தாமிரபரணி
============
வற்றா ஜீவநதியான தாமிரபரணியிலிருந்து வீணாக 50 டி.எம்.சி. தண்ணீர் புன்னைகாயலில் கடலில் கலக்கின்றது. தி.மு.க ஆட்சியில் திசையன்விளை, சாத்தான்குளம் வரை தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறை இணைக்கவேண்டும் என்று ரூ. 400 கோடி திட்ட மதிப்பில் கால்வாய்கள் வெட்டப்பட்டன. கல்லிடங்குறிச்சிக்கு தெற்கே தாமிரபரணியும், மணிமுத்தாறும் சந்திக்கும் சின்ன சங்கரன்கோவிலில் கன்னடியன் கால்வாய் வெள்ள நீர் சேர்கின்றனது. இது வெள்ளங்குழி வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரைகளை உயர்த்தி 100 அடி அகலமும் 3500 கன அடி நீர் வரை செல்லும் கால்வாய் புதுப்பிக்கப்பட்டது. இப்போது தாமிரபரணியில் கழிவுநீர்களை விட அரசு அதிகாரிகள் திட்டமிட்டு கழிவுகள் சேர்கின்ற இடமாக கல்லிடக்குறிச்சி பகுதியில் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சுவைமிகு பொருநை நதியில் கழிவு நீர்களை விட்டால் தாமிரபரணியின் இயற்கை தன்மை கெட்டுப்போகும் என்று சிந்திக்காமல் பலகோடி ரூபாய்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய் வெட்ட அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது. குடிநீராகவும், தாமிரபரணி நீர் ஆன்மிகவாதிகளுக்கு அடையாளமாகவும், விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் நதியை பாழ்படுத்துவதா என்ற குரல்கள் கேட்டவண்ணம் இருக்கின்றன. தாமிரபரணியில் 110 உறைகிணறுகள் தோண்டப்பட்டு வடக்கே விருதுநகர் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் எல்லாம் மாசுபடக் கூடிய அளவில் அரசு கழிவு நீரையும் தாமிரபரணியில் சேர்க்க திட்டமிட்டிருப்பதைத் தடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment