Wednesday, December 11, 2019

எட்டையபுரம் பாரதி இல்லத்தில் இன்று


ஒவ்வொரு ஆண்டும் டிச 11 அன்று
1989 ல் இருந்து எட்டையபுரம் பாரதிஇல்லத்தில் இருப்பது வடிக்கை.
(கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் டிச11,1989ல் பாரதி பிறந்த நாள் வந்தது.அப்பொழது துவங்கியது இந்த கடமை)

Image may contain: 1 person
——-
அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுது மஞ்சோம்
வானமுண்டு மாரியுண்டு ஞாயிறுங் காற்றும்
நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும்
மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திட பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் லுலகமும்
என்றும்இங்குளவாம் சலித்திடாய் ஏழை!
நெஞ்சே வாழி ! நேர்மையுடன் வாழி வஞ்சக
கவலைக்கு இடங்கொடேல் மன்னோ
- பாரதி.
அச்சம் தவிர் - நய்யப் புடை
மானம் போற்று - ரவுத்திரம் பழகு...
.... ஞாயிறு போற்று - மந்திரம் வலிமை
சவுரியம் தகுமே - எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்...
*******
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்த'
சிட்டுக் குருவியைப் போலே
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு !
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையிலாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சை காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு
முற்றதிலேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னை கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்த
சிட்டுக் குருவியைப் போலே !
******
அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுது மஞ்சோம்
வானமுண்டு மாரியுண்டு ஞாயிறுங் காற்றும்
நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும்
மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திட பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் லுலகமும்
என்றும்இங்குளவாம் சலித்திடாய் ஏழை!
நெஞ்சே வாழி ! நேர்மையுடன் வாழி வஞ்சக
கவலைக்கு இடங்கொடேல் மன்னோ
- பாரதி.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
11-12-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...