Monday, March 21, 2016

வடசொல் = தமிழ் அகரவரிசை


உக்கிரம் = கடுமை, வெப்பம், சினம், ஊக்கம், மிகுதி
உக்கிராணம் = களஞ்சியம், சரக்கறை
உசிதம் = உயர்வு, சிறப்பு, மேன்மை, தகுதி, ஒழுங்கு
உச்சந்தம் = தணிவு
உச்சரிப்பு = எழுத்தோசை
உச்சி = மேடு, முகடு
உஷ்ணம் = வெப்பம், சூடு
உதயம் = காலை, விடியல், பிறப்பு, வெளிப்படல், தோற்றம்
உதரம் = வயிறு
உதாரம், உதாரகுணம் = வள்ளன்மை, தண்ணளி, ஈகைத்தன்மை
உதாரணம் = எடுத்துக்காட்டு, சான்று
உதித்தல் = பிதற்றல், தோன்றுதல்
உதிரம் = செந்நீர், குருதி
உத்தமம் = உண்மை, மேன்மை
உத்தமி = கற்புடையவள்
உத்தரம் = மறுமொழி
உத்தரவு = கட்டளை
உத்தியோகம் = அலுவல், முயற்சி, தொழில்
உத்தேசம் = கருத்து, மதிப்பு, ஏறக்குறைய
உந்நதம் = உயர்ச்சி, மேன்மை
உபகரணம் = கொடுத்தல், உதவிப்பொருள், கருவிப்பொருள்
உபகாரம் = வரவேற்பு, முகமன், வேளாண்மை
உபதேசம் = அருண்மொழி, அறிவுரை
உபத்தம் = கருவாய்
உபத்திரவம் = இடர், இக்கட்டு, துன்பம், வருத்தம், தடை
உபநதி = கிளையாறு
உபநயநம் = பூணூற்சடங்கு, வழிநடத்துதல், மூக்குக்கண்ணாடி
உபந்நியாசம் = சொற்பொழிவு
உபயோகம் = பயன்
உபவனம் = பூஞ்சோலை
உபாசனை = வழிபாடு, வணக்கம்
உபாதி = நோய், துன்பம்
உபாத்தியாயன் = ஆசிரியன், கற்பிப்போன், கணக்காயன்
உபாத்தியாயினி = ஆசிரியை
உபாயம் = சூழ்ச்சி நொய்மை, எளிது, சிறிது
உபேட்சை = அசட்டை, விருப்பின்மை, வெறுப்பு
உயிர்ப்பிராணி = உயிர்ப்பொருள்
உருக்குமணி = பொன்மணி
உருசி = சுவை
உருத்திராக்கம் = சிவமணி, அக்குமணி
உரூபித்தல் = மெய்ப்பித்தல்
உரொக்கம் = கைப்பணம், இருப்பு, மொத்த இருப்பு
உரோகம் = நோய், ஒளியின்மை
உரோமம் = மயிர், முடி, குஞ்சி
உலகப்பிரசித்தம் = எங்கும் பரந்தபுகழ்
உலோகம் = உலகம், வெள்ளி, பொன், செம்பு, முதலியன
உலோபம் = ஈயாமை, இவறன்மை, கடும்பற்றுள்ளம்
உல்லாசம் = மகிழ்ச்சி, விளையாட்டு, உள்ளக்களிப்பு
உற்சவம் = திருவிழா, திருநாள்
==============================
ஊகித்தல் = நினைத்தல், ஓர்தல்
ஊநம் = குறைவு, இழிவு
ஊர்ச்சிதம் = உறுதி, நிலைப்படுதல்
==============================
எக்கியம் = வேள்வி
எசமானன் = தலைவன், முதல்வன்
எதார்த்தம் = உறுதி, உண்மை
எதேச்சம் = விருப்பப்படி
எவ்வநம், யௌவநம் = இளமை, அழகு
==============================
ஏகதேசம் = ஒருபால், ஒருபுடை, சிறுபான்மை
ஏகம் = ஒன்று, தனிமை
ஏகாங்கி = தனியன், துறவி
ஏகாதிபத்தியம் = தனியாட்சி
ஏகாந்தம் = தனிமை, ஒருமுடிவு
ஏடணை = விருப்பம்
ஏதம் = குற்றம், துன்பம், தீங்கு
ஏது = காரணம்
ஏனம் = பன்றி
==============================
ஐக்கியம் = ஒற்றுமை
ஐச்வரியம் = செல்வம், திரு
ஐதிகம் = உலகுரை
==============================
ஓமம் = வேள்வி
ஒளடதம் = மருந்து
ஒளபாசனம் = வேள்வித்தீயோகம், புகை, உணவொழிநோன்பு, எரியோம்பல்

******************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
21/03/2016

No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...