Thursday, March 31, 2016

நெருக்கடிநிலையும் ஆத்மாநாமின் அவசரமும்

உயிர்மை இதழில் திரு. ஆத்மாநாமினுடைய பத்தியை படிக்க நேர்ந்தது.  அவசர நிலை காலத்தில், கண்ணில் பார்த்த நிகழ்வுகளை அப்படியே படமெடுத்து எழுதியுள்ளது கவனத்தை ஈர்த்தது.

நெருக்கடிநிலையும் ஆத்மாநாமின் அவசரமும் 

நஞ்சுண்டன்

1975ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா பிரியதர்ஷிணி காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலைக் (நெருக்கடிநிலை) காலம் விடுதலை பெற்ற இந்திய வரலாற்றின் இருண்ட பகுதியாகவே இன்றுவரை கருதப்படுகிறது. அவசரநிலை அமலிலிருந்தபோதே விமர்சித்துக் கவிதை எழுதுவது வம்பை விலைகொடுத்து வாங்குவதாகத்தான் இருந்திருக்கும். ஆத்மாநாம் இது தொடர்பாக இரண்டு கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று

அவசரம்

அந்த நகரத்தில்
இருவர் கூடினால் கூட்டம்
நால்வர் கூடினால் பொதுக்கூட்டம்
சாலையில் கூட்டமாகச் செல்லக் கூடாது
வீட்டுக்குள் யாரும் நடக்கலாம்
ஒவ்வொரு வீடும் தார்ச்சாலையால் இணைக்கப்பட்டிருக்கும்
மறைவிடங்கள் அங்கில்லை
குளிப்பவர்கள் கூட்டங்கூட்டமாகக் குளிக்க வேண்டும்
தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவில் மட்டும்
சிகரெட் பிடிக்கவும் அங்கு தடை
ஆஷ்ட்ரேயை அதிகாரி பார்த்தால்
மார்ச். 2016 63
அவரை நகரத்தின் சகாராவுக்கு அனுப்புவார்
அங்கே ஏற்கனவே உள்ளவரோடு சேர்ந்து
அதனைப் பசுமையாக்க வேண்டும்
நகரத்தில் தள்ளிப்போடாத அவசரம்
உள்நாட்டு மனத் தெளிவு
நகரத்தின் மக்களுக்குக் கிடைக்கும் ஒரே டானிக்
கடுமையான உழைப்பு
பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை
அதை வாங்கு இதை வாங்கு என்று
மலிவாக ஏராளமாகக் கிடைத்தது
நகரத் தலைவரின் பொன்மொழிகள்
எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்
மந்திரிகள் அவரைப் புகழ்ந்தார்கள்
அரசாங்க அதிகாரிகள் புகழ்ந்தார்கள்
மக்கள் சுபிட்சமாக இருந்தனர்
அவசரமாக அவ்வப்போது ஒன்றுக்கிருந்து.

இது மிகச் சிறந்த அரசியல் கவிதை. கொடிபிடிப்பதும் வீதியில் இறங்கிக் கோஷம் போடுவதும் மட்டுமே அரசியல் செயல்பாடுகளல்ல. படைப்பின் மூலம் அடக்குமுறைக்கு எதிரான கருத்தாடலை முன்வைப்பதும் அரசியல் நடவடிக்கைதான். 

வரலாற்றுப் பின்னணியில் நான் இக்கவிதையை அணுகுவதால், இக்கட்டுரையில் ஏராளமான தகவல்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை. நெருக்கடிநிலை தொடர்பாக இத்தலைமுறையினருக்கு இவற்றைச் சொல்வது அவசியம் எனக் கருதுகிறேன், அதன் முழுச் சித்திரத்தையும் இக்கட்டுரையில் தருவதும் சாத்தியமல்ல. கவிதை பற்றிய விவாதத்தைவிட வரலாற்றுத் தகவல்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதை நானும் உணருகிறேன்.

1971இல் நடந்த பொதுத்தேர்தலில் இந்திராவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று அவர் பிரதமரானார். அவரது தேர்தல் வெற்றி செல்லாது என எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அரசு இயந்திரத்தைத் தேர்தலில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது, வாக்காளர்களுக்குப் பணம் தந்தது போன்ற பலகுற்றச்சாட்டுகள் இந்திராவின் மீது சுமத்தப்பட்டன.ராஜ் நாராயண் சார்பில் பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷண் வாதாடினார். இந்தியப் பிரதமர் ஒருவர்நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டநிகழ்வும் முதல்முறை நடந்தேறியது. அரசு இயந்திரத்தைத்தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி நீதிபதி சின்ஹாஇந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது எனத்தீர்ப்பளித்ததோடு, மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அவர்தேர்தலில் போட்டியிடவும் தடைவிதித்தார்.

தீர்ப்பை எதிர்த்து இந்திரா உச்சநீதிமன்றத்தில்மேல்முறையிட்டார். வழக்கை விசாரித்த வி. ஆர். கிருஷ்ணகயர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதித்ததோடுநாடாளுமன்ற உறுப்பினராக இந்திரா பெற்றுவந்தசலுகைகளுக்குத் தடைவிதித்துத் தேர்தலில் வாக்களிக்கும்உரிமையையும் நிராகரித்தார். ஆனால் இந்திரா பிரதமர்பதவியில் தொடரலாம் என 24 ஜூன் 1975 அன்றுகிருஷ்ணகயர் தீர்ப்பளித்தார்.

இந்திரா பதவி விலகக் கோரி மறுநாளே சோஷலிசத்தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி) தில்லியில்மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். அன்றுபிற்பகலில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலிஅகமதை இந்திரா சந்தித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் [Maintennance of InternalSecurity Act (MISA)] உடனடியாக - 25 ஜூன் 1975 -நாட்டில் அவசரநிலை அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் இந்திராவின் அரசியல் எதிரிகளானஜேபி, ராஜ் நாராயண், (குவாலியர் ராஜமாதா)விஜயராஜே சிந்தியா, மொரார்ஜி தேசாக, சரண்சிங்,மது தந்தவதே, அடல் பிகாரி வாஜ்பாக, அத்வானி, கிருபளானி உள்ளிட்ட பல தலைவர்கள் கைதானார்கள்.

பத்திரிகைகளுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள்.தலையங்கங்கள் உள்ளாக அனைத்துச் செய்திகளும்தணிக்கைக்கு உட்பட்டன. அவசரநிலை அமலுக்கு வந்தமறுநாள் வழக்கமான எட்டுப் பக்கங்களுக்குப் பதிலாகஇரண்டே பக்கங்களில் வெளியானது தினத்தந்தி. அதன்இரண்டாம் பக்கத்தில் கன்னித்தீவும் இடம்பெறவில்லை.கருத்துப்படத்தையும் காணவில்லை. ராம்நாத் கோயங்காஅவசரநிலையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். அவரதுஎக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு டெலிபிரிண்டர் வசதியும்துண்டிக்கப்பட்டது (அப்போது மின்னஞ்சல் கிடையாது!). மிகுந்த அடக்குமுறைக்கு ஆளான பத்திரிகைக்குழுமம் அவருடையதுதான். விளம்பரங்கள் எதுவும்கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளான கோயங்காதன் குடும்பத்துக்குச் சொந்தமான பேரளவு நகைகளைநேபாளத்துக்கு எடுத்துச்சென்று அங்கே அடகுவைத்துப்பத்திரிகைகளை நடத்தினார்.

இதற்கிடையில் 1976 ஜனவரி 31இல் தமிழகத்தில்கருணாநிதி தலைமையிலான திமுக அரசுகலைக்கப்பட்டது. அவர் மகன் ஸ்டாலின் கைதாகிச்சிறைக் கொடுமைக்கு ஆளானார். எங்கள் ஊரிலும் என்உறவினர்களான திமுகவினர் பலர் இரவோடு இரவாகக்கைதானார்கள். பல அரசியல் தலைவர்களும் மாணவர்தலைவர்களும் காணாமல்போனார்கள். பிரபலமானராஜன் வழக்கை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.கள்ளிக்கோட்டை பிராந்தியப் பொறியியல் கல்லூரியில்படித்துக்கொண்டிருந்த மாணவர் தலைவர் ராஜன்1976ஆம் ஆண்டு மார்ச்சு முதல் நாள் போலீசாரால்கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகி இறந்தார்.ஆனால் அவர் உடல் இறுதிவரை கிடைக்கவேயில்லை.‘கணக்கன்’ என்ற பெயரில் அப்போது தினமணியின்ஆசிரியராயிருந்த ஏ. என். சிவராமன் எழுதியகட்டுரைகளின் மூலம்தான் தமிழகம் ஆள் கொணர்வுமனு (Habeas corpus) என்பதை அறிந்துகொண்டது.

கர்நாடகத்தில் கைதானோரில் ஒருவர் சினேஹலதாரெட்டி. சிறையில் மிக மோசமாக நடத்தப்பட்டதால்உடல் நலிவுற்றார். அதன் காரணமாகவே விடுதலையான64 மார்ச். 2016சில நாட்களுக்குள்ளாகவே இறந்தார். பட்டாபிராமரெட்டியின் மனைவியான சினேஹலதாதான் தங்கத்தாமரை விருது பெற்ற ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தில்கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதுபெற்றவர்.

செல்வாக்கு மிகுந்த தொழிற்சங்கவாதியாகவும்லோஹியா சோஷலிஸ்ட்வாதியுமாயிருந்த ஜார்ஜ்ஃபெர்னாண்டஸ் அவசரநிலைக் காலத்தில் சாகசவீரராயிருந்தார். கைதாவதைத் தவிர்க்கத் தலைமறைவாகப்பல மாநிலங்களிலும் திரிந்தார். 1976ஆம் ஆண்டுஜூன்மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் சேலம்மாவட்டத்தில் அரியானூர் என்னும் மிகச் சிறிய ரயில்நிலையத்தில் இன்ஜின் டிரைவருடன் அவரைப் பாதுகாப்பாக ரயிலேற்றிவிட்டவர் காலஞ்சென்ற வீரபாண்டிஎஸ். ஆ றுமுகம். அங்கிருந்து கல்கத்தா சென்ற ஜார்ஜ்ஜூன் 10ஆம் நாள் மதக் கூட்டமொன்றில் மக்களோடுகலந்து போலீசாரிடம் உயிருடன் பிடிபட்டார்.

அவசரநிலைக் காலத்தில் அரசு அலுவலகங்கள்பெருமளவு ஒழுங்குடன் செயல்பட்டன. குமாஸ்தாக்கள்லஞ்சம் வாங்குவதைத் தவிர்த்தார்கள். ரயில்கள்காலதாமதமின்றி இயங்கின. இந்திய மத்திய வர்க்கம்மகிழ்ந்ததென்னவோ உண்மை. எந்தக் கெடுதலிலும்சிறிதளவாவது ஏதேனும் நன்மை இருக்கும் என்னும்யின்-யாங் தாவோ தத்துவத்துக்கு இது சிறந்தஎடுத்துக்காட்டுதான். ஆனால் மக்களிடையே பயங்கலந்தபீதி பரவியிருந்தது. மனித உரிமைமீறல்கள் கட்டற்றுநிறைவேறின. கருத்துச் சுதந்திரம் அறவே இல்லை.கண்ணுக்குத் தெரியாத கில்லட்டின்கள் நாடெங்கும்இயங்கிக்கொண்டிருந்ததான எண்ணம் மக்கள் மத்தியில்பரவியிருந்தது.

நாட்டின் வளர்ச்சிக்கான இருபது அம்சத் திட்டத்தைஇந்திரா வகுத்துத் தந்தார். அதில் ஒன்று: பேச்சைக்குறைப்பீர். செயலைப் பெருக்குவீர். ஆனால் இன்றுகைப்பேசி சேவை நிறுவனம் ஒன்றின் விளம்பரம்சொல்கிறது: பேசு இந்தியா! பேசு!

இந்திரா முழுக்க சர்வாதிகாரியானார். அரசுநிர்வாகத்தில் அவருடைய இளைய மகன் சஞ்சககாந்தியின் தலையீடு அதிகரித்தது. அவர் தூண்டுதலால்லட்சக்கணக்கான இளைஞர்களுக்குக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்வித்தது இந்திய முஸ்லிம்களிடையேபெரும் பீதியை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியினரின் வாழ்க்கை சிறைச்சாலைகளின்இருண்ட அறைகளுக்குள் முடங்கியது. ஒருவழியாகஅவசரநிலை 1977ஆம் வருட ஆரம்பத்தில் முடிவுக்குவந்தது.

