Tuesday, December 31, 2019

இனிய புத்தாண்டு

"We celebrate the past to awaken the future"

நான் 2019 - இன்னும் சில மணி நேரங்களில் உங்களிடம் இருந்து பிரிய போகின்றேன் அடுத்து   என்னை தொடர்ந்து "2020"வரப்போகிறது 2019 ல் நிறைய திட்டம் வகுத்து இருப்பிர்கள் சில வற்றினை சாதித்திருப்பிர்கள் சில வற்றினை இழந்திருப்பிர்கள் ஆனால் எல்லாவற்றிற்கும் காரணம் நேரம் என என்னையே குறை சொல்விர்கள் வாருங்கள் நல்லதையே நினையுங்கள், செய்யுங்கள், பேசுங்கள் வெற்றியோடு பயணிப்போம்.
Breathe in. Breathe out. Let the past go. It’s going to be a new year. It’s a new beginning. We are all beautiful caterpillars with the capability of becoming even more beautiful butterflies. Love everyone. Live every moments.Travel as much as possible. Celebrate everything. Stand always for right things. Never lose your sense of wonder. Cheers. Life is beautiful. 

கூடுடைத்துப் பற; குவலயம் திரி; குன்றேறிக் கூவு; சிகரமேறிக் கூத்தாடு; உள்ளம் மகிழ உலவு; காதல் செய்; களி கொள்; நல்லன நோக்கு; அல்லன தாக்கு; நேர் நில்; நெறி நில்; யாவரையும் அன்பினால் நெகிழ்த்து; தோழமை நாடு; வெற்றி விரும்பு; தோல்வியைத் தாங்கு; மரம் நடு; மழையில் நனை; கானகம் காண்; புத்தகம் படி; புதியன தேடு; புன்னகையணி; களம் நில்; இயற்கையோடு வாழ்; எதையும் கொண்டாடு; வாழ்தல் இனிது. 

Happy new year. 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
#ksrpost
31-12-2019.


திருப்பாவை #கோதையொழி

#திருப்பாவை 
#கோதையொழி 15 மார்கழி

" *வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக* "

 -"திருப்பாவையிலும் திருப்பாவை"

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

குறிப்பு: கோபியரை துயிலெழுப்பும் பத்து (6-15) பாசுரங்களில் இது கடைசிப் பாசுரம். சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை துயிலெழுப்பிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் உறக்கம் விட்டெழுந்த கோபி ஒருத்தியுடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம். ஒன்றை கவனிக்க வேண்டும், உறங்கும் கோபியரை எழுப்ப கோதை நாச்சியாரே 10 பாசுரங்கள் பாந்தமாய் பாட வேண்டியிருந்தது 🙂 இப்போது எழுந்தவளும் உடனே தயாராகாமல் என்ன பேச்சு பேசுகிறாள் பாருங்கள் !

பொருளுரை:

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
[எழுப்புபவர்] "இளங்கிளி போல பேச்சுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"

சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
[எழுந்திருப்பவர்] "அறிவார்ந்த என் தோழிமாரே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ வந்து கொண்டே இருக்கிறேன்"

'மிளகாய் (சில்லென்று) போல காரமான சொற்கள் கூறி என்னைக் கூப்பிடாதீர்கள்' என்று நேரடியாகவே பொருள் கொள்ளலாம் 🙂

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்[எழுப்புபவர்] "திறம்பட நீ உதிர்க்கும் உறுதிமொழிகளையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் வெகு காலமாகவே அறிவோமே"

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
[எழுந்திருப்பவர்] "நீங்கள் தான் பேச்சுத் திறனுடையவர்கள்! சரி விடுங்கள், நீங்கள் கூறியபடி நானே வாயாடியாக இருந்து விட்டுப் போகிறேன்"

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை[எழுப்புபவர்] "விரைவாகத் தயாராகி எங்களுடன் சேர்ந்து கொள். வேறு எதைப் பற்றி இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறாய்?"

எல்லாரும் போந்தாரோ?
[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"
போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
[எழுப்புபவர்] "அனைவரும் வந்து விட்டனர். நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளேன்! (கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த) குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்ளுபவனும் ஆன கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாயாக"

பாசுரச் சிறப்பு:

பெரியோர் இப்பாசுரத்தை "திருப்பாவையிலும் திருப்பாவை" என்று போற்றுவர். அதற்கு முக்கியக் காரணம், "நானே தான் ஆயிடுக" என்ற வாக்கியமாம். இதற்கு ஆழ்ந்த உட்பொருள் உள்ளது. எளிமையாகச் சொன்னால், இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைவதே ஒரு வைணவனின் குணமாகும் என்ற தாத்பர்யத்தை இந்த ஒரு வாக்கியம் சொல்லி விடுகிறது!

இதற்கு முன்னால் வந்த 9 துயிலெழுப்பும் பாசுரங்கள் போல் அல்லாமல், இப்பாசுரம் உரையாடல் நடையில் பாடப்பட்டு, மிக சுவையாக, பாகவத கைங்கர்யம் (அடியார் சேவை) பகவான் சேவையினும் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது!

பகவத் சேவையும், அவனது திருவடியில் சரணடைதலும் "சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து" என்று திருப்பாவையில் இறுதியில் (29வது பாசுரத்தில்!) தான் ஆண்டாளால் கொண்டாடப்படுகிறது. அதற்கும் முன்னாலே இந்த 15வது பாசுரத்திலேயே, கோதை நாச்சியார் பாகவத சேவையைக் கொண்டாடி, சரணாகதித்துவத்தில் பாகவத சேவையின் உன்னதப் பங்கை சொல்லி விடுகிறார்!

அடியாருக்கு அடியாராக இருப்பவரே பகவானுக்கு உகந்தவர், நெருக்கமானவர்! திருப்பாணாழ்வார் கூட அரங்கனை "அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்" என்று தானே போற்றிப் பாடுகிறார்.

குருகையூர் கோன் நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில், அடியார்க்கு அடியாராக இருப்பதில் உள்ள பெருஞ்சிறப்பை, அவருக்கே உரித்தான பக்திப் பேருவகையோடு பாடியிருக்கிறார்!அடியார்ந்த வையமுண்டு* ஆலிலை அன்ன வசஞ்செய்யும்,*
படியாதுமில் குழவிப்படி* எந்தைபிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்,*அடியார் அடியோங்களே.
3.7.10

மேலே உள்ள பாசுரத்தில் "அடியார்" என்பது ஏழு முறை சொல்லப்பட்டிருப்பது, "சப்த பர்வ தாஸ்யத்வம்" எனப்படுகிறது. அதாவது, ஏழு பிறப்புகளிலும் வைணவ அடியார்க்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை வரமாக பரமனிடம் வேண்டுவது இதன் உள்ளுரையாம்!வாய்க்க தமியேற்கு* ஊழிதோறூழி ஊழி*மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்னாழிக்கை என்னம்மான்*
நீக்கமில்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்*
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே. 
8.10.10

மேலும், அடியவர் சேவை என்பது உபதேசத்தால் விவரிக்க முடியாதது. அதைக் கடைபிடிப்பவர்களாலேயே அதை உணர முடியும். அதனாலேயே, பாசுரத்தை 'அடியவர் சேவை' பற்றிய ஒரு அறிவுரையாகப் பாடாமல், சம்பாஷணை வடிவில் சொல்லி, அடியவர் சேவையின் சிறப்பை குறிப்பில் உணர்த்துகிறார்.

அடியார் குழாம் சூழ, பரமனின் திருவடிகளைப் பற்றி வழிபடுவதையே ஸ்ரீவைஷ்ணவம் மிக உயரியதாகக் கருதுகிறது. அவ்விஷயத்தையும், இப்பாசுரம் குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாரே, "எங்கள் குழாம் புகுந்து கூடு மனமுடையீர்" என்று அடியவர்களை அழைத்திருக்கிறார் தானே 🙂
ஒரு உத்தம ஸ்ரீவைஷ்ணவனின் பத்து குணாதிசயங்கள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

எல்லே இளங்கிளியே - நற்பேச்சு

இன்னும் உறங்குதியோ - அடியவர் அருகில் இருக்கையில், அவர் சேவையை விடுத்து வேறு எந்த செயலிலும் ஈடுபடலாகாது

சில்லென்றழையேன் மின் - அடியவருடன் உரையாடும்போது, சுடு சொற்களை பயன்படுத்துவது தகாது!

நங்கைமீர்! போதருகின்றேன் - அடியவரை மரியாதையுடனும், அடக்கத்துடனும் அணுக வேண்டும்

வல்லை உன் கட்டுரைகள் - அடியவர், நம்மீது சொல்லும் குறைகளை பிணக்கின்றி மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்!

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக! - இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைய வேண்டும்

ஒல்லை நீ போதாய் - அடியவரை ஒரு கணமும் பிரியலாகாது, அவர்களை காக்க வைக்கலாகாது!

உனக்கென்ன வேறுடையை - வைணவ சாத்திரங்கள் சொல்லும் வழிமுறைகளிலிருந்து மாறாமல் நடத்தல் வேண்டும், நம் மனம் போனபடி அல்ல!

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள் - அடியவர் கூட்டத்தைக் காண்பதும், அதில் சேர்வதுமே பரமனைப் பற்றுவதற்கான உபாயமாகும்!

வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட - பரந்தாமனின் கல்யாண குணங்களைப் போற்றிப் பாடுவது, அடியவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதால், இதுவே, அடியவர் சேவையின் உன்னத விஷயமாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பாசுரத்திற்கு இன்னொரு உள்ளுரையும் உண்டு.

இளங்கிளியே - சம்சார பந்தத்தில் உழலும் பக்தன்

இன்னம் உறங்குதியோ - பல பிறவிகள் எடுத்தும், ஆச்சார்யனிடம் புருஷார்த்தம் (ஞானம்) பெற முடியாத தன்மை

எல்லே - ஆச்சர்யத்தை (அதாவது, உலகப்பற்று, அஞ்ஞானம் ஆகியவற்றில் உழலும் பக்தனுக்குக் கூட கற்றறிந்த அடியவர் சம்பந்தம் ஏற்படப் போகும் ஆச்சர்யத்தை) குறிப்பில் உணர்த்துவதாம்!

நங்கைமீர் - ஞானமிக்க அடியார்களே!

சில்லென்றழையேன் மின் - எனது அஞ்ஞானத்தால் தவறிழைப்பின், அதற்காக கடிந்து கொள்ளதீர்

போதருகின்றேன் - சத்விஷயங்களில் (பகவத், பாகவத, ஆச்சார்ய சேவை) என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன்.

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் - வைணவ ஆச்சார்யர்கள் சொன்ன நற்கதைகளையும், உபதேசங்களையும் மனதில் நிறுத்தி

வல்லீர்கள் நீங்களே - அடியவர் நீங்களும் சத்விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்

நானே தான் ஆயிடுக - மனதில் வைராக்கியம் இன்றி, விஷய சுகங்களில் நான் திளைக்கிறேன்

ஒல்லை நீ போதாய்! (குழுமியுள்ள அடியவர்கள் கூறுவது) - வைராக்கியத்தோடு உலகப் பற்றைத் துறந்து, கைவல்யத்தைக் காட்டிலும் மோட்ச சித்தியே சிறந்தது என்றுணர்ந்து, பகவத் சேவைக்கு வருக!

எல்லாரும் போந்தாரோ - மற்ற அடியவர் அனைவரும் இவ்வழியைத் தான் அனுசரிக்கிறார்களா ?

போந்தார் போந்தெண்ணிக் கொள் (குழுமியுள்ள அடியவர்கள் கூறுவது) - ஆமாம், அடியவர் அனைவரும் பகவத்-பாகவத சேவையின் வாயிலாக பேரின்பத்தை நாடுவதே உயரியது என்றுணர்ந்து விட்டனர். நீ வெளியே வந்தால், அது உனக்கும் புரிந்து விடும்!

வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட - நம் தீவினைகளை அழித்து, நம்மை மாயையிலிருந்து விடுவித்து, தறிகெட்டு அலையும் நம் புலன்களை நெறிப்படுத்தி, பகவத்-பாகவத சேவையில் நம்மை ஈடுபடுத்தி நம்மை ஆட்கொள்ளவிருக்கும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடுவோமாக!*****************************

எட்டடிகள் கொண்ட பாசுரத்தில் சூடிக் கொடுத்த நாச்சியார் எத்தனை செய்திகளை தருகிறார், பாருங்கள். அதனால் தான், நாலாயிரத்தில் (திவ்ய பிரபந்தத்தில்) கோதைப் பிரபந்தங்கள் உயர்வானதாகப் போற்றப்படுகின்றன. அவை இரண்டில் (நாச்சியார் திருமொழி, திருப்பாவை) திருப்பாவைக்கே வைணவ பாரம்பரியத்தில் உயரிய இடம் தரப்பட்டுள்ளது! அது போல, பாவை முப்பதில், இப்பாசுரமே மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது!

இப்பாசுரம் கடைக்குட்டி ஆழ்வாரான திருமங்கையாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி என்று கூறுவது ஐதீகம். அதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்!

ஆண்டாள் இப்பாசுரத்தில் கடைபிடிக்கும் (அடியவரிடையே)சம்பாஷணை முறையை, திருமங்கையாரும், "மானமரு மென்னோக்கி" என்ற பதிகத்தை (10 பாசுரங்கள்) இரண்டு ஆய்ச்சிகளுக்கு இடையே நிகழும் சம்பாஷணையாகப் பாடியுள்ளார்!மானமரு மென்னோக்கி* வைதேவியின் துணையா,*
கானமரும் கல்லதர்போய்க்* காடுறைந்தான் காணேடீ*
கானமரும் கல்லதர்ப்போய்க்* காடுறைந்த பொன்னடிகள்,*
வானவர்தம் சென்னி* மலர்க்கண்டாய் சாழலே!

