Sunday, March 6, 2016

குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா வழக்கு 30 ஆண்டுகளுக்கு பின் விசாரணை

டக்ளஸ் தேவானந்தா சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் தங்கிருந்தபோது மிருகத்தனமாக துப்பாக்கியால் சுட்டு பீதியை கிளப்பினார்.  பெரிய குழப்பத்தை உருவாக்கியவர் பிற்காலத்தில் ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக வலம் வந்து இந்தியாவிற்கே வந்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அருகே அமர்ந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.  எப்படி ஒரு குற்றவாளி என்று குற்றம்சாட்டப்பட்டவர், தண்டிக்கப்பட வேண்டியவர் இந்திய மண்ணிலே கௌரவிக்கப்பட்டார் என்பது அபத்தமாக அப்போது இருந்தது.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்து கொழும்பிலிருந்து இந்திய தூதரகத்தின் மூலம் சென்னையில் நடக்கும் வழக்குக்காக குற்றவாளியாக கூண்டில் நின்றார்.

ஈபிடிபி இயக்கத்தின் இராணுவப் பிரிவின் தளபதி டக்ளஸ் தேவானந்தா 1986-ல் சென்னையில் தங்கியிருந்தார். அப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வெடி வெடித்தனர். இதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அருகில் இருந்த இபிஎல்ஆர்எவ் அலுவலகத்துக்கு ஓடிச் சென்ற தேவானந்தா மாடியில் நின்றவாறு பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் திருநாவுகரசு என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனை அடுத்து டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிணையில் விடப்பட்ட தேவானந்தா இலங்கைக்கை தப்பிச் சென்றார். இந்த சம்பவம் நடக்கும் போது நான் சென்னையில் இருந்தேன். தேவானந்தா தனக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்கிறார். தேவானந்தாவின் கட்டளைப்படி ஊடகவியலாளர் நிமலராஜன், அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், நாரந்தனையில் இரண்டு ததேகூ ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாணம் உதயன் செய்தித்தாள் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள். அச்சு யந்திரம் எரிக்கப்பட்டது. இதன் பின்னால் தேவானந்தாவே இருந்தார்.  தேவானந்தா பொய் சொல்கிறார்.

சூளைமேட்டில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சூளைமேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சென்னை செசன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளி மூலமாக சமூகமளித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1986ஆம் ஆண்டு சூளைமேட்டில் ஈ.பி.ஆர். எல்.எப் உறுப்பினர்களுக்கும், அப்பகுதிகளுக்கும் இடையில் மோதல் நடைபெறுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்தே அந்த இடத்துக்குச் சென்றிருந்தேன். பொலிஸாரின் வழக்குத் தாக்கலிலும், அந்த வழக்கிலும் அந்தச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே அந்த இடத்துக்கு வருகை தந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக கொண்டு, கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, கலகம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டதிலிருந்து விடுவிக்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்தாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...