செய்திகள் வருவது நல்லதா? அவரின் கடந்த காலத்தில மான்புமிகு என அழைக்கபட்டது 
போலிதனமா? இந்த நிலை தேவையா?

“The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.”
— William Shakespeare.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
05.07.2021.
#ksrposts


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...