கலியப் பெருமானை "இளங்கிளியே" என்பது மிகப் பொருத்தமே, இவர் தான் ஆழ்வார்களில் இளையவர், அத்துடன் தன்னைக் கிளியாக பல பாசுரங்களில் வருணித்துக் கொண்டவர். அதை விட முக்கியமாக ஒரு கிளி செய்வதைப் போல, நம்மாழ்வாரின் உபதேசத்தை இவ்வுலகுக்கு திரும்ப உரைக்க அவதாரம் கொண்ட (மாறன் தமிழ்மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த)திருமங்கையாரை "இளங்கிளியே" என்று தாராளமாக அழைக்கலாம் தானே 🙂

"வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்" எனும்போது ஆண்டாள் திருமங்கையார் அவதரிப்பதற்கு முன்னமே (பண்டே!) அவரது (பெரிய திருமொழி இயற்றப்போகும்!) புலமையை மனதார பாராட்டுகிறார்!

"உனக்கென்ன வேறுடையை" என்று ஆண்டாள் பாடுவது, பெரிய திருமொழி தவிர கலியபெருமான் அருளப் போகும் இரண்டு பிரசித்தி பெற்ற திருமடல்களை ஞாபகம் வந்ததால் என்று கொள்ளலாம்!

எல்லாரும் போந்தாரோ? - திருமங்கையார், தனக்கு முன்னால் மற்ற ஆழ்வார்கள் அனைவரும் அவதாரம் எடுத்து விட்டனரா என்பதை ஆண்டாளிடம் வினவுவதாகக் கொள்ளலாம்!

வல்லானைக் கொன்றானை - குவலயாபீடம் என்ற கம்சன் அனுப்பிய யானையை அழித்த கண்ணனின் லீலையை திருமங்கையாழ்வார் பல பாசுரங்களில் பாடியுள்ளார் என்பது கவனிக்க வேண்டியது.

"அவரிவை செய்கறிவார் அஞ்சனமாமலை போலே", "கவல யானை கொம்பொசித்த கண்ணனென்னும்", "வேழனும் பாகனும் வீழ" (திருவல்லிக்கேணி பற்றிய பாசுரத்தில் உள்ளது இது) என்பவை சில உதாரணங்கள்.விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட - பகைவரின் அகந்தையை அழிப்பதற்கு வேண்டி எம்பெருமான் லீலைகள் பல புரிபவன். அவற்றில் ஒன்று தான், கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து, மாக்களையும், ஆயரையும் காத்து, இந்திரனின் கர்வத்தை சாதுர்யமாக அடக்கியது. திருமங்கையார் இந்த கிருஷ்ண லீலையால் மிகவும் கவரப்பட்டதால் தான், தனது பெரிய திருமொழியை, "குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை" என்று முடிக்கிறார்! அது போல, திருநெடுந்தாண்டகத்தை, "குன்றெடுத்த தோளினானை" என்று நிறைவு செய்கிறார்! கோதை நாச்சியாரும், ஆழ்வாருக்குப் பிடித்த அதே கிருஷ்ண லீலாவை ஞாபகப்படுத்தி இப்பாசுரத்தை நிறைவு செய்கிறார் 🙂
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை 
#கோதையொழி


ஆங்கில வருடத்தின் இறுதி நாளன்று.....————————————————-
வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து 
கொள்ளும் போது தான், வாழ்க்கையில்
நமக்கு பிடிப்பு உண்டாகும், வாழ்வதன்
தேவையும்  நமக்கெல்லாம் புரிய வரும்....
வாழும் போதே மகிழ்ச்சியாய் வாழ்ந்து
விடுங்கள், ஏனெனில் இங்கு மறு ஒத்திகைகள் கிடையாது.

*******
சேறென்று தெரிஞ்சதால் 
மிதிக்காது ஒதுங்கினலும்....
ஒதுங்கிய கால்களின் சில இடங்களை சில சேறுகள் வலிந்து ஒட்டிக்கொள்ளகின்றன.....
அது போலவே கவலைகள,ஆற்றாமை,
வேதனைகள் எவ்வளவு வல்லமை இருந்தாலும் காரணம் இல்லாமல் வந்து  நிலைக்குலைய 
செய்கிறது.
ஆனால் இதுவும கடந்து விடும். 
 
*******
ஆட்சி அதிகார வர்க்கம் என எல்லா இடங்களிலும் தான்..
எல்லாம் கையில் இருக்குன்னு
திறமையானவங்களை கொண்டாட
தெரியாமல் தொலைச்சுட்டு;
ஆட்சியோ,வேலையோ, தொழிலோ
நேர்த்தியா இருக்கணும்னு
எதிர்பார்த்தா எப்படீ..? எந்த போராட்டம் நடத்தி என்ன பலாபலன்?

*****
அடி, உதை, தாக்கு,வெட்டு என்பதை கோஷமாக்குபவர்கள்,
கற்க, நல்லதை தேடு
என்பதையும் கோஷமாக்க 
ஏன் தவறி விட்டார்கள்?

#KSRadhakrishnanpostings 
#KSRPostings

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
31/12/2019

பாஞ்சாலி சபதம்

"சொல்லவுமே நாவு துணியவில்லை, தோற்றிட்டார்
எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே,
நின்னையழைத்து வர நேமித்தான் எம்மரசன்" என்ன உரைத்திடலும், "யார் சொன்ன வார்த்தையடா?
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார் பணியால் 
என்னை அழைக்கின்றாய்?" என்றாள்; அதற்கவனும்
"மன்னன் சுயோதனன் தன் வார்த்தையினால்" என்றிட்டான்.....

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

Monday, December 30, 2019

திருப்பாவை #கோதைமொழி 14.மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 14.மார்கழி 

“ *சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்”* 

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள் = உங்க புழக்கடைத் தோட்டக் குளத்திலே!

புழக்கடை = புழை+கடை! கடை-ன்னா கடைசி; புழை-ன்னா குறுகிய வாயில்!
வாவி = சிறு குளம், நீர் நிலை! கிணற்றைக் கூட வாவி-ன்னு சொல்லுவாங்க! 

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண் = செந்தாமரை மலர்கள் பூக்கின்றன! ஆம்பல மலர்கள் குவிந்து மூடுகின்றன!
 
செங்கல் பொடிக் கூறை, வெண் பல்-தவத்தவர் = செங்கற்பொடி போல சிவப்பா, காவி நிறத்துல கூறை ஆடை! கூறைப் புடைவை-ன்னு சொல்றோமே அது போல! அந்தக் காவியைத் தரித்த பல-தவத்தவர்கள்! பல்-முனிவர்கள்! அவர்கள் தவம் வெண்மையான (தூய்மையான) தவம்! வெண் மனசு போல வெண் தவம்!

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் = சங்கு ஊதி வழிபடனும்-ன்னு கோயிலுக்குப் போகத் தொடங்கி விட்டார்கள் அந்த முனிவர்கள்! 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் = ஏதோ பெருசா, எங்களை எல்லாம் வந்து எழுப்பறேன்-ன்னு முன்னே சொன்னியே! 
நங்காய்! எழுந்திராய், நாணாதாய், நாவுடையாய் = ந.நா.நா!
நங்கையே! நாணம் இல்லாதவளே! நாக்கை மட்டும் நீட்டி நீட்டி, தேனொழுகப் பேசுறவளே! எழுந்திரு!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் = சங்கு-சக்கரம் ஏந்தும் வலிமையான கைகளை உடைய நம் பெருமாள்!
சக்கரம் முதன்மையான ஆயுதம் என்றாலும், சொல்லும் போது "சங்கு-சக்கரம்" என்று தான் சொல்கிறார்கள்! ஆண்டாளும் அப்படியே சொல்கிறாள்! இளங்கோவடிகள் மட்டும் பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் என்று "சக்கர-சங்கை"க் காட்டுகிறார்!

சக்கரத்தின் பெயர் சு+தர்சனம்! சங்கின் பெயர் பாஞ்ச சன்னியம்! நமக்கு மட்டுமில்லை, எம்பெருமானுக்கே காப்பாக இருப்பவை இவை! இவைகளை விழிப்பாக இருந்து அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்! உறகல், உறகல் ஒண்சுடர் ஆழியே,சங்கே!-என்று சங்கு சக்கரத்தைத் தூங்கக் கூட விட மாட்டேங்கிறார் நம்ம பெரியாழ்வார்!

பங்கயக் கண்ணானைப் பாடு = அந்தத் தாமரைக் கண்ணானைப் பாடு!

ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி


#ரைட்_ஹானரபிள்_ஸ்ரீனிவாச_சாஸ்திரி-#கம்யூனிஸ்ட்_கட்சி_தலைவர்ஆர். #பாலதண்டாயுதம்-#அண்ணாமலை #பல்கலைகழகம்.————————————————-
அன்றைய அண்ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் மனசும் இன்றைய ஆள்வோர் , அதிகார மனசும் !
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஸ்ரீனிவாச சாஸ்திரி ( இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றவர் கூட ) ஒரு துணை வேந்தராக மாற்றுக் கருத்துக்கொண்டமாணவரையும் தம் சொந்தப் பிள்ளையாகப் பாவித்துப் பாதுகாத்தார் ! ஆனாலின்று ,  ஆள்வோர் மன நிலை  ? 
சுதந்திரத்திற்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருபெரும் பிரிவாகத்     திராவிடக் கழகப்   பிரிவும் கம்யூனிஸ்ட் பிரிவுமாக இருந்த நிலை . கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட நிலையில் உள்ளே மாணவர்களுள் விவாதங்கள் ஏற்பட்டு போராட்ட நிலையை அடைந்தது .காவல்துறை கம்யூனிஸ்ட் மாணவர்களைக் கைதுசெய்யமுடிவெடுத்தது . ஆனால் , துணைவேந்தர் ரைட் ஹானரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரி , பல்கலைக் கழக வளாகத்திற்குள் போலீஸ் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார் . கடலூர் காவல்துறை சூப்பிரண்டண்டான ஆங்கிலேயர் , சாஸ்திரியைச் சந்தித்து , பாலனை ( ஆர். பாலதண்டாயுதம் ) மட்டுமாவது கைது செய்ய அனுமதி கேட்டார் . துணைவேந்தர் சாஸ்திரி , " இந்த வளாகத்திற்குள் இருக்கும் குழந்தைகள் எல்லாம் எனது சொந்தக் குழந்தைகள். துஷ்டக் குழந்தையாய் இருந்தாலும் அவனைத் தகப்பன் வெறுக்க மாட்டான் ! " என்று பதில் கூறி திருப்பி அனுப்பிவிட்டு , பாலதண்டாயுதத்தை அழைத்து , " நீ ஹாஸ்டலில் இருக்க வேண்டாம் .பத்துநாள் என் வீட்டில் தங்கிப் படி ! " என்று கூறி தம் வீட்டிலேயே வைத்துக் கொண்டாராம் .  இந்த நிகழ்வை  தோழர் பாலு , கண .முத்தைய்யாவிடம் பல வருடங்களுக்குப் பிறகு கண்களில் நீர் துளிர்க்க பகிர்ந்துகொண்டாராம் .  "  நான் சாஸ்திரிக்குத் தொல்லை கொடுப்பதில் முதல் ஆளாகவே இருந்திருக்கிறேன் . ஆனால் , அந்தப் பெரிய மனிதர் என்னைக் காக்கப் பத்துநாட்கள் தன் சொந்த வீட்டில் அடைக்கலம் தந்தார் " என்று  தழுதழுத்த குரலில் கூறினார் பாலதண்டாயுதம் . ( " முடிவுகளே தொடக்கமாய் " - கண .முத்தையா) 

Sunday, December 29, 2019

Priya Sisters

#சென்னை_மார்கழி_இசை_விழா மேடைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம்  வரும் 
#ப்ரியா_சகோதரிகளின் இசைக்கு தொடர்ந்து அரங்கங்களில் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். அவர்களின் இசையில் ஏதோ ஒரு ஈர்ப்பு, ஜனரஞ்சகம்....
ஆனால் இந்த ஆண்டு இசை விழாவில்
அவர்களின் பங்களிப்பு இல்லை என்பது
ஏமாற்றதை தருகிறது.

Priya Sisters not  performing  any concert this year December music season.It is disappointment......


சென்னை_உயர்நீதிமன்றம் #காஸ்லிஸ்ட்_நிறுத்தம்.

#சென்னை_உயர்நீதிமன்றம் 
#காஸ்லிஸ்ட்_நிறுத்தம்.
————————————————-
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்கு எந்தெந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று; ஒவ்வொரு  நாள் விடியலில் 4  மணியிலிருந்து  5 மணிக்குள் அச்சடித்து வழக்கறிஞர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும்.  இதை காஸ்லிஸ்ட் என்று அழைப்பார்கள்.  இதற்கு கட்டணம் ரூபாய் 500. 25 பேர் சென்னை நகரில் பல்வேறு பகுதியிலுள்ள வழக்கறிஞர்கள் வீட்டிற்கு விடியற்காலை 2 மணிக்கு அச்சடித்து முடித்தவுடன் வழக்கறிஞர்கள் வீட்டிற்கு செய்தித்தாள்களை போல எடுத்துச் செல்வது 150 ஆண்டுகளாக வாடிக்கையான விஷயம். 

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் “நான் கடிகாரத்தைப் பார்த்து நடைப்பயிற்சிக்கு செல்வதில்லை. என்னுடைய பாதுகாவலர் காஸ்லிஸ்டை குடுத்து விட்டார் என்றால் விடியற்காலை 4.30 மணி என்று தெரிந்து நடைப்பயிற்சிக்கு சென்று விடுவேன். 

என்னுடைய அனுபவம் 20 ஆண்டுகளில் (1970-80களில்)2 முறை அச்சக பழுதால் காஸ்லிஸ்ட் வர தாமதமாக கிடைக்கும். இதற்காகவே உயர்நீதிமன்ற வளாகத்தில் மேற்கு வாயில் செல்லும் வழியில் அரசு நூல் விற்பனை நிலையத்தை ஒட்டி இந்த அச்சகம் இருந்தது. இன்றைக்கு அந்த இடம் மாற்றப்பட்டுள்ளது.  

