திக்குக் குலுங்கிடவே - எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்
தக்குத் தக்கென்றே அவர் குதித்தாடுவார்
தம்மிரு தோள் கொட்டுவார்
'ஒக்கும் தருமனுக்கே இஃ'தென்பார் - ஓ
ஓவென்றிரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் - 'துரியோதனா
கட்டிக் கொள் எம்மை' என்பார்...
- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)
No comments:
Post a Comment