Wednesday, March 16, 2016

ஜே.என்.யூ.வும் தேசியமும்

இந்த வாரம் ஆங்கில இந்தியா டுடே (21 மார்ச் 2016) இதழில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குறித்து "The Republic of Ideas" என்ற தலைப்பில் ஒரு விரிவான பல செய்திகளோடு கட்டுரை வெளி வந்துள்ளது.  அங்கு படித்த சில காலங்களில் சுற்றி திரிந்த இடங்களை வரைபடமாக The Red Zone  என்ற தலைப்பில் இருந்தது கவனத்தை ஈர்த்தது.  அதில் குறிப்பிட்ட சில வரிகள் "The idea of a nation that constitutes the aspirations of all its citizens; that offers them social justice and equality, freedom of speech and the right to disagree, is not really a radical idea. It is part of the wider liberal democratic vision," என்ற வார்த்தைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை.  வெறும் கல்விக் கூடமாக மட்டுமல்லாமல் நாட்டின் நடப்புகளையும், கொள்கைகளையும் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு என்பதை பல சமயம் நிரூபித்துள்ளது.

தேசியம், நாட்டுப்பற்று என்பதை சற்று மனம் திறந்து விவாதிக்கப்பட்ட இடம்தான் ஜே.என்.யூ. வெற்று கோஷங்களும், பொய்யான மொழிகளைக் கொண்டு உண்மையை மறைக்க முடியாது என்பதற்கு சமீபத்தில் இங்கு நடந்த நிகழ்வுகள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

அவசர நிலை காலத்தில் பல அரசியல் தலைவர்கள் இங்கே தலைமறைவாக இருந்ததும், இந்திரா காந்தி கொலையின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பிடமாக இருந்ததும் ஜே.என்.யூ. மேதா படேகர் நடத்திய நர்மதா நதி பாதுகாப்பு அமைப்பினருக்கும் சரணலாயமாக ஜே.என்.யூ. இருக்கின்றது. இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள், சிக்கல்களை ஆலோசிக்கும், அதை விவாதித்து கவனித்து செயல்படுகின்ற தளம்தான் ஜே.என்.யூ. இந்த பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்றைக்கும் மனதில் ஒரு குறையாக உள்ளது.

பார்க்க:  http://indiatoday.intoday.in/story/jawaharlal-nehru-university-row-kanhaiya-kumar-sedition/1/616340.html

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...