கடந்த  வாரம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் அனைத்து நீதிபதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில்செலவுகளை குறைக்கும் வகையில் காஸ்லிஸ்ட் விநியோகிப்பதை ஜன.1  முதல்  நிறுத்த  முடிவு செய்யப்பட்டது.

கடந்த 1980களில் 21 நீதிமன்றங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இயங்கின. மதுரைக் கிளை அப்போது கிடையாது. 21 நீதிபதிகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தான் தனித்தனியாக  அமர்ந்து  வழக்கு விசாரணை செய்வார்கள். மீதி 4 நாட்கள் சில நீதிபதிகள் பெஞ்ச் அமர்வில் இருபார்கள். 

இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 75 வரை உயர்த்தப்பட்டது. ஆனால் 55 பேர் மட்டும் இன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பொறுப்பில் உள்ளனர்.

நான் வழக்கறிஞராக பதிவு செய்துப் பணிக்குச் சென்ற பொழுது என்னுடைய சீனியர் காந்தி தனித்தனித் தாள்களாக வந்த காஸ்லிஸ்டை கோர்ட் வாரியாக ஒழுங்குப்படுத்தி புத்தக வடிவில் தைத்து அதன் பின்புறம் உள்ள தாளில் எந்தெந்த நீதிமன்றத்தில் நமக்கான வழக்குகள் வருகின்றன  என்று  ஒவ்வொரு கோர்ட்டாக பார்த்து பின்பக்கம் கோர்ட் எண், வழக்கு எண் என்று எழுதி வைக்க வேண்டும். இது தான் வக்கீல் தொழிலில் நுழைவோருக்கு முதல் படி. அதேபோல வழக்குமன்றம் வாரியாக நாம் தைத்து தயார் செய்த பட்டியலில் கோர்ட் வாரியாக நம்முடைய வழக்குகளை டிக் செய்யவும் வேண்டும். இது பிரவுன் தாளில் (அப்போது சாணித் தாள் என்பார்கள்) அச்சிட்டு வரும். 1985க்கு  பிறகு வெள்ளைத்தாளில்  அச்சிட்டு அனுப்பினார்கள். இப்போது இந்த முறை நிறுத்தப்படுகின்றது. இனி இதை இணையத்தில் தான்  பார்க்க வேண்டுமாம். இணையதளத்தில் பார்க்கும் வசதி இருந்தபோதிலும், பல நேரங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக காஸ்லிஸ்டை பார்க்க இயலாத நிலையேஉள்ளது.  மேலும், மூத்த வழக்கறிஞர்கள் பலர்  பட்டன் செல்போனை  பயன்படுத்துவதால் அவர்களால் இணையதளத்தில் வழக்கு பட்டியலை பார்க்க முடியாது.  காஸ்லிஸ்ட்  தயாரிப்புக்கான தொகையை அரசு வழங்குவதோடு வழக்கறிஞர்களும் கட்டணம் செலுத்துகின்றனர். இதனால் உயர் நீதிமன்றத்துக்கு நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை.  எனவே  பழைய முறைப்படி   காஸ்லிஸ்டை வழக்கறிஞர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு நேரில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#சென்னை_உயர்நீதிமன்றம் 
#காஸ்லிஸ்ட்

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29-12-2019


அரசியல் சாசனம்,

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி தினமணியில் அரசியல் சாசன நாளையொட்டி வெளிவந்த என்னுடைய “

 தேவை மீள் பார்வை” கட்டுரையை அப்படியே கடித வடிவில் செங்கல்பட்டு வாசகர் ஒருவர் இன்றைய தினமலர் இது உங்கள் இடம் பகுதியில் (29.12.2019) எழுத்து மாறாமல் கடித வடிவமாக வந்தது மகிழ்ச்சியை தந்தது.#ksrpost
29-12-2019.

திருப்பாவை #கோதைமொழி 13.மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 13.மார்கழி  

“ *வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று* ”

புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!

புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று - இதைப் பார்த்து விட்டு அப்புறம் மற்ற விளக்கத்துக்குப் போவோம்!

வெள்ளி=Venus! வியாழன்=Jupiter!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = Venus rose as Jupiter set!

 பொதுவா சூர்யோதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்! 
* ஆனால் வியாழன் (Jupiter) அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!

வியாழன் கிரகம் ஒரு பக்கமாய் மறைய, எதிரே வெள்ளிக் கிரகம் தோன்றும் வானியல் நிகழ்வு இது! வானில் சந்திரனும் இன்னும் மறையவில்லை! மேற்றிசையில் இருக்கு! சூரியன் இன்னும் ஒரு மணியில் இதோ உதிக்கத் துவங்கப் போகிறது!
பார்க்கிறாள் கோதை! அவள் காலத்தில் நடைபெற்ற ஒரு அதிசய வானியல் நிகழ்வை உடனே குறித்து வைக்கிறாள் அவள் திருப்பாவை டைரியில்! ஒரு கோதையின் டைரிக் குறிப்பு!

எப்போதெல்லாம் இப்படி அதிசய நிகழ்வு நடந்தது என்பதை விஞ்ஞானிகளின் துணையோடு, வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள். அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! 

புள்ளின் வாய் கீண்டானை = கொக்காக வந்த பகாசுரன் அலகைப் பிளந்தானை (கண்ணனை)
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை = இந்தப் பொல்லா அரக்கன் இராவணன் என்று சொல்வாரும் உண்டு!
ஆனால் சென்ற பாட்டில் இராவணனைக் கோமான் (Gentleman) என்று பாடி விட்டாள்! மேலும் இராவணன் தலையை இராமன் கிள்ளிக் களையவில்லை! அப்போ இது யாரா இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்!

கீர்த்திமை பாடிப் போய் = இப்படி மூர்த்தியின் கீர்த்தியை பாடிக் கொண்டு
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் = புள்ளைங்க (பொண்ணுங்க) எல்லாம் பாவை நோன்பு நடக்கும் படித்துறைக்குப் போகுதுங்க!

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = வெள்ளிக் கிரகம் தோன்ற, அதன் முன் வியாழன் கிரகம் மறையுதே! இது என்ன அதிசயம்!

புள்ளும் சிலம்பின காண் = பறவைகள் பலவும் சிலம்ப ஆரம்பித்து விட்டன! இந்த அதிசய வானியல் நிகழ்வைப் பார்த்தா? இல்லை இது அதிகாலைப் பறவைச் சத்தமா? இப்போதும் கிரகணங்களின் போது பறவைகள் பலமாகக் கத்துவதைப் பார்க்கலாம்!

போதரிக் கண்ணினாய் = போது+அரிக் கண்ணை உடையவளே! போது=மலர்; அரி=வண்டு! வண்டு மேயும் மலர் போல இருக்குடி உன் கண்ணு!
பூப்போல விரிந்த கண், அதில் கருவண்டு போல உன் கருமணி நல்லாவே தெரியுது! இப்படியா விழிச்சிக்கிட்டே அரைத் தூக்கம் தூங்குவ? அடிச்சீ! எழுந்து வா! (ஆண்டாள் காட்டும் உவமையின் சக்தியைப் பாருங்க....முழிச்சிக்கிட்டே தூங்கும் கண் = போது அரிக் கண்)

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? = ஆற்றிலும் குளத்திலும் முங்கி முங்கிக் குளிக்கும் சுகம் போல வருமா? அதுவும் சில்லுன்னு தண்ணி உடம்பில் படும் போது, முதலில் குளிரெடுத்தாலும், பிற்பாடு எவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கும்!

பாவாய், நீ நன்னாளால் = பெண்ணே, நல்ல நாளு அதுவுமா இன்னிக்கி கூடவா தூக்கம்?
கள்ளம் தவிர்ந்து கலந்து = உன் கள்ளமான அரைத் தூக்கம் போதும்! வா, எங்களுடன் கலந்து விடு! எம்பெருமானிடத்தில் "கலந்து" விடு!

 திருக் "கலந்து" சேரும் மார்ப தேவ தேவ தேவனே,
இருக் "கலந்த" வேத நீதி ஆகி நின்ற நின்மலா,
கருக் "கலந்த" காள மேக மேனி யாய நின்பெயர்,
உருக் "கலந்து" ஒழிவி லாது உரைக் குமாறு உரைசெயே!

இப்படிக் கலந்து கலந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

#திருப்பாவை
#கோதைமொழி


தமிழக அரசியல் வரலாற்றில் ஓமந்தூராரும், காயிதே மில்லத்தும்________________________________________

கடந்த 1950, 1960 தமிழக அரசியலைக் குறித்து குறிப்புகளை தேடும்போது ஒன்று மனதில் பட்டது. பொது வாழ்க்கையில் தூய்மையோடு, நேர்மையான, எளிமையான தலைவராக இருந்த ஓமந்தூரார், சென்னை ராஜதானி பிரதமர் பதவியிலிருந்து (அன்றைக்கு முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்) அவரே மன வேதனையோடு விலகினாரே?  விவசாயிகளின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் அவர் தங்கியிருந்த கூவம் இல்லத்திலிருந்தே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, வாலாஜா சாலையில் உள்ள தர்பார் ஓட்டல் (இன்றைய அண்ணா சிலைக்கு எதிரில் - எல்லீஸ் சாலை துவக்கத்தில்) அருகே இருந்த வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு, தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வடலூர் வள்ளலார் இல்லத்தை நோக்கி சென்றுவிட்டாரே? நேர்மையான ஓமந்தூரார் அன்றைய பிரதமர் பதவியில் இருக்க முடியாமல், அன்றைக்கு மொட்டை கடிதாசி(அப்போது cableலும் உண்டு )எழுதி அன்றைய பிரதமர் நேருவிடம் கோள் மூட்டிய விஷயங்களை எல்லாம் படிக்கும்போது வேதனை அளிக்கிறது. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.  

இந்த சூழலுக்கு யார் காரணம்? என்பதை தமிழக மக்களுக்கு தெரியவேண்டும். 

அதேபோல கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அற்புதமான மனிதநேய தலைவர். 

1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.  1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
 1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். 1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற துணையாக இருந்தார்.

கேரள மஞ்சேரி தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டபோதும், வெறும் வேட்பாளர் மனுவை மட்டும்தான் தாக்கல் செய்வார். பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெறுவார்.  தமிழகத்தில் பிறந்து கேரள மண்ணில் வெற்றி பெற்றது சாதாரண விஷயம் இல்லை. திருநெல்வேலி பேட்டையில் பிறந்து, திருநெல்வேலியில் சாதாரண எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்.  

நானே கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே பஸ்ஸுக்காக காத்திருந்ததை பார்த்துள்ளேன்.  நீண்ட இஸ்லாமிய தொப்பி வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் யாரையும் சந்திக்கும்போது அன்பாக பேசுவார்.

தேர்தலுக்கு மக்களிடம் வேஷம்போட்டு வாக்கு கேட்காமல், வெற்றி பெற்றவுடன் தொகுதியிலேயே இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பணியை செய்வார்.  இப்படி ஒரு மாமனிதரை யாராவது பார்த்ததுண்டா?

ஓமந்தூராருக்கு ஏற்பட்ட அந்த வேதனை இன்று வரை வெளிவரவில்லை.  அது மட்டுமல்ல ஓமந்தூராரை யாரென்று கேட்டால் இன்றைக்கு பலருக்கு தெரியவில்லை. சினிமாவில் நடித்த ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும், விஜயகாந்தையும், கொண்டாடுகின்ற மக்கள் தியாக சீலர்களை நினைத்துப் பார்க்காமல் இருப்பதுதான் இன்றைக்கு புரையோடிய அரசியல் நிலை.

மக்கள் சிந்திக்க வேண்டும்.  ஒரு நோய் நொடி என்றால் யார் நல்ல மருத்துவர் என்று விசாரித்து அவரை பார்ப்பது போல, அதைவிட முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாடு. நாட்டை ஆட்சி செய்து பரிபாரம் செய்யவேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டாமா? 

எத்தனை பேர் ஓமந்தூராரையும், காயிதே மில்லத் உடைய அணுகுமுறைகளை அறிந்துள்ளார்கள்?  அப்படிப்பட்ட தலைவர்களை நாம் கொண்டாட வேண்டாமா?வ உ சி,  குமாரசாமி ராஜா,ஜீவா,கக்கன், சேலம் வரதராஜ நாயுடு, மதுரை வைத்தியநாத அய்யர், திராவிட இயக்க முதல் பெண் அலமேலு மங்கதாயார் அம்மாள்,கேவிகே சாமி என பலர்.......
இப்படி பல தியாக தமிழக தலைவர்களை நமக்கு தெரிவதும் இல்லை என்பது சமுதாய குற்றம் . நமது மக்கள்தான் இறையாண்மை.அந்தஇறையாண்மையை பொருத்தமானவர்களிடம் வழங்க வேண்டும். இறையாண்மை ஒன்றும் கேளிக்கை, வேடிக்கை பொருள் அல்ல.

ஓமந்தூரார் பதவி விலகிய காரணம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு யார் பொறுப்பாளிகள் என்பதை அறிய வேண்டும்.  அன்றைக்கே மொட்டை கடிதாசி வந்துவிட்டது தமிழக அரசியலில்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

#ksrposting 
#ksradhakrishnanposting #தமிழகஅரசியல் #ஓமந்தூர்ராமசாமிரெட்டியார் #காயிதேமில்லத்
29-12-2019.

Saturday, December 28, 2019

திருப்பாவை #கோதைமொழி 12.மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 12.மார்கழி

 “ *மனத்துக்கு இனியானை பாட நீ வாய் திறவாய்* ”

கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!

கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி = மாஆஆஆஆ என்று கனைக்கிறது! இந்த எருமையே ஒரு இளமை எருமை! அதற்கு ஒரு கன்று! 

