Wednesday, March 16, 2016

பாரதியார் கவிதை

நல்லதோர் வீணை செய்தே - அதை
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? (நல்லதோர்

சொல்லடி, சிவசக்தி !~ எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

விசையுறுப் பந்தினைப்போல் - உள்ளம்
     வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்  கேட்டேன், - நித்தம்
    நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் - உயிர் கேட்டேன் -

- அமர கவி பாரதி

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...