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட பின்னணியையும்அக்காலகட்டத்தில் நடந்த சம்பவங்களையும் நாட்டில்நிலவிய அசாதாரண சூழலையும் அறிவது ஆத்மாநாமின்கவிதையை மேலதிகமாகப் புரிந்துகொள்ள உதவும்.இவை பற்றிய எந்தத் தகவலையும் அறியாமலும்இக்கவிதையை அணுக முடியும் என்பதை மனத்தில்கொண்டே இதை எழுதுகிறேன்.

ஆத்மாநாமின் இக்கவிதை எந்த இதழிலும்வெளியாகவில்லை. ஞானக்கூத்தன் இதைக் கையெழுத்துப்பிரதியாகவே படித்ததாக நினைவுகூர்கிறார். ஆத்மாநாம்இறந்த பிறகு வந்த தொகுப்புகளில் இக்கவிதை உள்ளது.அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்டுச் சில ஆண்டுகள்கழிந்து இந்திய மொழிகள் பலவற்றிலும் அதை விமர்சித்துஎழுதப்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துமெல்லிசான ஒரு தொகுப்பு வந்தது. அதில் இக்கவிதையின்மொழியாக்கமும் இடம்பெற்றது. ஆங்கிலப்படுத்தியவர்ஓர் அமெரிக்கர். எனக்கு இத்தொகுப்பு இதுவரைபார்க்கக் கிடைக்கவில்லை.

எதிர்ப்பைக் காட்டும் பாடல்கள் தமிழில் ஏராளம்.மன்னனோடு முனிவு கொண்டு காமரும்பூங்கச்சிமணிவண்ணனைப் பைநாகப் பாக சுருட்டிக்கொள்ளவும்மீண்டும் பாகபடுத்துக்கொள்ளவும் பாடிய புலவனையும்தமிழகம் கண்டிருக்கிறது. கொடுங்கோன்மை வேறொருநாட்டில் வீழ்ந்ததை வரவேற்று எழுதப்பட்ட கவிதையும்தமிழில் உள்ளதுதான் நாம் சிலாகிக்க வேண்டியவிஷயம். அதுவரை ரஷ்யாவில் நடைபெற்றுவந்த ஜார்மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து 1917இல்வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சி நடந்தது. அதைவரவேற்று மகாகவி பாரதி உணர்ச்சி மிகப் பாடினார்.ஜாரின் கொடுங்கோலாட்சியின் வீழ்ச்சியையும் ரஷ்யப்புரட்சியையும் வரவேற்றுப் பாடிய முதல் கவிஞன்பாரதிதான் என்பது ஐதீகம்.

புதிய ருஷியா

மாகாளி பராசக்தி உருசியநாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென்றெழுந்ததுபார் யுகப்புரட்சி; கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள்புடைத்தார் வானமரர் பேககளெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர்!
இரணியன்போலரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி
. . .
தருமந் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்
பொகசூது தீமையெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந் தோங்கினவே அந்த நாட்டில்
. . .
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் இவ்வாறங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில்
. . .
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்
. . .
திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலே!

ஜாரின் கொடுங்கோலாட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் பற்றிப் பாரதி பத்திரிகைகளின் வாயிலாகத்தான் படித்தறிந்திருக்க வேண்டும். அதாவது இவைபாரதிக்கு ‘சேகமை’. அதனால்தான் அவர் கவிதைமரபானதாகவும் செய்தி சொல்லும் தன்மையுடனும்வெளிப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கவிதைகளைப்பொருத்தளவில், தான் சொல்ல நினைப்பதை வாசகன்முழுவதுமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதைவிட்டுமார்ச். 2016 65வேறெங்காவது போகவிடக் கூடாது என்னும் பிரக்ஞைகவிஞருக்கு இருப்பது இயல்பு.

அப்படியானால் பாரதியின் கவிதைக்கும் பத்திரிகைச்செய்திக்கும் என்ன வித்தியாசம் என்னும் கேள்விஎழுகிறது. பெயர்கள், தேதி, இடம் போன்றவற்றைத்துல்லியமாகத் தந்து படிப்பவர் மனத்தில் குறிப்பிட்டபதிவை அல்லது எண்ணத்தைப் பத்திரிகைச் செய்திஏற்படுத்த முனைகிறது. காலவோட்டத்தில் மிகக்குறிப்பான புள்ளியில் செய்தியைப் பொருத்துகிறது.ஆனால் மேற்சொன்னது போன்ற கவிதைகள் பெயர்கள்,தேதி, இடம் போன்றவற்றைத் துலக்கமாகக் குறிப்பிடாமல்

காலவோட்டத்தில் மிகக் குறிப்பிட்ட ஒரு புள்ளியில்சொல்லப்படும் சம்பவங்களைப் பொருத்தும்முனைப்புகூட இல்லாமல் - சொல்லிச் செல்லும்.கடிவாளமிட்டதுபோல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைநோக்கி வாசகனைச் செலுத்த முயலும் தன்மை இப்படிப்பட்ட கவிதைகளுக்கு இருக்கும். இவற்றை நேரடித்தன்மை கொண்டவை எனலாம். கவிதையில் சொல்லப்படும் விஷயத்துக்கும் கவிஞருக்குமுள்ள சேகமைத்தொடர்பு கவிதையை நேரடித் தன்மை கொண்டதாக்கிவிடுகிறது.

நான் பாரதியைக் குறைத்து மதிப்பிடுவதாகத்தவறாகக் கருதிவிடாதீர்கள். நான் விவாதிப்பது கவிதைக்கரு ‘சேகமை’ என்னும் காரணத்தால் கவிதை வெளிப்படும் முறை பற்றி. ரஷ்யப் புரட்சி பாரதிக்கு சேகமைஆகிவிட்டதால் இது போன்ற வெளிப்பாடுதான்சாத்தியம். இது பாரதியின் குறைபாடல்ல. அக்காலத்தியகவிதை வளர்ச்சியின் எல்லை. அவ்வளவுதான். இந்தக்குறைந்தபட்ச வரையறைக்குள் பாரதி தன்படைப்பாற்றலைக் காட்டியிருக்கிறார். பாடல் தன்மைமிக்க இக்கவிதை காலங்கடந்தும் படைப்பின் பிறவகைமைகளுக்கு ஏதுவாக விளங்குவதற்குச் சிறந்தஎடுத்துக்காட்டு ஒன்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், தொழிலாளர்களைச்சுரண்டும் சிமெண்ட் தொழிற்சாலையின் நிர்வாகத்தைஎதிர்க்கும் கதைக் கருவைக் கொண்ட திரைப்படம்ஏழாவது மனிதன் (1982). பல விருதுகளைப் பெற்றது.படத்தின் அனைத்துப் பாடல்களும் பாரதியுடையவை.இசை எல். வைத்தியநாதன். பாடல்களில் ஒன்று ‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி’.

‘புரட்சி’ பாரதி உருவாக்கிய சொல். சோஷலிஸ்ட்தலைவர் ராம் மனோஹர் லோஹியா ஒருமுறை ம. பொ.சி.யின் வீட்டுக்கு வந்திருந்தாராம். புரட்சி என்னும்சொல் அவரை மிகவும் ஆகர்ஷித்திருந்தது. இந்தியின்‘க்ராந்தி’க்குப் பதிலாகப் புரட்சியைப் பிரபலமாக்கப்போவதாக அப்போது லோஹியா கூறியதாக ஞானக்கூத்தன் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்றுபுரட்சி தேகவழக்காகச் சிதைந்துவிட்டது.

ஆத்மாநாம் அவசரநிலையின்போது கைதாகுமளவுக்குச் சென்றிருக்காவிட்டாலும், அதன் கொடுமைகளைநேரடியாகவோ அருகிலிருந்தோ அறிந்திருக்கிறார்.வேறுவிதமாகக் கூறுவதென்றால், இந்தியாவின்அவசரநிலையும் அதன் தாக்கங்களும் ஆத்மாநாமுக்கு66 மார்ச். 2016‘அண்மை’. ஆகவே ஆத்மாநாமின் கவிதை அவசரநிலைதொடர்பான செய்தி சொல்வதாக இல்லாமல் பகுதிஉருவகமாகவும் அது குறித்த அவரது கருத்தாடலைவாசகனுக்கு உணர்த்துவதாகவும் வெளிப்பட்டுள்ளது.

கசடதபற, பிரக்ஞை போன்ற சிறுபத்திரிகைகளிலும்வாராந்தரி ராணி இதழிலும் ஒருசேர வெளியாகும்கவிதைகளை எழுதியவர் ஆத்மாநாம். மிக எளியநடையில், நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகளிலேயேஅவர் எழுதினார். தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஆத்மாநாம் மிகச் சிறியவயதில் ‘அவசரமாக’ப் போகவிட்டது நம்துரதிருஷ்டந்தான்.

Robert B. Downs எழுதிய The Books that Changed theWorld ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியபுத்தகம். 1956இல் முதலில் வெளியான இந்நூல் பலபதிப்புகளைக் கண்டுள்ளது. இதை ஏ. ஜி. வேங்கடாச்சாரிமொழிபெயர்ப்பில் உலகத்தை மாற்றிய புத்தகங்கள் எனநேஷனல் புக் ட்ரஸ்டிற்காகக் கலைமகள் காரியாலயம்1972இல் வெளியிட்டது. ராபர்ட் பி. டவுன்ஸ் குறிப்பிடும்உலகத்தை மாற்றிய புத்தகங்களில் முதலாவது நிகோலோமாக்கியவெல்லியின் மன்னன் [The Prince (1513)].அரசாளும் முறை பற்றி விளக்கும் இந்நூலால் உலகின்பல சர்வாதிகாரிகள் பெரும் பயனடைந்தனர். ஐந்தாம்சார்லஸ் சக்ரவர்த்தி, காதெரின் டி மெடிசி, இங்கிலாந்தின்ஆலிவர் கிராம்வெல், பிரஷ்யாவின் மகா பிரெடெரிக்,நெப்போலியன் போனபார்ட், ஜெர்மனியின் பிஸ்மார்க்,அடால்ஃப் ஹிட்லர் போன்றோர் இப்பட்டியலில்அடக்கம்.

அரசாளுவோருக்கு மாக்கியவெல்லியின் சிலஅறிவுரைகள்:

‘புத்திசாலியான ஒரு மன்னன் தன் பிரஜைகளைஅடக்கி ஆள்வதற்குக் கையாளும் பல சாதனங்களில்தண்டனை கிடைக்குமோ என்ற பயமும் ஒன்றாகும்.’

‘மன்னனிடம் மக்கள் பயப்படுவதைவிட நேசிப்பதுசிறந்ததா அல்லது நேசிப்பதைவிடப் பயப்படுவதுமேலானதா? இரண்டும் சேர்ந்திருக்கவே விரும்புவோம்என்ற பதில் ஒருவேளை அளிக்கப் பெறலாம். ஆனால்அன்பும் அச்சமும் ஒன்றாகச் சேர்ந்திருப்பது சாத்தியமல்ல.இரண்டில் ஒன்றை வரித்துக்கொள்வதாயின் நேசத்தைவிடஅச்சமே அதிகப் பத்திரமானது.’

உலகின் எல்லா சர்வாதிகாரிகளும் மாக்கியவெல்லியின்மேற்கண்ட அறிவுரைகளைச் சிரமேற்கொண்டு தங்கள்குடிமக்களை அச்சத்திலேயே வைத்திருந்தனர்.

நான் எப்போதும்சொல்வதுபோல் இந்தநவீன கவிதையையும் பலகோணங்களிலிருந்துஅணுக முடியும். கவிதைஅதற்கான திறப்புகளைத்தன்னுள்ளே கொண்டுள்ளது. அடக்குமுறைக்குப் பல பரிமாணங்கள். கவிதையில்வரும் நகரத்தை ஆட்சிபுரியும் அதிகாரம் எப்படி மக்களிடம் அச்சத்தைத் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறதுஎன்பதை மட்டும் இப்போதைக்குப் பார்த்துவிடலாம்.