நினைத்து, முலை வழியே நின்று பால் சோர = அந்தக் கன்றை நினைத்த மாத்திரத்தில், பால் தானாகச் சொரிகிறது!

நனைத்து, இல்லம் சேறாக்கும்! = பால் கறக்க ஆளில்லாத வேளை! இப்படித் தானாகவே பால் கசிந்தும் சொரிந்தும் கொண்டு இருந்தால்? அந்த வீடே சேறாகி விட்டது! பால் சேறு! பாற்கடல் தெரியும்! இது பாற்சேறு! 

நற் செல்வன் தங்காய் = நல்ல செல்வனின் தங்கையே!

நற்செல்வன் = நப்பின்னையின் அண்ணன்! அவள் நற்+பின்னை! இவன் நற்+செல்வன்!
குழந்தைகளுக்குச் சூட்ட அழகான தமிழ்ப் பெயர்கள் அல்லவா - *நப்பின்னை* , *நற்செல்வன்* !
இவனை ஸ்ரீதாமன் என்றும் வடமொழியில் சொல்லுவார்கள்! ராதையின் அண்ணன்! ஸ்ரீதாமன் = நற்செல்வன்! அதே பொருள் தான் வருகிறது ரெண்டு பேருக்குமே!

இந்த நற்செல்வன் கண்ணனின் மனத்துக்கு அவ்வளவு பிடித்தமானவன்! மிகவும் மென்மையான பையன்!

 *கண்ணன்-நற்செல்வன் உறவு வெறும் ஆருயிர்த் தோழமை மட்டுமே அல்ல! அதையும் தாண்டி ஒரு ஜென்ம-ஜென்ம பந்தம் இருவருக்குள்ளும்* !

வெண்ணெய் களவாடும் போது எப்பமே உடன் இருப்பவன் ஸ்ரீதாமன் (எ) நற்செல்வன்! கண்ணன் மாட்டிக் கொள்ளும் போது, அவனைத் தப்புவிக்க, தான் அடி வாங்கிக் கொள்வானாம்! வெண்ணெய்க் கட்டியின் மேல் சில சமயம் காரம் தடவி வைப்பார்களாம் சில அம்மணிகள்! அன்றிலிருந்து தான் தின்று பார்த்துவிட்டு, அப்புறம் தான் அந்த எச்சில் கட்டியைக் கண்ணனுக்குத் தருவானாம் நற்செல்வன்! இப்படி ஒரு பந்தம்!:)

துழாய்க்காட்டை (பிருந்தாவனத்தை) விட்டு, கண்ணன் மதுரைக்குப் போகிறான்! எல்லாக் கோபிகைகள் கிட்டேயும் விடைபெற்றாகி விட்டது! ஆனா இந்த நற்செல்வனை மட்டும் அன்னிக்குன்னு பார்த்து எங்கு தேடியும் காணோம்!
கண்ணன் மனசு அடிச்சுக்குது! தன் "உயிர்" கிட்ட சொல்லாம கொள்ளாம எப்படிப் போவது? இந்த அண்ணன் பலராமன் வேறு அவசரப்படுத்துகிறான்! ஆற்றங்கரைக்கு வந்தாகி விட்டது!

ஆகாஆஆஆ! ஆங்கே நற்செல்வன்! மரத்தின் அடியில் கலங்கிய கண்களுடன்!
கண்ணன் ஓடியே போய் செல்வனைக் கட்டிக் கொள்கிறான்!
பிரிய வேண்டுமே என்ற பிரிவு ஆற்றாமை இரு தோழர்களின் நெஞ்சிலும்! கண்ணன் வழக்கம் போல பொய் சொல்கிறான்!

"நாளைக்கே திரும்பி வந்துடுவேன் நற்செல்வா!"

"பொய்! கம்சன் பொல்லாதவன்! அவனை ஒரே நாளில் எல்லாம் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது! என்னைக் கூட அழைத்துப் போ என்றாலும், அதுக்கு வந்திருக்கும் மதுரைப் பெரியவர் முட்டுக்கட்டை போடுகிறார். நான் என்ன செய்ய கண்ணா?"

"டேய், நாளை இல்லீன்னா நாளன்னைக்கு! இல்லீன்னா இன்னும் ஒரு நாள்! எப்படியும் வந்துருவேன்-டா!"

"சரி, உனக்காக இந்தக் கரையில் தினமும் வந்து வந்து காத்துக்கிட்டே இருப்பேன்! சரியா?"
போனவன் போனவன் தான்! காத்துக்கிட்டு இருந்தவன், காத்துக்கிட்டு இருந்தவன் தான்!
பெற்றோர், உற்றோர், ஏன் கோபியரே விட்டுவிடு என்று சொன்ன போதும், விடாமல் கண்ணனுக்குக் காத்துக் கொண்டே இருந்தான்! பலப்பல ஆண்டுகள் ஓடி விட்டன! இறுதியில் கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டான்!

கோபிகைகளைக் காட்டிலும் அதிக ப்ரேமை கொண்டவன் நற்செல்வன்! கோபிகைகளாவாது கண்ணனிடத்தில் மயங்கி அவன் தீண்டலை வேண்டி நின்றார்கள்! ஆனால் இவனுக்கோ அந்த முகாந்திரமும் இல்லை! கைங்கர்ய ப்ரேமை! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அதனால் தான் சென்ற பாட்டில் "கறந்து" என்று கோபிகைகளைக் காட்டிய கோதை, இந்தப் பாட்டில் பால் "தானாகவே சொரிகிறது" என்று சொல்லி நற்செல்வனைக் காட்டுகிறாள்!

* கோவலர் பொற்கொடியான கோபிகைக் "காதல்" = கற்றுக் கறவை கணங்கள் பல "கறந்து"
* நற்செல்வன் "அன்பு" = நினைத்து, முலை வழியே, நின்று பால் "சோர"

அன்"பால்" சொரியும் நற்செல்வன்-ஸ்ரீதாமன் திருவடிகளே சரணம்!

பனித் தலை வீழ, நின் வாசற் கடை பற்றி = காலை இளம் பனி எங்க தலை மேல வந்து விழுகிறது! இருந்தாலும் உன் வாசற்கடையில் வந்து நிக்குறோம்! இதுக்காக வாச்சும் எழுந்திருடீ!

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற = இராவணப் பெருந்தகை! அரக்கன் என்றோ அசுரன் என்றோ அவனை ஆண்டாள் வையவில்லை! இராவணனைக் கோமான் என்கிறாள்! மனத்துக்கு இனியான் என்று போற்றுகிறாள்!  

மனத்துக்கு இனியானை = இராமன் மனத்துக்கு இனியான்! ரம்மியம்=ராமன்!

ரம்யதி இதி ராமஹ: ரமந்தே அஸ்மின் இதி ராமஹ: மனிதனாய் இராமனும் தவறுகள் செய்தான்! ஆனால் மறைக்கவில்லை! ஒப்புக் கொண்டு கழுவாய் தேடினான்!
* ஊருக்கு உபதேசம் செய்யப் போகிறான் கிருஷ்ணாவதாரத்தில் = கீதை!
  முதலில் ராமாவதாரத்தில் தான் நடந்து காட்டிவிட்டு, பிற்பாடு ஊருக்கு உபதேசம்!

 *கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ* ? என்கிறார் நம்மாழ்வார்! உண்மை விளிம்பியான மாறனே அப்படிச் சொல்கிறார் என்றால் அது சும்மா இல்லை!

பாடவும், நீ வாய் திறவாய்! = அவனைப் பாடுகிறோம்! நீ வீட்டு வாயையும் திற! உன் வாயையும் திற! திறந்து எங்களுடன் சேர்ந்து பாடுவாய்!

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்? = இன்னுமா எழவில்லை? அப்படி என்ன உனக்குப் பெரும் தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து = அக்கம் பக்கம் எல்லா வீட்டுக்கும் தெரியப் போவுது உன் தூக்க மகாத்மியம்! 
பாடவும், நாம் வாய் திறப்போம்! பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை
#கோதைமொழி

Friday, December 27, 2019

Anita R. Ratnam dance program....... NAACHIYAR NEX-TAndal

Today night Anita R. Ratnam dance program.......
NAACHIYAR NEX-TAndal
@ Sivagami Petachi hall
Mylapore.
Excellent performance!

‘’Thief. Liar. Coward..
Words of hurt and desperation hurled by #ANDAL at Her KRISHNAGorgeous poetry, magnificent landscapes, heartbreak....Endless longing....’’
#ksrpost27-12-2019.இங்குலாப் ஜிந்தாபாத்"

"ஜெய் ஹிந்த் " என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர் 1941ல்  ஆபித் ஹசன் சப்ரானி எனும் இஸ்லாமியர்....

"இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சொல்லை உருவாக்கியவர் ஹஸ்ரத் மொஹானி.

"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும் மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர் அஸீமுல்லா கான்.

மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும் (QUIT INDIA) "குய்ட் இந்தியா" எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும், 1942ல் பம்பாய் மேயருமாயிருந்த யூசுப் மெஹர் அலி.

"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர் முஹம்மது இக்பால் 

சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும் "சர்பரோஷ் கி தமன்னா" என்கிற தேசபக்தி பாடலை 1921ல் எழுதியது உருது கவிஞர் பிஸ்மில் அஸ்மாதி.

திருப்பாவை #கோதைமொழி 11.மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 11.மார்கழி

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!

சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!
 
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து = கறவை மாடுகளை எப்படி கறக்கணும்? கன்றோடு கறக்கணும்! கற்றுக்+கறவை = கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!

செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!

பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!
ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!

சிலப்பதிகாரக் கோவலன் ஆயர் குலம் இல்லை என்றாலும், கோவலன் என்னும் பேர் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்க வேண்டும்! அதை ஒரு வணிகர் தலைவரான மாசாத்துவான் மகனுக்குச் சூட்டி இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

இப்படி முல்லையும், மாயோனும், ஆயர்களும், ஆநிரைகளும் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க முடியாத பெருஞ்சொத்து! 

குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே = இப்படிக் குற்றமே இல்லாத நற்குடிக் கோவலர்கள்! அந்த ஆயர்கள் வீட்டுப் பொற்கொடியே! பெண்ணே!

சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து = உன் சுற்றப் பெண்டிரும், தோழிகள் என்று இரு சாராரும் வந்து கூவறோமே!
நின் முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட = உன் வீட்டின் முன்வாசலில் நின்று, மேகவண்ணன் கண்ணனைப் பாடுறோமே!

சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! = சிற்றாதே (முணுமுணுக்காதே)! பேசாதே (கத்தாதே)! என் செல்லப் பெண்ணே!
சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல் இல்லீங்களா?

பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி! 
நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? = இப்படி நீ தூங்கிக்கிட்டே இருந்தா என்ன தான் அர்த்தம்? 
ஏல் ஓர் எம் பாவாய்! ஏல் ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

#திருப்பாவை
#கோதைமொழி

Jallianawala_Bagh Massacre.

#Rare_Photo 
Today is the 100th anniversary of the famous Amritsar Session. The Session under  the   presidentship  of 
Motilal Nehru   highlighted  the#
#Jallianawala_Bagh Massacre.
Important personalities like Jawaharlal Nehru (bottom, left) Motilal Nehru (1st row, centre)  : (3rd left), Swami Shraddhanand (5th left), Dr. Annie Besant (2nd right) and Madan Mohan Malaviya (right);1st row:  Bal Gangadhar  Tilak.(3rd left) can be seen.


திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 10.மார்கழி 

" *நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்* "

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்! நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்! பண்டு ஒரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல்-ஓர் எம் பாவாய்!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் = அம்மாடி, நோன்பு நோற்றுச் சுவர்க்கம் போறவளே!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற = நோன்பு நோற்றால் தேவலோகம்/ சொர்க்கலோகம் கிடைக்கும்! 
"சுவர்க்கம்" என்று இந்திரலோகத்தைச் சொல்லவில்லை ஆண்டாள்! 
* சுவர்க்கம் > இந்திரலோகம்!
யாருக்கு வேணும் அந்த இந்திரலோகம்? இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே!

* சுவர்க்கம் = சு+வர்க்கம்!!
நல்ல வர்க்கம்! நல்ல குலம்!
குலம் தரும், செல்வம் தந்திடும் = அடியார் குலம்! அதுவே சு+வர்க்கம்!

வைகுந்தம் என்னும் கைங்கர்ய சாம்ராஜ்ஜியம்! அதுவே நம்-அவன் வீடு! அதுவே சு+வர்க்கம்! அதைத் தான் கோதை குறிக்கிறாள்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? = ஒருத்தர் குரல் கொடுத்தா, நாமளும் பதில் குரல் கொடுக்கணும்! நாங்க உன்னைக் கூப்புடறோம்? நீ வாசக் கதவைத் தான் திறக்கலை! மாற்றமும் தர மாட்டியா? மாற்று பதில் கூடவா கொடுக்க மாட்டே? - என்று கேட்கிறாள் கோதை!

நாற்றத் துழாய் முடி நாராயணன்! 
துழாய் = தமிழுக்கே உரிய ழகரம் துலங்கும் துழாய் = தமிழ்க் கடவுளான மாயோனுக்கு பிடித்தமான மலர். 
 
திருப்பாற்கடலிலே தோன்றியது துளசி! மகாலக்ஷ்மிக்கும் முன்னால்!

நம்மால் போற்ற, பறை தரும் புண்ணியனால் = நாம் அவனைப் பாட, நமக்கு அவன் பறை தருவான்! என்ன பறை? மோட்சப் பாதைக்கு வேண்டிய உபகரணங்கள் (பறை) = சிந்தனை, சொல், செயல்! அதை நமக்குத் தருவான்! தயார் படுத்துவான்!

பண்டு ஒரு நாள், கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் = அன்னிக்கி ஒரு நாள், எமன் வாயில் விழுந்து மாண்டு போனானே! கும்பகர்ணன்!

