Wednesday, March 9, 2016

தேர்தல்கள்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி சென்னையில் தேர்தல் குறித்த ஒரு கருத்தரங்கில் பேசும்போது, வட மாநிலங்களில் வேட்பாளரை பற்றி சிறப்பாகவும் உயர்வாகவும் எழுதவும் அவரைப் பற்றி தரக்குறைவாக எழுதாமல் இருப்பதற்கு தேர்தல் காலங்களில் பணம் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதை தடுத்து நிறுத்தவும், தவறு செய்பவர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கிடைப்பதில்லை ஆதாரங்கள் எளிதில் கிடைப்பதில்லை. எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தாங்கள் செய்த தொகுதி பணிகள் குறித்து திறனாய்வு செய்து மக்களுக்கு சொல்ல வேண்டும். பணம், இலவசம், ஜாதி மதம் பார்த்து வாக்களிப்பது வாடிக்கையாகிவிட்டது. வாக்காளர் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்ற கடமையை செய்யவேண்டும் என்ற மனப்பக்குவமும் மக்களிடம் வரவேண்டும்.  வேட்பாளர்கள் மக்களைப் பார்த்து பயப்படவேண்டும். அப்படி இருந்தால்தான் நல்லவர்களை தேர்ந்தெடுத்து லஞ்ச, லாவண்யம் இல்லாத அரசாக அமையும். குற்றவாளிகள், மக்களின் மீது அக்கறை இல்லாதவர்கள் எல்லாம் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.

மேலும் அவர் கூறுகையில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையை உடனே ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவில் வாக்கு எண்ணிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கெல்லாம் நான் சென்றுள்ளேன். தேர்தல் நடந்து முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். மாலத் தீவில் உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இலங்கையில் வாக்கு எண்ணிக்கை கடுமையானாலும் அங்கும் முடிவுகள் 28 மணி நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. இப்படி நம்முடைய தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் அவ்வப்போது செய்தாலும் இன்னும் சில அறிவியல் ரீதியான, நாட்டுக்கு நல்லது எனப்படுகிற நடவடிக்கைகளும், சீர்திருத்தங்களும் கொண்டுவரப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி சொன்னதிலிருந்து இன்னும் நம்முடைய தேர்தல்கள் நடக்கவில்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்தியாவில் தேர்தல்களை நடத்தியவர், தலைமை பொறுப்பில் இருந்தவரே நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஓட்டை, உடைசல் இருப்பதாக சொல்லியிருப்பதிலேயே நேர்மையான தேர்தல் இல்லை என்பது அவர் கூறிய கருத்துக்களிலிருந்தே நமக்கு புரிகிறது. இந்தியா போன்ற பெரிய நாடும், அதிகமான மக்கள் தொகையும் கொண்ட நாட்டில் தேர்தலை நேர்மையாக நடத்துவது என்பது அவசியம் கவனிக்கப்படவேண்டிய பொறுப்பாகும்.  பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தும் அவை நடைமுறைக்கு வரவில்லை. மத்திய அரசு, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் என்ற நிலையில் ஒவ்வொருவரும் பந்தை அடித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர, முடிவுகளை எட்டவில்லை.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...