சிகரெட் பிடிக்கவும் நகரத்தில் தடை. மீறி யாரேனும்சிகரெட் பிடித்தால் - அதுகூட வேண்டாம் வெறுமனேஆஸ்ட்ரேயை வைத்திருந்தாலே போதும் - அவர்நகரத்தின் தண்ணியில்லாக் காட்டுக்கு அனுப்பப்படுவார்.அதாவது தண்டிக்கப்படுவார். இந்தத் தண்டனைதருவதே அடக்குமுறை ஆட்சியில் அலாதியானது. எந்தவிதியையேனும் மீறினால் தண்டனை. அதுதண்டனைக்குரிய மீறலா என்பதெல்லாம் பொருட்டல்ல.எல்லாம் சரியாக இருக்கின்றன, மீறுபவர் மட்டுமேசரியாக இல்லை. எனவே தண்டனை. இதுதான்விதிமீறல் - தண்டனையின் கருத்தாடல். சுருக்கமாகச்சொன்னால் மீறினால் தண்டிக்கப்படுவோம் என்னும்பயத்திலேயே குடிமக்களை வைத்திருக்கும் உத்தி.

தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவுகளில் மட்டும் நகரமக்கள் குளித்துக்கொள்ள வேண்டும். அன்று நள்ளிரவுகுளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்குமா, கிடைக்காவிட்டால்என்ன செய்வது என்னும் பயத்திலேயே அவர்கள்ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய கட்டாயத்தில்வாழ்கிறார்கள்.

இப்படி - மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வேடிக்கையான செய்திகளைச் சொல்வதுபோல் தோன்றினாலும்- பயம் பிடித்தாட்டும் ஒன்றாக நகர மக்களின் வாழ்க்கைஅமைந்துள்ளதைக் கவிதை சொல்கிறது.இது நவீன கவிதையின் சாத்தியப்பாடு. நேரடித்தன்மையை முற்றாக விலக்கியுள்ள கவிதை இது.அவசரநிலைக் காலத்தில் நடந்தவையாக நான்குறிப்பிடும் நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் நிகரான பதிவுஆத்மாநாம் கவிதையில் இருக்கும் என எதிர்பார்க்கக்கூடாது.

குறிப்பிட்டதொரு நகர மக்களின் வாழ்க்கையைச்சித்தரிப்பதாக வெளிப்பட்டுள்ள கவிதையில் அவர்களுக்குள்ள சுதந்திரம் எள்ளல் தன்மையுடன் விவரிக்கப்படுகிறது. அடக்குமுறைக்குட்பட்ட வாழ்க்கையைஉருவகமாகச் சொல்லும் இக்கவிதை இந்தியாவில்அவசரநிலைக் காலகட்டத்து வாழ்க்கையைச் சித்தரிக்கும்நோக்குடன் எழுதப்பட்டிருந்தாலும், பொதுவாகசர்வாதிகாரத்துக்குள்ளான எந்ந நாட்டின் வாழ்க்கைக்கும்பொருந்திப்போவதை உணரலாம். அதாவதுஆத்மாநாமின் கவிதைக்கு உலகளாவிய தன்மைகிடைக்கிறது. வேறென்ன சொல்ல!


Mr Tony Francis,

In 1861 there was a Judge in America who thought there was nothing immoral in slavery.
Mr Abraham Lincoln had this to say.

" .... Judge Douglas ..... proceeds to assume, without proving it, that slavery is one of this little, unimportant, trivial matters which are of just about as much consequence as the question would be to me, whether my neighbour should raise horned cattle or raise tobacco; that there is no moral question about it, but that it is altogether a matter of dollars and cents; that when a new territory is opened for settlement, the first man who goes there may plant there a thing which, like the Canada thistle or some other of those pests of the soil, cannot be dug out by the millions of men who will come thereafter; that it is one of the little things that is so trivial in its nature that it has no effect on anybody save the few men who first plant upon its soil; that it is not a thing which in any way affects the family of communities composing these states, nor any way endangers the general government. Judge Douglas ignores the very well known fact that we have never had a serious menace to our political existence except it sprang from this thing, which he chooses to regard as only on par with onions and potatoes."

Quotation is from Abraham Lincoln - Life and Speeches and Letters -- Wordsworth Classics.

Sir, in agreeing to inquiry by a "hybrid court" the TNA ranks the genocide of Tamils with onions and potatoes

Wednesday, March 30, 2016

Cauvery

தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்

காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது.

     

            காவிரி வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சூலை 19 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் தலையில் இடி விழுந்தது போல் அதிர்வை உண்டாக்கி விட்டது. சூன் மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்தில் இவ்வாண்டாவது சாகுபடி தொடங்கலாம் என்றிருந்த உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொசுக்குவது போல் உள்ளது இந்த ஒத்திவைப்பு.
 

       2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று மறுக்கிறது கர்நாடக அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதே 2007 இல் வழக்குத் தொடுத்தன. ஒன்பதாண்டுகள் கடந்தும் இதுவரை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவில்லை.
 
       2013 பிப்ரவரி 19 ஆம் நாள் இந்திய அரசு காவிரித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவுகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் ஏட்டுச் சுரைக்காய்போல் அரசிதழில் வெளியிட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி.
 
       2013 மார்ச்சு மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க இந்திய அரசுக்குக் கட்டளை இடுமாறு கோரியது. அவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
 
       இந்திய அரசு மறைமுகமாகக் கொடுத்த துணிச்சலில் ஊக்கம் பெற்று காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் காலவரம்பற்று விசாரணையைத் தள்ளி வைத்தது மேலும் ஊக்கம் கொடுத்தது. அந்தத் துணிச்சலில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுப் பகுதியில் காவிரியில் புதிதாக மூன்று அணைகள் கட்டி 50 ஆமிக (டிஎம்சி) அளவிற்குத் தண்ணீர் தேக்கத் திட்டமிட்டு உலக அளவில் ஏலம் கோரி – அவ்வேலையில் மும்முரம் காட்டியது.
 
       கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டத் தடை கோரித் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கும் விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.
 
       உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் அப்போதைய ப.ச.க. முதலமைச்சர் செகதீசு செட்டர், இப்போதைய காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அவ்வழக்குகளும் விசாரிக்கப்படாமல் ஊறப் போடப்பட்டன.
 
       கடந்த 19.03.2016 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க நீதிபதி ஜே. செலமேசுவர் தலைமையில் நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து, அது 28.03.2016 அன்று விசாரணையைத் தொடங்கும் என்று அறிவித்தது.
 
       28.03.2016 அன்று இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு கூடி வழக்கு விசாரணையை 2016 சூலை 19 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து விட்டது. வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்கும் மனநிலையில் நீதிபதிகள் மூவரும் இருந்துள்ளார்கள். வேறொரு முக்கிய வழக்கு இருப்பதாகக்  கூறியுள்ளார்கள். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன் வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வழக்கில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ராகேசு துவேதி எந்த மறுப்பும் சொல்லவில்லை. நீதிபதிகள் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைத்து விட்டார்கள். தமிழ்நாடு வழக்கறிஞர் குறுவை சாகுபடி அவசரத்தைச் சுட்டிக் காட்டி கடுமையாக வாதிட்டிருந்தால் 4 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கும் அவலம் நேர்ந்திருக்காது.
 
       காவிரி டெல்டாவில் சூன் மாதம் குறுவை சாகுபடி ஐந்து இலட்சம் ஏக்கரில் தொடங்க வேண்டிய அவசர அவசியம் இருக்கும் போது, குடிநீருக்குக் கூட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் அன்றாடம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் (28.03.2016 நீர்மட்டம் 58 அடி ) மூன்றரை மாதங்களுக்கு மேல் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எப்படி ஏற்றுக் கொண்டார்? தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் இதில் என்னவாக இருந்தது?
 
        தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாலர் ஆகியோரே டெல்ட்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிவர்கள்.
 
       காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் விரைவு மனுப்போட்டு கோடைக் கால விடுமுறைக்கு முன் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிட ஏற்பாடு செய்திடுக.
பிறந்து வளர்ந்த வீட்டு வாசம் ............

திருவல்லிக்கேணியில் ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்த காலம். கம்பி வேய்ந்த கேட் கதவு. அடுத்து மூன்றடி அகலத் திண்ணை. அதையொட்டி பித்தளைக் குமிழ்களும், கைப்பிடிகளும் கூடிய தேக்குக் கதவு. அதில் பயணித்து அமெரிக்கா, லண்டன் எல்லாம் போயிருக்கிறேன்.

திண்ணை தாண்டினால் நடை. அங்கே ஆட்டுக்கல் பதிந்திருக்கும். மெருகேறிப் பளபளக்கும் கருப்புக் கருங்கல் குழவி இடைவிடாமல் கடகட வென உருண்டு ஒவ்வொரு வீட்டு இட்லி மாவையும் அரைக்கும்.

நடைக்கு அப்பால் வெயில் தெறிக்கும் முற்றம். அதன் ஓரத்தில் மாநகராட்சி அடி பம்பு. அப்புறம் மொத்த வீட்டுக்குமான ஒரே பம்பாய் கக்கூஸ்.

கீழே மூன்று போர்ஷன்களில் மூன்று குடும்பங்கள். அந்தக் குடியிருப்பில் என் வயதில் மூன்று தோழிகள். இரண்டு தோழர்கள்.

முற்றத்தில் காலை வேளைகளில் அம்மாக்கள் அடிபம்ப் அடித்து, துணி தோய்ப்பார்கள். உதவுவோம். சனிக் கிழமைகளில் அதே முற்றத்தில் அம்மாக்கள் பையன்கள் தலையில் எண்ணெய் வைத்து சூடுபறக்கத் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.

பிற்பகல் நேரங்களில் அனைத்து சமையல் அறைகளிலும் விறகடுப்புகள் எரிய வீட்டை கருநீலப் புகை சூழ்ந்திருக்கும். ஒரு போர்ஷனில் இறால் குழம்பு மணக்கும். இன்னொரு பகுதியில் பூண்டு ரசம் கொதிக்கும். இன்னொன்றில் மீன் வறுபடும்.

முற்றத்தை ஒட்டி இருக்கும் கூடத்தில் தினம் இரவு 8 மணிக்கு கிராமஃபோன் இயங்கத் தொடங்கும். ‘ஹிஸ் மாஸ்டர் வாய்ஸை’ நினைவுபடுத்தும் அதன் ஒலி பெருக்கிக் குழல் ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்ட’ நாயகியை அறி முகப்படுத்தியது. ‘பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்த’ விநோதத்தைக் கற்பித்தது. ‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனை மறக்கக்கூடாது’ என்று அறிவுறுத்தியது.

இரவு நேரங்களில் மொட்டை மாடியில் நட்சத்திரங்களைப் பார்த்துப் படுத்திருப் போம். படித்த கதைகள், கேட்ட கதைகள் எல்லாம் அந்நேரத்தில் ஒலிபரப்பாகும். யார் எப்போது தூங்கிப் போவோம்? தெரியாது!

வியாழனுக்கு வியாழன் மொட்டை மாடியில் இரவில் சாய்பாபா பூஜை நடக்கும். முடிந்ததும் பூந்தி விநியோகம் ஆகும். பத்துப் பதினைந்து முத்துக்களே கிடைக்கும் என்றாலும் அந்த பூந்தியின் சுவை இப்போது எந்த பூந்தியிலும் இல்லை. கோடை விடுமுறை நாட்களில் அதே மொட்டை மாடியில் வற்றல் பிழிவோம்.

வீட்டின் பின் சுவரில் சாணியில் வைக்கோலும், கரித் தூளும் கலந்து வறட்டி தட்டுவோம்.

வீட்டை விற்க வேண்டிய நிலைமை.

வெடிச் சத்தத்தில் திசைக்கொன்றாகப் பறந்து செல்லும் பறவைகள் போல நாங்களும் எங்கெங்கோ புலம் பெயர்ந்தோம்.

பலவருடங்கள் கழித்து அந்தப் பக்கம் போனேன். வீட்டை வாங்கியவர், ஏதோ காரணத்தால் அதை அப்படியே போட்டு வைத்திருந்தார். மூடாத கதவைக் கண்டதும் நினைவுகள் உந்த, உள்ளே நுழைந்தேன்.

மேலே ஓடுகள் காணாமல் போயிருந்தன. சிதிலமடைந்த வீட்டின் ஒட்டடைப் படலங்களில் சிலந்திகள் நிறைந்திருந்தன. சுவர்களில் செங்கற்கள் அற்றுப் போயிருந்தன. காய்ந்த சருகுகளுக்கு நடுவில் பாம்புச் சட்டை ஒன்று கிடந்தது. சமையலறைகளில் மண் அடுப்புகள் சரிந்து போயிருந்தன. வறட்டி தட்டும் சுவரின் இடுக்குகளில் செடிகள் முளைத்திருந்தன. விளக்கு மாடங்களில் குளவிக் கூடுகள்.