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ? = அவன் தோற்றுப் போய், தன் தூக்கத்தை உனக்குக் கொடுத்திட்டுப் போயிட்டானோ? 
ஆற்ற+அனந்தல் உடையாய் = ஆற்ற(செயல்) = கர்மச் செருக்கு! அனந்தல் = ஞானச் செருக்கு!

அருங்கலமே = தயாபாத்திரமே! தாயார்-பெருமாளின் கருணைக்கு உரிய பாத்திரமே!
(ஆற்ற+அனந்தல்) செருக்கு தந்த சுகத்தில், சுகமாத் தூங்குபவளே! போதும்! புரிஞ்சிக்கோ! விழிச்சிக்கோ!

தேற்றமாய் வந்து திற = தேற்றமாய் வா! வேகமாய் வா! வந்து கதவைத் திற! தேற்றம் = வேகம்/தேறுதல்! நீ தேறணும்-ன்னா தேற்றமாய் வா!
(ஆற்ற+அனந்தல்) மேல் உள்ள பிடிமானத்தை/செருக்கை விட்டுட்டுத் தேற்றமா வா!

ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை
#கோதைமொழி


பஞ்சாயத்து #தேர்தல் #உள்ளாட்சி.

#வாழ்க_காந்தியின்_கிராம_ராஜ்ஜியம்
#பஞ்சாயத்து_தேர்தல்
————————————————-
 ஊர்ல பஞ்சாயத்து தேர்தல் நடக்குதா இல்லாட்டி ஒரு நாட்டோட அதிபர் தேர்தல் நடக்குதா வியக்கும் வகையில் உள்ளது...

அமித்ஷாக்கள் எல்லாம் வியூகம் அமைப்பது பற்றி எங்க கிராமத்துக்கு வந்து கத்துக்கிடலாம்..

இந்த கிராமத்திற்கு நான் தான் சேவை செய்வேன் என்று போட்டி போட்டுக் கொண்டு ஆயிரம் ரூபாய் சம்பளம் கொண்ட ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு பல லட்சங்கள் செலவு செய்து களம் காணுவது கண்ணில் வேர்வை வருகிறது.. பஞ்சாயத்து ராஜ்ஜியம் அமைக்க விரும்பிய காந்தியே இன்று எங்க கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அவர் விரும்பிய பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை அமைத்து தரப் போகிறார்... 

நான்கு ஆயிரம்+அரிசி மூட்டை பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல்....இனி யாராலும் இந்த மானுட பிறவிகளை திருத்த முடியாது..

#காந்தி #பஞ்சாயத்து #தேர்தல் #உள்ளாட்சி.
#ksrpost
27-12-2019.


#நீங்கா_நினைவுகளாக_சரியாக_30ஆண்டுகளுக்கு_பின்னும்_இன்றும் #நெஞ்சில்_பளிச்சிடுகிறது....

#நீங்கா_நினைவுகளாக_சரியாக_30ஆண்டுகளுக்கு_பின்னும்_இன்றும்
#நெஞ்சில்_பளிச்சிடுகிறது.......
————————————————-
கடந்த 1989இல் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக  வேட்பளாராக போட்டியிட்டேன். இந்த தேர்தலில் என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சமூக நீதி காவலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இதே நாள் (27.12.2019) 27-12-1988 இல் வந்திருந்தார். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். எட்டையபுரத்துக்கும் வந்தார். ஆனால் அந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தேன்.
உடன்வைகோஅவர்கள். இந்த தேர்தலில் எனக்கு பணியற்றிய
வழக்கறிஞர்கள் பின் நாட்களில் உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஆனார்கள். எனது உதவியாளர்கள் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் . 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.
 #அன்றைய_தேர்தல்_களம் ———————————————
*#இன்றைய_பணம்_காசு_வியாபார #அரசியல்*
--------------------
எனக்கு ஓரளவு அரசியல் புரிந்த நிலையில் 1959 காலகட்டத்தில் தேர்தலில் மக்கள் சாதி, காசு பணம் பார்க்காமல் வாக்களித்தனர். இப்போது அப்படியான ஒரு நிலை இல்லை. ஒன்று சாதிபலம் அல்லது பணபலம் அல்லது புஜபலம் ஆகியவை இன்றைய அரசியலுக்கு அவசியமாகிவிட்டது.

ரூ. 20 நோட்டுக்களை டோக்கனாக பயன்படுத்தி ஒருவர் வெற்றி பெற்று விட்டதை வீரப்பிராதபம் என பேசுகின்றனர். எந்த வகை அரசியல் இது?  ஓட்டுக்கு பணம் வாங்குவது வேறொரு தொழில் செய்வதற்கும் என்ன வேறுபாடு காணமுடியும்?

குடவோலை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பண்டைய தமிழர்களின் அரசியல் நாகரீகத்தை கொச்சைப்படுத்தியதை வேடிக்கை பார்ப்பதே தவறு. ஆனால் சிலர் அதனை நியாபப்படுத்தி பேசுவது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது.
இன்றைக்கு கொள்கையும், தியாகமும், நேர்மையும் அவசியமில்லை. பணமும், அடிதடி இரண்டும் இருந்தால் அரசியலுக்கு போதுமானது.

வள்ளுவனும் வாசுகியும் போல், நகமும் சதையும் போல் பணமும் அரசியலும்  இணைந்தே இருக்கும். இது தான் அரசியல் சூத்திரம். யார் நினைத்தாலும் இதனை இனி மாற்ற முடியாது.
இனி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வங்கிக் கடனை பெற்று வெற்றி பெற்ற பின் அதை திரும்பி செலுத்தும் சூழ்நிலை கூட வந்துவிடும்.

குடியாத்தம், 1954 இடைத்தேர்தலில் போட்டியிட்ட காமராசர் வெற்றி பெறுவதற்காக பணம் கொடுத்தார் என்பது கம்யூனிஸ்ட்களின் குற்றச்சாட்டு. காஞ்சிபுரத்தில், 1962 தேர்தலில் அறிஞர் அண்ணா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு. அதே காலகட்டத்தில் தஞ்சையில் போட்டியிட்ட தலைவர் கலைஞரை எதிர்த்து போட்டியிட்ட பரிசுத்தநாடார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு.
எனக்கு தெரிந்த மங்கலான நினைவுகளில் ஒன்று. 1950-60 காலக்கட்டத்தில் தென்மாவட்டங்களில் இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் பொதுவுடமை இயக்கத்தின் தொண்டராக கலைநிகழ்ச்சிகள் நடத்துவார். அந்த நிகழ்ச்சிகளில் காசுக்கு விலை போகாதீர்கள் என்றுப் பாடுவார்.

நான் 1970 முதல் 1998 வரை தேர்தல் களத்தில் முகவராகவும் வேட்பாளராகவும் களத்தில் இருந்துள்ளேன். அப்போதெல்லாம் வாக்குக்கு பணம் அளித்தது இல்லை. பூத் செலவுக்கு மட்டும் பணம் அளிப்பது வழக்கம். அதிலும் கூட சில பகுதிகளில் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணத்தை வாங்க மறுத்ததும் உண்டு. அவர்கள் கையில் திணிக்க முயன்று தோல்வியடைந்த அனுபவங்கள் அதிகம்.
திமுக சார்பில் 1989 பொதுத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் போது இவ்வளவு செலவுகள் கிடையாது. அப்படியிருந்தும் அப்போது 35,000 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தேன்.

திரும்பவும், 1996 இல் கோவில்பட்டியில் அதே அளவு வாக்குகளை சேகரிப்பதற்கு நான் செய்த செலவோ சில லட்சங்கள் தான். அதே சமயத்தில், சென்னை பூங்கா நகர் தொகுதியில் 400 முதல் 500 வரை வாக்குகளையே பெற்ற வேட்பாளர் தஞ்சை கூத்தரசனுக்கும் மதிமுக தலைமை ஒரு இலட்சம் கொடுத்தது. ம.தி.மு.க.விலேயே அந்த தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பெற்ற எனக்கும் ஒரு இலட்சம் தான் கட்சி கொடுத்தது. அந்த காலகட்டத்தில் தமிழக அளவில் மதிமுக 180 தொகுதிகளில் போட்டியிட்டது. மதிமுக சார்பில் 1996 தேர்தலில்  போட்டியிட்டவர்களில் வைகோ விளாத்திகுளம் தொகுதியிலும், நான் கோவில்பட்டி தொகுதியிலும் ,தங்கவேலு சங்கரன்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டோம். நாங்கள் மூவர் மட்டுமே டெபாசிட்டை திரும்ப பெற்றோம். அதில் நான் மட்டுமே அதிகபட்சமாக 35,000 வாக்குகளை பெற்றேன். மற்ற மதிமுகவினர் அனைவரும் என்னைவிட குறைவான வாக்குகளையே பெற்றனர். அப்போதும் நான் வாக்குக்கு எவ்வித பணம் அளிக்கவில்லை.

பழ. நெடுமாறன் மதுரை மத்திய தொகுதி தேர்தல்களில் போட்டியிட்ட போதும், வைகோ சிவகாசி நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட போதும், கோவில்பட்டியில் கம்யூனிஸ்ட் தலைவர் சோ. அழகிரிசாமி போட்டியிட்ட போதும் இடை தேர்தல்களிம் பிரதான தேர்தல் பணிகளை ஆற்றியவன். நல்லகண்ணுவுடன் அழகிரிசாமிக்காக 1970களில் இணைந்து தேர்தல் பணி செய்ததெல்லாம் பழைய நினைவுகள். சென்னை மயிலை 1994இல் நடந்த இடைத்தேர்தல், ஜெயலலிதா 2002இல் போட்டியிட்ட ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல், சைதை இடைத்தேர்தல், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்கள் போன்றவற்றில் பல முக்கிய களப்பணிகளை ஆற்றியுள்ளேன்.   இதையெல்லாம் விளக்கமாக சொன்னால்தான் பலருக்கு புரியுமென்பதற்காக பதிவிடுகிறேன். 

இன்றைய காலக்கட்டத்தில் தேர்தலில் போட்டியிட மக்கள் பணியோ, மக்களுடன் நிரந்தர தொடர்போ, தியாகமோ, மக்களுக்கான போராட்டம் செய்தோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள எந்த தொழிலிலும் ஈடுபட்டு பொருளீட்டிக் கொண்டு தேர்தலுக்காக காத்திருக்கலாம். தேர்தல் அறிவித்த உடன் சேர்த்த பணத்தைக் கொண்டு வேட்பாளராக போட்டியிடலாம். சேர்த்த பணத்தைக் கொட்டி வெற்றி பெறலாம். இது தான் ஆர்.கே. நகர் தேர்தல் நிலை.

விஜய் மல்லையாவும், எம்.ஏ.எம். ராமசாமியும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யபட்டதின் பின்னணி என்ன, மக்கள் சேவையா? அவர்கள் மருத்துவக் கல்லூரி இடத்தை படிக்க காசு கொடுத்து வாங்குவதை  போல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விலைக்கு வாங்கினார்களே. அதற்கும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா துணைபோனாரே.  இது தான் ஆரோக்கியமான பொதுவாழ்வா? அப்படியென்றால், மக்களின் நன்மைக் கருதி, மாநிலத்தில் நன்மைக்காக பொதுநல வழக்கு தொடர்ந்தும், தினந்தோறும் மக்கள் பிரச்சனைகளுக்கு செவிமடுத்து தங்களால் இயன்ற உதவியை உடலுழைப்பை அளித்து வரும் நாங்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் வெறும் பார்வையாளர்கள் தானோ? பணபலம் கொண்டவர்கள், சுயமரியாதை இழந்து கும்பிடு போடும் ஆசாமிகளை எங்களால் முந்த முடியவில்லை. பொதுநலம் சுமைதாங்கிகளும், பணநலத்தால் பாரமற்று  இருப்பவர்கள் ஒரே பந்தயத்தில் ஓடுவது தான் இன்றைய அரசியல்.

நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக - அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணியின் பலனாக 1998ஆம் ஆண்டு வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி எனக்கு ஒதுக்கப்பட்டு அதில் போட்டியிட என் பெயரை அறிவிக்க காத்திருந்த நேரத்தில் இன்னொருவருக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. எனக்கென்று அந்த தொகுதி வாங்கப்பட்டு அறிவிக்கும்போது மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை. நான் என்ன உழைக்கவில்லையா?
பின்னர், 2002 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் எனது பெயரை மறைந்த முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் உங்கள் கோவில்பட்டி தொகுதியில் இருந்து உங்கள் வாக்காளர் விவர சான்றிதழ் வாங்கி வந்துவிடுங்கள் என்று என்னை பணித்தபின் திருமண வரவேற்பில் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை அழைத்து அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முரசொலி மாறன் அவர்களும் இது குறித்து வருத்தப்பட்டதும் உண்டு. நான் ஏதோ இதை இட்டுக்கட்டி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இதற்கு சாட்சியாக அன்றைக்கு சன் டிவியில் பணியாற்றிய கருப்பசாமி (இன்றைக்கு தந்தித் டிவியில் பணியாற்றுகிறார்) இருக்கின்றார். இவர் இந்த சம்பவத்தை குறித்து நன்கு அறிவார்.

இப்படி, தேர்தல் களம் என்பது உழைப்பு, தியாகம், கொள்கை என்பதில்லை. மாறாக ஒரு சதுரங்க விளையாட்டாக பதவிகள் பெறுவதாக மாறிவிட்டன. ஒரு நல்லகண்ணுவோ, மறைந்த இரா. செழியனோ, பேராசிரியர். அன்பழகனாரோ, நெடுமாறன் போன்றவர்கள் மூத்தவர்கள் என்றாலும் தேர்தல் களத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்களே. நடிகை வைஜெயந்தி மாலா போன்றோர் வெற்றி பெறுகிறார்கள். 

