#நாவலர்_சோமசுந்தர_பாரதியார்_நினைவு_நாள்_இன்று:
————————————————
எட்டயபுரம் பாரதி விழாவிற்கு கடந்த 11ஆம் தேதி சென்ற போது நாவலர் சோமசுந்தர பாரதியின் வீட்டுக்கும் உமறுப் புலவர் நினைவிடத்திற்கும் சென்று வந்தேன். எட்டயபுரம் செல்லும்போதெல்லாம் பாரதி பிறந்த வீடு, பாரதி மண்டபம், நாவலரின் வீடு, உமறுப் புலவரின் நினைவிடத்திற்கு செல்லாமல் திரும்புவதில்லை. நாவலரின் வீடு இன்றைக்கு திருமண மண்டபமாக மாறிவிட்டது. இன்று அவருக்கு நினைவு நாள். அற்புதமான மாமனிதர்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், சுப்பிரமணிய நாயக்கர் - முத்தம்மாள் தம்பதிக்கு மகனாக, 1879 ஜூலை, 27ல் பிறந்தார். இவரது இயற்பெயர், சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரண்மனையில் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிய, சின்னசாமி என்பவரின் மகன், சோமசுந்தரனுக்கு நண்பர்.
இருவரும், தமிழ் புலமையில் சிறந்து விளங்கினர். நெல்லைக்கு வந்த, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர், இருவருக்கும், ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.
வழக்கறிஞரான சோமசுந்தர பாரதியார், மதுரை மாவட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு இயக்க தலைவராகவும் செயல்பட்டார். சுதந்திர போராட்ட வீரரான இவர், வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று, ‘இண்டியன் நேவிகேஷன்’ எனும் சுதேசி கப்பல் கம்பெனியில் செயலராக பணியாற்றினார். செய்யுள், உரைநடை, வாழ்க்கை வரலாறு, ஆய்வுகள் என, பல நூல்களை, தமிழுக்கு வழங்கி உள்ளார். 1959 டிச., 14ல் இறந்தார். அவர் இறந்த தினம் இன்று.
KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
14-12-2019
No comments:
Post a Comment