‘இந்த நடையில்தானே ஆற்காட்டு ஆயா சுருட்டு பிடிப்பாள்? இந்தக் கூடத்தில்தானே குடிகாரச் சோமு சிறுநீரில் நனைந்தபடி சுயநினைவின்றிக் கிடப்பார்? நிமோனியா காரணமாகச் செத்துப்போன 10 வயது பத்மினியை இந்த இடத்தில்தானே கிடத்தியிருந்தார் கள்? தி.மு.க-வை விட்டு எம்.ஜி.ஆரை நீக்கிய துக்கத்தில் திராவகம் குடித்து இறந்த தட்சிணாமூர்த்தி அண்ணா, இந்த மூலையில்தானே மைனர் செயினைக் கோத்து உருவாக்குவார்? இந்தத் திண்ணைக்குக் கீழேதானே விளையாட்டு மண் பாண்டங்களை வைத்து சுள்ளி மூட்டி, சோறும், குழம்பும் வைக்கக் கற்றோம்?

எண்ணெய் தேய்த்துவிடும் அம்மா, திருநீறு பூசிவிடும் அப்பா, கண்ணாமூச்சி விளையாடும் உடன்பிறந்தவர்கள் என்று பல காட்சித் துணுக்குகள் அவர் நெஞ் சில் அலை மோதும். 

மனம் நினைவுச் செதுக்கல்களில் வேதனையுடன் தடுக்கியது. பிரிவென்பது பெருந்துயர்தான்! ஏனென்று தெரியாமல் கீழேயிருந்து மண்ணை கைநிறைய எடுத்துவைத்துக் கொண்டு நின்றேன்.

                                                             -  சுபா
                                                          நன்றி    -  The Hindu

Monday, March 28, 2016

விவசாயிகள் தற்கொலை

இதுவரை தமிழ்நாட்டில் விவசாயிகள் கடன்தொல்லையாலும் விவசாயம் பொய்த்துப் போனதாலும் தற்கொலை செய்துகொண்டனர்.  நேற்றைக்கு கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி கிராம விவசாயி தனசேகர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். தனியாரிடம் கந்து வட்டிக்கு 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை திரும்ப செலுத்த முடியாததாலும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இதற்கு முந்தைய நாளில் உசிலம்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த பால்ராஜ் அவரைக்காய் விவசாயி நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.  இதுவரை தமிழகத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சூழல் 2012 லிருந்து விவசாயிகள் தற்கொலை நடந்தவண்ணம் இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2423 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளிவிவரங்களும் உள்ளன. இந்த துயரங்களையும், கொடுமைகளையும் நிறுத்தப்படவேண்டும்.

http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/31-08-2015-farmers-suicide-list-in.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/05/blog-post_19.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/05/urid-dhall.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/06/blog-post_3.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/07/organic-farming.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/farmer-suicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/02/formers-suicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/03/land-acquisition4.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/old-farmers-almanac.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/02/blog-post_39.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/03/get-out-from-agriculture-highly.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/07/farmer-agriculture-issue-radhakrishna.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/good-agricultural-practices-help-raise.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/today-youths-turn-back-to-natural.html
Andhra Pradesh MLAs follow Telangana's way! Demands salary hike From ₹90,000 to at least ₹2L to meet expenses and serve people better.
''தலைவரிடம் விடைபெற்றுக்கொள்ளவே வந்தேன்'' - அஞ்சாநெஞ்சன் அழகிரி.

பெரியார் இயக்கத்தின் தளபதியாக விளங்கிய அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவுநாள் இன்று (28.03.1949) !

1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுதான் அவர் கடைசியாக பங்கேற்ற மாநாடு. அப்போது அவர் காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவ விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலகட்டம்.அந்த மாநாட்டில் பங்கேற்ற அழகிரி,
''என்னுடைய தலைவர் பெரியாரிடம் விடைபெற்றுக் கொள்ளவே இந்த மாநாட்டிற்கு வந்தேன்'' என கூறியபோது, கூட்டமே கண்ணீர்விட்டு அழுதது. மாநாட்டில் இருந்து விடைபெற்ற அழகிரி வீட்டிற்கு சென்று படுத்த படுக்கையாகி நோய்வாய்ப்பட்டார். 

ஜாதியை,பார்ப்பனீயத்தை எதிர்த்து சிம்மகுராய் முழங்கிய அழகிரியின் குரல் இன்றைக்கும் தேவைப்படுகிறது.

(தோழர் விடுதலைராஜேந்திரன் அவர்களின் வாட்ஸப் உரையிலிருந்து)

Sunday, March 27, 2016

பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத்

பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத் அவர்கள் குறித்த தினமணி கதிர் கட்டுரையில் குற்றாலம் பயணத்தைக் குறித்து படிக்க நேர்ந்தது. அண்ணாவை பார்த்தது மட்டும் உண்டு. ஈ.வி.கே. சம்பத் அவர்ளோடு பழ. நெடுமாறன் அவர்கள் மூலமாக நெருக்கமும், தொடர்பும் உண்டு. கோவில்பட்டி வள்ளிமுத்து எங்கள் ஊர்க்காரர். 1989 தேர்தலில் போட்டியிடும்போது, வெற்றிபெற வேண்டும் என்று என்னை வாழ்த்தியவர்.  இவர்களை குறித்து வந்த தினமணி கதிர் பத்தி சற்று மனதை ஈர்த்தது.

அது வருமாறு:

சீசனில் குற்றாலம் செல்ல வேண்டுமென்று அண்ணாவுக்குக் கொள்ளை ஆசை. கோவில்பட்டி வள்ளிமுத்து கூட அடிக்கடி அழைப்பார். நெல்லை செல்லும்பொழுது கே.வி.கே. சாமி நினைவுபடுத்துவார். தொல்லை மிகுந்த லட்சிய வாழ்க்கையில் இந்த உல்லாசங்களுக்கு இடமேது?

கே.ஆர். ராமசாமிக்கு ஒரு யோசனை தோன்றியது. அண்ணாவையும் சம்பத்தையும் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்ற தம் எண்ணத்தை அண்ணாவிடம் வெளியிட்டபோது, ""தம்பி சம்பத் மாணவர் இயக்கத்தில் தீவிரம் காட்டுகிறான். அவன் குடந்தை வருகிறபோது சொல். நாம் போய் வரலாம்'' என்றார் அண்ணா.

அண்ணா, கே.ஆர்.ஆர்., சம்பத் மூவரும் இணைந்துவிட்டால் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார்கள். சுற்றுலா என்றால் கேட்கவா வேண்டும்?

சிந்தையைக் குளிப்பாட்டும் "சில்'லென்ற மென் தென்றல் தவழ்ந்துவரும் குளிர் குற்றாலம் சென்றனர் மூவரும். அவர்களோடு நகைச்சுவை நண்பர் சி.வி. ராஜகோபாலும் சேர்ந்து கொண்டார். பணிவிடைக்குப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தலைவர் பொன்னம்பலனார் உடனிருக்கக் குறைவேது? தென்பாண்டி மண்ணின் சிறப்புகளுக்கு ஆலோலம் பாடும் குற்றாலத் தேனருவி. ஆல விழுதிறங்கும் பான்மையில், ஆடிச் சலசலக்கும் ஐந்தருவிக் காட்சியை அவர்கள் கண்டுகளித்தனர். வெள்ளியினால் செய்த வெகு நீளச் சங்கிலி போல் வெள்ளருவி துள்ளிவரும் காட்சியைக் கண்டு ரசித்தனர். உடல்வலி போக்க எண்ணெய் தேய்த்து அருவியில் குளித்தெழுந்தால் உடலுக்குக் குளிர்ச்சி; உள்ளத்திற்கும் மகிழ்ச்சி.

தம்பி சம்பத்தை உட்கார வைத்து அண்ணா எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடன்பிறந்த அண்ணனுக்குக் கூட அந்த அளவு அக்கறை இருக்காது. தம்பி சம்பத் தளிர்க் கரங்களால் அண்ணனுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார். மகிழ்ச்சியும் குதூகுலமும் போட்டியிடுகின்றன. அண்ணாவின் நகைக்சுவை தென்றலினும் இனிமை காட்டுகிறது. அனைவரும் ஐந்தருவியில் நீராடுகின்றனர். அண்ணாவுக்குத் தண்ணீரில் இறங்கவே பயம். அவரை ராமசாமியும், ராஜகோபாலும் தூக்கி வந்து அருவியில் நிறுத்துகின்றனர். அண்ணாவோ பதறுகிறார். பாய்ந்து விளையாடும் தம்பி சம்பத்துக்குத் தீங்கேதும் ஏற்பட்டுவிடக்கூடாதென்று கவனம் முழுவதையும் தம்பியின் பக்கம் திருப்புகிறார். ""எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று தைரியம் கூறுகிறார் கே.ஆர்.ஆர்.

""அண்ணா இந்த இன்பமான சூழ்நிலையில் கே.ஆர்.ஆரின் இசை கேட்டால் எப்படி இருக்கும்?'' என்கிறார் சம்பத். உடனே எட்டுக்கட்டை சுருதியில் கே.ஆர்.ஆர். ராக ஆலாபனை செய்கிறார். சுற்றுலா வந்தவர்கள் சுகமாக இசையில் நீந்துகின்றனர். அண்ணாவுக்கு இத்தகைய அனுபவங்கள் தனிச் சுகம் தரும்.

அப்போது அங்கே மனிதனை மனிதன் இழுத்து செல்லும் கை ரிக்ஷாக்கள் உண்டு. ஆனந்தத்திலும், ஆர்வம் மிகுதியிலும் அண்ணா சம்பத்தைத் தூக்கி ரிக்ஷாவில் வைத்துத் தாமே இழுக்கிறார். சம்பத் குதித்திறங்கி அண்ணாவை ரிக்ஷாவில் ஏற வைத்து அவர் இழுக்கிறார். இப்படி ரிக்ஷா ஓட்டிக்குச் சந்தர்ப்பம் தராமலே இருவரும் மாற்றி மாற்றி ரிக்ஷா இழுப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு நாளல்ல, இரண்டு நாட்கள் குற்றால இன்பச் சுற்றுலா குதூகலம் தந்தது. காஞ்சி திரும்பிய அண்ணா, "குற்றாலம் கண்டோம்' என அந்தக் குதூகலத்தைக் கட்டுரையாகவும் தீட்டி மகிழ்ந்தார்.

- தினமணி கதிர்.


ஈழ சகோதரர் குணாலன், அண்ணன் தங்கப்பாண்டியன், தேசமுத்து - சில நினைவுகள்


இன்றைக்கு ஜெர்மனியிலிருந்து சகோதரர் குணாலன் வந்திருந்தார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுக்கு நெருக்கமானவர்.  பழைய சம்பவங்களை எல்லாம் நினைவுபடுத்தினார். 1984 என்று நினைவு. பேபி சுப்ரமணியம், நேசன், நடேசன் போன்றவர்களோடு அம்பாசமுத்திரம் பக்கம் ஆயுத பயிற்சி முகாம் பணி குறித்து சென்றுவிட்டு என் கிராமத்தில் தங்கிவிட்டு, மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு பயணித்தோம். அப்போது மாவட்ட செயலாளர் அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் உடன் பயணித்தார். அவருக்கு பேபியையும் மற்றவர்களையும் அறிமுகம் செய்து வைத்தேன். குணாலனும் உடன் வந்தார். அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் மல்லாங்கிணற்றில் இருந்து வரும்போதே எவர்சில்வர் டிபன் பாக்ஸை காலை உணவுக்காக அவருடைய வீட்டிலிருந்து இட்லி எடுத்து வந்தார். நாங்கள் திண்டுக்கல்லை நெருங்கும்போது காலை உணவுக்காக நாங்கள் வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலங்களை பிரிக்கும்போதே, அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் என்னிடம், "தம்பி அந்த பொட்டலத்தை என்னிடம் கொடுங்கள், இந்த இட்லியை பேபி சுப்ரமணியத்திடம் கொடுத்து அந்த தம்பிகளிடம் சாப்பிடச் சொல்லுங்கள்" என்று அவர் கொண்டு வந்த டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு என்னிடம் இருந்த டிபன் பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டார்.