ஊழலில் திளைத்தவர்கள், கடுங்குற்றவாளிகள் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள். கண்ணதாசனுடன் நெருக்கமாக இருந்தவன் என்ற நிலையில் அவர் அடிக்கடி சொல்வார். நான் நாடறிந்தவன் தான், மக்களுக்கு எனது அறிமுகம் தேவையில்லை. ஆனால் தேர்தலில் நான் வெற்றிப் பெறுவேனா என்பதை என்னால் சொல்லமுடியாது என்பார்.
 
இப்படியான தேர்தல் பரிணாமப் போக்கில் ரூபாய் நோட்டில் டோக்கன் கொடுத்து இன்றைக்கு பத்தாயிரம் வரை ஒரு ஓட்டுக்கு கொடுக்க தயாராகிவிட்டார்கள். எதிர்வரும் தேர்தலில் இந்த மதிப்பு அதிகமாகத் தான் இருக்கும். இவ்வளவு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இவர்கள் நாட்டை ஆளுவார்களா? அல்லது தேர்தல் அரசியலை வியாபாரமயமாக்கி வணிக அரசியலை ஒரு தொழிலாக்கிவிடுவார்களா? 
பிறகெப்படி, மக்கள் நல அரசு, மக்கள் அரசு மக்களுக்காக உழைக்கக் கூடிய அரசாக இருக்கும்.

_*"மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி"*_
_*"Government of the people, by the people, for the people, shall not perish from the earth"*_

என்ற லிங்கனின் வார்த்தைகளுக்கு அர்த்தமின்றி போய்விடும்.

ஆங்கிலத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு.

_*"Democracy - the freedom to elect our own dictators."*_

இது தான் இன்றைக்கு யதார்த்தமாகத் தெரிகிறது. அரசியல் என்பது தவம், அறம் என்பதை மறந்து தொழிலாக்கிவிட்டார்கள் அரசியல் வியாபாரிகள். ஆனாலும் ஆரோக்கிய அரசியலுக்காக இன்னும் போராடுகின்றவர்களும் இருக்கின்றார்கள். இருப்பினும், பணம், துட்டு, காசு, ஜாதி, புஜபலம் தான் இறுதியாக முடிவு செய்கிறது. இதையும் மீறி ஆரோக்கிய அரசியல் கோஷம் போர்குணத்தோடு என்றும் முழக்கிமிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நல்லவர்கள், வல்லவர்கள், ஆற்றலாளர்கள் அரசியல் சதுரங்கத்தில் அமைதியாக ஆடினாலும் என்றைக்கும் அவர்கள்  வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுவர். ஆனால் அரசியல் வியாபாரிகள் சிலகாலம் பதவியில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு இறுதியாக மண்ணுக்கு செல்லும் போது வரலாற்றில் மறக்கப்படுவார்கள்.

#வி_பி_சிங்

#தகுதியேதடை
#தேர்தல்_அரசியல்
#வியாபார_அரசியல்
#Trade_politics
#Electoral_Politics

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27/12/2019

Thursday, December 26, 2019

#முன்பனிக்_காலம்

#முன்பனிக்_காலம் 
—————————-
மார்கழி துவக்கத்தில் இருந்து தை மாத இறுதி வரை (Dec - Jan) முன்பனிக் காலமாகும். தமிழ் மாதத்தில் மாசி முதல் பங்குனி வரையான காலம் பின்பனிக் காலம்.
 முன்பனிக் காலத்தில் கடுங்குளிர் இருப்பதால் காலை விடியலில் ஆதவன் மேகங்களாலும், பனி மூட்டத்தினாலும் மறைக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இந்த பருவத்தில் இதை கவனித்து வருகிறேன். இன்று காலை 6.15 மணியளவில் நடைபயணத்தில் மேகங்களுக்கு நடுவில் ஆதவனுடைய கதிர்கள் சிவப்பாக தெரிந்தன. கதிரவன் முழுமையாக வெளிப்பட சுமார் 7 மணி ஆகிவிடுகிறது. சூரியன் வடக்கில் நிலைபெற்றிருக்கின்ற காலம் இது உத்தராயனம் எனப்படும். வருடத்தில் இறுதியில் கதிரவன் தென் திசையில் நிலைக்கொள்வதால் அக்காலம் தட்சயானம் ஆகும்.உத்தராயனம் துவக்கம் தைத் திருநாள், பொங்கல் திருநாள். ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த காலக்கட்டங்களில் பனி
மூட்டங்களாலும்,மேகங்களாலும் சூழப்படுகின்றன. இதுவே முன்பனிக் காலம் என்று  அழைக்கப்படுகிறது.
இதைக்குறித்து ரா.பி. சேதுப்பிள்ளை ,
இராமநாதன் செட்டியார். அ. சீனிவாச ராகவன் ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகள்
வெளி வந்துள்ளன.

ஆறு பருவங்கள்:
தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன.

பெரும் பொழுதுகள் ஆறு: 
இளவேனில்: சித்திரை, வைகாசி = வசந்த ருது 
முது வேனில்: ஆனி, ஆடி = க்ரீஷ்ம ருது
கார் காலம்: ஆவணி, புரட்டாசி = வர்ஷ ருது
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை = ஷரத் ருது
முன் பனி: மார்கழி, தை = ஹேமந்த ருது
பின்பனிக் காலம்: மாசி, பங்குனி = சிசிர ருது.

சிறு பொழுதுகள் ஆறு:
வைகறை, காலை, நண்பகல், மாலை, யாமம், ஏற்பாடு.

குறிஞ்சிப் பாட்டில் ஐந்து சிறு பொழுதுகளை ஒரே பாட்டில் காணலாம்:
காலையும், பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப்
பொழுது………………. (குறுந்தொகை 32)

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:“காரும் மாலையும் முல்லை;        குறிஞ்சி

கூதிர் யாமம் என்மனார் புலவர். 
பனி எதிர் பருவமும் மொழிப. 
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும்  உரித்தென மொழிப”
என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.

கபிலர் சங்கத் தமிழ் நூலான குறிஞ்சிப் பாட்டில் காலத்தியும்  99 தாவரங்களை பாடியுள்ளார்.

பனிக்காலத்தில் ஓசோன் போன்ற
ஒத்தக்கருத்துக்கள் அகநானூறு, புறநானூறு சொல்கிறது.

ஆறு பருவங்களுக்கு என்று நூலில் எழுதியவன் கவிஞன் காளிதாசன். விக்ரமாதித்தன் காலத்தவனே. காளிதாசனின் ருது சம்ஹாரம் என்னும் நூலைப் படிப்போருக்கு இயற்கை இன்பம் கிட்டும். 

காளிதாசன் தனது ருதுசம்ஹார காவியத்தை கோடையில் துவங்கி எல்லோரும் விரும்பும் வசந்தத்தில் முடிக்கிறான்.

இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஹேமந்த ருது வருணனையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வசந்த காலம், கார் காலம் பற்றிய வருணனைகளும் வருகின்றன.#ஜனவரி
 #KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
26-12-2019.

கிராமத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர் ......

கிராமத்தில் அறுவடைக்கு தயார் நிலையில்  நெற்பயிர் ......
#ksrpost
27-12-2018.


கிளாரிந்தா

#கோகிலா,  #கிளாரிந்தா ஆன கதை ! 

(இது ஒரு திருநெல்வேலி சமாச்சாரம்)
————————————————
கோகிலா மராட்டிய ராஜ வம்சத்தை சேர்ந்த #பிராமணப்பெண். தஞ்சாவூரில்  1770 இல் மகாராஷ்டிர மன்னர்களின் ஆட்சி இருந்த காலம். கோகிலாவின் கணவன் தஞ்சை  அரண்மனையில் முக்கிய அதிகாரி. என்ன நேரமோ..அவன் திடுதிப்பென்று செத்துப் போனான்.  அக்கால வழக்கப்படி கோகிலாவை உடன்கட்டை ஏற செய்ய ஏற்பாடுகள் நடந்தன. கோகிலாவோ இளம் வயது.  சிதையில் தீமூட்டி அவளை உள்ளே தள்ளியபோது, நம்ம தமிழ்ப் பட கதாநாயகன் மாதிரி அவளை புயலென குதிரையில் வந்து காப்பாற்றி தூக்கி சென்றவன் ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.  
ஒரு இளம்பெண்ணை உயிரோடு எரிக்கிறார்களே என்ற மனிதாபிமானத்தோடு தான் அவன் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றான். கோகிலாவின் உறவினர்கள் கொதித்து எழுந்தார்கள். அவளை சமூக புறக்கணிப்பு செய்தார்கள்.
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. . ஆனால், அன்றைய பாதிரியார் ச்வார்ட்சு அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தார்.
             பின்னாளில் பாளையங்கோட்டைக்கு லிட்டில்டன் மாற்றலாகி வந்தார். அவரோடு கிளாரிந்தாவும் வந்து சேர்ந்தார். இருவரும் வாழ்வில் இணைந்து விட்டார்கள். கொஞ்ச நாளில் லிட்டில்டன் இறந்து விட்டார். அதன்பிறகு கிளாரிந்தா கிருஸ்தவ இறைப்பணியை செய்ய தொடங்கி விட்டார். தான் வாழ்ந்த வீட்டருகே ஒரு தேவாலயத்தை தனது சொந்தப் பணத்தில் கட்டினார். அருகே பொதுமக்கள் பயன்படுத்த ஒரு கிணறு வெட்டினார். தென்னிந்தியாவில் இவர் கட்டிய இந்த தேவாலயமே தென்னிந்திய திருச்சபையின் முதல் தேவாலயம். 1783 இல் துவங்கி, 1785 இல் முடிந்தது. முன்னாளில் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த அதே சுவார்ட்சு பாதிரியார் தான் இந்த தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது வினோதம் தான்.
        இந்த கிளாரிந்தா அம்மையார் நிறுவிய முதல் திருச்சபை பதிவேட்டில் 40 பேர் கொண்ட பட்டியல் இருக்கிறது. 1780 இல் எழுதப் பட்டது. கிளாரிந்தா வில் தொடங்கி அவரது சமையல்காரி சாராள், யோவான் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் 13 வகை சாதியினர். இந்தப் பட்டியலில் அக்காயி என்றொரு பிச்சைக்காரியின் பெயரும் அடங்கும்.
இந்த கோகிலா என்ற கிளாரிந்தா கட்டிய தேவாலயம் இன்றும் இருக்கிறது. இவர் வீட்டின் அருகே தோண்டிய கிணறு இன்றும் பாப்பாத்தி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் குப்பையைக் கொட்டி இப்போது பாழடித்து விட்டனர் மக்கள். 
இந்த கிளாரிந்தா தான் முதன்முதலில் குழந்தைகள் கல்வி பயில ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி, ஆசிரியர்களுக்கு தனது கையில் இருந்து சம்பளம் வழங்கினார். அக்கால நாவலாசிரியர் அ.மாதவையா கிளாரிந்தா என்ற ஆங்கில நாவல் எழுதி இருக்கிறார். அதில் கோகிலா பற்றிய பல விபரங்கள் உள்ளன.
15 வயதில் இறக்க வேண்டிய பெண்ணான கிளாரிந்தா, தனது 60 ஆவது வயதில் பாளையங்கோட்டையில் இறந்தார்.

சென்னை மாகாணத்தில் தென்னிந்திய திருச்சபை வரலாற்றை எழுத வேண்டும் எனில், கோகிலா என்ற கிளாரிந்தாவின் வாழ்க்கையில் இருந்து தான் தொடங்கவேண்டும்.


 சாரா டக்கர் கல்லூரியின் முன்னாள் Prof சரோஜினி பாக்கியமுத்துவால் மொழிபெயர்க்கப்பட்டு கிருஸ்துவ இலக்கிய சங்கம், சென்னையால் வெளியிடப்பட்டது. 40 ஆண்டுகளுக்குமுன் வந்த அற்புதமான நூல் இரண்டாண்டுகளுக்கு முன் சாதிக்கின் அடையாளம் பதிப்பகம் மூலம் மறுபதிப்பாகவும் வந்துள்ளது. #கிளாரிந்தா
Radhakrishnan KS

#ksrpost
26-12-2019.


Wednesday, December 25, 2019

Constitutional_change:

#Constitutional_change:
———————————

Constitutional change can occur through constitutional amendments or through constitutional evolution. Constitutional amendments take place in three phases: initiation, negotiation and ratification. Initiators – usually governments or political leaders – most often initiate reform, but pressure to do so may come from the regions or from civil society.

When federal or federalizing countries negotiate constitutional
change, representatives from the central government and the regions are most often involved, but individual actors – experts, members of parliament, civil servants and civil society representatives can come from any order of government. Arenas of negotiation can be committees,commissions, conferences or conventions.

Different types of bargaining and arguing can also influence the negotiations positively or negatively. Whether negotiations happen in public or private can influence the outcome, as to when certain actors join the negotiations
process (someone left out until the end can feel that the “deck was stacked against them.”)

Many processes of constitutional amendment go well until the ratification phase. There, an amendment could fail by losing a ballot box referendum or by a veto cast against it by a member of a regional legislature. Yet even a failed constitutional amendment can provide “leftovers” that could be used in constitutional evolution by the passing
of ordinary laws, setting of policies and the conclusion of agreements among different orders to government.

#Constitutionalchange

K.S.Radha krishnan.
26-12-2019.

(Pic:Indian Parliament under construction in the 1920's.)


