————————————————-
அன்றைய அண்ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் மனசும் இன்றைய ஆள்வோர் , அதிகார மனசும் !
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஸ்ரீனிவாச சாஸ்திரி ( இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றவர் கூட ) ஒரு துணை வேந்தராக மாற்றுக் கருத்துக்கொண்டமாணவரையும் தம் சொந்தப் பிள்ளையாகப் பாவித்துப் பாதுகாத்தார் ! ஆனாலின்று , ஆள்வோர் மன நிலை ?
சுதந்திரத்திற்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருபெரும் பிரிவாகத் திராவிடக் கழகப் பிரிவும் கம்யூனிஸ்ட் பிரிவுமாக இருந்த நிலை . கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட நிலையில் உள்ளே மாணவர்களுள் விவாதங்கள் ஏற்பட்டு போராட்ட நிலையை அடைந்தது .காவல்துறை கம்யூனிஸ்ட் மாணவர்களைக் கைதுசெய்யமுடிவெடுத்தது . ஆனால் , துணைவேந்தர் ரைட் ஹானரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரி , பல்கலைக் கழக வளாகத்திற்குள் போலீஸ் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார் . கடலூர் காவல்துறை சூப்பிரண்டண்டான ஆங்கிலேயர் , சாஸ்திரியைச் சந்தித்து , பாலனை ( ஆர். பாலதண்டாயுதம் ) மட்டுமாவது கைது செய்ய அனுமதி கேட்டார் . துணைவேந்தர் சாஸ்திரி , " இந்த வளாகத்திற்குள் இருக்கும் குழந்தைகள் எல்லாம் எனது சொந்தக் குழந்தைகள். துஷ்டக் குழந்தையாய் இருந்தாலும் அவனைத் தகப்பன் வெறுக்க மாட்டான் ! " என்று பதில் கூறி திருப்பி அனுப்பிவிட்டு , பாலதண்டாயுதத்தை அழைத்து , " நீ ஹாஸ்டலில் இருக்க வேண்டாம் .பத்துநாள் என் வீட்டில் தங்கிப் படி ! " என்று கூறி தம் வீட்டிலேயே வைத்துக் கொண்டாராம் . இந்த நிகழ்வை தோழர் பாலு , கண .முத்தைய்யாவிடம் பல வருடங்களுக்குப் பிறகு கண்களில் நீர் துளிர்க்க பகிர்ந்துகொண்டாராம் . " நான் சாஸ்திரிக்குத் தொல்லை கொடுப்பதில் முதல் ஆளாகவே இருந்திருக்கிறேன் . ஆனால் , அந்தப் பெரிய மனிதர் என்னைக் காக்கப் பத்துநாட்கள் தன் சொந்த வீட்டில் அடைக்கலம் தந்தார் " என்று தழுதழுத்த குரலில் கூறினார் பாலதண்டாயுதம் . ( " முடிவுகளே தொடக்கமாய் " - கண .முத்தையா)
No comments:
Post a Comment