திரு. தங்கப்பாண்டியன் அவர்கள், "இந்த தம்பிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியோடு விருந்தளிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் நான் வீட்டிலிருந்து எடுத்து வந்த இந்த உணவையாவது சாப்பிட்டால் எனக்கு சற்று திருப்தியாக இருக்கும்" என்று சொன்னார். ஒரு சமயம் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது, ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைக் கண்டித்து சுவரொட்டிகளை தென் மாவட்டங்களில் ஒட்டவேண்டும் என்று வைகோ முடிவெடுத்து கலைஞருடைய ஒப்புதலோடு பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் அவற்றை எடுத்துச் சென்று, நானும், திவானும் அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்கள் வீட்டில் காலை 8 மணி அளவில் ஒப்படைத்தோம். அப்போது ஈழப் பிரச்சினைகளில் அவரது ஆர்வத்தை அறிய முடிந்தது.  இந்த சம்பவங்களையெல்லாம் குணாலன் சொல்லும்போது மறைந்த தங்கப்பாண்டியன் அவர்களுடைய நினைவு வந்தது. இந்த நினைவோடு தொடர்பாக சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு, பெ. சீனிவாசன் போன்றவர்களோடு பழகிய நாட்களை மறக்க முடியவில்லை.

மற்றொரு செய்தியையும் குணாலன் சொல்லும்போது, "அண்ணே, தேசமுத்து என்ற ஆயிரம் விளக்கு பகுதி தி.மு.க. தொண்டர் இலங்கை தமிழர்களுக்காக நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுத்து தன்னுடைய அரசு பதவியிலிருந்தே நீக்கப்பட்டார். அப்போது உங்களைத் தேடி வரும்போது, கண்ணீர் கம்பளையுமாக இருந்தாரே. அவர் எப்படி இருக்கிறார் அண்ணா" என்று என்னிடம் கேட்டார்.

நான் சொன்னேன் 1992ல் அவர் வழக்கில் நியாயமாக தீர்ப்பு வந்து மறுபடியும் பணியில் சேர்ந்துவிட்டார் என்றேன். இந்த தேசமுத்து சாதாரண தி.மு.க. தொண்டன். ஐந்து ஆண்டு காலம் ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டு தைரியமாக, வேண்டி விரும்பி பிணைக் கையெழுத்துப் போட்டதால் பதவி இழந்து வருமையில் தனது குடும்பம் வாடியபோதும், அதை எதிர்கொண்டார். அவர் வழக்கை அக்கறையோடு நடத்தி அவர் இழந்த அரசு வேலையை திரும்பப் பெற்றுத் தந்தது.

தியாகம் செய்த தேசமுத்து இன்றைக்கும் ஆயிரம் விளக்குப் பகுதியில் பாம்குரோவ் ஓட்டல் அருகே ஒரு சாதாரண குடிசை வீட்டில்தான் குடியிருக்கின்றார்.  எங்கு பார்த்தாலும் நன்றி உணர்வோடு என்னோடு பழகுவதும், "அண்ணே, யார் யாரோ பதவிக்கு வாராங்க. 40 வருசமா ஓடி ஆடித்தான் திரியிறீங்க. என்னென்ன இது" என்று அக்கறையோடு சொல்லும்போது, அவையெல்லாம் மனதை நெகிழச் செய்கின்றது. பதவிகள், கால் செருப்புக்கு சமானம். வரும், போகும். நிரந்தரம் என்பது களப் பணியும், நாம் செய்கின்ற செயல்களும்தான் ஆளுமை. 43 ஆண்டுகளில் அரசியல் வாழ்வில் பெருந்தலைவர் காமராஜர், பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தலைவர் கலைஞர், வைகோ, என்ற ஆளுமைகளோடு வரிசைக்கிரமமாக பணியாற்றியதை எல்லாம் யாரும் மறுக்க முடியாது. இது வரலாறுதானே!  அகில இந்திய அளவில் ஏ.கே. அந்தோணி, ராம் விலாஸ் பாஸ்வான், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், நிதிஷ்குமார், மறைந்த தேவராஜ் அர்ஸ், கே.பி. உன்னிகிருஷ்ணன், மேனகா காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அனிதா பிரதாப் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் மதிக்கக் கூடிய அளவில் இருக்கின்றேன் குணாலன். இதுவே எனக்கு போதும் என்று குணாலனிடம் தெரிவித்தேன்.

இதையெல்லாம் குணாலனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது தம்பி பிரபாரகன், பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், நடேசன், திலகர் போன்ற முன்னணி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களை பற்றியெல்லாம் பேசிக்கொண்டோம்.  மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், எலியட்ஸ் பீச் போன்ற பகுதிகள்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு நடமாடிய இடங்கள். பைலட் தியேட்டர், சபையர், சத்யம், தேவி போன்ற திரையரங்குகளில் நல்ல திரைப்படங்களை பார்த்ததெல்லாம் பேசியது இன்றைக்கு ஒரு தெம்பை தந்தது.


Democracy means Demo Currency - ஜனநாயகம் என்பது பண நாயகம்தான்கிரிமினல்கள், குண்டர்கள், பண மூட்டைகள்தான் ஜனநாயகத்தின் இன்றைய அடிப்படை காரணிகள்.


Courtesy: Deccan Chronicle

கோவை கௌசிகா நதிநீர் வழிப் பாதை

கோவை மாவட்டத்தில் கௌசிகா நதிநீர் பாதை சீரமைப்புத் திட்டம் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள குருடிமலை, கொன்னூத்து மலையில் உருவாகும் கௌசிகா நதி வண்ணாத்தன்கரை, தாளமடல் பள்ளம், தன்னாசிப்பள்ளம், பெரும்பள்ளம் போன்ற ஓடைகளில் இணைந்து இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக தெக்களூர், புதுப்பாளையம் அடைந்து திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டையில் நொய்யலாற்றில் கலக்கின்றது. முன்பு வெள்ளபெருக்குடன் காணப்பட்ட கௌசிகா நதி, இன்றைக்கு மழை நீர் ஓடும் வடிகாலாக மாறிவிட்டது. இந்த நதி ஓரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித பண்பாட்டை தொல்லியல் துறையினர் ஆய்வுகள் செய்தனர். இப்போது புதர் மண்டியிருப்பதை நீர்வழிப் போக்குவரத்து பாதையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இவ்வட்டார மக்கள் விரும்புகின்றனர்.  இந்த ஆற்றை அத்திக்கடவு-அவினாசி திட்டத்தோடு இணைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.  இதனால் சிறு குளங்கள், குட்டைகள் நிரம்பி நிலத்தடி நீர் பெருகும்.  46 கிலோ மீட்டர் கொண்ட இந்த கௌசிகா நதி வழித் தடத்தை ரூ. 200 கோடியில் சீரமைத்தால் போக்குவரத்துப் பாதை 1800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  இதனால் 200 கிராமங்களுக்கு நீர் ஆதாரங்களும் கிடைக்கும்.

Saturday, March 26, 2016

லண்டனில் இருந்து வெளிவந்த தி இன்டிபென்டண்ட் நாளிதழ் நிறுத்தப்பட்டது

பிரிட்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த தி #இன்டிபென்டண்ட் நாளிதழ் இன்றுடன் தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக்கொள்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழ், நாளை முதல் இணையத்தில் மட்டுமே படிக்கக் கிடைக்கும்.

பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று இம்மாதிரி மாறுவது இதுவே முதல்முறையாகும்.

1995ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய செய்தித் தாள் ஒன்று அச்சுப்பதிப்பை நிறுத்துவதும் இதுவே முதல்முறையாகும்.

1986ல் நிறுவப்பட்ட இந்த நாளிதழ், ஆரம்பத்தில் மிக வெற்றிகரமான நாளிதழாகவே இருந்துவந்தது.

அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமைக்கென பிரத்யேகமான பதிப்பும் வெளியாக ஆரம்பித்தது.

ஆனால் சமீப காலமாக இந்த நாளிதழின் விற்பனை மிக மோசமான நிலையில் இருந்துவந்தது.

ஆனால், அதன் இணைய வடிவத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த நாளிதழின் தற்போதைய உரிமையாளரான எவ்கெனி லெபெதேவ் டிஜிட்டல் விடிவத்திற்கு மாறுவதற்கான சரியான வரலாற்றுத் தருணம் இது எனக் கூறியிருக்கிறார்.

Friday, March 25, 2016

Thamirabarani

நீரியல் சாதனையின் உச்சம் மருதூர் அணைக்கட்டு!
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
நதிகளாகிய உங்களை நவீன காலத்தில் நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பொறுத்து பார்த்துவிட்டுதான் வேறு வழியில்லாமல் அறுத்துக்கொண்டு ஓடுகிறீர்கள். கூவமே, உன் கோபம் புரிகிறது. அடையாறே உன் ஆவேசம் புரிகிறது. போதும் மழையே எங்களை விட்டுவிடு. நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்தான் எங்களில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் துயரத்தை எழுதினால் வார்த்தைகளுக்கே வலி எடுக்கும். போதும் மழையே, நாங்கள் செய்தது பிழைதான். எங்களை மன்னித்துவிடு.
மக்களின் வேதனையைக் காணச் சகிக்கவில்லை. பச்சிளங் குழந்தைகள் பால் இன்றிக் கதறுகின்றன. தண்ணீருக்குள் நின்றுகொண்டு கர்ப்பிணி தாய்மார்கள் கதறுகிறார்கள். முதியவர்கள் மயங்கிச் சரிகிறார்கள். பாத்திரங்கள், அடுப்பு, துணிமணி, உடைமைகள் எல்லாவற்றையும் அடித்துச் சென்றுவிட்டாய். உண்ண உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. ஏழைகளாகிய எங்களிடம் உயிரைத் தவிர எதுவுமே இல்லை. தனித் தீவாகித் தவிக்கிறோம். போதும் மழையே, உன்னை உணர்ந்துவிட்டோம். எங்களை மன்னித்து விட்டுவிடு. உலகின் ஆக்கமும் நீயே; அழிவும் நீயே. அத்தனை நாகரிகங்களையும் உருவாக்கியதும் நீதான். அழித்ததும் நீதான். இப்போது எங்களையும் அழித்துவிடாதே. சாமானியர்களாகிய எங்களிடம் சக்தி இல்லை.

ஒப்புக்கொள்கிறோம். உங்கள் மடி யில்தான் எங்கள் நாகரிகத்தின் வேர்களை உருவாக்கினாய். கி.மு.3200-களில் நைல் நதிக் கரை சுமேரியர்களின் நாகரிகத்தை தோற்றுவித்தாய். சுமேரிய வெள்ளங்களைக் கொண்டு பைபிளின் நோவாவை (Noa's Arc) உருவாக்கினாய். கி.மு. 1728 - 1686ம் ஆண்டுகளில் மன்னன் ஹம்முராபி உனக்காக உரு வாக்கிய தண்ணீர் சட்டம்தான் (Hammurabi codes) எழுத்து வடிவில் உரு வாக்கப்பட்ட உலகின் முதல் சட்டம். உன்னை எப்படி எல்லாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரிவாகச் சொன்னது அந்தச் சட்டம்.
உன்னைப் பராமரிப்பது ஓர் அரசனின் கட்டாய கடமை என்று அரசனுக்கே ஆணையிட்டாய் நீ. தவறுபவர்களுக்குத் தண்டனையும் தந்தாய். வாய்க்காலை பராமரிக்காமல் கரை உடைந்தால் அவரை அடிமையாக விற்க அந்த சட்டத்தால் வழி செய்தாய். ஒருவர் தனது வயலுக்கு அதிகம் தண் ணீரைப் பாய்ச்சி பக்கத்து வயல் களுக்கு சேதம் விளைவித்தால் அதற்குரிய நஷ்ட ஈட்டையும் பெற்றுத் தந்தாய்.