நாங்குநேரி, முடிஞ்சிப்பட்டி #எம்_ஜி_சங்கர_ரெட்டியார்

#

 ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.
விடுதலைப் போராட்டம், 1952 முதல் 1962 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் உறுப்பினராக இருந்தவர். என்னுடைய தந்தையாருக்கு நெருக்கமாகஇருந்தவர்.நான்குநேரியில் இன்றைக்கு கம்பீரமாக காஷ்மீர் -கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இருக்கின்ற சங்கர ரெட்டியார் மேல்நிலைப் பள்ளியை துவங்கியவர். அதேபோல் அவருடைய சொந்த ஊர் முடிஞ்சிப்பட்டியிலும் இதேபோல மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது.திருநெல்வேலி ரத்னா தியேட்டர் இவருடைய குடும்பத்தை சார்ந்தது.
எல்லோராலும் போற்றப்பட்டவர். நல்ல மாமனிதர். இன்றைக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் பலருக்கு கவனத்தில் படாது நினைவுக்கும் வராது. அதுதான் இன்றைய வணிக அரசியல். அன்றைக்கு தன்னுடைய கையில் இருந்து பணத்தை செலவு செய்தவர்கள் அரசியல் பெருந்தகைகள். இன்றைக்கு நிலைமை தான் நமக்கு தெரியுமே சந்தை அரசியலில்.....
#ksrpost
25-12-2019.

திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 09.மார்கழி 

‘ *மாமாயன் மாதவன் வைகுந்தன்* *என்றென்று* 
 *நாமம் பலவும் நவின்று* 
 *ஏல்-ஓர் எம் பாவாய்* ’

தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரியத்,
தூபம் கமழத், துயிலணை மேல் கண் வளரும்,
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ் திறவாய்!
மாமீர், அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்!

தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய = தூய்மையான மணி மாடம் உள்ள வீடு! அதில் வரிசையா விளக்குகள் கண் சிமிட்டுகின்றன!

தூபம் கமழத் = அகிற் புகை, சாம்பிராணிப் புகை, என்று தூபம் வீடு பரவிக் கிடக்க

துயிலணை மேல் கண் வளரும் மாமான் மகளே = நல்ல திம்மென்ற கட்டில் மேல் தூங்குற மாமன் மகள்! 
மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் தாழ் திறவாய்! 

உம் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? = உங்க பொண்ணு என்ன ஊமையா? இல்லை செவிடா? எத்தனை முறை எழுப்ப? 

அனந்தலோ? = சோர்வோ?
இதைப் படிப்பால் வரும் செருக்குச் சோர்வோ? என்றும் பொருள் கொள்வார்கள் பெரியோர்கள்! ஏதோ பல மந்திரங்களையும், புராணங்களையும், ஜபதபங்களையும் படித்து விட்டதாலேயே இறைவனை அளந்து விடலாம் என்ற ஒரு தீங்கில்லாச் செருக்கு! ஞானச் செருக்கு!
உலகு அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்! இதயத்தில் கொள்ளத் தான் முடியும்!

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ? = யாராச்சும் மந்திரிச்சி கிந்திரிச்சி விட்டுட்டாங்களோ இந்தப் பொண்ணை? 

* மாமாயன் = மா+மாயன் = மாமகளுடன் கூடிய மாயோன் என்னும் தமிழ்க் கடவுள்!

* மாதவன் = மா+தவன் = அன்னை-பிதா!
நம் தவத்தின் பயன் என்ன? தவத்தின் பயனே அவன் தான்! அதனால் அவன் தவன்! அவளோடு கூடி, மா+தவன்!

* வைகுந்தன் = நம்முடைய வைகுந்த வீட்டுக்குத் தலைவன்!

என்றென்று "நாமம் பலவும்" நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்! = இப்படி பெருமாளை விடத் தித்திப்பான அவன் நாமங்கள் பலவற்றையும் சொல்லுவோம்! சொல்லுவோம்!

நல்வகையாலே நமோ நாராயணா என்று "நாமம் பல" பரவி
பல்வகையாலே பவித்திரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே!

அப்பாவும் "நாமம் பல பரவி"-ன்னு நாம சங்கீர்த்தனம் பாடுறாரு; பொண்ணும் "நாமம் பலவும் நவின்று"-ன்னு நாம சங்கீர்த்தனம் செய்கின்றாள்!

#திருப்பாவை
#கோதைமொழி


Tuesday, December 24, 2019

கிளியோபாட்ரா - Cleopatra

கிளியோபாட்ரா  - Cleopatra  
________________________________________

         கிளியோபாட்ரா  தன் 18வது வயதில் எகிப்து ராணியாக  முடிசூட்டப்பட்டார். அக்காலத்தைய எகிப்திய மரபின்படி, தன் தம்பியை மணம்முடித்து அவர் ஆட்சியிலமர்ந்தார். அதன்பிறகு அண்டை நாடான கிரேக்கத்தின் அரசர் சீசரை தன் காதல்வலையில் வீழ்த்தினார்.

 கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் நாட்டுநலனைக் கவனிக்காமல் போகவே, ஒரு மங்கையின் அழகில் அரசர் மயங்கிக் கிடக்கிறார் என்று கிளர்ச்சியாளர்கள் அவரை ஆட்சியிலிருந்து விலக்க முயன்றார்கள். சீசரின் உற்ற நண்பனான புரூட்டஸை வைத்தே அவரைக் கொலைசெய்யப்பட்டார். 

சீசர் இறந்ததும் எகிப்து திரும்பினவர் மீண்டும் கிரேக்கத்தில் அரச பதவியைக் கைப்பற்றிய மார்க் ஆண்டனியை காதலிக்கத் தொடங்கினார்.

பின் சீசரின் மகனான அகஸ்டஸ் கிரேக்கத்தைக் கைப்பற்ற, போரில் தோல்வி அடைந்த மார்க்ஆண்டனி தன் காதலியான கிளியோபாட்ராவின் மடியிலே தற்கொலை செய்துகொண்டு உயிர்துறக்கிறார். அகஸ்டஸிடம்  கைதியாக வாழ விரும்பாத கிளியோபாட்ரா கொடிய விஷ நாகத்தை தன்மீது கடிக்க விட்டு அதன் விஷ வீரியத்தில் உயிர்துறந்தார் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லும் கதை.
1963ம் ஆண்டு கிளியோபாட்ராவின் இந்த சரித்திரக்கதை திரைப்படமாக எடுக்கப்பட்டது. கொஞ்சமும் சமரசம் இல்லாமல் இரண்டு உலகநாடுகளின் வரலாற்றையும், அரசியலையும், அழிவையும், பெரும்பொருட்செலவில் படமாக்கியிருந்தது செஞ்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் பட நிறுவனம். 125மில்லியன் டாலர் தொகையில் இந்தப்படம் தாயாரிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்ற ஒரு முன்னுதாரணமாக இத்திரைப்படம் அமைந்தது. 

அத்திரைப்படத்தில் கிளியோபாட்ரா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை எலிசபெத் டெய்லர். அவர் மார்க் ஆண்டணியாக நடித்த நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை காதலித்தார். பின்பு, ரிச்சர்ட் பர்ட்டன் உட்பட ஏழுபேரை மணம் முடித்து விவாகரத்தும் செய்தார். நிஜவாழ்விலும் கிளியோபாட்ராவின் கதாப்பாத்திரத்தை அப்படியேபிரதிபலித்தார் எலிசபெத். படத்தில் அரசர்களைக் காதலித்த அவர் நிஜவாழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரீகனுடன் கிசுகிசுக்கப்பட்டார். 

சிறுவயதுமுதலே திரைப்படங்கள் மீது ஈடுபாடுகொண்டிருந்த எலிசபெத் டெய்லர் தன் அழகை தானே ரசிக்கும் தன்மை கொண்டிருந்தார். எப்படி கிளியோபாட்ரா தன் மேனியை நிலைக்கண்ணாடி முன் ரசித்துக் கொண்டாடுவாரோ அதேப்போல எலிசபெத் தன் மேனியை நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று ரசித்தவர். மீன் துண்டுகளை விரும்பி விழுங்குவது அவரது வாடிக்கை. அதேப்போல ஆண்களையும் மயக்கி தனக்குள் விழச்செய்தவர்.

கிளியோபாட்ராவுக்கு 11 மொழிகள் தெரியும். கலை ஈடுபாடும். நுண்மான்நுலைபுலம் கொண்டவராகவும், துணிச்சலும் மிக்கவராகவும், தன் அழகைவிட பெரிய அதிகாரம் உலகில் இருகமுடியாது என்ற ஆணவத்தைக் கொண்டவராகவும் இருந்தார். இதே குணாதிசயம் ஒத்துப்போனவரான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ரா கதாப்பாத்திரத்துக்கு மிகச்சரியாக பொருந்திப் போனார் என்றே சொல்லவேண்டும்.

கிரேக்கத்தலைநகர் ரோமுக்கு அதிகாரப்பூர்வ அரசியாக கிளியோபாட்ராவை அழைத்துவரும் ஒரு காட்சி இத்திரைப்படத்தில் பிரம்மாண்டமாகக் இடம்பெற்றிருக்கும். சீசரை மயக்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு எகிப்திய அரசியை தங்கள் ராணியாக ஏற்றுக்கொள்ள விரும்பாத ரோமானியர்கள் பெருந்திரளாகக் கூடியிருக்க, கிளியோபாட்ராவின் அழகில் வசப்பட்டு அவரைத் தங்கள் ராணியாக ஏற்கும் காட்சி பிரம்மிக்கத்தக்கது. கிளியோபாட்ராவின்  அழகு எப்படி  எகிப்திய- ரோமானிய அரசியலில் வீரியமிக்கதாக இருந்தது என்பது அதன்மூலம் உணர்த்தப்பட்டிருக்கும்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற  “யூடூ ப்ரூட்டஸ்” என்ற பிரசித்தி பெற்ற வசனம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் என்னும் உணர்ச்சிகரமான துன்பவியல் நாடகத்தில் இடம்பெற்று காவிய அந்தஸ்து பெற்றது. 

கிளியோபாட்ரா நாகம் தீண்டி இறக்கவில்லை. விஷம் பாரித்த உடல் நீலம்பூத்து தன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் எகிப்தில் உள்ள கொடிய விஷத்தாவரங்களை வரவழைத்து அதை அரைத்து குடித்தே தன்னை மாய்த்துக்கொண்டார் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ கடைசிவரை ஒரு ராணியாகவே வாழவிரும்பி, தன் அழகால் உலக சாம்ராஜ்யங்களையே ஆட்டிப்படைத்தார்.

 கிளியோபாட்ரா ஒரு பெரும் ஆளுமையாக வாழ்ந்தார் என்று சரித்திரம் சொல்கின்றது. அதனால் என்ன பலன் மக்களுக்கு அப்போது கிட்டியது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.

உண்மையான கிளியோபாட்ரா ஆனாலும் சரி; அவரது பாத்திரத்தில் நடித்த எலிசபெத் டெய்லரானாலும் சரி அவர்கள் இருவருமே தங்களுடைய சொந்த சுயநலனுக்காக வாழ்ந்தார்கள் என்று கருதாமல் அவர்களை ஒரு ஆளுமையாக  கருதுவதை ஏற்றுக்கொள்ளமுடியாதது. 

     இது ஒரு பேசப்படவேண்டிய பொருள்தான் இல்லையென்று மறுக்கவில்லை. இதனால் வரலாற்றில் அரசியல், பொதுவாழ்வு எப்படியெல்லாம் பாழ்படுத்தப்பட்டது என்ற உண்மைகளை உணராமல் இந்தஇரண்டு நபர்களையும் பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களாக நினைப்பதுதான் வேதனையானது. 

சரித்திரத்தில் எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் அழகில் மதிமயங்கி சரிந்த கதைகளும் உண்டு. அதை அப்படித்தான் பார்க்கவேண்டுமே ஒழிய அழகு = அரசியல் என்று பார்ப்பது ஒருகாலும் ஏற்றுகொள்ளமுடியாதது. 

புதிய அரிச்சுவடியோ, சூத்திரமோ என்ற நிலையில், 
அழகு= அரசியல்,
ஜாதி = அரசியல் ,
மதம் = அரசியல்,
கிரிமினல்கள் = அரசியல் , 
பணம் = அரசியல் , 
 சுயநலம் = அரசியல்,

நேர்மை Vs அரசியல்
கொள்கை Vs அரசியல் 
சேவை Vs அரசியல் 
தகுதி Vs அரசியல் 

என இன்றைய அரசியல் இருக்கின்றது. இதற்கு கிளியோபாட்ரா வரலாறு ஒரு பாலபாடம். 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-12-2019.

#Cleopatra   #KsRadhakrishnan #KSR_Posts

திருப்பாவை #கோதைமொழி

08.மார்கழி 
 " *தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* 

 *ஆ-வா  என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்* "

கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய

பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!

கீழ் வானம் வெள்ளென்று = அதிகாலையில், கீழ் வானம் வெளுக்குது! 

எருமை சிறுவீடு மேய்வான், பரந்தன காண் = மாடுகள் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுகின்றன? வயலுக்கு அல்ல! பக்கத்திலேயே இருக்கும் சிறு வீட்டுக்கு கழட்டி விடப்படுகின்றன!

மிக்குள்ள பிள்ளைகளும் = மீதி இருக்கும் பொண்ணுங்க எல்லாம் 

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து = பாவம், நோன்புக்குப் புறப்பட்டுப் போக  இருந்த அவர்களையும, கொஞ்சம் இருங்கடீ-ன்னு காக்கச் செய்து!

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் = எல்லாம் உனக்காகத் தான்! எல்லாரும் ஒன்னா போகலாம்-னு தான்! 

கோதுகலம் உடைய பாவாய், எழுந்திராய் = கோதுகலம்-ன்னா என்ன? சிறப்பு ப்ரியம்! சிறப்பு மகிழ்ச்சி! "குதூகலம்" என்ற வடமொழிச் சொல்லை, "கோதுகலம்" ஆக்குறாளோ ஆண்டாள்?

பாடிப் பறை கொண்டு = பாடிக்கிட்டே எழுந்திரு! அரி-அரி-ன்னு சொல்லிக்கிட்டே எழுந்திரு! நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற வேண்டுமே-ன்னு ஆசையோடு எழுந்திரு!
 
மாவாய் பிளந்தானை = மா (பறவை) = பறவையின் வாயைப் பிளந்தான் கண்ணன்! 

மல்லரை மாட்டிய = கம்சனின் அவையில், இரு பெரும் மல்லர்களை, மல்யுத்தத்தில் வென்றான்! "மல்"லாண்ட திண் தோள் மணிவண்ணா!

