1970 வரை இயற்கையோடு சார்ந்து இயந்திரங்கள் சாராமல் மனித உழைப்போடு வாழ்ந்தோம். ஆரோக்கியமாக இருந்தோம். இப்போது எல்லாம் இயந்திரமயம்.
பாசம், நேசம், மனிதநேயம் இல்லாமல் மனித வாழ்க்கையும் இயந்திரமயமாகிவிட்டது. இயற்கையோடு மண்வாசனையோடு வாழ்ந்த காலங்கள் வசந்த காலங்கள். அதை திருப்பித்தான் பார்க்க முடியும். ஆனாலும் எனக்கு தெரிந்தவரையில் சில நண்பர்கள் இன்னும் அம்மியும், ஆட்டு உரலும், கையால் துவைப்பதும், கைக்குத்தல் அரிசியும் போன்ற நடைமுறைகளில் விடாமல் உள்ளனர்.
அதைப் பற்றியான விவாதம் சமீபத்தில் சென்னையில் திரு. ராமசாமி நடத்தினார். அதை ஒட்டி மனதில் எழுந்த சில எண்ணங்கள்.
"இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்; இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்"
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் -
மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் -
கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம் -
குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் -
கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் -
மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் -
பிரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் -
வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது -
டி.வி. வந்தது.
இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்; இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்.. முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
No comments:
Post a Comment