கி.மு.2750-களில் சிந்து நதியில் மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரி கத்தைத் தோற்றுவித்தாய். அங்கு அணை யைக் கட்ட வைத்து விவசாயத்தைப் பெருக்கினாய். விளைபொருட்களை எகிப்துக்கும் சுமேரியாவுக்கும் ஏற்றுமதி செய்ய வைத்தாய். கி.மு.2200-களில் சீனாவில் யாங்ட்ஸே மற்றும் ஹுவாங்ஹோ நதிக்கரை நாகரிகத்தைத் தோன்றுவித்தாய். கி.மு.2627-ல் சீன மன்னன் ‘வீ’ உன்னில் உருவாக்கிய 1,000 மைல்கள் நீளம் கொண்ட கால்வாய்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. கி.மு.720-களில் பாரசீகம், எகிப்து, வட இந்தியா ஆகிய பகுதி களில் மழை நீரை சேகரிக்கும் ‘குவானத்’ அமைப்புகள் (Qanat) உரு வாக்க கற்றுத் தந்தாய். கி.மு. 500-களில் பழந்தமிழர் நாகரிகத்தைத் தோற்று வித்தாய்.
ஏரிப் பாசனங்களைக் கற்றுத் தந்தாய். கி.மு.200-களில் கல் லணை கட்ட வைத்தாய். உன்னைக் கொண்டுதான் சங்க காலம், பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலங்கள் செழித்தன. உன்னைக் கொண்டுதான் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இன்று அத்தனை நாகரிகங்களும் அழிந்துபோயின. எங்கள் நாகரிகம் மட்டுமே எஞ்சி நிற் கிறது. போதும் மழையே, போதும் நதியே, உன்னை உணர்ந்துவிட்டோம். எங்களை வாழவிடு!

நதியின் நெடிய வரலாற்றை பார்த்தோம். அந்த வரலாற்றின் பண்டைய நாகரி கங்கள் அழிந்துவிட்டாலும், அவர்கள் கட்டிய அணைக்கட்டுகள் அழியாமல் நிற்கின்றன. நாயக்கர்கள் காலத்தில் (கி.பி. 1429 - 1738) திருநெல்வேலி தாமிரபரணி நதியில் பல்வேறு அணை கள் கட்டப்பட்டன. இன்றும் அந்த அணைக்கட்டுகளுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீரியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்கிறார்கள். இந்தக் அணைக்கட்டுகள் ‘ட’ மற்றும் ‘குதிரை லாடம்’ வடிவங்களில் அமைக்கப்பட்டன. ஆற்றில் ஒரு கால்வாய்ப் பிரியும் இடங்களில் ‘ட’ வடிவ அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இரு கால்வாய்கள் பிரியும் இடங்களில் குதிரை லாட வடிவ அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் நீர்வரத்து குறைந்திருந்த காலத்திலும் தண்ணீர் முழுமையாகக் கால்வாய்க்குள் செல்வதற்கு இந்த வடிவமைப்பு உதவியது. நீரியல் விதிகளின்படி ஓர் அணையின் நீர் மட்டம் உயர்வது அணையின் உயரம் மற்றும் நீளத்தைப் பொறுத்தது. அணையின் நீளம் குறைவாக இருந்தால் நீர்மட்டம் அதிகமாக இருக்கும். நீளம் அதிகமாக இருந்தால் நீர்மட்டம் குறைவாக இருக்கும்.
தாமிரபரணி நதியின் இரு பக்கங்களிலும் வயல்கள் இருந்தன. மேட்டுப் பகுதிகளில் இருக்கும் வயல் களில் இருந்து வழியும் தண்ணீரும் ஆற்றுக்குள் வடிந்தது. எனவே, இந்தப் பகுதிகளில் அணைக்கட்டுகளை கட்டு வதால் அணையில் நீர் மட்டம் விரைவாக உயர்ந்து வயல்கள் தண்ணீரில் மூழ்கும். எனவே, வயல்கள் தண்ணீரில் மூழ்காதபடி இந்த அணைக்கட்டுகள் மிக நீளமாக அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் மருதூர் அணைக்கட்டு. இதன் நீளம் 4,000 அடி. அணையில் 12 மணல் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அணையின் முன்பாக மணல் சேர்வதில்லை.
மருதூர் அணையை நீர் நிறைந்தி ருக்கும்போது நீளவாட்டத்தில் பார்த் தால் நீர்மட்டம் சரிவாக இருப்பது தெரியும். அதுதான் இந்த அணையின் தொழில்நுட்பச் சிறப்பு. அதாவது, அணையின் இடதுபுறம் தலைமதகு அருகே இருக்கும் நீர் மட்டத்தைவிட வலதுபுறம் மதகு அருகே துல்லியமாக 60 செ.மீட்டருக்கு நீர்மட்டம் உயர்ந் திருக்கும். மேலும் வலதுபுற அமைப்பே வாய்க்கால் போல் அமைக்கப்பட்டுள் ளது. இதனால், வலதுபுற மதகில் நீர்மட்டம் உயர்ந்து, மேடான பகுதியில் இருக்கும் ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது.
இவ்வாறாக அணையின் மேலக் கால்வாயில் இருந்து முத்தாலங்குறிச்சி குளம், குட்டக்கால் குளம், கொல்லி வாய் குளம், நாட்டார் குளம், செய் துங்கநல்லூர் குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பொட்டைக்குளம், கால்வாய் குளம், வெள்ளூர் குளம், தென்கரை குளம், நொச்சிக் குளம், கிழபுதுக் குளம், முத்துமாலை குளம், வெள்ளரிகாயூரணி குளம், தேமாங்குளம் ஆகிய குளங்கள் சங்கிலித் தொடர் குளங்களாக நீரைப் பெறுகின்றன. கீழக்கால்வாயில் இருந்து பட்டர்குளம், செந்திலாம் பண்ணை, திருவைகுண்டம் கஸ்பா, பேரூர், சிவகளை, பெருங் குளம், பத்மநாபமங்கலம் கீழக்குளம், பாட்டக்குளம், பீக்கன் குளம், ரெங்க நாதன் புதுக்குளம், எசக்கன் குளம், கைலாசப்பேரி, தருமனேரி,நெடுங்குளம் தண்ணீர் பெறுகின்றன.

மருதூர் அணை கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அதே தாமிரபரணியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது ஸ்ரீவைகுண்டம் அணை. ஆனால், மருதூர் அணையின் தொழில்நுட்பத்தின் அருகில்கூட நெருங்க முடியாது ஸ்ரீவைகுண்டம் அணையின் தொழில்நுட்பம். அதனால் தான் இன்று ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் ஏறிக்கிடக்கிறது. விவசாயிகள் நொந்து கிடக்கிறார்கள். படிக்காத பழந்தமிழருக்கும் மெத்தப் படித்த ஆங்கிலேயருக்கும் இருந்த வித்தியாசம் இதுதான். அது என்ன என்பதை நாளை பார்ப்போம்!

#savethamirabarani #save_thamirabarani #boycott_pepsi #boycott_cocacola
chemical reactors design ....

Thursday, March 24, 2016

மாமதுரை

நான்கு தலைமுறை பாரம்பரிய மிக்க 114 வருட வயது கொண்ட அனுபவமிக்க கடை தான் மதுரை மேலச்சித்திரை வீதி "ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்கடை"1901ல் வைத்தியநாத அய்யர் என்பவர் துவங்கிய இக் கடையை அவரது மகன் விஸ்வநாதய்யர் வெகு சிறப்பாக தொடர.. இன்று..!

அவரது மகன் வெங்கட்ராமன் திறம்பட நடத்தி வருகிறார்.! இக்கடை இருட்டுக்கடை அல்வாவுக்கு 75 ஆண்டுகள் முந்திய கடை.! இன்றும் சுத்தமான நெய்யினால் மட்டுமே தயாராகும் பலகாரங்கள் இக் கடையின் தனிச்சிறப்பு.! அது மட்டுமின்றி இக்கடையின் காராசேவும் மிகுந்த புகழ் பெற்றது.!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வாசலுக்கு எதிரே இருக்கும் இக்கடையின் பலகாரங்களுக்கு அடிமையானவர்கள் பலர்.! நெய் அல்வா, காராசேவு, மிக்சர், மொறு மொறு வெங்காய பக்கோடா, பட்டணம் பக்கோடா, முரட்டு மிக்சர், ஓமப்பொடி என இக்கடையின் சுவைமிகு பலகாரங்களின் பட்டியல் நீண்டாலும்...

இக்கடையின் சிறப்பு"உருளைக் கிழங்கு காரக்கறி" காலை 7 மணிக்கு கிடைக்கும் இந்தக் கறியானது 5 ரூபாய் 10 ரூபாய்க்கு சிறிய பொட்டலங்களாக கிடைக்கும்.! பழைய சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, தோசை, என எல்லா வகையான உணவுக்கும் ஏற்ற சைட் டிஷ்.!

12 மணிநேரம் ஊசிப்போகாமல் தாங்கும் இந்த சைட் டிஷ் தமிழகத்தில் எந்த கடைகளிலும் கிடைக்காத சிறப்பம்சமாகும்.. ஏழை எளியவர்களின் உணவுக்கு தொட்டுக் கொள்ள இன்றளவும் இதை ஒரு சேவையாக செய்து வருகிறார்கள் நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய் நிறுவனத்தார்.!

அது மட்டுமின்றி இங்கு தயாராகும் அல்வா சுத்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது.! சுடச்சுட இந்த அருமையான சுவையுடைய அல்வாவை விழுங்கிய உடன் உங்களுக்கு இலவசமாகவே சிறிது காராசேவு வழங்கப்படும்.. உண்மையில் இது ஒரு தூண்டில்.! மொறு மொறு கர கர அந்த காரா சேவை அடுத்து நீங்கள் கேட்டு வாங்கவே அந்த இலவசம்.! அவ்வளவு சுவை.!

அதுமட்டுமின்றி வாழையிலை, தாமரையிலை, அரசயிலையில் உணவு பரிமாறி பார்த்து இருப்பீர்கள்.! ஆனால் இங்கு பயன்படுத்தப்படுவது புரசை இலை.. தவில், உறுமி மேளங்கள் அடிக்க பயன்படும் குச்சி இந்த மரத்தின் குச்சியே! இன்று இந்த மரங்களின் இலைகள் போதியளவு மதுரையில் கிடைக்காததால் அவ்விலைகளை ஆந்திராவிலிருந்து தருவித்து அதில் தான் நமக்கு தருகிறார்கள்.!

சுத்தம், சுகாதாரம், தரம், நியாயமான விலை என்ற கோட்பாடுடன் வணிகம் செய்யும் இவர்கள் சுவையின் பேரரசர்கள்.! நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய்கடை என்ற ஒரு பெயரில் மக்களை சுவையின் பிடியில் ஆழ்த்தியவர்கள்.! பீட்ஸா பர்கர் கலாசாரத்தை விட நம்மூர் பலகாரங்களை அக்கறையோடு தயாரித்து தரும் இவர்களை வாழ வைப்போமே.. வாங்க மதுரைக்கு..! வந்து சுவைக்க மறக்காதிங்க நம் மேல கோபுர வாசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய் கடையை"..

மேலும் தகவல்களுக்கு புகைப்படத்தில் உள்ள எண்ணுக்கு டயல் செய்யவும்

நன்றி- வெங்கடேஷ் ஆறுமுகம்

வீரத் தமிழன் தம்பி பிரபாகரன்

பதினேழு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்…....

அந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினேழு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் படையை என்று நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு கருவி ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கி மட்டுமே.

ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்க்க துணியும் தைரியம் அந்த இளைஞனை தவிர வேறு யாருக்கும் வந்து இருக்காது.
அன்று அந்தப் பழைய துப்பாக்கியை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நண்பர்களுடன் மட்டுமே தனது போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன் அன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களின் பிறகு தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு முப்படைகளையும் கொண்ட ஒரு மரபு ரீதியான படையாக தனது படை பலத்தை யாருமே கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு மாற்றி காட்டினான்.

அன்று இலங்கை என்ற ஒரே ஒரு நாட்டிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அதன் பிறகு வந்த முப்பது வருடங்களில், நேரடியாக பதினாறுக்கும் மேலான நாடுகளையும், மறைமுகமாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளையும் தனித்து எதிர்கொண்டு, யாருக்கும் தலை வணங்காது, யாருக்கும் அடிபணியாது வீரத்துடன் போராடி, வரலாற்றின் பக்கத்தில் தனது பெயரை ஆழமாக பதிவு செய்து கொண்டான்.
நாம் கதைகளில் மட்டுமே படித்த மாவீரர்களின் வீரத்தினை நமது கண் முன்னால், நிகழ்த்தி காட்டி இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத வரலாறாக மாறி விட்ட அந்த வீரன் வேறு யாரும் இல்லை. தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன் தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்..