தேவாதி தேவனை = அனைத்து தேவதைகளையும் தன்னுள்ளே கொண்டவன்!
"பிற" தேவதைகளைத் தாழ்த்தாத "பர" தேவதை! முனியே, நான்முகனே, முக்கண் அப்பா என்று எல்லோரும் அவன் திருவடிவத்தில் இருக்கிறார்கள்!
விஸ்வரூப தரிசனம்! சிறு-கர்ம தேவதைகளான அக்னி முதற் கொண்டு, பெரும் புகழ் கொண்ட மகேஸ்வர சிவபெருமான் வரை, எல்லாரும் அவன் வடிவத்திலேயே இருக்கிறார்கள்!

தேவதைகளுக்கு எல்லாம் தேவதை! கடவுளர்க்கு எல்லாம் கடவுள்! பர+பிரம்மம்!
கட+உள் = எல்லாரையும் கடந்தும் உள்ளான்! எல்லார் உள்ளுக்குள்ளும் உள்ளான்!

தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால் = இந்தத் "தேவாதிதேவன்" தான் தேவராசப் பெருமாளாய், தேவப் பெருமாளாய், காஞ்சிபுரத்தில் நின்று சேவை சாதிக்கிறான்!

சென்று நாம் சேவித்தால் = அவரை நாம்போய் இன்றைக்கு சேவிப்போம் வாருங்கள்! 

ஆ-வா என்று = கூட்டத்தில் நம்மைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்கு செம ஷாக்!
அடப்பாவி, நீயா வந்திருக்க? ரொம்ப தான் பிகு பண்ற ஆளாச்சே நீ? நீ எப்படிறா என்னைப் பாக்க வந்தே? "ஆ!" என்கிறான்!

 பின்னர் அன்போடு "வா!" என்கிறான்!!

"ஆராய்ந்து" அருள் = கேட்டதையெல்லாம் கேட்டபடியே கொடுத்து விடாது, நாம் கேட்டது நல்லதா? உலகத்துக்கு நல்லதா? மற்றவர்க்கும் நல்லதா? ஏன், நமக்கே நல்லதா? என்று "ஆராய்ந்து" அருள்பவன்!

ஏல்-ஓர் எம் பாவாய் = தேவாதி தேவனை ஏல் (ஏற்றுக் கொள்ளுங்கள்)!

 தேவாதி தேவனை ஓர் (நினைத்துக் கொள்ளுங்கள்)!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!
தேவாதி தேவன், தேவப் பெருமாள் திருவடிகளே சரணம்!
வரதா! வரதா! ஹரி ஓம்!

#திருப்பாவை
#கோதைமொழி

திருப்பாவை #கோதைமொழி

07.மார்கழி 

" *நாராயணன் மூர்த்தி கேசவன்* "

மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று! அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பாவை!

சும்மா சாமி கும்பிட மட்டுமே சொல்லித் தர மாட்டாள் கோதை! காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் "ரசிக்க" சொல்லித் தருவாள்! வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம்! 🙂

கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்! 
 
கீசு கீசு என்று எங்கும் = கீச் கீச் எனக் கத்தும் பறவைகள்! 
ஆனைச் சாத்தன் கலந்து = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு-ன்னு நாங்க சொல்லுவோம்!

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? = இந்தப் பறவைகள் பேசுதே! அது கூட காதில் விழாம அப்படி என்ன தூக்கம்?
பேய்ப் பெண்ணே! = பேய்த்தனமா ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தால் பேயன்/பேயள்!
இவ பேய்த்தனமா தூங்குறா! எழுந்து பெருமானிடத்தில் பேய்த்தனமா ஆழ்ந்து விடு! பேய்-ஆழ்வார் ஆகி விடு! அதான் கோதை சொல்றா!

காசும் பிறப்பும் = * காசு = கழுத்து மாலை, நாண் வழிக் காசு என்பார்கள்! காசு மாலை போல இருக்கும்! நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம்! அச்சுத் தாலி-ன்னும் ஊர்-ல சொல்லுவாங்க!
* பிறப்பு = ஒரு வகை சிறிய கழுத்து-அணிகலன். பொடிப்பொடியா விதைகள் போல கோர்த்து இருக்கும்! ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும்! ஆமைத்தாலி-ன்னும் ஊர்ல சொல்லுவாங்க!

கலகலப்பக், கை பேர்த்து = கழுத்து மாலையும், கை வளையும் கல-கல-ன்னு ஓசை எழுப்ப, ஒரு கை அப்படியும், இன்னொரு கை இப்படியும் என மாறி மாறி வாங்கி!
பேர்த்து = மீண்டும் மீண்டும், மாறி மாறி! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்பதை ஒப்பு நோக்குங்கள்!

வாச நறும் குழல் ஆய்ச்சியர் = அவங்க கூந்தல்ல நல்லா பால் மணம் வீசுது! 
மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ = மத்துல தயிர் கடையும் சத்தம் கேட்கலையோ? 
நாயகப் பெண் பிள்ளாய் = யம்மாடி, நீ பெரிய வீட்டுப் (நாயகத்தின்) பொண்ணா இருக்கலாம்!
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? = நாராயணன்-மூர்த்தி-கேசவன் என்கிற திருநாமங்கள் பாட்டில் அடுக்கப்படுகின்றன!
நாராயணன் = திருவெட்டெழுத்து, அஷ்டாட்சர மகா மந்திரம்!
மூர்த்தி = இல்லத் தலைவன்! ஆலயத் தலைவன்!
கேசவன் = கேசி என்னும் அரக்கனைக் கொன்றவன்! அழகிய கேசத்தையும் உடையவன்!

தேசம் உடையாய் = ஒளி பொருந்தியவளே! தேஜஸ்வனீ!
திறவேல் = திறக்காதே-ன்னு அர்த்தம் எடுத்துக்காதே!
திற, ஏல்-ஓர் எம் பாவாய்! = கதவைத் திற!

 நாரணனை ஏல் (ஏற்றுக் கொள்)! நாரணனை ஓர் (ஆய்ந்து அறிந்து கொள்)! எம் பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி

மக்களால்_ஆட்சிகள்_மாறினாலும், #காலநேர_வர்த்தமானிகள்_மாறினாலும்,

#மக்களால்_ஆட்சிகள்_மாறினாலும், #காலநேர_வர்த்தமானிகள்_மாறினாலும், #சூழல்களும்_மாறினாலும்,#இப்படியான #காட்டுமிராண்டித்தனமான............
————————————————
பெங்களூரு நகரில் நாடறிந்த எழுத்தாளுமை மிகுந்தவரான ராமச்சந்திர குஹாவை குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கர்நாடக காவல்துறை அடிப்படை நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்ட விதத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது.

அதைப் பார்த்தபோது, 1980களில் துவக்கத்தில் மதுரையில் ஜஸ்டிஸ் தார்குண்டே காவல்துறையினரால் தாக்கப்பட்ட கொடுமையான காட்சி தான் நினைவுக்கு வந்தது. ஜஸ்டிஸ் தார்கொண்டே அவர்களை  தமிழ்நாடு காவல்துறை லத்தியால் அடிக்கப் போகும்போது தடுக்க நினைத்த என்னைப் போன்றவர்கள் எல்லாம் இதைப் பார்த்து வேதனை அடைந்தனர்.

குஹாவை மீது ஏனிந்த தாக்குதல்கள்? ஒரு பிரச்சினையில் பலருக்கும்  கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் இப்படியா....?

மக்களால் ஆட்சிகள் மாறினாலும், காலநேர வர்த்தமானிகள் மாறினாலும், சூழல்களும் மாறினாலும்,இப்படியான காட்டுமிராண்டித்தனமான காவல்துறையின் அணுகுமுறை மட்டும் மாறாமல் இருப்பது, வேதனை தருவதோடு மட்டுமில்லாமல், நாம் அடிப்படையில் முன்னேறவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

#ராமச்சந்திர_குஹா

#ஜஸ்டிஸ்_தார்குண்டே

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.12.2019
#ksrposts
#ksradhakrishnanposts


Making Magna Carta: King John’s Civil War-------------------------------------

The very foundation of the English constitution is based in conflict. Magna Carta, the basis of much English law, was written in a failed attempt to stave off a rebellion against King John. When this peace failed, England descended into a civil war which would include a French prince, a royal death, and a cavalry charge led by a seventy-year-old.

Political Opposition and Magna Carta

King John was not a popular king. His brother, Richard I, had exhausted the royal finances, leaving John to pick up the pieces and take the blame. Cruel, greedy, and insecure, John came into frequent conflict with the nobility.

After a decade of rule, effective opposition formed against him. At the time, it was not unusual for opponents to take up arms to shift the policies of a king. The rebel barons seized London in May 1215, and it was clear that extremes had been reached. Trying to avert war, on June 15th, 1215, John signed Magna Carta, a document promising legal reforms which would protect the nobility from his excesses.
A Noble Revolt

The wax was barely dry on the seal of Magna Carta before John started reneging on his promises. The nobles opposing him rose in open revolt, declared John deposed, and offered the English crown to Prince Louis, the son of the French king.

John had been hiring mercenaries from the Low Countries and recruiting troops from his continental holdings. He had control of a network of strong castles. Though he was threatened by Scots to the north, Welsh to the west, French to the south and treacherous nobles throughout his kingdom, it would be hard to dislodge him.

King John on the Offensive

In October, John took Rochester through a combination of undermining and starvation. Rebellious London was isolated.

From there, he proceeded north against King Alexander II of Scotland and the rebel northern English barons who had made the Scottish King their leader. John’s troops stormed Berwick on January 15th, 1216, and raided the Scots to punish Alexander.

Marching hundreds of miles up and down the country, John took one rebel castle after another, while his lieutenants harried the rebels in the Midlands and East Anglia.

Royal Collapse

A storm on May 18th scattered John’s fleet, allowing Prince Louis to cross the English Channel with his troops. John wanted to meet him in a pitched battle, but more experienced men, including the aging veteran William Marshal, persuaded him not to take the risk.

With French support, the rebellion revived. Many in the south-east, who had previously kept out of the rebellion, now rose against him. Many nobles, including four earls, the most powerful men in the land, defected to the rebels.

In August, Louis laid siege to the vital Channel port of Dover, where he was joined by King Alexander and the northern barons. But though they took some of the outer defenses, an assault failed.

A Brief Comeback

Emboldened by his opponents’ struggles, King John marched forth again. He drew troops away from the siege of Windsor, relieved Lincoln, and arranged supplies for his castles.

The threat of John heading towards their lands alarmed King Alexander and the northern barons. They left Dover, and the rebel army was once again scattered as each man looked to his own interests.

But just as John was beginning a comeback, disaster struck. He became sick with dysentery, a common problem in medieval armies, and died on October 18th, 1216.

William Marshall Makes Peace

The kingdom was now ruled in theory by John’s son, King Henry III. But Henry was underage, and so William Marshal was made his guardian. The elderly Earl took over the generalship of the royalist side.

Marshal faced many problems. Royal funds were exhausted, the Welsh were threatening the west, and the royalist barons were arguing with each other. Though the rebels’ revolt had been against John, his death did not cause them to give in. So Marshal agreed to a truce to last through the winter, giving him time to put the royalist house in order. The price of this truce was ceding castles to the rebels.

Louis Falters

From February to April 1217, Prince Louis was in France, raising reinforcements for his army. During his travels, he was briefly trapped by royalists and guerrillas at Winchelsea.

With John gone and Louis looking vulnerable, two leading rebel barons defected to Marshal, along with many less prominent nobles. Taking the opportunity, Marshal summoned the royal war leaders and recaptured castles they had lost.

When Louis returned, he quickly retook Farnham and Winchester. But with Dover still holding out against him, he was forced to split his forces. While some remained at Dover, others went to besiege Lincoln.

The Battle of Lincoln

Marshall saw his opportunity. Gathering together the royalist host, he marched on Lincoln from the north, taking the rebels by surprise on May 20th. Mistakenly believing that they were outnumbered, they retreated behind the town walls.

The Bishop of Winchester discovered a blocked gate into Lincoln. While other forces distracted the defenders with diversionary attacks, Marshal broke through the gate, once more surprising the rebels. Fierce street fighting ended with a rebel surrender. Forty-six barons and 300 knights were captured, ripping away a huge chunk of Louis’s support base.

One Last Throw of the Dice

With his support crumbling, Louis began to negotiate. Aware that he risked leaving his English supporters in the lurch, he avoided any agreement while waiting for reinforcements from France. But their fleet was caught in the Channel and defeated off Sandwich on August 25th. At last, Louis made peace and returned home.Throughout the war, both sides had avoided a pitched battle and the risks that it brought. But it was the boldness and battlefield courage of William Marshal, incredible for a man aged around 70, that won the war for his side.
#magna_carta
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
24-12-2019

Monday, December 23, 2019

"தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் - 23"

இன்று விவசாயிகள் தினம். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.. இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என பாரதியும் , வள்ளுவப் பெருந்தகை *உழவு* க்கு அதிகாரம் அளித்து 10 குறள்களை எழுதி வைத்திருந்தாலும் அதில் பிரதானமானது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.//

உழவுக்கு வள்ளுவர் தனி அதிகாரம் அளித்தாலும் இதுவரை உழவர்கள் யாரும் அதிகாரத்திற்கு வரவில்லை.
இதுவரை தமிழகத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 45 விவசாய உயிர்களுக்கும், ஒட்டுமொத்த இந்தியாவில் கடன் தொல்லை, பொய்த்த விவசாயம், இன்னபிற காரணங்களால் தற்கொலைக்கு பலியான 5லட்சம் உயிர்களுக்கும் இன்றைய தினத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.
நாம் சோற்றில் கை வைக்க நித்தமும் சேற்றில் கை வைக்கும் விவசாயிகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2019.என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு  The beauty of village.  The beauty Of nature  Love of everything  village #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost  20-6...