#நான்_கேட்டு_ஆடிப்_போன_செய்தி...
#அற்பனுக்கு_வாழ்வு_வந்தால் #அர்த்தராத்திரியில்_குடை_பிடிப்பான்.
------------------------------------
இந்த படத்தில் உள்ள Mint தினசரி ஏட்டில் லட்சக்கணக்கான ரூபாய்க்கான (ரூ 1,33000)காலில் அணியும் ஷூக்களைப் பற்றி விளம்பர செய்தியாக வந்துள்ளது. அதை சற்றும் சிந்திக்காமல் அந்த லட்சக்கணக்கான மதிப்புடைய ஷூவினை வாங்க ஒரு மக்கள் பிரிதிநிதி விருப்பப்பட்டு வாங்க முனைந்துள்ளார். கடந்த காலங்களில் என் பின்னாடி திரிந்து டீயும் காபியும் வாங்கிக் குடிப்பார். பழுதான அடிக்கடி வேலை செய்யாத கைபேசியை ரீ-சார்ஜ் செய்ய முடியாமல் வாடியிருந்தவர் இன்று லட்சக்கணக்கான மதிப்புடைய காலணியை வாங்குகின்றார். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. எந்த களப்பணியும் இல்லாமல் திடீரென்று கையைப் பிடித்து காலைப் பிடித்து வாங்கிய பதவியால் இந்த மாதிரியான விருப்பங்கள் வசதி வாய்ப்புகள் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான். விதியே விதியே தமிழ் சாதியே!!
#தகுதியே_தடை!!#எளிமையே_அழகு...
KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
15-12-2019
No comments:
Post a Comment