பனைமரங்கள்

தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,திருநெல்வேலி ,போன்ற எட்டு மாவட்டங்களில் ஒரு கோடி பனைமரங்களுக்கு மேல் உள்ளன .விவசாயத்திற்கு அடுத்தபடியாக இத்தொழில் பல ஆண்டுகளுக்கு முன் நடை பெற்றது .இதன்பதநீர் பருவ காலம்  மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரையாகும் .இட்ட்தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன ..தினம் காலை,மதியம் ,மாலை என மூன்று வேளை பனை மரம் ஏறி உச்சியில் உள்ள பாலையை  நன்கு மிருதுவாக சீவி விட வேண்டும் .பனைமரத்தின் மட்டையில் கட்டி வைக்க பட்ட மன்களையத்தில் .பதநீர் சொட்டுசொட்டாக வடியும் .அதை காலை வேளையில் இறக்கி  அகண்ட அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி நன்கு பழுக்க காய்ச்சு வர்  .பின்னர் அக்கூலை தரையில் வைக்க பட்டிருக்கும் சிரட்டையில் ஊற்றுவர் .சிறிது நேரம் உணர்ந்தபின் சிரட்டையில் இருந்து பிரித்து எடுப்பார்கள் .பனங்கருப்பட்டி இருமல்,சளி ,நாள்பட்ட வியாதி ,புகைச்சல் ,டி .பி ,ஜீரன சக்தி ,என பல்வேறு நோய்களை தீர்க்க வல்லதாகும் .அதேபோல் ஒரே பனை பதநீரை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருகினால் உடம்பில் எந்த நோயும் அண்டாது .தவிர எழுபிர்க்கு நல்ல வலுவை கொடுக்கும் .பனைமரத்தில் பதநீர் ,நுங்கு ,பனங்கருப்பட்டி ,பனங்கல்கண்டு ,பணங்கிளங்கு ,பனம்பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது .இந்தியா முழுக்க 5 கோடி  பனைமரம் உள்ளன .பனைமரம் தமிழக அரசின் மரமாகும் .தவிர பனைமரம் ஓடை,வரப்புகளில் நட்டினால் அரிப்பு ஏற்படாமல் இருக்கும் ..இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரம் இன்று கேட்பாரற்று அழிந்து வருகிறது .பனைமரங்களை  பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .பனையேறும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு சைகை வழங்க வேண்டும் .வேலை வாய்ப்பில் முன்னிரிமை வழங்க வேண்டும் .திற பனங்கருப்பட்டி கடந்த காலங்களில் 10 கிலோவிற்கு 2000/ விலை போனது .தற்போது 10 கிலோவிற்கு ரூபாய் 1000/ மட்டுமே விலை போகிறது .எனவே அரசு பணங்கருபட்டிக்கு நிரந்தர ஆதர விலை வழங்க வேண்டும் 10 கிலோவிற்கு குறைந்தபட்சம்  ரூபாய் 2000/-நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்

Wednesday, March 23, 2016

Farmers suicide

விவசாயிகளின் கண்ணீர்
=======================

மூன்று வகையான சாகுபடி கடன்கள் வங்கிகளில் கொடுக்கப்படுகின்றன. அவை நேரடி விவசாயக் கடன், குறுகிய கால கடன் மற்றும் முதலீட்டு கடன் ஆகும். பாலன் வாங்கியது முதலீட்டு கடன்தான். அரியலூர் விவசாயி அழகர் வாங்கியதும் முதலீட்டுக் கடன் வகையைச் சேர்ந்ததுதான்.

விவசாயிகளின் கடன் குறித்த ஆய்வினை TATA institute of Social Science அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ராம்குமார் நடத்தினார். ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரையில் கடன் பெறுவேர் எண்ணிக்கையில் இப்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மாறாக 10 கோடிக்கு மேல் கடன் பெறுவோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் முப்பெரும் கோடீஸ்வரன் முகேஷ் அம்பானி காய்கறிகளை வைக்க ஒரு குளிர்பதன கிடங்குக்கு என்ற கடன் கேட்கிறார். அவருக்கு 4 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கிறது.

காய்கறிகளை வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளக்கு அப்படி கடன் கொடுப்பதில்லை.

ஒரு மெரிசிடஸ் பென்ஸ் சொகுசு காருக்கு 7 சதவீத வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. உழவு டிராக்டருக்கோ 14 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவது. விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைப்பது இவைதான் மத்திய அரசின் கொள்கை. இதனால் ஒரு நாளைக்கு 2035 விவசாயிகள், விவசாயத்திலிருந்து வெளியேறுகின்றனர். 

ஜப்தி செய்வது, அவமானப்படுத்துவது, தற்கொலைக்கு தூண்டுவது என்று விவசாயிகள் விவசாயத்திலிருந்து விரட்டப்படுகின்றனர். 1995 முதல் 2010 கால இடைவெளியில் 2,84,694 #விவசாயிகள் #தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது சராசரியாக 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை என்ற பெயரில் மடிந்து போகிறார்.

தற்கொலை செய்துகொண்ட 850 குடும்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, தற்கொலைக்கான காரணம் கடன், கடன், கடன் சுமைதான் என்ற தெரியவந்துள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு பெரும்பாலும் கடன் வழங்குவதில்லை. தனியார் நிதி நிறுவனங்களோ கொள்ளை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. மணி வட்டி, மீட்டர் வட்டி என்று விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அரசன் திருதராஷ்டிரன் துரியோதனன் பக்கம் இருந்தது போல அரசாங்கம் தனியார் கடன் நிறுவனங்கள் பக்கமே நிற்கிறது.

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் இரு பரிந்துரைகளை செய்திருந்தது. குறைந்த வட்டியில் கடன். இயற்கை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் வட்டி இல்லா கடன் ஆகிய இவற்றைக் கூட அரசாங்கம் அமல்படுத்தவில்லை.

சட்டத்திற்கு புறம்பாக பலருக்கும் அவசியமற்று பொது நிதியை எடுத்து அள்ளி அள்ளி வழங்கும் மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு கிள்ளிக் கூட தருவதில்லை. விவசாயிகளுக்கு தடையற்ற சாகுபடிக் கடன் வழங்கப்பட வேண்டும். வட்டி என்ற பெயரில் குரல் வளையை நெறிப்பது நிறுத்தப்பட வேண்டும். குண்டர்களை பயன்படுத்தி ரௌடித்தனம் செய்யும் நிதி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். அவற்றின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் காவல்துறையினர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். 

பொதுவெளியில் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் விவசாயிகளுக்காக கண்ணீர் வடிக்கலாம். அவர்களின் செய்கைகள் விவசாயத்தின் கல்லறைக்கு ஆணிகளை ஓங்கி அடிக்கின்றன. வரலாற்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.

சாம்ராஜ்யங்களை அஸ்தமிக்க வைக்கும் வல்லமை விஜய் மல்லையாவின் கள்ளச் சிரிப்புக்கு அல்ல. விவசாயிகளின் கண்ணீருக்கு உண்டு.

#ksrposting #ksradhakrishnanposting #விவசாயிகள் #agriculturist

தாமிரபரணி

தாமிரபரணி
============

வற்றா ஜீவநதியான தாமிரபரணியிலிருந்து வீணாக 50 டி.எம்.சி. தண்ணீர் புன்னைகாயலில் கடலில் கலக்கின்றது. தி.மு.க ஆட்சியில் திசையன்விளை, சாத்தான்குளம் வரை தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறை இணைக்கவேண்டும் என்று ரூ. 400 கோடி திட்ட மதிப்பில் கால்வாய்கள் வெட்டப்பட்டன.  கல்லிடங்குறிச்சிக்கு தெற்கே தாமிரபரணியும், மணிமுத்தாறும் சந்திக்கும் சின்ன சங்கரன்கோவிலில் கன்னடியன் கால்வாய் வெள்ள நீர் சேர்கின்றனது.  இது வெள்ளங்குழி வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரைகளை உயர்த்தி 100 அடி அகலமும் 3500 கன அடி நீர் வரை செல்லும் கால்வாய் புதுப்பிக்கப்பட்டது. இப்போது தாமிரபரணியில் கழிவுநீர்களை விட அரசு அதிகாரிகள் திட்டமிட்டு கழிவுகள் சேர்கின்ற இடமாக கல்லிடக்குறிச்சி பகுதியில் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சுவைமிகு பொருநை நதியில் கழிவு நீர்களை விட்டால் தாமிரபரணியின் இயற்கை தன்மை கெட்டுப்போகும் என்று சிந்திக்காமல் பலகோடி ரூபாய்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய் வெட்ட அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது. குடிநீராகவும், தாமிரபரணி நீர் ஆன்மிகவாதிகளுக்கு அடையாளமாகவும், விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் நதியை பாழ்படுத்துவதா என்ற குரல்கள் கேட்டவண்ணம் இருக்கின்றன. தாமிரபரணியில் 110 உறைகிணறுகள் தோண்டப்பட்டு வடக்கே விருதுநகர் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் எல்லாம் மாசுபடக் கூடிய அளவில் அரசு கழிவு நீரையும் தாமிரபரணியில் சேர்க்க திட்டமிட்டிருப்பதைத் தடுக்க வேண்டும்.

#தாமிரபரணி #ksrposting #ksradhakrishnanposting

Tuesday, March 22, 2016

Water...

தண்ணீர் தட்டுப்பாடு  இனிமேல்தான் வரவிருக்கிறது. தண்ணீருக்கான யுத்தம் இனிமேல்தான் என்று நினைக்கும் அப்பாவிகளுக்கு.......

(எதற்கும் 20 ரூபாய் கொடுத்து ஒரு மடக்கு தண்ணீரை முழுங்கிவிட்டு படியுங்கள்)

இப்போதே கேரளாவில்  திருவனந்தபுரம் அருகில் கிராமங்களுக்கு 12 நாளைக்கு ஒருமுறைதான்  #தண்ணீர் விடப்படுகிறது.  கொல்லத்தில் அதிகம் விட்டால் தேர்தல் ஆணையம் தடுக்கிறதாம். அதாவது தண்ணீர் கூட ஒரு லஞ்சமாக கருதப்படுகிறது.

இந்தவாரம் பஞ்சாப் தனது சட்லெஜ் யமுனா கிளை கால்வாயை மண் கொண்டு மூடி வருகிறது.  பஞ்சாப் ஹரியானாவுக்கு தண்ணீர் தராது.  ஹரியானா தில்லிக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று மிரட்டுகிறது..

ஒரிஸ்ஸாவின் கங்கை என்று போற்றப்படும் பாமினி ஆறு படுகொலை தினம் தினம் செய்யப்படுகிறது.  கடந்த எட்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் 40 அடி கீழே போய்விட்டது. வற்றாத இந்த ஜீவ நதி இப்பொது வருடத்தில் 9 மாதம் காய்ந்து விடுகிறது.  ரூர்கேலா இரும்பு தொழிச்சாலை தினம் 28 கோடி லிட்டரையும், NTPC 13 கோடியும், நெல்கோ 8 கோடி லிட்டரையும் உறிஞ்சியபின்னர் மக்களுக்கு என்ன மிச்சம் இருக்கும் ?

தில்லியில் தண்ணீர் மாபியா வெகுநாட்களாக இயங்கி வந்திருக்கிறது.   9000  வருமானம் உள்ள குடும்பங்கள் கூட 2000  தண்ணீருக்காக செலவழிக்கவேண்டிய அவலநிலை.

மும்பையில் விசிலடித்தவுடன் ஒரு மணி நேரத்துக்குள் நபருக்கு 90 லிட்டர் மட்டும் பிடித்துக்கொள்ள வேண்டும்.  இது வேண்டியதைவிட 60 லிட்டர் குறைவு.  இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் 20% இன்னும் குறைத்துள்ளார்கள்.

மகாராஷ்டிராவில் லாத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து நாளைக்கு 200 லிட்டர் என்ற இலக்குப்படி  தண்ணீர் சப்ளை செய்கிறது அரசாங்கம்.  இதனால் பெரிய தள்ளுமுள்ளு ஏற்படும் என்று 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது.  விவசாய நிலங்களில் தண்ணீர் இல்லாமல் கடன் எகிறி தற்கொலை நடப்பது புளித்துப்போன செய்தி.

தண்ணீர் இல்லாமல் கல்கத்தாவில் பர்ராகா  2,100 MW அனல் மின் நிலையம் போன வாரம் மூடப்பட்டு வெறும் 500 MW உற்பத்தி செய்யப்படுகிறது.

