Wednesday, March 2, 2016

தாமிர பாத்திரங்கள்

அக்காலத்தில் தாமிர பாத்திரம் முக்கிய உபயோகப் பொருளாக அடுப்படியில் இருக்கும். அதன் உள்ளே ஈயம் பூசி குடிநீரை ஊற்றி வைத்து அதில் இரண்டு, மூன்று எலுமிச்சைப் பழம் போட்டு வைத்து நீரை சாப்பிடுவது வாடிக்கை.

இன்றைக்கும் தாமிரபரணி நதியில் குளித்தால் உடல் உப்படிக்காமல், தோல் வியாதிகள் வராமல், தோல் நிறமும் மின்னும்.  தாமிரபரணி தண்ணீரில் துணிகளை துவைத்தால் பளிச்சென்று இருக்கும். இன்றைக்கு வரை என்னுடைய வெள்ளை வேட்டி, சட்டைகள் தாமிரபரணி ஆற்றில்ல்தான் துவைத்து கட்டுவது வாடிக்கை. தாமிரம் கலந்த தண்ணீரோ, தாமிர பாத்திரங்களை பயன்படுத்துவதோ ஆரோக்கியமானது. அதன் இயல்பான தன்மைகளை நாம் அறியவேண்யது அவசியம்.

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன.

ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.

இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.

உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.
செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.
செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது.

உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது.

மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்புக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.

செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.

தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...