Sunday, December 15, 2019

#தமிழ்த்தென்றல்_திரு_வி_க



------------------------------

யாழ்ப்பாணம் கதிரைவேல் பிள்ளையின் தமிழ் மாணாக்கர். மறைமலை அடிகளிடம் இலக்கியமும், மயிலை மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம் சித்தாந்த சாத்திரமும் கற்று தேர்ச்சி பெற்றார். வெஸ்லி கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். 

தஞ்சை மாவட்டம் திருவாரூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மாள் தம்பதியருக்கு திருமகனாக 1883 ஆம் ஆண்டு துள்ளம் என்ற சிற்றூரில் திரு. வி. க அவர்கள் பிறந்தார். 

எதற்கும் அஞ்சாத மனம் படைத்த திரு.வி.க தம்முடைய பொருட்களை யாராவது தொட்டுப் பார்த்தால் கூட கோபம் கொள்வார். அவர்களுடன் சண்டைக்கும் போக தயங்கமாட்டார். அதேநேரத்தில் தன் பக்கம் நியாயம் இல்லை என்றால் பிறரிடம் மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டார். 

திரு. வி. க. வின் சொற்பொழிவுகள் எல்லாம் தமிழ்தென்றல் எனவும் இவரது பத்திரிகை தலையங்கங்கள் தமிழ்ச்சோலை எனவும் இவரது சொற்பொழிவுகள் மேடை தமிழினமும் செய்யுள் நூல்கள் அருள்வேட்டல் எனவும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

எளிமையுடன் இனிமையாகவும் சமரச நோக்குடன் விளங்கியதால் இவர் அனைவரது நெஞ்சிலும் நீங்காத இடம் பெற்று வாழ்ந்தார். தமிழ் உரைநடையில் அருமை, எளிமை மற்றும் புதுமைகளைக் கையாண்டு பெருமை படைத்தார்.

சிறந்த தமிழாசிரியராகவும், தொழிலாளர்களின் தலைவராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் விளங்கிய திரு.வி.க உயர்ந்த மக்கள் தொண்டராகவும் அடையாளம் காணப்பட்டார். நாட்டு விடுதலைக்கு பெரும் தொண்டாற்றிய இவர் தலைசிறந்த தமிழறிஞர் எனவும் தமிழ் உரைநடை இலக்கியத்தில் பெரும் புரட்சி செய்து மங்காத புகழ் பெற்றவராக நிலைத்து உள்ளார்.

ஆங்கிலத்தில் மட்டுமின்றி தீந்தமிழிலும் தெளிவாகக் கூறும் ஆற்றல் படைத்தவராக திகழ்ந்தார். அவரது பல பெருமைகளை கூறும் லா வகையில் தமிழ் தென்றல் திரு.வி.க. நூல் உள்ளது.

- கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15.12.2019

#தமிழ்_தென்றல்
#திருவிக
#ksrposts
#ksrpostings
#thiruvika

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...