கர்நாடகா தமிழ்நாட்டுக்கும், கேரளா தமிழ்நாட்டுக்கும் முழுமையாக தண்ணீர் தராது.   தமிழ்நாட்டின் ஆறுகள் சூறையாடப்பட்டு படுகொலை கொலைசெய்யப்பட்டுள்ளன.  வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி வற்றி விட்டது. நிலத்தடி நீரையும் குளிர்பானத்துக்கு விற்றாகி விட்டது.

ஆந்திராவில் ஸ்ரீசைலம் நாகார்ஜுனா சாகர் வற்றி வருகிறது. 7 தாலுகாவில் 359 மண்டல்கள் வரட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 14000 கிராமங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன.  இப்போதுதான் மார்ச் மாதம். இன்னும் கோடை வரவில்லை.

மத்திய பிரதேசத்தில் பத்ரி காட் அணையில் குடிநீரை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமித்துள்ளனர். இல்லையென்றால் விவசாயிகள் தண்ணீரை திருடி விடுவார்கள்.

இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம்.  இன்றைக்கு பொது இடங்களில், உணவகங்களில் வழங்கப்படும் தண்ணீரைக்கூட குடிக்க முடியாது.  22000  செலவழித்து ஒவ்வொரு குடும்பமும் தண்ணீர் வடிகட்டியை நிறுவ வேண்டும்.  பணம் இருப்பவர்கள் தண்ணீர் குடிக்கலாம். இல்லாதவர்கள் செத்தொழியலாம்.  அரசாங்கம் பார்த்துக்கொண்டே இருக்கும்.

கண்ணகி - கவுந்தியடிகள் ஆசிரமம்

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.

மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.

அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.

சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.

இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.

வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.

என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.

நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.

அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).

நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.

அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.

சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.

கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.

அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.

தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?

அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...

Shakespeare

“Shakespeare was a white male, but he is not a dead white male. There may be only three or four women in each Shakespeare play but they are the key to how to transform a society. They are the teachers and the leaders in a new way of thinking about relationships, hierarchies, and love. They have the focus and energy to counterbalance the authority of the ten to thirty men who inhabit each play.” 
― from WOMEN OF WILL: The Remarkable Evolution of Shakespeare's Female Characters by Tina Packer

WOMEN OF WILL is a fierce and funny exploration of Shakespeare’s understanding of the feminine. Tina Packer, one of our foremost Shakespeare experts, shows that Shakespeare began, in his early comedies, by writing women as shrews to be tamed or as sweet little things with no independence of thought. The women of the history plays are much more interesting, beginning with Joan of Arc. Then, with the extraordinary Juliet, there is a dramatic shift: suddenly Shakespeare’s women have depth, motivation, and understanding of life more than equal to that of the men. As Shakespeare ceases to write women as predictable caricatures and starts writing them from the inside, his women become as dimensional, spirited, spiritual, active, and sexual as any of his male characters. Wondering if Shakespeare had fallen in love (Packer considers with whom, and what she may have been like), the author observes that from Juliet on, Shakespeare’s characters demonstrate that when women and men are equal in status and passion, they can—and do—change the world. READ an excerpt here: http://knopfdoubleday.com/book/212740/women-of-will/

Monday, March 21, 2016

குலதெய்வங்கள்

நேற்றைக்கு தேனி முத்துகிருஷ்ணன் சந்திக்க வந்திருந்தார். நீண்ட நேரம் பல செய்திகளை விவாதித்தார். கடந்த வார என்னுடைய பதிவில் பங்குனி உத்திரத்தைப் பற்றி எழுதியதை குறிப்பிட்டுச் சொன்னார். குலதெய்வங்கள் என்பது தங்களுடைய முன்னோர்களை வணங்கி ஆராதனை செய்வது என்றும் அது குறித்து பலத் தரவுகளோடு என்னிடம் பேசியது சற்று சிந்திக்க வைத்தது. மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியும், பங்குனி உத்திரமும் தங்களுடைய முன்னோர்களான குலதெய்வங்களை வணங்க வேண்டிய நாட்கள் என்று சொன்னார். ஆன்மிகத்தில் நாட்டமில்லை என்றாலும் முன்னோர்கள் வழிபாடு அவசியம் வேண்டும். அது மட்டுமல்லாமல் இயற்கையையும் வழிபட வேண்டும். முன்னோர்களுக்கு நன்றிகளையும், வணக்கங்களையும் காணிக்கையாக்குவதையும், இயற்கையை நேர்வழி காட்ட வணங்குவதுதான் மானிடத்தின் இயல்பானது. அந்த வகையில் அவர் சொன்ன குலதெய்வங்கள் பற்றியான செய்திகளும், அதன் கீர்த்திகளைப் பற்றிய பதிவு வருமாறு:

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.
சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.
அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள்
*குலதெய்வங்கள்*
என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது..?
நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக் கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...
விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.
இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்...
பிறக்கின்றது.
என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.
ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது.
பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.
அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசு களாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...
ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக் கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...
குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி
(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."
எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்.

கைதிகளின் உரிமைகளும், உச்சநீதிமன்றமும்

கடந்த ஜூலை 24.7.2015 அன்று திலிப் கே. பாசு வழக்கில்; உச்சநீதிமன்றம், சிறைக் கைதிகளின் உரிமைகளை அவசியம் நிறைவேற்றவேண்டும் என்று தனது தீர்ப்பில் வலியுறுத்தி கூறியுள்ளது. அந்த தீர்ப்பில் சிறைக் கைதிகளின் உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், Custodial Jurisprudence  நெறிமுறையின்படி குற்றவாளிகளை மிரட்டியோ, அவர்களின் உரிமைகளை மறுக்கவோ முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. அந்த தீர்ப்பின் சாரம் ஆங்கிலத்தில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதே டி.கே. பாசு 1996 கட்டத்தில் காவல்துறை கைது செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய முறைகளையும் உரிமைகளையும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெற்றுத் தந்தவர்தான். அந்த வழக்கின் சாரம் (AIR 1997 SC 610).

பேருந்து நிலையம் ஒன்றில் நாம் ஒரு குறிப்பிட்ட பேருந்திற்காக காத்து நிற்கும்போது அந்த பேருந்து நிற்காமல் சென்றுவிட்டால் அதன் ஓட்டுனரை திட்டித்தீர்த்து விடுவோம். ஆனால் அதே பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது அந்தப்பேருந்து, பயணிகள் காத்து நிற்கும்போதும் ஒரு பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்லும்போது நாம் அற்ப மகிழ்ச்சி அடைவோம்.

இது ஒரு எளிய உதாரணம்தான்! இதேபோல வாழ்வின் பல நிகழ்வுகளிலும் நாம் இரட்டை அளவுகோல்களை, அதன் தீவிரத்தன்மை தெரியாமலே பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறான நிகழ்வுகளில் கைது சம்பவங்களையும் சேர்க்கலாம்.

நமக்கு தெரிந்த ஆனால் பிடிக்காத வேறு ஒருவர் கைது செய்யப்படும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். நமக்கு தெரியாத ஒரு நபர் கைது செய்யப்படும்போது எந்த உணர்ச்சிகளும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நமது வீட்டிற்கு ஒரு காவலர் வந்தால் நாம் கலங்கி விடுவோம். அதிலும் வரும் காவலர் நம் வீட்டில் உள்ள ஒருவரையோ அல்லது நம்மையோ கைது செய்வதற்கு வருவதாக தெரிந்தால் நம் நிலை மிகவும் பதற்றமாகிவிடும்.

ஆகவே, குற்றவியல் சட்டத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அம்சம் கைது!

முன்னாள் முதல்வர்களை சில்லறை காரணங்களுக்காக நள்ளிரவில் கைது செய்து இழுத்துச் செல்வதும், கொலை வழக்கில் சிக்கிய மடாதிபதியை கவுரவமாக வீட்டுச்சிறையில் வைத்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற நீதிபதியே கேள்வி எழுப்புவதும் நாம் அறிந்ததுதான்.

எனவே நமக்கு வேண்டியவரோ, வேண்டாதவரோ கைது செய்யப்படும்போது, கைது செய்யப்படுவதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கவனிப்பதும், கண்காணிப்பதும் மிகவும் அவசியம்.

கைது செய்யப்படும் நபர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்தான். எனவே அவர் குற்றவாளி என சட்டப்படி தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்வரை அவரை நிரபராதியாகவே கருத வேண்டும். தவிர்க்க இயலாத சம்பவங்களில் ஒரு நபரை கைது செய்ய நேரிட்டாலும், அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் கருத்தளவில் தெளிவாகவே இருக்கிறது.

மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய திரு. திலிப் குமார் பாசு என்பவர், பணி ஓய்வு பெற்ற பின்னர் மேற்கு வங்க சட்டப்பணி சேவை மையம் என்ற அமைப்பை நிர்வகித்து வந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோதிலும் காவல் நிலைய வன்முறைகள் மிகவும் அதிகமாக  நடைபெறுவதை கவனித்த (ஓய்வு பெற்ற) நீதிபதி திலிப் குமார் பாசு, இந்த பிரசினை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 26-08-1986 அன்று கடிதம் ஒன்றை எழுதினார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற காவல் நிலைய வன்முறைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை இணைத்திருந்த நீதிபதி டி.கே.பாசு, காவல் நிலையங்களில் நடைபெறும் வன்முறைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங் மற்றும் ஏ.எஸ். ஆனந்த் ஆகியோர் பொதுநல வழக்காக ஏற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் (AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் கைது சம்பவம் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

மேலும் அந்தத் தீர்ப்பில் கைது சம்பவத்தின்போது பின்பற்றவேண்டிய மிகவும் முக்கியமான 11 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2.      ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின்போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3.            கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4.    கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5.    கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6.    கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்படவேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்படவேண்டும்.

7.   கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8.    கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9.    கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10. கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின்போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11.          நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர்.ஆனால் நடைமுறையில் நாட்டில் உள்ள எந்த காவல்நிலையத்திலாவது இந்த உச்சநீதிமன்ற உத்தரவு எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து தெளிவான சட்டம் இல்லாத நிலையில் அந்த அம்சம் குறித்த நீதிமன்ற தீர்ப்பே சட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சட்டமாகும். ஆனால் இந்த சட்டத்தை மதிப்பதில் எந்த மாநில அரசும் குறைந்த அளவு அக்கறைகூட காட்டவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மேற்கூறப்பட்டவாறு டி.கே.பாசு வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்மொழியில் எழுதி வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ காலக்கெடு எதுவும் விதிக்காமல் பயனற்ற தீர்ப்பு ஒன்றை வழங்கியது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதிலோ, மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதிலோ சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உள்ள ஆர்வத்திற்கு இந்த வழக்கு உதாரணமாகும்.

இதற்கிடையில் கைது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மிக விரிவான விவாதங்களை நடத்தியது. நாடு முழுதும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட்ட கைது சம்பவங்கள் குறித்தும், அதில் இருந்த சட்டமீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக 2005ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ என்று உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. இதன்படி

(1)  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.

(2)  மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

(3)  கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

(4)  கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும்போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கூறியவாறு காவல்துறையினரோ, குற்றவியல் நடுவரோ செயல்பட்டால் கைது செய்யப்படும் நபரின் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் கைது செய்யப்படுபவரின் உரிமைகள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் உயர்நீதிமன்றமே ஆர்வம் காட்டாத நிலையில், உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் செயல்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், கைது செய்யப்படுபவரின் உரிமைகளை பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே!

எனினும் மனித உரிமை என்பதே அதை பயன்படுத்தும் விழிப்புணர்வுடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் முழுமை அடையும். எனவே கைது செய்யப்படுவோரின் உரிமைகள் குறித்த முழுமையான விழிப்புணர்வும், இதை வலியுறுத்தும் செயல்பாடுகளுமே நீதிமன்றத்தையும் சட்டத்தின்பாதையில் செலுத்தும்.

கைது செய்யப்படும் நபர்களின் உரிமைகள் இது மட்டுமல்ல. சட்டரீதியாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் இன்னும் ஏராளமான உரிமைகள் (கருத்தளவில்  மட்டுமே) உள்ளன.


#*மதிமுக* #*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவு கொலை நினைவுகள் (2)*

#*மதிமுக*  #*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவுகொலை நினைவுகள் (2)* ———————————— 1………அப்படியான மிகச்சிறந்த ஒரு பேரணியை1994 ஏப்ரல் 16 எழுச்சி...